Jump to content

இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி


Recommended Posts

இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி

mannar-grave-1-300x200.jpgமன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள பீட்டா றேடியோ காபன் ஆய்வகத்தில் இந்த மாதிரி எலும்புகளைச் சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு அறிக்கை  இன்று மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த றேடியோ காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் காலத்தை மாத்திரம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“குறிப்பிட்ட நாளுக்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதை, அந்த அறிக்கை உள்ளடக்கக் கூடும்.

பல்வேறு தரப்புகள் மீது குற்றம்சாட்டுவதற்கு இந்த அறிக்கைக்காக பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால்,  எல்லோருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

புதைகுழி அகழ்வுப் பணி எப்போது முடிவடையும் என்று கூற முடியாது. ” என்றும் அவர் கூறினார்

http://www.puthinappalakai.net/2019/02/14/news/36398

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது :

February 16, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_1360.jpg?resize=720%2C400

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ உறுதி படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் 6 மாதிரிகள் கையளிக்கப்பட்டு காபன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 146 நாற்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றிவ் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_1343.jpg?resize=720%2C400  JMO-1.jpg?resize=800%2C534

 

http://globaltamilnews.net/2019/113456/

Link to comment
Share on other sites

Quote

பல்வேறு தரப்புகள் மீது குற்றம்சாட்டுவதற்கு இந்த அறிக்கைக்காக பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால்,  எல்லோருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

அதற்கு தக்க மாதிரி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சொல்லியுள்ளார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2019 at 8:37 AM, nunavilan said:

குறிப்பிட்ட நாளுக்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதை, அந்த அறிக்கை உள்ளடக்கக் கூடும். 

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு துணை போக வேண்டாம் .

Carbon_dating_formula_35419.jpg

போர் நடைபெறாத இந்த தேசத்தில் போர் நடைபெற்றதாக கூறிக்கொண்டு மனித எச்சங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் பொய்யான அறிக்கை பெற்று மூவினத்தவரும்  ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சில அந்நிய சக்திகள் முயல்கின்றன.

அதற்கு இங்குள்ள சில தேச விரோத சக்திகள் துணை போகின்றன . மேலும் கன பழையதும் போலியானதுமான "கார்பன் அளவீடு" என்ற ஒன்றை கொண்டு தேசத்தை துண்டாட முயற்சிக்கும் சக்திகளை வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் காலங்களில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்தார்..

-- பிக்கு மார் சம்மேளனம் --

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு-

February 19, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

mnr.jpg?resize=800%2C486

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை (20) மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார்.
மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதி படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த அறிக்கையில் என்ன விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும் குறித்த பார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 146 நாட்;கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2019/113737/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.