Sign in to follow this  
நிழலி

ஜெயமோகனின் பிதற்றல்கள் - மு.பொ.

Recommended Posts

ஜெயமோகனின் பிதற்றல்கள்

1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது.

2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு பிரபலமான figure ஆக மாற்றிக் கொள்ளத் தனக்குத் தெரியாத விடயங்களில் மூக்கை நுளைத்து மூக்குடைபடுவது வழக்கமாகிவிட்டது. முன்னர் நடிகர் சிவாஜி பற்றி கேலிசெய்யப் போய், கிளர்ந்தெழுந்த சிவாஜி விசிறிகளுக்கு அஞ்சி வீட்டை விட்டோடி ஒளிந்து கொண்டார். பின்னர் தமிழகப் பெண்கவிஞர்களிடம் குட்டுப்பட்டார்.

3. இப்போ ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்பவர்களோடு தனக்கு தெரியாதவற்றையெல்லாம் சொல்லப்போய் பெரும் பொல்லாப்புக்குள் வீழ்ந்துள்ளார். இவர் 2010 இல் காலஞ்சென்ற கவிஞர் சு.விலவரத்தினம் என்பவரைப் பற்றி எழுதுவதாக பாவனை பண்ணி, அவரைப்போடு தடியாக்கி இலங்கை கவிஞர்களை மட்டந்தட்டி, தமிழகக் கவிஞர்களை தூக்கி பிடிக்க ‘அகமெரியும் சந்தம்’ என்று எழுதினார். இவரின் பொய்மையை அறிந்த நான் அதற்கொரு எதிர்வினையை ‘அகமெரியும் சந்தத்தில் அடியோடும் நிராகரிப்பு’ என்று எழுதி இவரின் பொய்மையை கிழித்தெறிந்தேன்.

4. இப்போ பல வருடங்களுக்கு பிறகு, நான் மறந்திருப்பேன் என்ற நினைவில் மு.பொன்னம்பலம் ஈழத்தில் இருநூறு கவிஞர்கள் உள்ளனர் என்று பாய் விரிக்கிறார் என்று கூறி, ஈழத்து கவிஞர்களை கொச்சைப்படுத்துகின்றார். நான் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பன்முகத்தளங்களில் இயங்கும் பெருங்கவிஞர்களும் இளங்கவிஞர்களும் ஈழக்கவிப்பரப்பில் நிறையவே உண்டு” என்று தான் எழுதினேன். ஆனால் ஜெயமோகனோ நான் 200 க்கு மேற்பட்ட கவிஞர்கள் உள்ளனர் என்று எழுதியதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, அவர்களை பூச்சிமருந்து அடித்து கொல்லவேண்டும் என்று சொல்லுகிறார், காரணம் இவர்களால் பெண்களின் கற்புக்கு ஆபத்தாம்! இதுவே எழுத்தாளர் ஜெயமோகனின் புதிய கண்டுபிடிப்பு! முன்னர் (கி.மு 400) தத்துவஞானி பிளேட்டோ கிரேக்கத்தில் இருந்தார். அவர் பெரும் சிந்தனையாளர்களே நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தார். அவர் கவிஞர்கள் அனைவரையும் உதவாக்கரைகள் என்று சொல்லி கொல்லவேண்டும் என்று சொன்னார். அக்காலத்தில் எழுதியவர்கள் அனைவரையும் poet என்றே கூறினர். இந்தச் சூழலில் நம் ஜெயமோகன் வாழ்ந்திருந்தால், தன்பிதற்றலுகளுக்காக முதலில் கொல்லப்பட்டவர் இவராகவே இருந்திருப்பார்!

5. இயல்விருது பற்றியும் ஜெயமோகன் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் அலட்டியிருந்தார். பேராசிரியர் செல்வாகனகநாயகம் இருக்கும் வரை அந்த இயல்விருதுக் குழுவில் நானும் ஒரு தெரிவாளனாக இருந்துள்ளேன். ஜெயமோகன் அக்காலங்களில் தனக்கு இயல்விருது கிடைக்கவேண்டும் என்பதற்காக பட்டபாடு நான் அறிவேன். இப்போது இவரின் தெரிவுகளைத்தான் இயல்விருது தருகிறதென்றால் அது எஸ்.பொ போன்றவர்களுக்குத்தான் சரி.

6. ‘ஈழத்தில் விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை’ என்று கூறும் இவர், என்னால் எழுதப்பட்ட, 2012 இல் மலேசியாவில் இடம்பெற்ற அனைத்துலக நூல் போட்டியில் சிறந்த நூலிற்கான முதற்பரிசு (தான்ஸ்ரீ விருது) பெற்ற 'திறனாய்வின் புதிய திசைகள்' என்ற நூலினையும் ‘60 களிலிருந்து பீறிட்டெழுந்த ஈழத்து விமர்சனப்போக்கு, தமிழகத்தவர்களுக்கும் பின்னுதைப்பாக இருந்தது’ என்ற எனது கட்டுரையும் மு.த வின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யையும் படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

மு.பொ.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஜெ.மோ வுக்கு மூளையின் நியுரோன்களுக்கும் வாய்க்கும் (அல்லது விரல்களுக்கும்) இடையே தடையில்லாத பாதை இருப்பது தான் அவரது பிரச்சினை என நினைக்கிறேன். 

ஐன்ஸ்ரைன் மிகவும் மெதுவாகத் தான் பேசுவார். அவருக்கு மொழி பேச்சு என்பவற்றில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவர் முதலில் யோசித்து வார்த்தைகளை மனதில் கோர்த்த பின்னர் பேசுவதால் மெதுவாகப் பேசினார் என்றும் ஒரு கருத்து உண்டு. இப்படி சில செக்கன்கள் யோசித்துப் பின் பேசுவது அல்லது எழுதுவது என்பது இன்று அறிவார்ந்தோரின், தலைவர்களின்  ஒரு அடையாளமாக இருக்கிறது. கூகிளின் பிச்சை, பில் கேட்ஸ், ஒபாமா போன்றோர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது ஒரு கணநேரத் தயக்கம் அவர்களின் உடல் மொழியில் தெரியும் - அவர்களின் மூளையில் வருவதை அவர்கள் உடனே சொல்லி விடுவதில்லை- அதனால் மிகவும் அரிதாகவே முட்டாள் தனமான கருத்துகளை அவர்கள் வெளியிடுகிறார்கள்! 

அண்மைய ஒரு நரம்பியல்-உயிரியல் ஆய்வில், "மனிதனின் மூளை வேகமாகச் செயற்படுவதற்காக சில தவறுகளை அனுமதிக்கிறது" என்று ஒரு  கருத்தை வெளியிட்டிருந்தார்கள். ஜெ.மோ எழுதும் வேகத்தைக் குறைத்தால் இப்படி விவகாரமான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள் கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0 இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது.    ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.    அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.   ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும் ஏற்கெனவே வெளியாகி விட்டது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைவும் ஏற்கெனவே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.   இப்போது, இந்த வரைவையும் அறிக்கையையும் வைத்து, தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஒரு தரப்பு வரவேற்றால், இன்னொரு தரப்பு எதிர்க்கிறது. அதுபோலவே, ஜெனீவாவில் முன்வைக்கப்படுவதற்காக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை, ஒரு தரப்பு சாதகமாகப் பார்க்க, இன்னொரு தரப்பு, பாதகமானதாகக் காட்டுகிறது.   தமிழர் தரப்புக்குள்ளேயே, இந்த விடயங்களில் ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது.   ஜெனீவாக் கூட்டத்தொடரில், இம்முறை இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம், இரண்டு நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளது என்பது தான்.   எந்த நிலைப்பாட்டை அதிகாரபூர்வமானதாக எடுத்துக் கொள்வது என்ற குழப்பம், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படும். அவ்வாறான நிலையில், இலங்கைக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில், அழுத்தங்களைக் கொடுக்காத தீர்மானமே முன்வைக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.    அதுபோலவே, ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆகிய விடயங்களில் தமிழர் தரப்பு, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் இருப்பதை, சர்வதேச சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காது.   ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கத் தவறினால், உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பரிசீலிக்க வேண்டும், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பன போன்ற பல யோசனைகளை அவர் முன்வைத்திருக்கிறார்.   இந்தப் பரிந்துரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் வரவேற்றிருக்கிறது. இன்னும் பல தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதை வரவேற்கவில்லை.   “பொறுப்புக்கூறல் விடயத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இலங்கை அரசாங்கம், அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது அறிக்கை அவ்வாறான பரிந்துரைகளைச் செய்யாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது” என்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.   ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைப்பதால் மாத்திரம், இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்து விடப் போகிறதா? அங்கு அது வெட்டுத் தீர்மானங்களில் சிக்கி விடாதா என்பது பற்றிய எந்த யோசனையுமின்றியே, இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.   இந்த விடயத்தில் மாத்திரமன்றி, புதிய தீர்மானம் தொடர்பான விடயத்திலும் தமிழர் தரப்பு பிளவுபட்டு நிற்கிறது.   முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், காலக்கெடு, காலஅவகாசம், காலஅட்டவணை போன்ற எந்தச் சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மூன்று சொற்களையும் வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.   தீர்மான வரைவின் படி, 30/ 1, 34/ 1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.   இதற்கமைய, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா, அதன் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், (2020 மார்ச்) ஓர் அறிக்கையையும் 46ஆவது கூட்டத்தொடரில், (2021 மார்ச்) விரிவான ஓர் அறிக்கையையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.   இதனைத் தான் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் என்று கூறப்படுகிறது.  நேரடியாக இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படுவது பற்றியோ, குறிப்பிட்ட எந்த காலக்கெடுவுக்குள் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியோ தீர்மான வரைவில் எதுவும் கூறப்படவில்லை.   இந்தநிலையில் தான், காலவரம்பு ஒன்றைக் குறிப்பிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கோருகின்றன. கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.   அதாவது, ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவதற்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அது இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கும்.   ஆனால், அந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில், சர்வதேச சமூகம் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.   அதேவேளை, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று ஐந்து தமிழ்க் கட்சிகள், ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி மாத்திரம், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது,   முன்னதாக, காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். பின்னர், சுமந்திரன் அந்த நிலைப்பாட்டை அடியோடு மாற்றியிருக்கிறார்.   அவரது பார்வையில், 2021 ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கான காலஅவகாசம் அல்ல; ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வேலையே அது என்று வாதிட்டிருக்கிறார்.   அதுமாத்திரமன்றி, 2021 மார்ச் வரை இலங்கை மீதான ஐ.நாவின் கண்காணிப்பு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வாதத்தை முன்வைத்திருக்கிறார்.   ஐ.நாவின் கண்காணிப்பில் இலங்கை இருக்கப் போகிறது என்பதைத் தான் இந்த விடயத்தில் சாதகமான ஒன்றாகச் சுட்டிக்காட்ட முனைகிறார் சுமந்திரன்.   ஐ.நாவின் கண்காணிப்பில் இருந்தால் மாத்திரம் போதுமா, இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடுமா? என்பது தான் தமிழர்களின் கேள்வி. ஏனென்றால், 2015ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கண்காணிப்பில் தான் இருந்தது, அந்தக் காலத்தில் கூட, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.    அப்படிப்பட்ட நிலையில், காலவரம்பு எதையும் நிர்ணயிக்காமல், வெறுமனே கண்காணிப்பு என்ற பெயரில் காலஅவகாசத்தைக் கொடுப்பதால் என்ன பயன் என்பது தான், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.   ஐ.நாவும் சரி, சர்வதேச சமூகமும் சரி சில தெளிவான நிலைப்பாடுகளின் இருக்கின்றன. இலங்கைக்கு அதிக அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், தமிழர் தரப்புத் தான், தமது எதிர்பார்ப்பு என்ன, நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமடைந்து போயிருக்கிறது.  சாதாரண தமிழ் மக்களிடம், ஜெனீவா நகர்வுகள் குறித்து ஏமாற்றங்கள் உள்ளன. ஐ.நா தொடர்பாக, சர்வதேச சமூகம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர்களுக்கு நிறையவே அதிருப்திகளும் இருக்கின்றன.   தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீதோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளின் மீதோ நம்பிக்கையற்ற நிலை தான் உள்ளது.   இத்தகைய நிலையில், ஜெனீவா விவகாரத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இரண்டு பிரிவுகளாக முட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கின்றன.   ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அடுத்த வாரம், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம், தமிழர் தரப்பின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டதாக இருக்குமா என்ற வலுவான கேள்விகள் உள்ள நிலையில் தான், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று தெரியாமல் முட்டிக் கொள்ளுகின்றன தமிழ்க் கட்சிகள்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டிக்-கொள்ளும்-தமிழ்க்-கட்சிகள்/91-230905
  • வெளிநாட்டிலேயே நம்மவருக்கு இன்னும் கூச்சம்.இதென்னடா உள்ளூரிலே இழுத்து பிடித்து இதழுடன் இதழ். பொலிசுக்கும் கஞ்சா கோஸ்டிக்கும் எப்பவுமே சரிவராதென்று நினைத்தேன். கொண்டு போய் சேர்த்த விதம் அருமை.
  • இப்போது அவன் பாவமென்கிறீர்கள். நாளைய தொடரில் யார் பாவமென்பது தெரியும்.
  • மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி.வாழ்த்துக்கள்.