Jump to content

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?


Nathamuni

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பி.பி.சி நிருபர் இந்தப் பெண்ணிடம் மாஞ்செஸ்ரர் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவாயா என்று கேட்டால், முதலில் மழுப்பி விடுகிறார்,  அப்பாவிகள் செத்தது தெரியாது என்கிறார், பின்னர் வேறு வழியின்றி உலகம் முழுவதும் மரணித்த அப்பாவிகளுக்காக வருந்துவதாகக் கூறுகிறார். "நான் எந்தக் காட்டுமிராண்டியோடும் ஒட்டுறவாடுவேன் ஆதரிப்பேன், ஆனால் என் பிரிட்டன் சொகுசு வாழ்வை வாழ விட வேண்டும்" என்பது கடைந்தெடுத்த சுயநலம்!

பிரிட்டன் இந்த விடயத்தில் நல்ல முடிவையே எடுத்திருக்கிறது என்று கருதுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெண், தான் தேர்ந்தெடுத்த வழி பிழை என்பதற்காக மீண்டும் பிரித்தானியா வரவேண்டும் என்று கேட்கவில்லை. தனது குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டும் என்பதற்காகவே மீளவும் வர விரும்புகிறார். 

தனது வழி சரியென்று தான் உணர்வதாகவும், தன் கணவர்கூட கணிணி தொழிநுத்பத்தைத்தான் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார் என்பதால், தன் கணவர்கூட குற்றமற்றவர் என்று வாதிடுகிறார். 

ஆக, இவர் மனதளவில் இன்னும் அடிப்படைவாதியாகவே இருப்பதால், பிரித்தானியா இவரை நாட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் இந்த பெண்ணை ஏற்றுக்  கொள்ள வழியில்லை என்று அறிவித்துள்ளதால், சர்வதேச சட்டப்படி ஒருவரை, இன்னோரு வழிமுறை செய்யாத வரை, சொந்த நாட்டின் குடிஉரிமையை பறிக்க முடியாது என்பதால் இவர் குடிவுரிமை நீக்கியது தொடர்பில் சட்ட  சிக்கல் உள்ளதென பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் இன்று சொல்லியுள்ளார்.

சில கடுமையாளர்கள் இருந்தாலும், பிரித்தானியர்கள் பெரும்பாலும் நியாயமான சிந்தனையாளர்கள்.

நாட்டினை விட்டு ஓடிப் போகும்போது, இந்த பெண் 15 வயது சிறுமியாக இருந்தார்... 

தனது நாட்டினுள்ளே ஒரு சிறு பெண்ணை, வல்லூறுகளிடம் இருந்து காப்பாத்த முடியாத ஒரு அரசாங்கம், எந்த முகத்தினை வைத்துக் கொண்டு, அந்த பெண்ணின் குடியுரிமையினை பறிக்க முனைகிறது என்று கேட்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2019 at 2:18 AM, Nathamuni said:

IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய  15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார்

இந்த IS யை ஆரம்பிச்சு வைச்சு ஆடாத ஆட்டமெல்லாம் ஆட்டுவிச்சது அமெரிக்கா எண்டு தானே இப்பவரைக்கும் கதைக்கினம். எண்டேக்கை கூப்பிட்டு வைச்சு பராமரிக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 3:18 AM, Nathamuni said:

சாத்திய  படுமாயின், இயலுமான வரை, மிகவும் இலகுவில் முடியாது என்று ஜிகாதிகாரர்களுக்கு புரிய வைக்கப்படும். உண்மையில் பல பிரிட்டனில் இருந்து போன ஆண் ஜிகாதிகள் , இந்த பெண்ணை வைத்து நூல் விட்டுப் பார்கினறனர்.

ஜிகாத்துக்கு போய் குடும்பமாகிய ஜேர்மனியர்களும்  குழந்தை குட்டிகளுடன் திரும்பிவர துடிக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.