Sign in to follow this  
தமிழ் சிறி

பெற்றோரின் கவனத்திற்கு... குழந்தை வளர்ப்பு.

Recommended Posts

குழந்தை வளர்ப்பில்... அவதானமாக இருக்க வேண்டிய விடயங்கள்.

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person, outdoor and text

 

Image may contain: 1 person, smiling, baby and text

 

Image may contain: one or more people, people standing, ocean, sky, nature, text and outdoor

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, people smiling, text

 

Image may contain: 2 people, text

 

Image may contain: 2 people, people smiling, people sitting and text

 

Image may contain: 3 people, people smiling, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, text

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பயனுள்ள தகவல்கள் நன்றி தமிழ்சிறி .....!   😁

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ஈழப்பிரியன் said:

குழந்தைகள் வளர்க்க தேவையான அறிவுரை.இணைப்புக்கு நன்றி சிறி.

6 hours ago, suvy said:

பயனுள்ள தகவல்கள் நன்றி தமிழ்சிறி .....!   😁

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner GIFs

 

 

நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன்...😂

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner GIFs

 

 

நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன்...😂

Image associée

புரியுது புரியுது சாமியோவ் .....இன்று வெள்ளிக் கிழமை  என்று எழுதியதை அழிசிட்டு அடக்கி வாசித்திருக்கிறம் , அதுகூட பொறுக்கவில்லை போலிருக்கு.....!  😒

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்   1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம். எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும்? (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன? (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன? (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா? (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை? (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை? (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன? 2. நாடாளுமன்றம் 19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை (I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன? (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா? (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன? 3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம் முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம். குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும். (I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன? (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா? 4. கல்வி கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது. மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது. பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை. (I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன? (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை? 5. பால் மற்றும் இறைச்சி இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும். இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும். (I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா? 6. குப்பைப் பிரச்சினை தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. (I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன? 7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில் விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும். (I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன? 8. குற்றவியல் வழக்குகள் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன? (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா? அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? 9. அரசியல்யாப்பு தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது. (I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும்? அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா? விக்டர் ஐவன்     https://maatram.org/?p=8141
    • அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation  on October 17, 2019     பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயாதீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும். கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா? அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா? 2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார்? மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார். மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும். අනේ! ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි! என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.   https://maatram.org/?p=8134  
    • ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட  தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து  உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்.     https://www.virakesari.lk/article/67206
    • பருத்தித்துறை.. தெல்லிப்பழை.. வரணி..சாவகச்சேரி.. குருநகர் பாடசாலைகள் முன்னணியில் இருக்க... யாழ் நகர.. நகர்ப்புறப் பாடசாலைகளான.. யாழ் இந்து.. யாழ் பரியோவான்.. யாழ் மத்தி.. மாணவர்களின் சேர்க்கைக்கு பணம் அறவிடுவதில் தான் கணக்குப் புலிகளாக இருக்கிறார்கள் போல.  வாழ்த்துக்கள் சாதித்த மாணவர்களே. சாதிக்காதவர்கள் சிந்திக்க. 
    • கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்   கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற  சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு  இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2008- 2009 இல் 11 பேர்  இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை  குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்  சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல  தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான  இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்  தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்   https://www.virakesari.lk/article/67209