யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

காதல் காலத்தை மறக்கச் செய்யும்; காலம் காதலை மறக்க செய்யுமா?

Recommended Posts

சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ்
காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?படத்தின் காப்புரிமை LOIC VENANCE

'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது.

'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர்.

''அவ்வளவு வலி, அதை தாண்டி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்ப நினைச்சாலும்....' சொல்லும்போதே கண்ணீல் நீர் கோர்த்துவிடும் மணமான தோழி ஒருவருக்கு.

''எப்படி சொல்லனு தெரியலை...அப்படியே பறக்கிற மாதிரி, மிதக்குற மாதிரி இருந்தது. நிலையில்லாம இருந்த நாட்கள்தான்...ஆனால், என் வாழ்க்கையோட பொன்னான நாட்கள்னா அதுதான். நீயும் அப்படி ஒரு வலையில விழணும்டா ...'' வாழ்க்கையின் வெறுமையை கடந்துவிட நண்பனின் சகோதரர் அளித்த அறிவுரை இது.

''யார் கல்யாணம்னு கூப்பிட்டாலும் போக பிடிக்கலை , அதுவும் லவ் மேரேஜ்ன்னு யாராவது சொல்லிட்டா கேட்கும்போது இனம் தெரியாத ஒரு பொறாமை, கோபம் உடனே தலைகாட்டுது'' இது எந்த நண்பனும் சொல்லியதில்லை. அண்மையில் நானே என் நண்பனிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது.

எல்லோரையும், எக்கணத்திலும் சிலிர்க்கவைக்கும் உணர்வு ஒன்று உள்ளது என்றால் அது காதல்தான். வாழும் அனைத்து உயிர்களையும் சிலிர்க்க வைக்கும் ஒற்றை சொல்லாக திகழ்கிறது காதல்.

காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?படத்தின் காப்புரிமை Hindustan Times

அநேகமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் காதல்வயப்பட்டு இருக்கிறார்கள்; காதலுடன் வாழ்கின்றார்கள்' காதலை கடந்துள்ளார்கள்; ஆனால், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்ட நிலையில், காதலும் மாறிவிட்டதா?

காதல் என்பதை மோகத்தின் ஒருமுகம்தான் என்றும், காமத்தை அணுக காதல் ஒரு நுழைவுசீட்டாக அமைகிறது என்றும் விமர்சனங்கள் உண்டுதான். ஆனாலும், திரைப்படங்களும், புதினங்களும் போட்டி போட்டுகொண்டு அமரத்துவ காதலை வர்ணிக்கின்றன.

'சினிமால காட்டுறதெல்லாம் ரொம்ப செயற்கையானது. அப்படி ஒன்றும் காதல் புனிதமானதோ அல்லது அமரத்துவமானதோ இல்லை' எப்போதும் திரைப்படங்களை பரிகசிக்கும் ஒர் அலுவலக தோழர், தான் காதல்வயப்பட்ட சமயத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தின் காட்சி ஒன்றைதான் உதாரணமாக கூறினார். ஆண்டுகள் சில கழிந்தபிறகு, ஒரு மது விருந்தில், மற்றொரு திரைப்படத்தையே தனது காதல் தோல்விக்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் காதல் மாறிவிட்டதா?

காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?படத்தின் காப்புரிமை FEDERICO PARRA

இந்த கேள்விக்கு விடைதேடும்முன், காதல் வளர்த்த அம்சங்கள், வளர்ந்த விதங்கள் காலப்போக்கில் மாறிவிட்டன என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஆரம்ப காலங்களில் காதலை வளர்த்த திரைப்படங்களும், நாவல்களும் தற்போது அந்த பணியை சமூக ஊடகங்கள் மற்றும் நவீன மொபைல் செயலிகளுடன் பங்குபோட்டுள்ளன.

முன்பு நகரங்களில் 'பார்க், பீச், சினிமா' ஆகிய மூன்றும் காதல் வளர்க்கும் இடங்களாகவும், கோயில், குளக்கரை போன்றவை கிராமிய காதலை வளர்த்தன. கடந்த ஒரு தசாப்தமாக, காபிஃ ஷாப், ஷாப்பிங் மால்கள், நவீன அலுவலகங்கள் ஆகியவை இந்த போட்டியில் குதித்துள்ளன.

அதேபோல் முன்பு காதலை வெளிப்படுத்த கடிதங்களே பிரதானமாக இருந்தது. கடிதத்தை எப்படி தருவது, நேராக தருவதா, யார் மூலம் தருவது என பல கேள்விகள் இருந்தன. தற்போது வாட்ஸப் அத்தனை சைமத்தை ஏற்படுத்தவில்லை.

காதலை வெளிப்படுத்துவது எளிதாகி விட்டது; அதேபோல் காதலை பெறுவதும் எளிதாகி விட்டதா?

இந்த கேள்விகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் மனநல மருத்துவர் டி. வி. அசோகன் பேசினார்.

''ஆரம்ப காலங்களில் ஓர் ஆணும், பெண்ணும் நன்கு பேசி பழகினால் அது காதலாக மாறி திருமணத்தில் தான் பெரும்பாலும் முடிந்துள்ளது. ஆனால், தற்போது அப்படியெல்லாம் இல்லை. இதற்கு காரணம் தற்போது காதலை எளிதாக பெற முடிகிறது. அதனாலேயே காதல் தோல்வியையும் தற்போதைய தலைமுறையினரால் எளிதாக கடக்க முடிகிறது'' என்று அசோகன் தெரிவித்தார்.

காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?படத்தின் காப்புரிமை Bernard Annebicque

''தனக்கு பிடித்த பெண்ணின் கவனத்தை ஈர்க்க பஸ் ஸ்டாப்பில் இளைஞர்கள் காத்திருந்த காலம் மாறிவிட்டது. தற்போது டேட்டிங் செய்ய ஏராளமான வலைத்தளங்கள் வந்துவிட்டன. சமூக அமைப்பு மாற தொடங்கியதும், காதலும், அது குறித்து சொல்லப்பட்ட பல இலக்கணங்கள் மற்றும் கோட்பாடுகளும் உடைய தொடங்கிவிட்டன'' என்று அசோகன் மேலும் கூறினார்.

நவீன கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டது. உலகில் நடக்கும் பல விஷயங்களை அடுத்த வினாடியில் நம் கையில் உள்ள மொபைல் மூலம் அறிய முடிகிறது அற்புதமான விஷயம்தான். அதேவேளையில் இவற்றின் மீதான மோகம் நம் மனதையும் சுருங்கிவிட்டது என்றே கூறலாம் என்று தெரிவித்த அசோகன், இதன் தாக்கம் குடும்ப அமைப்பு மற்றும் காதல் போன்றவற்றிலும் எதிரொலிக்கிறது என்றார்.

காதல் மற்றும் காமம் - என்ன தொடர்பு?

காதல் மிக புனிதமானது , காதல் போயின் சாதல் சாதல், முதல் காதலை போல எதுவும் வராது - சிறு வயதில் இருந்து நாம் கேட்டு வளரும் இவையெல்லாம் கட்டுக்கதைகளா அல்லது மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களா?

''ஒரு முறைதான் காதல் வரும், முதல் காதல்தான் புனிதமானது அல்லது உண்மையானது என்பவை எல்லாம் மிகையானவை. ஒருவருக்கு காதல் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம்'' என்று மருத்துவர் அசோகன் குறிப்பிட்டார்.

காதல் தோல்வியை ஒருவரால் கடக்க முடியுமா என்று கேட்டதற்கு, ''ஆரம்பகால காதல் (முதல் காதல்) நாளடைவில் சாதாரணமாக தோன்றும். ஒரு காலத்தில் அதுதான் பிரதானமாக இருந்தது. மீண்டும் காதலில் விழ மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்கள், அடுத்த காதலில் முதல் காதலை மெல்லமெல்ல மறக்க தொடங்குவர்'' என்று அசோகன் கூறினார்.

''தற்கால காதல் குறித்து சில குறைகள் கூறினாலும், காதல் தோல்வி என்றால் உடனே தற்கொலை என்ற முடிவுக்கு தற்போது பெரும்பாலானோர் செல்வதில்லை என்பது ஓர் ஆரோக்யமான விஷயம்''

காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?படத்தின் காப்புரிமை CHRISTOPHE SIMON

''காதல் இல்லாத காமம் இல்லை; அதேபோல் காமம் இல்லாமல் காதலும் இல்லை. இது குறித்தும் சிலர் தவறாக புரிந்து கொள்வதுண்டு. காதலும், காமமும் ஒன்றையொன்று நிழல் போல துரத்தும். அதில் தவறும் இல்லை'' என்று அவர் மேலும் கூறினார்.

''ஆனால் எல்லா காலங்களிலும் உண்மையான அன்பும், காதலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ரசனை உள்ளவரை காதல் இவ்வுலகில் இருக்கும். ரசனை உள்ளவர்கள் காதலை தொடர்ந்து தழைக்க செய்வர்'' என்றார்.

காதல் வயது சார்ந்தது என்று என் மூளையில் ஆழமாக பதித்திருந்த எண்ணத்தை சாலையை கடக்க முயன்ற ஒரு தாத்தா, பாட்டியின் அன்புதான் மாற்றியது. சாலையை கடக்க சிரமப்பட்ட அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பற்றியவாறு நடந்ததும், அருகாமை தேநீர் கடைக்கு வந்த அவர்கள் ஒருவரின் உடல் வியர்வையை மற்றவரின் ஆடையால் ஒற்றி எடுத்ததும் - அடடா! இது தானே உண்மையான காதல் என்று எண்ண வைத்தது.

'அவள் சாப்பிடாம எனக்காக காத்திருப்பா, நான் வீட்டுக்கு போகணும்' என்று அவசரம் காட்டும் நண்பனும், 'ஏன் எனக்கு கால் பண்ணலை, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா உனக்காக' என மெட்ரோ ரயிலில் தனது காதலனுடன் சிணுங்கிய யுவதியும், உண்மையான காதல் என்பது எப்போதும் இருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.

காதல் குறித்து பேசிக் கொண்டே இருக்கலாம், எழுதிக் கொண்டே போகலாம். கடல் அலைகள் போல காதலும் ஓய்வதில்லைதான். ஆனால், மீண்டும், மீண்டும் புதிதாய் பிறக்கும் அலைகள் காதலும் மீண்டும் பிறக்கும். தோல்வி என்று எதுவுமில்லை. இழப்புகளை பற்றி மட்டுமே எண்ணி காலத்தை விரயமாக்காமல் துளிர்க்கும் புதிய இலைகளின் வரவை மகிழ்வோடு வரவேற்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-47221984

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை  கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே.  4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.
  • கொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது
  • அண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs). 
  • பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.
  • இவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா?????? கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍