Sign in to follow this  
தமிழ் சிறி

டெல்லி ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் கருகி பலி.. மீட்பு பணி தீவிரம்

Recommended Posts

Fire at hotel Arpit Palace in Delhi and 9 dead

டெல்லி ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் கருகி பலி.. மீட்பு பணி தீவிரம்

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இன்று விடிகாலையில் ஓட்டலில் ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 26 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் கரோல்பாக் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/fire-at-hotel-arpit-palace-delhi-9-dead-341102.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this