யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்?

Recommended Posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்?

 

sampanthan-sumanthiran-300x200.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,  அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

“சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால் அவரது உடல்நிலை நன்றாக இல்லை. இதனால் அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மூப்பு நிலைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே, கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வரவேண்டும். எனினும், அவரது உடல்நிலை தீவிரமான அரசியல் செயற்பாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு ஏற்றதாக இல்லாமையினால், சுமந்திரனை முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/02/11/news/36349

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, nunavilan said:

சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்து ஈனப் பிழைப்பு நடத்தும் திருட்டுக் கும்பல்களுக்கும், தமிழின படுகொலைகாரர்களின் முகவர்களாக செயற்படுபவர்களுக்கும், சமூக விரோதக் கும்பல்களுக்கும் சம்மந்தனை விட மோசமான ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நினைத்தேன். ஓநாய் ஒன்று சுத்தேய்க்கை, இதுதான்  மந்தையை இலக்கு வைத்து விழுங்க காத்திருக்குது என்று.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே

 
எல்லாம் பறிபோன கதிரையால் வந்த வினை.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,  அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எல்லாம் எதிர்பார்த்ததுதானே......என்ன பிரச்சனையெண்டால் ஏற்கனவே ஒரு மார்க்கமானது......

இனி சொல்லவே வேணும்.😎

Share this post


Link to post
Share on other sites

இப்ப ஆராம் தலைவர்?!

சிறிலங்கன்களுக்கு சேவை செய்ய வருக தலைவா! 

Share this post


Link to post
Share on other sites

TNA-1-720x450.jpg

கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன்?- பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் சரவணபவன் இல்லை. எனவே அவரை மேற்கோள்காட்டி வெளியான செய்தி சரியானதாக இருக்கும் என எண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கூட்டமைப்பின்-புதிய-தலைவ/

Share this post


Link to post
Share on other sites

தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் மாற்றம்? : வெளியான செய்தியை மறுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-கூட்டமைப்பு-தலைமைத/

 

Share this post


Link to post
Share on other sites

தலைமைப் பதவிக்கு சுமந்திரனை விட, மாவை நல்லவர்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, thulasie said:

தலைமைப் பதவிக்கு சுமந்திரனை விட, மாவை நல்லவர்.

நல்லவரா? பாெருத்தமானவரா?? எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டையள்தான்.

Share this post


Link to post
Share on other sites

இவை எல்லாம் தங்களைச் சொல்லிக் கொள்வது.. தூய சனநாயகவாதிகளாம். ஒரு கட்சிக்கு... உட்கட்சி தேர்தலும் இல்லை.. அங்கு தலைவர் செயலாளர் பொருளாளர் தெரிவுக்கு ஒரு தேர்தல் கூட இல்லை.

பல்கலைக்கழகங்களில் மாணவ ஒன்றியங்களில் இருக்கும் குறைந்த பட்ச தேர்தல் சனநாயகம் கூட இங்கில்லை.

இந்த பாசிசவாதிகள்.. சர்வாதிகாரிகள்.. மக்களை நோக்கிச் சொல்லிக் கொள்வது தாங்கள் இரத்தக்கறை படியாத.. நடுநிலை.. சனநாயக வியாதிகளாம். ஒன்றுபட்ட சொறீலங்காவுக்குள் கக்காவுக்கு இருக்கப் போகினமாம். 

மொக்கு மக்கள் இருக்கும் வரை இந்த மொக்குச் சட்டாம்பிகள் காட்டில் ஒரே இடியும் மழையும் தான். 😂🙄

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டி பறக்கும் ஹிந்தியப் பயங்கரவாதிகள் ஊழலில் சிக்கிய ஒரு வவுனியா அரசியல்வாதியை தலைவராக்க முயல்கின்றனர்.

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

ஏனப்பா கூட்டமைப்பு எங்கீறீர்கள் ...தமிழரசு கட்சி என்பது தானே பொருத்தம் .....இருந்தாலும் இப்ப உள்ளவர்களில் எவருமே பொருத்தம் இல்லாதவர்கள் ...ஏனெனில் இவர்கள் எல்லாரும் சிங்களத்தின் அடிமைகள் ...ஒரு பிரயோசனமும் இல்லை. 

சுமந்திரன் மறைமுக ஐ தே க ,உறுப்பினர் .....வந்த காரியத்தை முடித்து வைத்து விட்டார் . ரணில் நினைத்ததை சுமந்திரன் செய்து முடித்து விட்டார் ... கூட்மைப்பு இப்ப எங்கு உள்ளது ...... 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு