யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?- யதீந்திரா

Recommended Posts

ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?- யதீந்திரா 

 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகியிருந்தன. குறித்த மகாநாட்டின் போது வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணம் ஒன்றே மேற்படி அதிருப்திகளுக்கான காரணம். அந்த ஆவணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவின் கொலை உட்பட, டெலோ இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வேண்டுமென்றே விடுதலைப் புலிகளை அவமானப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விடயம் என்று கூறுகிறது. அதாவது, குறித்த ஆவணம் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படவில்லை ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே அவ்வாறானதொரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கூறுகிறது. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, குறித்த ஆவணம் 2015இல் இடம்பெற்ற தியாகிகள் தினத்தின்போது வெளியிடப்பட்;டதாகவும், அப்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அதில் பங்குகொண்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணம் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தங்களது வரலாறு தொடர்பில் பேசலாம் ஆனால் அதில ;பகை முரண்பாடுகளை முதன்மைப்புடுத்தும் வகையில் பேசுவது தவறாகும். பத்மநாபா டெங்கு காய்சலால் மரணிக்கவில்லை. அதே போன்று டெலோவின் தலைவர் சபாரத்தினமும் வயிற்றுவலியால் இறக்கவில்லை. இது இயக்க மோதல்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நடந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோவிற்கும் கடுமையான விமர்சனங்களுக்குரிய ஒரு பக்கம் உண்டு. அவ்வாறான பல கசப்பான சம்பவங்களை புறம்தள்ளித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஈ.பி.ஆர்.எல்.எப். டெலோ ஆகிய இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டனர். அவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனவே பழைய விடயங்களை பேசுவதும் அவை தொடர்பில் விவாதங்களை ஏற்படுத்த முயற்சிப்பதும் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது.

இந்த விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பக்கம் தவறு இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் திட்டமிட்டு இந்த விடயத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் விளங்கிக்கொள்ள கூடிய ஒன்றே! ஏனெனில் விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக பங்குகொண்டிருக்கும் ஒரு நிகழவில் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதால் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது ஏனெனில், ஈ.பி.ஆர்.எல்.எப் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே வெண்ணை திரண்டுவருகின்ற சூழலில் பானையை போட்டுடைக்க வேண்டிய தேவை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு நிச்சயம் இருந்திருக்காது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இது ஒரு பாரதூரமான விடயமாக உற்றுநோக்கப்படாது என்னும் எண்ணமே அவர்களை வழிநடத்தியிருக்கிறது. ஏனெனில் இது வெளியிடப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த நான்கு வருடங்களில் இந்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதை எவருமே வாசித்திருக்கவில்லை. இதிலிருந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் எந்தளவு அறிவுபூர்வமாக சிந்திக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. இந்த விடயம் தொடர்பில் முதல் முதலாக சுமந்திரன்தான் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான் இந்த விடயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாலும் பேசப்பட்டிருக்கிறது.

2015இல் தாமும் பங்குகொண்ட ஒரு நிகழ்வின் போது வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தை கூட்டமைப்பின் தலைவர்கள் எவருமே வாசித்திருக்கவில்லை. இவ்வாறானவர்கள் இலங்கை தொடர்பான சர்வதேச ஆவணங்களை வாசித்திருப்பார்கள் என்று எப்படி நம்பலாம்? தவிர, இதன் மீது விமர்சனங்களை வைப்போரும் கூட, அந்த ஆவணத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்திருக்கவில்லை. இதிலுள்ள ஆகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், நான்கு வருடத்திற்கு முன்னர் இவ்வாறானதொரு ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்ட பின்னர்தான் கஜேந்திர குமார், ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலின்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவை சுரேஸ் எடுக்கும் வரையில், அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இருவருமே கூட்டாக பயணிப்பதில் நம்பிக்கையுடனும் இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவரது வீட்டில் இது தொடர்பில், பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் குறித்த ஆவணம் தொடர்பில் அப்போதெல்லாம் எவரமே பேசியிருக்கவில்லை. மேலும் அதை தவறென்றும் எவரும் கூறவுமில்லை ஆனால் குறித்த ஆவணத்தில் விக்கினேஸ்வரன் கைப்படதும் அது தவறான ஒன்றாகத் தெரிகிறது. இதன் பொருள் என்ன?

EPRLF

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் வேறு. அதாவது இப்போது பிரச்சினை குறித்த ஆவணம் அல்ல. குறித்த நிகழ்வில் விக்கினேஸ்வரன் பங்குகொண்டதுதான் பிரச்சினை. ஆனால் விக்கினேஸ்வரன் தன்னுடைய அறிக்கையில் அவ்வாறானதொரு ஆவணம் எதனையும் தான் வெளியிட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் இந்த விடயத்தை சுமந்திரன் பெரிதுபடுத்த வேண்டும்? இதனால் சுமந்திரனுக்கு என்ன நன்மை? சுமந்திரன் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் உள்ள ஒருவரல்ல. இரா.சம்பந்தன், 2012 டிசம்பர் 7, அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றில், விடுதலைப் புலிகள் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றதாகவும் பல சிவிலியன் தலைவர்களை கொன்றதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தனது தலைவரின் மேற்படி உரை தொடர்பில் சுமந்திரன் மட்டுமல்ல விடுதலைப் புலிகள் மீது தங்களுக்கு பெரும் பற்றிருப்பதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் எவருமே, இதுவரை சம்பந்தனை தவறென்று கூறமுன்வரவில்லை. சம்பந்தன் தனது கூற்றுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்று கூறவில்லை. சம்பந்தன் சிங்கக் கொடியை உயர்த்தியதற்காக யாழ்பாணத்தில் மன்னிப்பு கேட்ட மாவை சோனதிராஜா இன்றுவரை, குறித்த உரை தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் தொடர்பான சம்பந்தனின் உரையுடன் அனைவரும் ஒத்துப் போகின்றனர் என்பதுதானே பொருள். அவ்வாறான கூட்டமைப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வெளியீடு தொடர்பில் நீலிக்கண்ணீh வடிப்பதன் பின்புலம் என்ன?

உண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டிருந்த ஆவணம் அல்ல இங்கு பிரச்சினை. விக்கினேஸ்வரனின தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமைதான் இங்கு பிரச்சினை. மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்துவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் சுமந்திரன் இது தொடர்பில் அக்கறைப் பட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனை ஓரங்கட்ட வேண்டுமென்று விரும்பியவர்களும் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்னும் இலக்கில் தங்களை அரசியல் எதிரிகளாக கருதிக்கொள்பவர்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றனர். மேலும் இந்த மகாநாட்டில் பெருந்தொகையானவர்கள் பங்குகொண்டிருந்ததும் அத்துடன், அது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த முறையும் சிலருக்கு கலக்கத்தை கொடுத்திருக்கலாம். இந்த மகாநாட்டை பார்த்து நான் அச்சப்படவில்லை என்றும் சுமந்திரன் குறித்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவ்வாறாயின் அவர் அதனை பார்த்து அச்சப்பட்டிருக்கிறார் என்பதுதானே அதன் உண்மையான அர்த்தம். பாம்பு கடிப்பது பயத்தின் காரணமாகவே! சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏறக்குறைய காலாவதியாவிட்டார் என்னும் ஒரு கருத்து உண்டு. ஆனால் அந்த மகாநாடு அவ்வாறான கருத்துகளுக்கு மாறாக இருந்திருக்கிறது. குறித்த மகாநாடு தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இது தொடர்பில் அனைத்துலக ஈழத் தமிழ் மக்களவையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறித்த ஆவணத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் வேண்டுமென்றே வெளியிட்டிருக்கிறது என்ற வகையில் மக்களவை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை கண்டித்திருக்கிறது. மேலும் விக்கினேஸ்வரன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர். மக்களவையின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். இன்றைய சூழலில், இவ்வாறானதொரு சர்ச்சை தேவையற்ற ஒன்று என்பதில் மக்களவையின் வாதம் சரியானது. ஆனால் இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இது தொடர்பில் விவாதங்கள் செய்வது விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று தலைமையைத்தான் பலவீனப்படுத்தும். விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் அரசியலில் ஒரு மக்கள் குரலாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. முக்கியமாக தமிழரசு கட்சி விரும்பவில்லை. தமிழரசு கட்சி விரும்பும் ஒன்றை, எவ்வாறு, தமிழரசு கட்சியை கொள்கை அடிப்படையில் எதிர்ப்பவர்களும் விரும்ப முடியும்? மக்களவை போன்ற பலமான புலம்பெயர் அமைப்புக்கள் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகிவரும் மாற்றுத் தலைமை தொடர்பில் சிந்திப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். இன்றைய சூழலில் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்துவது என்பது மாற்றுத் தலைமையை மட்டுமல்ல அதற்கான சிந்தனை ஓட்டத்தையும் இல்லாமலாக்குவதுதான். ஈ.பி.ஆர்.எல்.எப் மகாநாடு ஒரு சந்தர்ப்பம் மட்டும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில்தான் பலரும் ஒற்றுமையாக பயணிக்கக் கூடிய வாய்ப்புண்டு. ஏனெனில், இன்றைய சூழலில் விக்கினேஸ்வரன் வெறுமனே, ஒரு தனிநபரல்ல மாறாக மாற்றுத் தலைமை ஒன்றிற்கான அஸ்திபாரம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஈ-பி-ஆர்-எல்-எப்-மகாநாடு-தொ/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் ஊடகங்களால் முஸ்லிம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும் ஊடகங்கள் உதவ வேண்டும் என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஜம்இய்யதுல் உலாமா சபையினரின் ஊடக சந்திப்பு , யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். https://newuthayan.com/story/15/யாழ்ப்பாண-முஸ்லிம்களின்.html
    • காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி. காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. ராகுல் காந்தி நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி. இப்படி செழுமையான அரசியல் பின்புலம் கொண்டவர் ராகுல். 2014ம் ஆண்டு தேர்தல்தான், காங்கிரஸ் அரசியல் பயணத்தில் மோசமான காலக்கட்டமாக பார்க்கப்பட்டது. 2019ம் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல தேர்தல் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களை பெற்றுள்ள போது காங்கிரஸ் கூட்டணி வெறும் 85 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ராகுலே தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்று இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வுயுற்று இருக்கிறார் அவர். உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் 8 பேர் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சரி இந்த தேர்தல் விஷயத்திற்கு வருவோம். இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில் வெல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்திருக்கிறது. காங்கிரஸின் தேவை என்ன? தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறினார். காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க தேவையில்லை என்று கூறிய ராகுல், "யாரும் அச்சப்பட தேவையில்லை. கடுமையாக வேலை செய்வோம். இறுதியில் வெல்வோம்" என்றார். நாளிதழ்களில் வரும் செய்திகள் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. இன்று நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸின் தோல்வி, எடுக்க வேண்டிய பிற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படுமென தெரிகிறது. உத்தர பிரதேச தலைநகரில் ஒரு காங்கிரஸ்காரர் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். அவர், "எங்களுடைய நம்பகத்தன்மை மிக மோசமாக உள்ளது. நாங்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. எங்கள் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை" என்றார். "மோதியும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் அவரை நம்புகிறார்கள்" என்று கூறியாவரிடம், அதற்கான காரணத்தை கேட்டோம். "எங்களுக்கும் அது புரியவில்லை" என்று தெரிவித்தார். கவலைக்கிடமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து. பல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துக வருவ்து முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை புறந்தள்ளியே வருகிறார்கள். படத்தின் காப்புரிமை Getty Images பிபிசியிடம் பேசிய மணிசங்கர் அய்யர், "காங்கிரஸ் அதன் தலைமையை கேள்வி கேட்காது. அவர் ராஜிநாமா செய்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்" என்கிறார். காங்கிரஸில் தோல்விக்கு அதன் தலைமை காரணமல்ல என்று தெரிவிக்கும் அவர், "பிற காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என்கிறார். இது போன்ற கருத்தைதான் முன் வைக்கிறார் காங்கிரஸ் கட்சியின் லக்னோ செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேந்திர குமார் சிங். அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல. காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள், மோசமான பிரசார யுக்தியே தோல்விக்கு காரணம்." என்கிறார். பிராண்ட் மோதி மோதி என்னும் பிராண்ட் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பல காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொது அவ்வாறான பிம்பம் ராகுலுக்கு இல்லை. அந்த விஷயத்தில் தாங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். படத்தின் காப்புரிமை Getty Images ப்ரிஜேந்திர குமார் சிங், "மோதி தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி மக்களை சமாதானம் செய்ய முடிகிறது." என்கிறார். இதற்கு காரணமாக அவர் குறிப்பிடுவதும் மோதி எனும் பிம்பத்தைதான். ராகுலுக்கு எது பின்னடைவாக இருக்கிறதோ, அதுவேதான் மோதிக்கு கைகொடுக்கிறது. ஆம். அது குடும்ப பின்னணி. பெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல். இது வாரிசு அரசியல் எனும் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. மோதி எளிமையான குடும்ப பின்னணியில் வந்தவர். இந்த பின்னணி அவருக்கு வலுவான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அனால், நிஜத்தில் ராகுல் மிக எளிமையானவர் என்கிறார்கள் காங்கிரஸார். அதே நேரம் எதிரிகளிடம் இருக்கும் கபடமும் தந்திரமும் ராகுலுக்கு இல்லை. அரசியலாக பார்த்தால் இது ஒரு குறைதான் என்கிறார்கள். ராகுலுக்கு தேவை ஓர் அமித்ஷா இந்த தோல்விக்கு கட்சி ராகுலை குற்றஞ்சாட்டவில்லை. இப்போது உண்மையில் ராகுலுக்கு தேவை ஓர் 'அமித் ஷா' என்கிறார் காங்கிரஸ்காரர் ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images குஜராத் முதல் டெல்லி வரை மோதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு சூத்திரதாரி அமித் ஷா. அவரை போல ஒருவரை அடையாளம் காண்பதே வெற்றிக்கு உதவும் என்கிறார் அவர். அரசியலுக்கு வந்தது முதல் ராகுல் இறங்கு முகத்திலேயே இருக்கிறாரா என்றால்? - நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் ரீதியாக அவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது சமூக ஊடக குழுவும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இருக்கிறது. பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வந்ததும் ராகுலுக்கு பலம். பின் என்னதான் பிரச்சனை? விளக்குகிறார் காங்கிரஸ் தலைவர் விரேந்திர மதன், அவர், "எங்களது தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. எங்களது கொள்கைகளும் சிறப்பானது. ஆனால், நாங்கள் என்ன வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்தோமோ அது நடக்கவில்லை" என்கிறார். இப்போது எக்களுக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எங்களது தவறுகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/india-48406289
    • மரங்களும் அவற்றின் பெயர்களும் .......!  😁 (பாக்குமரம் = கமுகு).
    • 8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’???   May 25, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகல் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்போது அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை, வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியுள்ளார் என காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானார் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தாரா? என்பது தொடர்பில் காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அவர் 4000 சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தார் என ‘திவயின’ செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியாக்கப்பட்டதை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் குறித்த வைத்தியர், வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரியிருந்தார். இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்த போதிலும், நேற்று அவ்வாறான தெளிவுபடுத்தல் எதனையும் சபையில் அவர் வழங்கவில்லை. எனினும், சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை இடம்பெற்றமை தொடர்பாகப் காவல்துறையினரோ, புலனாய்வுப் பிரிவோ எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்று நேற்றுமுன்தினம் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வில் வைத்து இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் ஆராய்ந்து வருகின்றார் எனக் குறிப்பிட்டார். http://globaltamilnews.net/2019/122701/