Jump to content

பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை’

Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0

image_e9d737c688.jpg

 

எஸ்.நிதர்ஷன்

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவற்றை புனரமைப்புச் செய்து, பிராந்திய, வர்த்தக விமான சேவை, அதேபோல் பயணிகள், வர்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது,

யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை நேற்று (13) சந்தித்த போதே, யாழ்ப்பாண வா்த்தகரான எஸ்.மனோகரன், மேற்கண்டவாறு பகிரங்கக் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

பொருளாதார மட்டத்தில் வடமாகாணம் தாழ்ந்து காணப்படுகிறதெனத் தெரிவித்த அவர், அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் அரசியல்வாதிகளும் எடுக்கவில்லை, அரசாங்கமும் எடுக்கவில்லை. எமது மக்களுக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கு பதிலாக புதிய தொழில் முயற்சிகளை ஏற்படுத்துவதுடன், வடக்கில் அதிகளவான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டை செய்யவேண்டுமென அவர் கோரிநின்றார்.

வடமாகாணத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும், தேசிய பொருளாதாரத்தில் வடமாகாணம் தவிர்க்க முடியாத ஓர் அங்கத்தை வகிப்பதற்கும் வடக்கில் பாரிய முதலீடுகள் செய்வது மட்டுமல்லாமல், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அபிவிருத்தி செய்யப்பட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பெருமளவான மக்கள் வடமாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு, வருடாந்தம் செல்கின்றனர், அதேபோல் புலம்பெயர் நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் வருடந்தோறும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர். அவா்கள், கட்டுநாயக்கவில் இறங்கி அதன்பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து பெரும் பயணச் சிரமம், பண விரயத்தை சந்திக்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், பலாலி விமான நிலையத்தை திறப்பதன் ஊடாக, வீண் விரயங்களை தவிர்க்க முடியுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்புச் செய்வதன் ஊடாகவும் அதிகளவான நன்மைகளை வடமாகாண மக்கள் பெற்றுக்கொள்ள இயலுமெனத் தெரிவித்த அவர், அதற்கு புலம்பெயர் தமிழர்களும், வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அதிகளவான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். அதன் ஊடாகவே, வடக்கு மக்கள் பொருளாதார மட்டத்தில் மேம்பட முடியுமென்றார்

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொருளாதார-வளர்ச்சிக்கு-வர்த்தகர்-ஆலோசனை/175-229562

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

அதற்கு புலம்பெயர் தமிழர்களும்,

சபாஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் விக்கியர் செய்த தவறு.

அரசுடன் பேசி வரியற்ற பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள், தொழில் பேட்டைகள், அதற்கான சிவப்பு நாடாவை அகற்றி, புலம் பெயர் நாடுகளில் உள்ள மக்களுடன் பேசி சந்தை வாப்புகள், தமிழ் மொழிபேசும் தமிழகத்தின் ஊடாக இந்திய பெரும் சந்தை என்று போயிந்திருக்க முடியும். சிறப்பான திட்டங்கள் மூலம் கடல்வளம் பெருக்கியிருக்கலாம்.

யூதர்கள் போல, தமிழர் பொருளாதாரமே இனி சிங்களவரை அடிபணிய வைக்கும் என்பதே நிதர்சனம்.

இலண்டணில் ஆயிரம் வரையான தமிழ்கடைகளுக்கு, வடக்கில் மீனவர்களிடம் வாங்கும் கடலுணவுகளை இப்போது சிங்களவரும் நேரடியாக சப்பிளை செய்கிறார்கள்.

பலாப்பழம், நெத்தலி, றால் கருவாடுகள், தாய்லாந்தில் இருந்தும், 

மரவள்ளி பொரியல், வீச்சு ரொட்டி கேரளத்தில் இருந்தா வரவேண்டும். 

அதே வேளை தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல், தாயகத்தில் பட்டதாரிகள் வேலை இல்லை என போராடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கடைகளில் கிடைக்கும் புழுக்கொடியல் தாயகத்தில் இருந்துதானே வருகின்றது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

தமிழ்க் கடைகளில் கிடைக்கும் புழுக்கொடியல் தாயகத்தில் இருந்துதானே வருகின்றது??

சேட்டன்மார்கள் இடம் இருந்து தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் காங்கேசன் துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தை பெருப்பிச்சு அபிவிருத்தி செய்தாலும்.......சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி கொழும்பிலை மட்டும் தான் நடக்கும். :cool:

புளுக்கொடியல் இல்லை பனங்கொட்டை வெளியிலை போறதெண்டாலும்  கொழும்புக்காலைதான் வெளியிலை போக வேணும்.

ஆனால் கஞ்சா இறக்குமதி யாழ்ப்பாண பக்கத்தாலைதான். அதை சிங்களம் உரிமை கொண்டாடேலாது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னதான் காங்கேசன் துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தை பெருப்பிச்சு அபிவிருத்தி செய்தாலும்.......சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி கொழும்பிலை மட்டும் தான் நடக்கும். :cool:

புளுக்கொடியல் இல்லை பனங்கொட்டை வெளியிலை போறதெண்டாலும்  கொழும்புக்காலைதான் வெளியிலை போக வேணும்.

ஆனால் கஞ்சா இறக்குமதி யாழ்ப்பாண பக்கத்தாலைதான். அதை சிங்களம் உரிமை கொண்டாடேலாது.:grin:

பலாலி இறங்கி யாழ்ப்பாணம் போனாதான்  முடி இறங்குவேன் எண்டு கண  சனம் நிக்குது பாருங்கோ... 

ஆவுஸ், சிங்கப்பூர், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, செல்லும், வரும் கப்பல்கள் இலங்கையை சுத்தி வந்து, ஆழம் கூடிய கொழும்பு துறைமுகத்துக்கே வருவதால், அந்த பெரிய கப்பல்கள் பிடிக்க, மும்பை, சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து சிறிய கப்பல்களில், சரக்கு வருகின்றன. அது போல தான் KKS கதையும் இருக்கும். சென்னை கப்பல்கள், கொழும்பு செல்லும்  வழியில் KKS வரும்.

இதை உடைக்க தான், ராமர் போட்ட அணையை உடைத்து ஆழமாக்க வெளிக்கிட்டினம்.  ஆனாலும் இலங்கையை சுத்தி போகும் கப்பல்கள் சென்னை போனாலும் திரும்பவும் சுத்தி தான் போக வேண்டும் என்பதால்,  போய்  மினக்கெட மாட்டார்கள் என்பதால், அது கிடப்பில் போட்டாச்சு. 

large_Sea.jpg.f35b2247a8bdd8a08b075c493d2cacaa.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறை முகம் இருந்தால் ,கடற்படை பாதுகாப்புக்கு தேவை,விமான நிலையம் இருந்தால் ஆகாயப்படை தேவை......இவர்களுக்கு உதவி செய்ய இராணுவம் தேவை.........

முப்படைகள் தமிழர்களுடன் உறவுப்பாலம் அமைக்க பொலிஸ் தேவை....அவ்வளவு தான்.....

இதை நாங்கள் ஆக்கிரமிப்பு ,நிலஅபகரிப்பு  என்று சொல்லக்கூடாது .....கண்டியளோ:14_relaxed:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.