யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

Recommended Posts

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

 

MAHINDA-RAJAPAKSA-1-300x200.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப் பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இவர்கள் உள்ளிட்ட பல போராளிகளின் உயிரிழப்புகளுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும். நாம் பொறுப்பல்ல.

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12, 500 போராளிகளைப் புனர்வாழ்வு அளித்து நாம் விடுதலை செய்துள்ளோம்.

இப்படிச் செய்த எம் மீதும், போர்வீரர்களான எமது படையினர் மீதும் சில அனைத்துலக அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டன.

எம்மைப் பழிதீர்க்கும் வகையில் புலிகள் ஆதரவு அமைப்புகள் தயாரித்த இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சில அனைத்துலக அமைப்புகளும்,சில நாடுகளும் ஒத்துழைத்ததை நினைக்கும்போது கவ லையாக உள்ளது.

இந்தத் தீர்மானங்களை வைத்து எமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/11/news/36347

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, nunavilan said:

“பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

இவர்களை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் படுகொலை செய்யாவிட்டால் போர்க்குற்றவாளியும், மிலேச்ச பயங்கரவாதியுமான  மகிந்த ராசபக்ச எதற்காக இங்கே குத்தி முறிக்கிறார்?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

போராளியாக இருந்தாலும் சரணடைந்தவர்களை கற்பழிக்கவும் சுட்டு கொல்வதற்கும் உலகில் சட்டம் இருக்கிறதா?

42 minutes ago, nunavilan said:

பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப் பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

எம்மைப் பழிதீர்க்கும் வகையில் புலிகள் ஆதரவு அமைப்புகள் தயாரித்த இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சில அனைத்துலக அமைப்புகளும்,சில நாடுகளும் ஒத்துழைத்ததை நினைக்கும்போது கவ லையாக உள்ளது.

 
ஒரு இனத்தை அழிப்பதற்கு பல நாடுகள் ஒத்துழைப்பு கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்போ மகிந்தரும்.. தம்பிகளும் அண்ணன்களும்.. மனைவிகளும்.. புதல்வர்களும்.. புதல்விகளும்.. இனப்படுகொலையாளிகளே. அரச பயங்கரவாதிகளே. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

இனப்படுகொலையாளிகளை தண்டிக்க முடியாத  நியாயமற்ற உலகில் வாழ்கிறோம் . 

Share this post


Link to post
Share on other sites

சுமந்திரன் போறவர்களால் தான் இவர்களுக்கான தண்டனை இல்லாமல் செய்யப்படுகின்றது ....
 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nunavilan said:

இனப்படுகொலையாளிகளை தண்டிக்க முடியாத  நியாயமற்ற உலகில் வாழ்கிறோம் . 

5 hours ago, பிரபாதாசன் said:

சுமந்திரன் போறவர்களால் தான் இவர்களுக்கான தண்டனை இல்லாமல் செய்யப்படுகின்றது ....
 

சுமந்திரன் மாத்யா ! சிறிலங்காவிலை விடுதலைப்புலிகள் மட்டும் தான் போர்க்குற்றவாளிகள் எண்டு சொன்னாலும் சொல்லும்.

 

Share this post


Link to post
Share on other sites

பிரேமவதி மனம்பேரி-தமிழில் :பஹீமாஜஹான்

 

 

Manamperi.jpg

faheema1-1024x278.jpg

 

ஹென்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நாடாத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹென்திரிக் அப்புஹாமி லீலாவதி தம்பதியினர் 1951ம்ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு ‘பிரேமவதி மனம்பேரி’ எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக ‘பிரேமவதி மனம்பேரி’  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள்.இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தாண்டு அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டபோது கதிர்காமத்து அழகுராணியாகக் கிரீடம் சூட்டப்பட்டாள்.இந்த நிகழ்வு இடம்பெற்று நாள்,வாரம் மாதமென ஓராண்டு கடந்தது.

 

 

 

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழுந்துவிட்டெரிகின்ற அரசியல் சூழ்நிலைகளோடு உதயமானது.மக்கள் விடுதலை முன்னணியின் முதல் கிளர்ச்சி ஆரம்பித்ததோடு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் போலவே கதர்காமத்திலும் அதன் தாக்கம் உணரப்பட்டது.கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் 1947 இலக்கம் 25, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டமொன்றை அறிவித்து அவசரகாலச் சட்ட நடைமுறைகளைக் கொண்டுவந்தது. அதனால்,  பின்னடைவு காணாத கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் 5ம் திகதி குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி மூலம் கதிர்காமத்து பொலிஸ்நிலையத்தின் மீது இரு தாக்குதல்களைப் பிரயோகித்தனர்.மறு நாள் மீண்டும் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.இதன் பின்னர்,பொலிஸ் நிலையத்தை விட்டுவிட்டு அங்கிருந்து அம்பாந்தோட்டை வரை பின்வாங்கிச் செல்லவேண்டுமென கதிர்காமப் பொலிஸ் நிலையப் பொலிஸ் அத்தியட்சகரான  உடவத்த தீர்மானித்தார். கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம்  இராணுவத்தைக் களமிறக்கியது.ஏப்ரல 12ம் திகதியையடைந்த  போது சில நாட்களுக்கேனும் இராணுவம் பின்வாங்கவேண்டும் எனப் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி கர்னல் நுகவெல தீர்மானித்தார்.இவ்வாறு இருக்க 3வது கெமுணு படைப்பிரிவின் லுதினன் ஏ.விஜேசூரிய உள்ளிட்ட இராணுவப் பிரிவொன்று ஏப்ரல் 10 -12 வரை திஸ்ஸமஹாராம நகருக்கு அண்மையில் முகாமமைத்துத் தங்கி இருந்திடத் துணிந்தனர்.

சரியாக ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 5.30 மணியளவில் கர்னல் நுகவெல கட்டளையொன்றை விடுத்தார்.அதன் படி விஜேசூரிய உள்ளிட்ட 25 பேர்களடங்கிய இராணுவ வீரர்கள் குழுவொன்று கதிர்காம நகரைக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்பட்டார்களெனின் அன்றைய காலைச் சூரியன் கதிர்காமத்திற்கு உதயமாகும் வேளையில் நகரமானது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி, அச்சந்தர்ப்பத்திலேயே  கிளர்ச்சியுடன் தொடர்புபட்டவர்களெனக் கூறிச் சந்தேகத்தின் பேரில் அனேக இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மீசையரும்பத் தொடங்கியிருந்த பள்ளிக் கூட மாணவர் தொடக்கம் திருமணமாகி ஒருநாள் கூடக் கடந்திராத இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அனேகர் கைது செய்யப்பட்டோரில் இருந்தனர்.துரதிஷ்டவசமாக அப்போது 22 வயதையடைந்திருந்த இளம் யுவதியான கதிர்காம அழகுராணியின் பெயரும் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலில் காணப்பட்டது.

காலை 9மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று தமது வீட்டின் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த கணத்தில் பிரேமவதியின் தாயாரின் விழிகளில் ஏதோவொரு தீய நிழலொன்றின் சுவடு தென்படலாயிற்று.பொலிஸ் அதிகாரி உடவத்த உள்ளிட்ட குழுவொன்று வீட்டுக்கு வந்தது. கணப்பொழுதில் கதிர்காம அழகு ராணியை அவர்கள் கைது செய்தனர்.

எந்தத் தவறைச் செய்ததற்காக தனது மகளைக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டழுத அந்தத் தயாருக்கு

“காரணத்தைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் நாங்களும் இவரைக் கொண்டு போகிறோம்”

என்ற பதில் உடவத்தவிடமிருந்து கிடைத்தது.

 பிரேமவதியுடன் மேலும் நான்கு யுவதிகள் பொலீசாரினால் கைது செய்யப் பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

அன்று மாலை கேர்னல் நுகவெல இராணுவ முகாமுக்கு வருகை தந்தார்.அவ்வேளையில் லுதினன் விஜேசூரிய இவ் ஐந்து யுவதிகளையும் கைது செய்யப்பட்ட பெண் கிளர்ச்சியாளர்கள் என்று கூறி அவரின் முன்னிலைக்குக் கொண்டு வந்தான். ஆனாலும் பிரேமவதி அத்தகைய செயலொன்றில் ஈடுபட்டதற்கான அத்தாட்சியாகக் காண்பிப்பதற்கு எந்தவொரு சாட்சியும் அவனிடம் காணப்படவில்லை. ஏப்ரல் 16ம் திகதிக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்களின் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப் படவில்லை.

பிரேமவதியைக் கைது செய்த மறுதினம் அதாவது 17ம் திகதியன்று காலையில் லுதினன் விஜேசூரிய பிரேமவதியை நீண்ட நேரம் விசாரணை செய்தான்.ஆனாலும் அவளிடமிருந்து எந்தவொரு விடயத்தையும் வெளிக் கொண்டுவரமுடியாமற்போகவே அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களையுமாறு கட்டளையிட்டான்.வாழ்வில் ஒருபோதும் நடக்கும் என எதிர்பார்த்திராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியும் களைப்பும் அடைந்திருந்த அவள் அதைக் கேட்டதும் மிகவும் கலக்கமடைந்தாள்.அவள் ஆடைகளைக் களைய முடியாதென மறுத்தாள்.ஆனாலும் அவளது மறுப்பினால் எந்தவொரு பலனும் கிட்டவில்லை.அவளுக்குத் தனது அழகு மேனியை மறைத்துக் கொண்டிருந்த ஆடைகளைக் களைய நேர்ந்தது.

லுதினன் விஜேசூரியவின் கட்டளைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. நிர்வாணமாக்கப் பட்ட யுவதிக்குக் கைகள் இரண்டையும் மேலுயர்த்தியவண்ணம் கதிர்காம நகரம் பூராகவும் நடந்து செல்லுமாறு அடுத்த கட்டளை விடுக்கப்பட்டது.அவ்வாறு செல்கையில் “நான் ஐந்து வகுப்புகளுக்கும் போனேன்” (கதிர்காமத்தில் ஜே.வி.பி. யினரால் நடாத்தப் பட்ட 5 வகுப்புகள்) என்பதை இடைவிடாது கூறிக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டான்.அத்துடன் லுதினன் விஜேசூரிய,இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க , மற்றொரு இராணுவ வீரன் ஆகிய மூவரும் ஆயுதங்களோடு அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.அந்த அப்பாவி யுவதி சுமார் 200யார் தூரம் நடந்து சென்றதும் அவளருகே வந்த லுதினன் விஜேசூரிய அவளை உதைத்தான்.அதன் பிறகு அவளருகே நின்றவாறே அவள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான்.வெடிபட்டு கீழே விழுந்த அவள் மேலும் சிறிது தூரம் நிலத்திலே தவழ்ந்தவாறு முன்னோக்கிச் சென்றாள்.அதன் பிறகு எழுப்புவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் கீழே சரிந்து வீழ்ந்த அவள் இறந்து விட்டாளென நினைத்த இராணுவக் குழு  அவளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு முகாமுக்குத் திரும்பியது.

இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவில் விட்டுவந்த பிரேமவதி இன்னும் இறந்துவிடவில்லை என்ற தகவல் முகாமுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் குழுவை எட்டியது.உடனடியாக துப்பாக்கியுடன்  வந்த இராணுவ வீரன் ரத்நாயக்க உயிருக்காகப் போராடியவாறு தெருவில் வீழ்ந்து கிடந்த அவள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான்.அதன் பின்னர் எலடின் எனும் நபரிடம்  குழியொன்றைத் தோண்டி  அவளைப் புதைக்குமாறு கூறிவிட்டு இராணுவ வீரன் ரத்நாயக்கா முகாமுக்குத் திரும்பியிருந்தான்.இறந்து போன யுவதியின் உடலைப் புதைப்பதற்காகச் சென்ற எலடின் இன்னும் அவளது உடலில் உயிர் இருப்பதை அவதானித்தான்.உடனடியாக இராணுவ வீரனைப் பின்தொடர்ந்து முகாமுக்கு ஓடிவந்த எலடின் பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்பதைத் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் அவளைக் கொலைசெய்வதற்காக இன்னொரு இராணுவ வீரனை அனுப்பினர். அவன் தனக்குக் கிடைத்த கட்டளையின் படி பிரேமவதியின் தலையை நோக்கி வெடிவைத்ததோடு அவ்வேட்டினால் ஹென்திரிக் அப்புஹாமி லீலாவதி தம்பதியினரின் மூத்த மகள், கதிர்காம அழகுராணி நிரந்தரமாகவே விழிகளை மூடிக் கொண்டாள். எவ்வாறாயினும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவளது உடலிலில் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவளது உயிரைப்போக்கிய இராணுவ வீரன் எவன் என்பது இறுதிவரைக்கும் அறிநது கொள்ள முடியாமற் போனதால் அவன் “அறிமுகமற்ற துப்பாக்கிதாரி” என வரலாற்றில் பதிவானதோடு அவன் ஒரு போதும் கைது செய்யப் படவும் இல்லை.

*******

கிளர்ச்சியின் பின்னர் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவரும் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டார்கள்.நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப் பட்ட அவ்விருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். பி.ஈ.செட்டி, அர்ட்லி பெரேரா .ஆர்.எஸ்.ஆர்.குமாரஸ்வாமி ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இவர்கள் சார்பில் தோற்றினர்.லுதினன் விஜேசூரிய எதிர்ப்பு மனுவொன்றை முன்வைத்துத்  தனது பக்க நியாயங்களைக் குறிப்பிட்டிருந்தான்.அதில் கர்னல் நுகவெல மூலம் அவனுக்குக் கிளர்ச்சியாளர்களை அழித்துவிடுமாறு கட்டளை கிடைக்கப் பெற்றிருந்தபடியால் தான் கிளர்ச்சியாளர்களை அழித்து மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டிருந்தான்.அவ்வாறே சட்டத்தரணி செட்டியும் அப்போது காணப்பட்ட சாட்சிக் கோவையின் 114வது வாசகத்தின் படி அரசபணியின் செயற்பாடுகள் யாவும் சட்டபூர்வமானவை என்று வாதிட்டார்.

இவ்வெல்லா நிகழ்வுகளும் அவசரலகாலச் சட்டம் நிலவில சூழலிலேயே இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம்  நிகழ்ந்த பொழுதும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் கதிர்காமத்தில் நிலவியதாகச் சட்டத்தரணி செட்டியின் வாதம் அமைந்திருந்தது.

எனினும் ஏப்ரல் 17ம் திகதி ஆகும் போது கதிர்காமத்தில் ஆயுத மோதல் ஒன்று நடைபெற்றிருக்காததோடு, அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப் பட்ட நபரொருவரைக் கொலை செய்வதனை நியாயப் படுத்த முடியாதென்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவாக அமைந்திருந்தது.வீரனொருவன் மேலதிகாரியின் கட்டளையின் படி செயற்பட்டிருந்தாலும் இச்சட்ட விரோதச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு மேலதிகாரியொருவரின் கட்டளையைப் பின்பற்ற வேண்டியது அக்கட்டளையானது சட்டபூர்வமானதாக இருந்தால் மாத்திரமாகும். வேறு சொற்களில் கூறுவதானால் மேலதிகாரியொருவராக இருந்தாலும்  அவர் சட்டத்திற்கு முரணான செயலொன்றைச் செய்யக் கோரும் போது அதனைப் புறக்கணிக்கவே வேண்டும்.

இங்கு இவ்விரு இராணுவவீரர்களினது சட்டத்தரணிகள்  தண்டனைச் சட்டக் கோவையின் 69 வது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தும்  முயற்சிகளை மேற்கொண்டனர்.அதாவது, ஒன்றைச் செய்வதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதாக ‘உளப்பூர்வமாகவே’ நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் செய்கின்ற செயலொன்றானது தவறாகாது என்பதாகும். தண்டனைச் சட்டக் கோவையானது இவ்விடயத்தை மேலும்  ‘ சட்டத்தின் நியமங்களுக்கமைய தனது மேலதிகாரியின் கட்டளையின் படி யுத்த வீரனொருவன் கிளர்ச்சிக் குழுவொன்றைக் நோக்கிச் சுடுவதானது அந்த வீரனின் எந்தவொரு தவறுமாகாது’  எனத் தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் என்றபோதும் ‘உளப்பூர்வமாக’ என்பதனூடாகச் சட்டவிரோதச் செயல்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.

இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும் 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது1973 நவம்பர் மாதம் 5ம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு மனுமீதான வழக்கு விசாரணையின் போது நீதிபதி அலஸ் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று தீர்ப்பளித்தனர்.

பின்னர், அதாவது 1988ம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர் குழுவொன்றினால் பிரேமவதியைக் கொலை செய்ததற்கான தண்டனையாக லுதினன் விஜேசூரிய மாத்தறையில் வைத்துக் கொலை செய்யப் பட்டான்.

0000

நன்றி: சட்டத்தரணி- பிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய (சமபிம 2010 ஆகஸ்ட்)

http://eathuvarai.net/?p=2819

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • உருளக்கிழங்கை காணோம்
  • சிறி இதற்குள் தண்ணீர் விடுவதில்லை.ஆனபடியால் உறைப்பாகத் தான் இருக்கும்.
  • தலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும்  பாபா வா ? 
  • உண்மையிலேயே விதி 19.8 வாசித்து விளங்கும் அளவுக்கு ஆங்கில அறிவு தர்மசேனவுக்கு இருக்கிறதாக நீங்கள் நினைக்கிரிரீர்களா? சைமன் டெளவள் வெள்ளைகாரன் பொய்சொல்லமாட்டான் என்ற ரீதியில் இருக்கிறது தர்மசேனாவின் விளக்கம். 
  • உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் டை ஆனது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருப்புமுனை ஓவர் த்ரோ இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால்தான், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது, இப்படியான சூழலில், இலங்கை சண்டே டைம்ஸ் சஞ்சிகையிடம், " தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை." என்று கூறி உள்ளார். மேலும் அவர், "நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார். 'தூக்கி அடித்திருப்பார்' முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு ரன் கூடுதலாக கிடைத்ததால்தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், "நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்" என்றார். https://www.bbc.com/tamil/sport-49068877