-
Tell a friend
-
Topics
-
23
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி! சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசிக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சசிகலாவை-தொடர்ந்து-இளவரச/ -
புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் கோவில்களை வைத்துப் பராமரித்து, அதற்குள் யாழ்ப்பாணத்தான், காரைதீவான், புங்குடுதீவான் என்று புடுங்குப்பட்டு, புங்குப்பாட்டை நீதிமன்றங்கள்வரையில் கொண்டுசென்று, இங்குள்ள சட்டத்தரனிகள் மேலும் செல்வம் சேர்த்து வாழ்வதற்குப் பெரும் தொண்டு புரிந்து வருகிறார்கள். புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்களும், பள்ளிக்கூடங்களையும் கூடவே பள்ளிக்கூடத்தால் கோவில்களையும் பராமரித்து, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துவராத கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் அடிக்கடி மாத்திக் கல்வியையும், பக்தியையும் உங்கள் பிள்ளைகள் பெறவேண்டுமாயின் எங்களை ஆதரியுங்கள் என்று புலிக்கொடியையும் காட்டிப் பெற்றோரைக் குழப்பி இன்றும் மீன்பிடித்து வருகிறார்கள்.
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பைடனின் உத்தரவை அடுத்து அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லைச்சுவர் கட்டும் பணி நிறுத்தம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின் Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் இந்த எல்லைச்சுவர் அமைக்கும் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பைடனின்-உத்தரவை-அடுத்து/ -
By தமிழ் சிறி · Posted
கமலா ஹாரிஸின் அலுவலகம்... எப்படி இருக்கும் இன்று பார்க்க ஆவலாக உள்ளது. -
வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது எம்மவரின் புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும் என்பது எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுவதே அந்த கருத்தின் நோக்கம். தவிர மீனவர்களின் பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது விருப்பமும். நீங்கள் கூறிவாறு இருபகுதி தமிழர்களையும் பிரித்து தமிழர்களை அழிப்பது எதிரியின் நோக்கம் என்றலால், எதிரியின் நோக்கங்களை தமது செயல்களால் நிறைவேற்றியதற்கு தமிழர் சார்பில் போராடிய மித வாத, தீவிர வாத அரசியல் அமைப்புக்கள் எல்லவற்றுகும் காத்திரமான பங்கு உள்ளது. அதில் புலிகளும் விதிவலக்கல்ல என்பதே எனது கருத்து. ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் தம்மிடையே கலாச்சார், கல்வி, வர்த்தக, பொருளாதான உறவுகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நிச்சயமாக அது நடைபெற வேண்டும். இது கட்சி பேதமின்றி தமிழகத்தில் பல்வேறு மட்ட மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்டல் வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் தலையிட்டு, ஒரு சிலரின் குறுகி பதவி மோக அரசியல் தந்திரத்திற்க அந்த வாய்ப்புக்களை பலியிடுவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும் தேசியப்பிரியர்கள் என்று தம்மை தாமே அழைக்கும் சுயநல கும்பலே ஆகும். நீங்கள் கூறியது போல் ஆயுதப்போராட்டத்திற்கு எதிராக மனப்போக்குடன் நான் என்றுமே இருந்ததில்லை. ஆனால் ஆயுத போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி என்ற இரு புள்ளியில் தான் முடியும். ஆனால் அதனுடன் சேர்ந்த அரசியல் தந்திரோபாய போராட்டங்கள் அது முன்னேறிய பாதையில் இருந்து திரும்பி வர வைக்காமல் சந்தர்ப்பம் வரும் போது தொடரும் தன்மையுடையது. அதுவே உலக நியதி. துரதிஷ்ரவசமாக, அரசியல் போரை மேற்கொள்ளாமல் (மற்றவர்களையும் மேற்கொள்ள விடாமல்) இராணுவ முறையிலேயே முழு நம்பிக்கை கொண்டு அதை செய்வதிலேயே நம்மவர்கள் இருந்தனர். ஆயுத போராட்டம் இன்று சாத்தியமற்றது என்று மக்கள் இன்று நினைப்பதற்கு அதில் ஈடுபட்டவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். (தலைப்புக்கு அப்பாற்பட்டதாயிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலாகவே இதை தெரிவித்தேன்)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.