Sign in to follow this  
கிருபன்

தென்னாபிரிக்கா - இலங்கை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

Recommended Posts

235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

srilanka.jpg

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இன்று டர்பனில் ஆரம்பமாகிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணி 59.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிக்காக பெற்றது.

rsad.jpg

மக்ரம் 11 ஓட்டத்தையும், எல்கர் டக்கவுட் முறையிலும், அம்லா 3 ஓட்டத்தையும், பவுமா 47 ஓட்டத்தையும், டூப்பிளஸிஸ் 35 ஓட்டத்தையும், டீகொக் 80 ஓட்டத்தையும், பிலேண்டர் 4 ஓட்டத்தையு, மஹாராஜ் 29 ஓட்டத்தையும், ரபடா 3 ஓட்டத்தையும், ஸ்டெய்ன் 15 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஒலிவர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

DzSnCnOV4AEbfXh.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்ப பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மல் மற்றும் லஷித் எம்புலுதெனிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

sl.jpg

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இரண்டு ஓவர்களின் முடிவில் எதுவித விக்கெட் இழப்புகளுமின்றி 6 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமன்ன எதுவித ஓட்டங்களின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/49943

 

Share this post


Link to post
Share on other sites

தென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

February 17, 2019

srilanka.jpeg?resize=770%2C433இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்ததன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

44 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2019/113533/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this