Jump to content

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்

போர்க்குற்ற விசாரனை தேவையில்லை என்றும் அவை தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் மறப்போம் மன்னிப்போம் என்று செயற்பட்டு நாட்டை எல்லோரும் ஒன்றாக கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் விமர்சனமும் கண்டனமும் வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதற்காகவே  ரணில் இவ்வாறு கூறுகிறார் என்று என்று தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இவ்வாறு கூறியபோது அங்கிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ரணிலின் இந்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், ரணிலின் கூற்றுக்களை ‘நரி -புள்ளிமான்’ கதைக்கு ஒப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

“நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான் தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது. உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துக்களை மறைப்பதற்காக! உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால்! இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள். ” என்று நல்லூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்ட்டணியின் இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது,

கடைசியாக நாம் நடைமுறையில் காணும் இன்றைய அரசியல் பற்றி ஓரிரு வார்த்தைகள் தேவைப்படுகின்றன. எமது நாட்டின் பிரதம மந்திரி சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்திருந்தார். இன்றும் இங்கு இருக்கின்றார் போலத் தெரிகின்றது. அவரின் கருத்துக்களை நான் கொழும்பில் இருந்து கொண்டு அவதானித்தேன். அவரது பேச்சுக்களின் தாற்பரியம் என்ன? நாங்கள் உங்களுக்குப் பல்கோடிகளைக் கொட்டிக் கொடுக்க உள்ளோம். மருத்துவ மனைகளைக் கட்டுங்கள், பிரதேச சபைக் கட்டடங்களைக் கட்டுங்கள், உடைந்து போன உங்கள் தெருக்களை செப்பனிடுங்கள், பொருளாதார ஏற்றம் காணுங்கள்! ஆனால் எங்களின் இந்தக் கொடைக்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான். அதாவது மன்னித்து மறந்து விடுங்கள்! பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடுவன. அது வேண்டாம், மறந்து விடுவோம், மன்னித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

அதாவது உங்களுக்கு நாங்கள் வடகிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஷ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம். பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறவில்லை. மாறாக உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம் நடந்து போனதை மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.

இதன் அர்த்தம் என்ன? ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுகாறும் செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம். ஏற்றுக்கொண்டு உங்கள் உரிமைகளைக் கேளாதீர்கள், உரித்துக்களை நிலைநாட்டப் பார்க்காதீர்கள். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து நிலைக்கச் செய்ய உங்களின் ஒத்துழைப்பை நல்குங்கள். ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று கூறிச் சென்றுள்ளார் எங்கள் பிரதம மந்திரி அவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்ட மாதிரித் தெரிகின்றது. ‘எமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்’ என்று அவர்கள் கூறுவது போலத் தெரிகிறது.

துரையப்பா, குமார சூரியர், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இதைத்தானே கூறினார்கள். அரசாங்கத்திடம் இருந்து பணத்தைக் கறந்து, பதவிகளைப் பெற்று, பொருளாதார விருத்தியை உறுதி செய்து எமது நிலையைச் சீர்செய்வோம். உரிமைகளையும் உரித்துக்களையும் மறந்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறிய போது நாங்கள் என்ன கூறினோம்? அவர்களைத் ‘தமிழினத் துரோகிகள்’ என்றோம். அவர்களைக் கடையவர்களில் கடையவர்களாக அடையாளம் காட்டினோம். சித்திரித்தோம். இன்று என்ன நடந்துள்ளது? அவர்களுக்கு அரசாங்கம் உதவிகள் கொடுத்தால் அவர்கள் துரோகிகள். எங்களுக்கு அவ்வாறு உதவிகள் கிடைத்தால் அது எமது மேலாண்;மைத் திறன்! எங்கள் புத்திக் கூர்மையின் வெளிப்பாடு! தந்திரோபாயத் திறமை! இங்கு எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகள் அடிபட்டுப் போகின்றன.

ஆனால் எமது தலைவர்கள் அரசாங்கத்திற்குக் கூறுவது என்ன? நாங்கள் எங்கள் மக்களுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுவோம். அதாவது எம் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை வாங்கிவிடுவோம். அதற்கென்ன? நாங்கள் ஜெனிவாவில் கால அவகாசம் பெற்றுத் தருவோம். பௌத்தத்திற்கு வடகிழக்கில் முதலிடம் அளிப்போம். வடகிழக்கை இணைக்காது வைத்திருக்க எமது பூரண சம்மதம் தெரிவிப்போம், சமஷ்டி கேட்க மாட்டோம். உள்நாட்டு சுயாட்சியைக் கேட்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைத் ‘துரோகிகள்’ என்று பச்சை குத்தி கழுதைகள் மேலேற்றி வலம் வரச் செய்வோம் என்று தான் கூறாமல் கூறுகின்றார்கள்.

இந்த விதமான நடவடிக்கைகள் எங்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றன? அரசாங்கப் பணம் பெறுபவர்கள் தம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். தமது உற்றார் உறவினர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். பத்து வருடங்களில் வடகிழக்கு சிங்கள, பௌத்தப் பிரதேசமாக மாறும். மன்னிப்பின் மகத்துவம் இதுதான்.

நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான் தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது. உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துக்களை மறைப்பதற்காக! உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால்! இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள். இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டை மறந்து, ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள்.

இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த இளைஞர் யுவதிகளான நீங்கள் முன்வர வேண்டும். உண்மையைக் கண்டறிவதில் நாம் திடமாக நிற்க வேண்டும். எம்மவர் குற்றங்களும் வெளிவந்துவிடுவன என்று மிரட்டுகிறார் பிரதம மந்திரி. குற்றம் செய்யாத பலரை சிறைகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தீர்கள். எம்மைக் கொன்று குவித்தவர்களை, சித்திரவதை செய்தவர்களை இதுவரை அடையாளப்படுத்தாது அவர்களுக்கு மன்னிப்பை வேண்டி நிற்கின்றீர்கள். அவ்வாறு செய்தவர்கள் யார் என்பதை முறையாக, சர்வதேச விசாரணை மூலமாக முதலில் கண்டறியுங்கள். அதன் பின் மன்னிப்புப் பற்றிக் கதைக்கலாம் என்று பிரதமரிடம் கூற எங்களுள் எவரும் இல்லை. ஆகவே நாங்கள் அரசிடம் கூறுகின்றோம் சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என்று. இவ்வாறு எமது மக்களை உண்மை அறியச் செய்து அவர்களை நீங்கள் ஒன்றுபடுத்த முன்வர வேண்டும். அதனை இளைஞர் யுவதிகளாகிய நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.

 

 

http://www.samakalam.com/செய்திகள்/ரணிலின்-மறப்போம்-மன்னிப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’

ஈழத்தமிழினம் எதை மறப்பது? எதை மன்னிப்பது?
மன்னிக்க மறக்க  ஈழத்தமிழினத்திற்கு நடந்த கொடுமைகள் ஒன்றா இரண்டா? 

Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழினம் எதை மறப்பது? எதை மன்னிப்பது?
மன்னிக்க மறக்க  ஈழத்தமிழினத்திற்கு நடந்த கொடுமைகள் ஒன்றா இரண்டா? 

நீங்கள் எம்மால் தோற்கடிக்கப்பட்டவர்கள் சுதந்திர மனிதர்கள் என்பதை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளாரோ? அதை மறந்துவிட்டால்  மன்னிப்புக்கு வேலை இல்லைத்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதிகள்தான் 2009க்கு பின்னரும்  விடுதலைப்புலிகளை நினைவுகூர வைக்கின்றார்கள்  என ஊரில் இருப்பவர்கள்  சொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஆர்எல்எப் செய்த அட்டூழியங்களை மறந்து விக்கியர் அவர்களோடு ஒரே மேடையில் அமரேல்ல 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஈபிஆர்எல்எப் செய்த அட்டூழியங்களை மறந்து விக்கியர் அவர்களோடு ஒரே மேடையில் அமரேல்ல 😠

அவர் வடக்கு அரசியலுக்கு புதுசு இனியும் ஈப்பியுடன் மேடையில் குந்தினாள்தான் தவறு பார்ப்பம் காலம் என்ன சொல்லுது என்று .

Link to comment
Share on other sites

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பது தமிழினத்தின் தலைவிதி.

அந்த ஆண்டவனே வந்தால்கூட,  இந்த தலைவிதியை மாற்ற  முடியாது.

இந்த நிதர்சனத்தை இனிதே நிறைவேற்றி வைக்கும், ஐ.நா.

இந்த திரைக்கதைக்கு ஒரு ‘சுபம்’ போட்டு, இணைக்க அரசியலை ஆரம்பித்து வைப்பார் - எதிர்கால கூட்டமைப்பின் ஆஸ்தான தலைவர், மிஸ்டர் சுதந்திரன் அவர்கள்.


ஈராக்கை சுடுகாடாக ஆக்கிவிட்டு, ஈற்றில் டோனி  பிளேயரினால் ஒரு ‘Sorry’ சொன்னமாதிரிதான், இந்த ‘மறப்போம், மன்னிப்போம்’  என்ற ஞான உபதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  மறப்போம்  மன்னிப்போம்  விவகாரம்

பிரச்சினையை  தணிப்பதற்கு பதிலாக  சூடேற:;றியுள்ளது  தான்  உண்மை

ரணில்  இதனை  உண்மையிலேயே தணிக்க  விரும்பினால் 

மிக  மிக சுலபமான  மறத்தல்  மன்னித்தல் அவரது கைகளிலேயே  உண்டு

ஒரு அரசியல் தீர்வு

எல்லாம்  மறக்க  மன்னிக்கப்பட்டு விடும்

ஆனால்  நரி   அதனை  ஒரு போதும் செய்யாது....

Link to comment
Share on other sites

On 2/16/2019 at 8:25 PM, கிருபன் said:

நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான் தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது. உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துக்களை மறைப்பதற்காக! உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால்! இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள்.

நிலைமையை தெளிவாக விளக்கியுள்ளார்!

தமிழின படுகொலைகாரர்களுக்கும், அவர்களின் ஜால்ராக்களுக்கும் இவரது விளக்கம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு இப்ப யார் ? தமிழரசு கட்சி மட்டுமே , இவர்களுக்கு மக்கள் பதில் வழங்குவார்கள் ...சுமந்திரன் இனி கஞ்சாவுடன் கள்ளு கடை வைக்க தான் லயக்கு ..... எல்லாமே தேர்தல் வரையும் தான் ....யாருக்கு யார் தலைவர் ?

கஞ்சா கள்ளன்  இனியும் மக்கள் தலைவனா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் என்று வந்தால் கூட்டமைப்புக்குத்தானே மக்கள் வாக்குப்போடுவார்கள்! மக்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதனால்தான் சுமந்திரன் தமிழர்களின் தலைவராக வருவார். ஆனால் அவருக்குத் தலைவர் ரணில்தான்!!😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.