Jump to content

மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நி­லங்­களை ஆக்­கி­ர­மிக்­கும் வன இலாகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நி­லங்­களை ஆக்­கி­ர­மிக்­கும் வன இலாகா :

February 16, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

DSC_0006.jpg?resize=748%2C500

வனவளப்­பா­து­காப்புத் திணைக்­க­ளத்­தி­னர் மன்­னார் மாவட்­டத்­தில் விவ­சா­யக் குளங் க­ளை­யும் வயல்­ நி­லங்­க­ளை­யும் அடாத்­தா­கக் கைய­கப்­ப­டுத்­துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கம­நல அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ள­ரும், கம­நல கேந்­திர நிலை­யங்­க­ளும் அதைத் தட்­டிக்­கேட்­க­வில்லை எனவும் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை எனவும் தெரிவித்துள்ள நானாட்­டான் மக்கள் அதி­கா­ரி­ க­ளும், பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதைத் தடுத்து நிறுத்த வேண்­டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள ஐந்து பிர­தேச செய­ல­கங்­க­ளில், மிகச் சிறிய பரப்­ப­ள­வைக் கொண்­டது நானாட்­டான் பிர­ தேச செய­ல­கம். அங்கு வயல்­நி­லங்­களே அதி­க­முள்­ளன. கால்­ந­டை­க­ளுக்­கான மேய்ச்­சல் தர­வை­கள் கூட இல்லை.

போர் கார­ண­மாக ஏ-14 வீதி­யால் துண்­டா­டப்­பட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் அந்­தக் கிரா­மத்து மக்­கள் அயல் கிரா­மங்­க­ளில் வாழ்ந்து வந்­த­னர். விவ­சாய நட­வ­டிக்­கை­கள் முற்­றாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. போர் முடிந்த பின்­னர் மக்­கள் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

அங்­குள்ள வயல் வரம்­பு­கள் அழிந்து காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. அங்­குள்ள காணி­க­ளுக்கு வன­வ­ளத் திணைக்­க­ளத்­தி­னர் எல்­லை­களை வகுத்து வரு­கின்­ற­னர். எல்­லை­கள் இடப்­ப­டு­கின்ற காணி­க­ளில் கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­துக்­கு­ரிய சின்­னத் தேத்­தாக்­குளி, பெரிய தேத்­தாக்­குளி, வேம்­ப­டிக்­கு­ளம் என சிறு குளங்­கள் பல­வும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் முருங்­கன் கம­நல கேந்­தி­ர­நி­லை­யமோ அல்­லது கம­நல அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ளரோ இந்த நிலங்­களை பாது­காப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. காணி­கள் கைய­கப்­ப­டுத்­தலை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உடன் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

அங்கு 359 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட நிலத்­தில் பயிர்ச் செய்கை இடம்­பெ­று­கி­றது. தண்­ணீர்த் தட்­டுப்­பாடு கார­ண­மாக 150 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட வயல்­கா­ணி­கள் செய்­கை­யின்றி உள்­ளன என்­றும் அங் குள்ள சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

 

http://globaltamilnews.net/2019/113447/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.