Jump to content

15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்த நாசா ஆய்வுகலம் – செவ்வாய் கிரக ஆய்வில் ஓபர்ச்சுனிட்டியின் பணி நிறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®ªà®°à¯à®à¯à®à¯à®©à®¿à®à¯à®à®¿ à®à®©à¯à®± à®°à¯à®µà®°à¯ à®à¯à®²à¯à®à®¾ 2

15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்த நாசா ஆய்வுகலம் – செவ்வாய் கிரக ஆய்வில் ஓபர்ச்சுனிட்டியின் பணி நிறைவு!

செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாசா அனுப்பியிருந்த ஒபர்ச்சுனிட்டி என்ற ஆய்வுக்கலம் தனது 15 வருட ஒப்பற்ற பணியை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்து கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க விண்வௌி ஆய்வு முகவரகம், ஒபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 உந்துகணை மூலம் அனுப்பியிருந்தது.

இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஒபர்ச்சுனிட்டி ரோவர் பல ஔிப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தநிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு (2018 ஜூன் 10) ரோவர் ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் வீசிய மணல் புயலில் சிக்கி பூமியுடனான தொடர்புகளை இழந்தது.

அந்த ஆய்வுகலம் புயலுக்கு பின்னர் காணாமல் போனது. அதன்பின் ரோவர் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று தெரியாமல் நாசா விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தனர்.

ஆனால் புயலின் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது, ரோவர் ஆய்வுகலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அத்துடன் ஒபர்ச்சுனிட்டி ரோவர் ஆய்வுகலம் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதனுடைய சமிஞ்ஞைகள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரோவரின் ஒரு பாகம் மட்டும் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் படிந்த தூசு காரணமாக தொடர்ந்து செயல்பட முடியாமல் இருந்தது.

இறுதியாக நேற்று (புதன்கிழமை) தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஒபர்ச்சுனிட்டி ரோவர் ஆய்வுகலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஒபர்ச்சுனிட்டி ரோவர் ஆய்வுக்கலத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

http://athavannews.com/15-ஆண்டுகளுக்கு-பின்-செயலி/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.