Jump to content

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

class.jpg

சில தனியார் நிறுவனங்கள் இரவு 9  மணி வரை வகுப்புக்களை நடத்துவதாகவும் இதனால் தூர இடங்களிலிருந்து வரும் பெண் பிள்ளைகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கலை கலாசாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனியார் கல்வி நிலையப் பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

http://www.virakesari.lk/article/50159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் காசு உள்ளவன் வாத்தியாரை தன்ற சொந்த வீட்டுக்கு எடுத்து கற்பிப்பான் வாத்திமாருக்குத்தான் இப்ப லாபமாக போகிறது ஒரு வகுப்புக்கு 800 ரூபா முதல் ஆயிரம் வரைக்கும் செல்கிறது பிரபல வாத்திமார்களின் ஒரு வகுப்பு காசு 

Link to comment
Share on other sites

தனியார் கல்வி நிலையம் எண்ட ஒரு முறை இலங்கை தவிர வேறு எங்கிலும் நான் காணவில்லை. 5ம் ஆண்டு ஸ்காலர்ஷிப் எண்டு அந்த பிஞ்சுகளை போட்டு படுத்திய பாடு இருக்குதே, தாங்கமுடியாது.பெற்றோரின் கெளரவத்துக்காக அந்த பிஞ்சுகள் படுறபாடு கொஞ்சநஞ்சமல்ல. 

Link to comment
Share on other sites

தனியார் கல்வி நிலையங்களில் படித்தால்தான் நல்ல புள்ளிகள் எடுக்கலாம் என்ற மனநிலை நம்மில் ஆழமாகப் பதிந்துள்ளது.இதனால்தான் பாடசாலை முடிந்ததும் பிள்ளைகள் ரியுசனுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சியில் படிப்பதற்கு நேரம் போதாது. இந்த முடிவு அதற்கு வழிவகுக்கின்றது.

Link to comment
Share on other sites

25 minutes ago, Shanthan_S said:

தனியார் கல்வி நிலையம் எண்ட ஒரு முறை இலங்கை தவிர வேறு எங்கிலும் நான் காணவில்லை. 5ம் ஆண்டு ஸ்காலர்ஷிப் எண்டு அந்த பிஞ்சுகளை போட்டு படுத்திய பாடு இருக்குதே, தாங்கமுடியாது.பெற்றோரின் கெளரவத்துக்காக அந்த பிஞ்சுகள் படுறபாடு கொஞ்சநஞ்சமல்ல. 

5ம் ஆண்டு, சாதாரண தரம், உயர் தரம் என்று இப்படி எல்லாப் படிகளிலும் இதே போலத்தான், ஷாந்தன். பலவற்றைக் கற்றுக்கொண்டோம் தான். எனினும், அதுக்காகக் கொடுத்த விலை ரொம்பவும் அதிகம். இதனால் பாடம் தவிர்ந்த செயற்பாடுகளில் ஈடுபாடு குறைந்து ஓர் முழுமையான மனிதராக மாணவர்களை உருவாக்கத் தவறிவிடும் நிலை வேதனைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மல்லிகை வாசம் said:

5ம் ஆண்டு, சாதாரண தரம், உயர் தரம் என்று இப்படி எல்லாப் படிகளிலும் இதே போலத்தான், ஷாந்தன். பலவற்றைக் கற்றுக்கொண்டோம் தான். எனினும், அதுக்காகக் கொடுத்த விலை ரொம்பவும் அதிகம். இதனால் பாடம் தவிர்ந்த செயற்பாடுகளில் ஈடுபாடு குறைந்து ஓர் முழுமையான மனிதராக மாணவர்களை உருவாக்கத் தவறிவிடும் நிலை வேதனைக்குரியது.

மாணவர்கள் பலர் கல்வியை தவிர வேறு எந்த செயற்பாடுகளிலும் பெரிதாக ஈடுபடுவதில்லை இப்படி படித்த ஓர் மாணவன் அண்மையில் புத்தி விலகி வீட்டில் தனி அறையில் உள்ளான் என்பது வேறு கதை 

ஓர் வேலைக்கு இன்டவியு சென்ற போதும் அவன் பேசிய ஆங்கிலத்துக்கும் வேலை இல்லை என்றார்கள் இந்த வேலை உங்கள் கல்வித்தகமைக்கு இந்த வேலையும் சரி வராது என்றார்கள் நிலமை இப்படியும் இருக்கு மல்லைகை வாசம் 

Link to comment
Share on other sites

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அதே தான் நிலை ராஜா. சரியான ஆங்கிலம், அனுபவம், தொடர்பாடல் திறன் இவற்றை வளர்க்கும் கல்வி முறையும் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Shanthan_S said:

தனியார் கல்வி நிலையம் எண்ட ஒரு முறை இலங்கை தவிர வேறு எங்கிலும் நான் காணவில்லை. 5ம் ஆண்டு ஸ்காலர்ஷிப் எண்டு அந்த பிஞ்சுகளை போட்டு படுத்திய பாடு இருக்குதே, தாங்கமுடியாது.பெற்றோரின் கெளரவத்துக்காக அந்த பிஞ்சுகள் படுறபாடு கொஞ்சநஞ்சமல்ல. 

ஜேர்மனியில் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

6 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் இருக்கின்றது.

பாடசாலை பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலைப் பரீட்சையில் சித்தியடைய அது போதாது என்று மேலதிக வகுப்புகளை கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்கள் சுவிற்சரலாந்தில்  இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஜெகதா துரை said:

தனியார் கல்வி நிலையங்களில் படித்தால்தான் நல்ல புள்ளிகள் எடுக்கலாம் என்ற மனநிலை நம்மில் ஆழமாகப் பதிந்துள்ளது.இதனால்தான் பாடசாலை முடிந்ததும் பிள்ளைகள் ரியுசனுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சியில் படிப்பதற்கு நேரம் போதாது. இந்த முடிவு அதற்கு வழிவகுக்கின்றது.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான்  தன் வகுப்பு மாணவர்களை ரியூசனுக்கும் அழைத்து காசுவாங்கி மேலதிகமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

class.jpg

சில தனியார் நிறுவனங்கள் இரவு 9  மணி வரை வகுப்புக்களை நடத்துவதாகவும் இதனால் தூர இடங்களிலிருந்து வரும் பெண் பிள்ளைகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கலை கலாசாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனியார் கல்வி நிலையப் பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

http://www.virakesari.lk/article/50159

பிள்ளைகள் என்றல் ஆண்பிள்ளைகளும் அதனால் பாதிக்கப்படுவார்கள் தானே? பிள்ளைகளின் அசெளகரீயங்களை தடுக்க அல்லது பிள்ளைகளின் பாதுகாப்புக்காக என்றால் அது சரி.  ஏற்றுகொள்ளப் கொள்ளப்பட வேண்டியது. அது என்ன கலை கலாசாரங்களை பாதுகாக்க இந்த தீர்மானம் என்று ஜில்மா? இதற்கும் கலை கலாசாரத்திற்கும்  என்ன தொடர்பு? மனநோயோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய  வாழ்க்கை எனும் வாகனத்திலிருந்து இடையில் இறங்கிவிட்டீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் மக்களோடு மக்களாக நின்று நெரிசல்பட்டு நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கையின் நிஜங்களை கண்டுகொள்ளமுடியும். 🙂

Link to comment
Share on other sites

38 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் இருக்கின்றது.

ஜெர்மனியை பற்றி என்னக்கு தெரியாது. ஏனன்றால் நான் ஜெர்மனிக்கு இதுவரை போகவில்லை. நான் வேலை செய்த கத்தார், துபாய் போன்டர் இடங்களில் தனியார் கல்வி நிலையம் என்ற ஓன்று இல்லை.ஆனால் அங்கை மியூசிக், டான்ஸ் போன்றவற்றுக்கு சில தனியார் நிறுவனங்குலும் உண்டு. அங்கை மாணவர்கள் முற்றுமுழுதாக பாடசாலையை நம்பித்தான் கல்வி காற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான்  தன் வகுப்பு மாணவர்களை ரியூசனுக்கும் அழைத்து காசுவாங்கி மேலதிகமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

உண்மை. சில ஆசிரியர்கள் பாடசாலையில் படிப்பிக்க பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை ஆனாலும் நிலையனான வருமானம் வேண்டும் என்பதற்காக அரசாங்க வேளையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனியார் கல்வி நிலையத்தில் அந்தமாதிரி நல்ல படிப்பிப்பினம். 

Link to comment
Share on other sites

29 minutes ago, குமாரசாமி said:

நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய  வாழ்க்கை எனும் வாகனத்திலிருந்து இடையில் இறங்கிவிட்டீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் மக்களோடு மக்களாக நின்று நெரிசல்பட்டு நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கையின் நிஜங்களை கண்டுகொள்ளமுடியும். 🙂

நான் கேட்ட கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்டதால் அதற்கு பதிலளிப்பதைத் தவிர்த்து சுற்றி வளைத்து ஏதோ சம்பந்தம் இல்லாமல் கூறியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Shanthan_S said:

தனியார் கல்வி நிலையம் எண்ட ஒரு முறை இலங்கை தவிர வேறு எங்கிலும் நான் காணவில்லை. 5ம் ஆண்டு ஸ்காலர்ஷிப் எண்டு அந்த பிஞ்சுகளை போட்டு படுத்திய பாடு இருக்குதே, தாங்கமுடியாது.பெற்றோரின் கெளரவத்துக்காக அந்த பிஞ்சுகள் படுறபாடு கொஞ்சநஞ்சமல்ல. 

சாந்தன்...

நீங்க லண்டன் பக்கமா வந்தீங்கள்  எண்டால்..... இலங்கை திறம் எண்டுவியல்...

உங்க.... 11+ Exam எண்டு secondary  பள்ளிக்கு admission  எடுக்க, (யாழ் இந்து, Colombo Royal அனுமதி பரீட்ச்சை போலத்தான்) சனம் படுற பாடு சொல்லி மாளாது...

உதில சிங்களம், தமிழ் வித்தியாசம் இல்லை. இலங்கை தான்.... அதன் நீட்சி  தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான்  தன் வகுப்பு மாணவர்களை ரியூசனுக்கும் அழைத்து காசுவாங்கி மேலதிகமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இது முற்றிலும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதனால் காசு உள்ளவன் வாத்தியாரை தன்ற சொந்த வீட்டுக்கு எடுத்து கற்பிப்பான் வாத்திமாருக்குத்தான் இப்ப லாபமாக போகிறது ஒரு வகுப்புக்கு 800 ரூபா முதல் ஆயிரம் வரைக்கும் செல்கிறது பிரபல வாத்திமார்களின் ஒரு வகுப்பு காசு 

Online teaching  அங்க இன்னும் வரல்ல போல கிடக்குது முனிவர்....

வந்தால்.... இந்த தடை எல்லாம் ஒண்ணுமில்லை.

இங்கையும்  எம்மவர் மத்தியில் இந்த tuition குடிசைக்  கைத்தொழில்.

முன்வீட்டில்  தமிழகத் தமிழர். திருச்சிக்காரர். தனது மகள்  கணக்கு வாத்தியார் அருமை.... உங்களுக்கு தெரிந்தவருக்கு கொடுங்கள்  என்று தருகிறார்.... நம்ம யாழ்பாணத்துக்காரர் இலக்கத்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

Online teaching  அங்க இன்னும் வரல்ல போல கிடக்குது முனிவர்....

வந்தால்.... இந்த தடை எல்லாம் ஒண்ணுமில்லை.

நீங்கள் சொல்வது காந்தி உயிருடன் இருந்திருந்தால் எனக்கு துக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருகடகாது என்று கோட்ச்சே சொன்னது மாதிரி இருக்குத'😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Shanthan_S said:

தனியார் கல்வி நிலையம் எண்ட ஒரு முறை இலங்கை தவிர வேறு எங்கிலும் நான் காணவில்லை. 5ம் ஆண்டு ஸ்காலர்ஷிப் எண்டு அந்த பிஞ்சுகளை போட்டு படுத்திய பாடு இருக்குதே, தாங்கமுடியாது.பெற்றோரின் கெளரவத்துக்காக அந்த பிஞ்சுகள் படுறபாடு கொஞ்சநஞ்சமல்ல. 

ஜேர்மனியில், பிரிட்டனில், கனடாவில், அமெரிக்காவில், பிரான்சில் இருக்கிறது. இலங்கை மாதிரி ஓலைக் கொட்டில் போட்டு இருக்கும் என்று தேடினால் காணமாட்டீர்கள். வீடுகளில், பொது நூலகங்களின் பிரத்தியேக அறைகளில் இவை நடக்கின்றன. பிரிட்டனில் எங்கள் ஆட்கள் தனி பில்டிங் எடுத்து நடத்துகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Online teaching  அங்க இன்னும் வரல்ல போல கிடக்குது முனிவர்....

வந்தால்.... இந்த தடை எல்லாம் ஒண்ணுமில்லை.

இங்கையும்  எம்மவர் மத்தியில் இந்த tuition குடிசைக்  கைத்தொழில்.

முன்வீட்டில்  தமிழகத் தமிழர். திருச்சிக்காரர். தனது மகள்  கணக்கு வாத்தியார் அருமை.... உங்களுக்கு தெரிந்தவருக்கு கொடுங்கள்  என்று தருகிறார்.... நம்ம யாழ்பாணத்துக்காரர் இலக்கத்தை. 

ஒன் லைன் இன்னும் வரல கூடிய விரைவில் அதுவும் வரும்  ம்ம் யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கள் நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

ஜேர்மனியில், பிரிட்டனில், கனடாவில், அமெரிக்காவில், பிரான்சில் இருக்கிறது. இலங்கை மாதிரி ஓலைக் கொட்டில் போட்டு இருக்கும் என்று தேடினால் காணமாட்டீர்கள். வீடுகளில், பொது நூலகங்களின் பிரத்தியேக அறைகளில் இவை நடக்கின்றன. பிரிட்டனில் எங்கள் ஆட்கள் தனி பில்டிங் எடுத்து நடத்துகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். 

Image result for croydon metropolitan college

Croydon Metropolitan College

Image result for harrow tutorial college

Harrow

பக்கத்தில, KRS Fast Food எண்டு எங்கண்ட, வட, கட்லட், பற்றிஸ் கட.... பண்ணிப் பாருங்கோவன்.

பொடி பெட்டயள Tuition விட்டுப்போட்டு, சமயள மறந்து கதை, வம்பளந்துட்டு ஜம்பது இடியப்பம் சொதி ம்பல், மட்டன் ரோல்ஸ் வாங்கிப் போக ... சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Image result for croydon metropolitan college

Croydon Metropolitan College

Image result for harrow tutorial college

Harrow

பக்கத்தில, KRS Fast Food எண்டு எங்கண்ட, வட, கட்லட், பற்றிஸ் கட.... பண்ணிப் பாருங்கோவன்.

பொடி பெட்டயள விட்டுப்போட்டு, ஜம்பது இடியப்பம் சொதி தம்பல்,, மட்டன் ரோல்ஸ் வாங்கிப் போக ... சரிதான்.

என் பள்ளி நண்பனொருவன், கணிதப் பிரிவில் இலங்கையில் 4 ஏ எடுத்தவன். இப்போது இந்த 6th form college என்ற ஒரு தனியர் கல்லூரியில் படிப்பிப்பதாக அறிந்தேன். அதென்ன 6th form என்று தான் விளங்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

என் பள்ளி நண்பனொருவன், கணிதப் பிரிவில் இலங்கையில் 4 ஏ எடுத்தவன். இப்போது இந்த 6th form college என்ற ஒரு தனியர் கல்லூரியில் படிப்பிப்பதாக அறிந்தேன். அதென்ன 6th form என்று தான் விளங்கவில்லை!

இங்கிலாந்தின் பழைய கல்விமுறையில் secondary school பல forms ஆகப் பிரிக்கப்பட்டிருந்தது.

First form - Year 7

second form - year 8

third form  - Year 9

fourth form - Year 10

fifth form - Year 11

sixth form - Year 12 & 13 ( A Levels)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பாடசாலை பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலைப் பரீட்சையில் சித்தியடைய அது போதாது என்று மேலதிக வகுப்புகளை கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்கள் சுவிற்சரலாந்தில்  இல்லை.

ஆனாலும், சுவிஸ் இல் தனியார் (private school)) கல்வி முறை உள்ளது.

கல்விக்ககான மேலதிக போதனைகளை தனியாரிடம் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் சுவிஸ் இல் உண்டு. Canton  இற்கு Canton வேறுபடலாம்.

சுவிஸ் குடிவரவும், பரம்பலும்   அப்படியான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.