Jump to content

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

Recommended Posts

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

Nayaru-Temple-300x200.jpgமுல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று  சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார்.

அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

தைப்பொங்கல் நாளன்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு செய்த தமிழ் மக்களுடன் பௌத்த பிக்குவும், தென்பகுதியில் இருந்து வந்தவர்களும் முரண்பட்டனர்.

Nayaru-Temple.jpg

இதனால் காவல்துறையினர் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதுடன் முல்லைத்தீவு நீதிவானின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தொல்பொருள் திணைக்க பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நேற்று முன்னிலையாகி, நாயாறில் உள்ள, குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

புராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 26ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/02/13/news/36382

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

universe.jpg

"பூமியிலிருக்கும் பாறைகளிலுள்ள யுரேனியம், தோரியம் போன்ற அணுக்களினும் அணுக்களின் சிதைவின் அளவை வைத்து பூமியின் வயதைக் கணக்கிட்டால் பூமியின் வயது 460 கோடி வருடங்கள்

டிஸ்கி :

பூமி தோன்றுவதற்கு முன்னமே அங்கு விகாரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

இதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நேற்று முன்னிலையாகி, நாயாறில் உள்ள, குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

இவரு பார்த்தாரு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிங்கம் (மகா வம்சத்தில் ) நான் நினைச்சன் குருடாக இருக்கலாம் என்று இந்த புலம்பலுக்கு பின் விளங்குது மூளையும் இல்லை என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபாதாசன் said:

2000 வருடங்களுக்கு முதல் புத்த மதமே இங்கு இல்லை ..எப்படி விகாரை வந்தது. .....

குருடன் பொண்டிலுக்கு அடிக்கிற மாதிரித்தான் சிங்களத்தின்ரை அரசியலும் இனவாத/மதவாத கதைகளும்.

எங்கடை தமிழ் அரசியல் வாதிகளின்ரை இனநலம் மறந்த சுயநலக்கொள்கைகளாலையும்   ஒரு சில பிற்போக்கு கொள்கைகளாலையும்  சிங்களம் தொட்டதெல்லாம் மினுங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரே 6ம் நூற்றாண்டில் தான் பிறந்தார். ஆனால்.. உந்த தொல்பொருளியல்.. இனவாதச் சிங்களக் கும்பல்.. அவர் பிறக்கும் முன்னரே விகாரை.. மடம் கட்டிட்டானுவள்.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள்.. இதுக்கெல்லாம் ஆமாப் போடுவது தான்.

இதுங்க படிச்சுப் பட்டம் வாங்கிச்சுதுகளா... இல்ல காசு கொடுத்து அல்லது காட்டிக்கொடுத்து வந்திச்சுதுகளா..???! 

Link to comment
Share on other sites

On 2/12/2019 at 7:06 PM, nunavilan said:

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

இதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நேற்று முன்னிலையாகி, நாயாறில் உள்ள, குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் சாட்சியம் அளித்துள்ளார். புராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 26ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/02/13/news/36382

21 hours ago, பிரபாதாசன் said:

2000 வருடங்களுக்கு முதல் புத்த மதமே இங்கு இல்லை ..எப்படி விகாரை வந்தது. .....

நீதிபதி விசாரணையை  26ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 

பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து இந்த தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல சொல்வது உண்மை அல்ல என்று நிறுவுவதற்கு இது சந்தர்ப்பம் வழங்குகிறது. நீதிபதி ஒரு பக்கத்தின் சார்பான சட்டத்தரணியாகவும் செயற்படும் நீதிமுறைமை அங்கு இல்லை. பிள்ளையார் ஆலயத்தின் மக்களுக்கு சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய பணம் இல்லாவிட்டால் இங்கு ஆர்வத்துடன் கருத்து பகிரும் பலரும் இந்த மக்களுக்கு உதவ முன்வரலாமே?

அப்படி பண உதவி செய்ய முடியாவிட்டால் சட்டவல்லுனர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  முன்னாள் முதலமைச்சர்  விக்நேஸ்வரன் ஆகியோரிடம் உதவுமாறு கேட்கலாம். இவர்கள் இது பற்றி எதுவுமே இதுவரை சொல்லாமல் இருப்பது ஏன்?

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

நாங்கள் வாக்கு போட்டு அனுப்பிய சுமந்திரன் எங்க ? அவரேல்ல இதட்கு முதல் ஆளாக வர வேண்டும் .
மற்றவர்களும் இதனை செய்யலாம் ....ஆனால் சுமந்திரனின் நண்பன் தானே ரணில் ......

16 minutes ago, பிரபாதாசன் said:

நாங்கள் வாக்கு போட்டு அனுப்பிய சுமந்திரன் எங்க ? அவரேல்ல இதட்கு முதல் ஆளாக வர வேண்டும் .
மற்றவர்களும் இதனை செய்யலாம் ....ஆனால் சுமந்திரனின் நண்பன் தானே ரணில் ......

நீதிமன்றம், நீதிபதி, சட்டம் எவ்வாறு செயற்படுகிறது என்று சுருக்கமாக மேலே எழுதி இருக்கறேன் அல்லவா? இந்த பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில் உள்ள விகாரையை அகற்ற முடியுமான வழி அந்த நீதிமன்றம் சார்ந்த வழி. இவ்வாறாக பிள்ளையார் கோவில் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அதற்கு முயற்சிக்க வழி இருக்கிறது, ஆனால் அதை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செய்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது.

அதை விட்டுவிட்டு சுமேந்திரனுக்கு நீங்கள் வாக்கு போட்டு ஏமாந்த கதை எழுதும் தேவைக்காக பிள்ளையார் கோவிலை இல்லாமல்  போக செய்ய நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகிய சட்டவல்லுனர்களுக்கு நீங்கள் கடந்த முறை வாக்கு போடாத காரணத்துக்காக அவர்களிடம் நீங்கள் உதவி கேட்க விரும்பாவிட்டால் அடுத்த முறை வாக்கு போட்டிவிட்டு தாரளாமாக உதவி கேட்கலாம். ஆனால் உங்கள் பிள்ளையார் கோவில் காணாமல் போய்விடும். அவர்களும் உங்கள் வாக்குகளை வாங்கிவிட்டு இன்று போல் என்றும் இப்படியான உதவிகளை செய்ய முடிந்தாலும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

இந்துக்களான உங்களுக்கே பிள்ளையார் கோவில் மேல் உள்ள அக்கறை வெறும் அரசியல் அலசலுக்கு மட்டும் தான் என்றால் இந்துக்கள் அல்லாத நானும் சுமேந்திரனும் இந்த கோவில் அழிவதை பற்றி ஏன் அக்கறை பட வேண்டும்? இந்துக்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகிய சட்டவல்லுனர்களே இது பற்றி மூச்சுக் கூட விடாமல் இருக்கிறார்கள், நமக்கு ஏன் வேண்டாத வேலை? உங்களுக்கு விருப்பமான படி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இந்துக்கள் அல்லாத நானும் சுமேந்திரனும் இந்த கோவில் அழிவதை பற்றி ஏன் அக்கறை பட

வாக்குகளையும் பிரிச்சே எண்ணினவை? தாேத்துப்பாேன அரசியல்வாதிகளிட்ட ராெம்ப எதிரபார்க்கிறீர்கள். சுமந்திரன் ரணிலுக்காகமட்டுந்தான் நீதிமன்றம் பாேவாராே?

Link to comment
Share on other sites

22 hours ago, nedukkalapoovan said:

புத்தரே 6ம் நூற்றாண்டில் தான் பிறந்தார். ஆனால்.. உந்த தொல்பொருளியல்.. இனவாதச் சிங்களக் கும்பல்.. அவர் பிறக்கும் முன்னரே விகாரை.. மடம் கட்டிட்டானுவள்.

புத்தர் பிறந்தது 6 ஆம் நூற்றாண்டில் அல்ல. 

இயேசு பிறந்ததிலிருந்துதான், நூற்றாண்டு கணிக்கப்படுகிறது.

இயேசுவிற்கு முன்தான், புத்தர் பிறந்தார்.

தொல்பொருள் பணிப்பாளரின் கருத்து நகைப்பிற்குரியது.

நீதிமன்றத்தை நாடுவது, வெற்றியைத் தரும்.

1 hour ago, satan said:

வாக்குகளையும் பிரிச்சே எண்ணினவை? தாேத்துப்பாேன அரசியல்வாதிகளிட்ட ராெம்ப எதிரபார்க்கிறீர்கள். சுமந்திரன் ரணிலுக்காகமட்டுந்தான் நீதிமன்றம் பாேவாராே?

விக்கி  தோற்றவர் என்று இப்போதுதானா விளங்குகிறது?

Link to comment
Share on other sites

தமிழ் சட்டத்தரணிகள் யாரும் முன்வரவில்லையென்றால்,  சிங்கள அல்லது முஸ்லீம் சட்டத்தரணிகளை நாடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, thulasie said:

புத்தர் பிறந்தது 6 ஆம் நூற்றாண்டில் அல்ல. 

இயேசு பிறந்ததிலிருந்துதான், நூற்றாண்டு கணிக்கப்படுகிறது.

இயேசுவிற்கு முன்தான், புத்தர் பிறந்தார்.

புத்தர் பிறப்பு இறப்பு பற்றி குழப்பகரமான தகவல்களே பதிவாகி இருக்கின்றன.

ஆனால்.. நிச்சயமாக.. நாயாற்றில்.. 2000 ஆண்டுகளுக்கு முன் சிங்கள பெளத்த விகாரைகள் அமைந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால்... தமிழர்கள் பெளத்தர்களாக இருந்த மணிமேகலை காலத்தில் அமைந்த பெளத்த சின்னங்கள்.. ஈழத்தில் உண்டு.

அவை சிங்கள பெளத்தத்தின் அடையாளம் ஆகாது. 

Link to comment
Share on other sites

31 minutes ago, nedukkalapoovan said:

புத்தர் பிறப்பு இறப்பு பற்றி குழப்பகரமான தகவல்களே பதிவாகி இருக்கின்றன.

ஆனால்.. நிச்சயமாக.. நாயாற்றில்.. 2000 ஆண்டுகளுக்கு முன் சிங்கள பெளத்த விகாரைகள் அமைந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால்... தமிழர்கள் பெளத்தர்களாக இருந்த மணிமேகலை காலத்தில் அமைந்த பெளத்த சின்னங்கள்.. ஈழத்தில் உண்டு.

அவை சிங்கள பெளத்தத்தின் அடையாளம் ஆகாது. 

புத்தர் பிறந்தது, இயேசுவிற்கு முன் -   2500 வருடங்களுக்கு முன் என்று சொல்கிறார்கள்.

நீங்கள் சொன்ன பிரகாரம்,  6 ஆம் நூற்றாண்டில் அல்ல.

மணிமேகலை காவியம் படைக்கப்பட்டது,  புத்த மதம் பரவிய பின்.

அதாவது, 5 ஆம் நூற்றாண்டில் என்று சரித்திரம் சொல்கிறது. சிலர் 3 ஆம் நூற்றாண்டில் என்றும் சொல்கின்றனர்.

எது எப்படியோ,   தமிழர்கள் பெளத்தர்களாக இருந்த மணிமேகலை காலத்தில் அமைந்த பெளத்த சின்னங்கள்.. ஈழத்தில் உண்டு என்று நீங்கள் சொல்வது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல சொல்வதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. 

பெளத்தம் என்பது ஒரு மதம். 

மொழியடிப்படையில், தமிழ் பெளத்தம், சிங்கள பெளத்தம் என்றில்லை.

பெளத்தத்திற்குள் மஹாயான, தேரவாத என்ற பிரிவுகளும் இன்னும் எத்தனையோ உட்பிரிவுகளும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, thulasie said:

ஆங்கிலக் குறிப்புகளின் படி புத்தர் 560 - 480 BCE காலத்தில் பிறந்து வாழ்ந்திருக்கக் கூடும் என்று தான் உள்ளது. அதாவது கிறிஸ்துவுக்கு முன் 6ம் நூற்றாண்டில். ஆனால் அதையும் சிலர் நிராகரிக்கிறார்கள். 

மணிமேகலை கிறிஸ்துவுக்கு பின் 150 - 250ம் ஆண்டு காலம்.. அதாவது 3ம் நூற்றாண்டில். அதாவது இன்றில் இருந்து 1800 ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட. 

மணிமேகலை பூம்புகார் இன்று கடலுக்கு அடியில் ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கிடப்பதாக கடலடி ஆய்வுகள் சொல்கின்றன.

தமிழ் பெளத்த எச்சங்கள் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் உள்ளன. இவை எவையும் சிங்கள பெளத்தர்கள் பின்பற்றும் தேரவாத பெளத்தத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. அது தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து வரும் சிங்கள பெளத்தமாகும்.

சிங்களவர்கள் பெளத்த சின்னம் உள்ள இடமெல்லாம்.. சிங்கள பெளத்தம் மேலோங்கி இருந்தது.. அது தமதென்று உரிமை கோர முடியாது. 

பெளத்தம் ஒரு மதமாக உலகெங்கும் வியாபித்துள்ளது. அங்கெல்லாம்.. சிங்களவர்கள்.. தாமே பெளத்தத்தின் சொந்தக்காரர்கள் என்று உரிமை கோரி.. விகாரை கட்டிக்கொண்டிருக்க முடியாது.

ஆக நாயாற்றில்.. அப்படி ஒரு எச்சம் இருந்திருந்தாலும் கூட.. அதற்கு இன்றைய சிங்கள பெளத்தர்கள் தமதென்று உரிமை கோர முடியாது. 

இதுதான் வரலாற்று உண்மை. 

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவர்கள் பெளத்த சின்னம் உள்ள இடமெல்லாம்.. சிங்கள பெளத்தம் மேலோங்கி இருந்தது.. அது தமதென்று உரிமை கோர முடியாது. 

ஆக நாயாற்றில்.. அப்படி ஒரு எச்சம் இருந்திருந்தாலும் கூட.. அதற்கு இன்றைய சிங்கள பெளத்தர்கள் தமதென்று உரிமை கோர முடியாது. 

நாயாறு என்பது, இலங்கையின் ஒரு பகுதி.

இலங்கையில் வாழும் பெளத்தர்கள் 100% சிங்களவர்கள்.

ஆக, எந்த பெளத்த சின்னங்களாக இருந்தாலும் அவர்கள் உரிமை கோருவார்கள்.

நாம்தான் எதிர்த்துப் போராட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

நாயாறு என்பது, இலங்கையின் ஒரு பகுதி.

இலங்கையில் வாழும் பெளத்தர்கள் 100% சிங்களவர்கள்.

ஆக, எந்த பெளத்த சின்னங்களாக இருந்தாலும் அவர்கள் உரிமை கோருவார்கள்.

நாம்தான் எதிர்த்துப் போராட வேண்டும்.

நாயாறு இலங்கையின் ஒரு பகுதி. அங்கு எந்த பெளத்த சின்னமும் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வமாக சான்றுகளுடன் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால்.. அந்தப் பகுதியில் சைவ ஆலயம் இருந்தமைக்கு ஆதாரங்களும் சான்றுகள் கண்கூட உள்ளன. ஆக.. அந்தச் சைவ ஆலயம் அமைக்கப்படுதல் தான் சட்ட ரீதியானது. ஒரு எடுகோள் அடிப்படையில்.. பெளத்த சின்னம் இருந்தது என்பதன் அடிப்படையில் 100% சிங்களவர்களே வாழ்ந்திராத பகுதிகளில் எல்லாம்.. தேரவாத சிங்கள பெளத்த சின்னங்கள் எழுப்பப்படுவது தடுக்கப்படுதல் அவசியம். 

மேலும்.. இலங்கை பூராவும் சைவச் சின்னங்களும் உள்ளன. பொலநறுவை... அனுராதபுரம்.. கண்டி உட்பட இலங்கை பூராவும் சைவச் சின்னங்கள் உள்ளன. ஆனால்.. அவை எல்லாம்.. சான்றுகள் இன்றி இடித்தழிக்கப்பட்டு.. முழு சிங்கள பெளத்த பிரதேசங்களாக்கப்படும் நிலையில்..

எடுகோள் அடிப்படையில்... பெளத்த சின்னங்கள் காணப்படும் இடமெல்லாம்.. சிங்கள பெளத்தருக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்.. சொறீலங்காவின் தொல்பொருள் திணைக்களம்.. மீது நீதிமன்றங்கள் கடும் தடைகளை விதிமுறைகளை விதிக்க வேண்டும். மாறாக அவை சிங்கள பெளத்தத்தின்.. தமிழர் நில கபளீகரத்துக்கு உதவி நிற்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் பெளத்த எச்சங்கள் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் உள்ளன. இவை எவையும் சிங்கள பெளத்தர்கள் பின்பற்றும் தேரவாத பெளத்தத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. அது தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து வரும் சிங்கள பெளத்தமாகும்.

தேவநம்பிய தீசன், இயேசுவிற்கு 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவன்.

அவன் தமிழனா, சிங்களவனா என்று யாருக்கும் தெரியாது.

சிங்களவர்கள், அவன் சிங்களவன் என்றுதான் சொல்கிறார்கள்.

அவன் வாழ்ந்த காலத்தில், தேரவாத பிரிவு என்று ஒன்றும் இருந்ததாகவும் இல்லை.

***தமிழ் பெளத்த எச்சங்கள் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் உள்ளன.***

சிங்களவனுக்கு இதுவே போதும், வட மாகாணத்தில் விகாரைகள் நிறுவுவதற்கு.

6 minutes ago, nedukkalapoovan said:

எடுகோள் அடிப்படையில்... பெளத்த சின்னங்கள் காணப்படும் இடமெல்லாம்.. சிங்கள பெளத்தருக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்.. சொறீலங்காவின் தொல்பொருள் திணைக்களம்.. மீது நீதிமன்றங்கள் கடும் தடைகளை விதிமுறைகளை விதிக்க வேண்டும். மாறாக அவை சிங்கள பெளத்தத்தின்.. தமிழர் நில கபளீகரத்துக்கு உதவி நிற்கக் கூடாது. 

பெளத்தத்திற்கு முன்னுரிமை உள்ள இலங்கையில், நீதிமன்றங்களால் எந்தவொரு தடையையும் விதிக்க முடியாது.

இது எழுதிய சட்டம். 

இந்த எழுதிய சட்டம் நீக்கப்பட்டாலும், எழுதாத சட்டமாக இலங்கை அரசு அதை அமுல்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

தேவநம்பிய தீசன், இயேசுவிற்கு 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவன்.

அவன் தமிழனா, சிங்களவனா என்று யாருக்கும் தெரியாது.

சிங்களவர்கள், அவன் சிங்களவன் என்றுதான் சொல்கிறார்கள்.

அவன் வாழ்ந்த காலத்தில், தேரவாத பிரிவு என்று ஒன்றும் இருந்ததாகவும் இல்லை.

***தமிழ் பெளத்த எச்சங்கள் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் உள்ளன.***

சிங்களவனுக்கு இதுவே போதும், வட மாகாணத்தில் விகாரைகள் நிறுவுவதற்கு.

 தேவநம்பிய தீசன்.. கிமு 3ம் - 2ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவனை மையப்படுத்தியே இன்றைய சிங்கள பெளத்தர்களும் வரலாற்றுப் புருடாக்கள் ஆரம்பமாகின்றன.

தீசன் தான் தேரவாத பெளத்தத்தை வட இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பெளத்தத்தை தழுவினான் என்று சொல்லப்படுகிறது.

அவன் கொண்டு வந்து பின் சிங்கள பெளத்தமாக திணிக்கப்பட்ட தேரவாத பெளத்த சின்னங்களும் வடக்குக் கிழக்கில் காணப்படும் பூம்புகார் கால பெளத்த சின்னங்களும் ஒன்றல்ல. தமிழர் பெளத்த சின்னங்கள் வேறானவை.

எதுஎப்படியோ.. சிங்களவர்களுக்கு ஏலவே இந்த விடயங்கள் தெரியும். அண்மையில் விக்னேஸ்வரன் ஐயாவும் இது குறித்து ஒரு விரிவான விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால்.. இந்த நுட்பங்களை எல்லாம் உள்வாங்காமல்.. சொறீலங்கா தொல்பொருள் திணைக்கலம்.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை தமிழர் தாயகம் எங்கனும் நடத்தி வரும் அதேவேளை.. தென்பகுதிகளில் உள்ள சைவச் சின்னங்களை இடித்து அழித்தொழித்து வருகிறது. 

இவை நீதிமன்றங்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு.. தீர்வுகள் பெறப்பட வேண்டும். இன்றேல்.. இந்த விடயங்கள் ஆதாரங்களுடன் சர்வதேச மயப்படுத்தப்பட்டு.. இந்த ஆக்கிரமிப்புக்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். 

Link to comment
Share on other sites

தமிழ் பேசும் எந்த இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் அரசியல்வாதியாக இருக்கட்டும், ஒருவரும் வாய் திறந்து, வட, கிழக்கில் தமிழ் பவுத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றோ, பவுத்த சின்னங்கள் இருந்ததாகவோ, இருப்பதாகவோ சொன்னது கிடையாது. 

விக்கியாரைத் தவிர.

அதனால்தானோ என்னவோ, வடக்கிற்கு இப்போது தமிழ் ஆளுநராக, தமிழ் பவுத்தர் கிடைத்துள்ளார்.

இதன்பிறகாவது, கனவிலாவது, பவுத்தம் வடக்கில் வாழ்ந்தது என்றோ, கிழக்கில் வாழ்ந்தது என்றோ எங்காவது மறந்தாலும் சொல்லி விடாதீர்கள்.

நீதிமன்றம் சென்றாலும் பயன் தராது.

3 minutes ago, nedukkalapoovan said:

தீசன் தான் தேரவாத பெளத்தத்தை வட இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பெளத்தத்தை தழுவினான் என்று சொல்லப்படுகிறது.

தீசனுக்கு முன், பவுத்தம் இலங்கையில் இருந்தது என்று சிங்களவர்கள் சொல்கிறார்கள்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்று பாருங்கள்.

அங்கு, ஓலைகளில்  எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதை ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ விளக்குவதற்கு அங்கு சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, thulasie said:

தமிழ் பேசும் எந்த இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் அரசியல்வாதியாக இருக்கட்டும், ஒருவரும் வாய் திறந்து, வட, கிழக்கில் தமிழ் பவுத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றோ, பவுத்த சின்னங்கள் இருந்ததாகவோ, இருப்பதாகவோ சொன்னது கிடையாது. 

விக்கியாரைத் தவிர.

அதனால்தானோ என்னவோ, வடக்கிற்கு இப்போது தமிழ் ஆளுநராக, தமிழ் பவுத்தர் கிடைத்துள்ளார்.

இதன்பிறகாவது, கனவிலாவது, பவுத்தம் வடக்கில் வாழ்ந்தது என்றோ, கிழக்கில் வாழ்ந்தது என்றோ எங்காவது மறந்தாலும் சொல்லி விடாதீர்கள்.

நீதிமன்றம் சென்றாலும் பயன் தராது.

பெளத்தம் சிங்களவர்களது மதம் மட்டும் கிடையாது. அவர்கள் பின்பற்றுவது தேரவாத பெளத்தம். அதன் அடையாளங்கள் எதுவும் வடக்குக் கிழக்கில் இல்லை. ஏன் மலையகத்தில் கூட இல்லை. ஆனால்.. இலங்கை பூராவும் சிவ வைசச் சின்னங்கள் உள்ளன. அதுபோது தமிழர்கள் முழு இலங்கையையும் தமதென்று சொல்ல.

ஆனால் அதுஅல்ல விடயம். தமிழர் நிலத்தில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் நோக்கமாக.. விகாரைகள் அமைய கட்டுக்கதைகளும்.. புராதனப் புரட்டுக்களையும் சிங்கள பெளத்த பிக்குகளும்.. சிங்கள அரச ஸ்தாபனங்களும் முன்னெடுப்பதே பிரச்சனை இன்று.

அதற்காக.. தமிழர்களில் ஒரு பகுதி மக்கள்.. குறிப்பிட்ட ஒரு காலத்தில் பெளத்தத்தையும் பின்பற்றி இருக்கிறார்கள். ஆனாலே அதனை சிங்கள பெளத்தம் தன் ஆக்கிரமிப்புத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. இது எப்படியாவது தடுக்கப்பட வேண்டும். 

48 minutes ago, thulasie said:

தீசனுக்கு முன், பவுத்தம் இலங்கையில் இருந்தது என்று சிங்களவர்கள் சொல்கிறார்கள்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்று பாருங்கள்.

அங்கு, ஓலைகளில்  எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதை ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ விளக்குவதற்கு அங்கு சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிங்கத்தில் இருந்து தோன்றியதென்று சொல்லும் மகாவம்ச  புருடா வரலாற்றையே எழுதி வைச்சு உலகை ஏமாற்றும் சிங்கள பெளத்தத்திற்கு.. இதெல்லாம்.. யு யு பி. 

Link to comment
Share on other sites

25 minutes ago, nedukkalapoovan said:

சிங்கத்தில் இருந்து தோன்றியதென்று சொல்லும் மகாவம்ச  புருடா வரலாற்றையே எழுதி வைச்சு உலகை ஏமாற்றும் சிங்கள பெளத்தத்திற்கு.. இதெல்லாம்.. யு யு பி. 

மகா வமிசம் கட்டுக் கதைகளும் உள்ளடங்கியது.

நாம் வெறுப்பதால், எல்லாம் கட்டுக் கதையாக இருக்க முடியாது.

அதில், சில உண்மைகளும் இல்லாமல் இல்லை.
 
Link to comment
Share on other sites

48 minutes ago, nedukkalapoovan said:

தீசன் தான் தேரவாத பெளத்தத்தை வட இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பெளத்தத்தை தழுவினான் என்று சொல்லப்படுகிறது.

அவன் கொண்டு வந்து பின் சிங்கள பெளத்தமாக திணிக்கப்பட்ட தேரவாத பெளத்த சின்னங்களும் வடக்குக் கிழக்கில் காணப்படும் பூம்புகார் கால பெளத்த சின்னங்களும் ஒன்றல்ல. தமிழர் பெளத்த சின்னங்கள் வேறானவை.

பெளத்த சின்னங்கள் எல்லாம் ஒன்றுதான்.

தமிழர் பெளத்தம், சிங்கள பெளத்தம், தேரவாத பெளத்தம், மகாயான பெளத்தம் போன்றவைக்கு, வேறுவிதமான சின்னங்கள் கிடையாது.

அவர்களின் கொள்கைகள் வேறுபட்டவை. அவ்வளவுதான்.

தமிழ் பெளத்த சின்னங்கள் வடக்கில் இருந்தன என்று, ஏன் கிளறுகிறீர்கள்?

யாழ்ப்பாண நகர் நடுவே புத்தர் சிலை நிறுவப்பட்டால், அது தமிழ் பெளத்த சின்னம் என்று ஏற்றுக் கொள்ள சம்மதமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.