Sign in to follow this  
Justin

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

Recommended Posts

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. 

ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத் துறையினால் மேடையேற்றப் பட்ட நாடகம் என முதலில் தியரியை வெளியிட்டார் வென்சுரா. இந்தச் சதித் திட்டத் தியரியை முன்னிறுத்த அவர் பல காரணங்களை முன்வைத்தார். அதில் ஒரு காரணம் இப்படி இருக்கிறது: "ஒரு பாரிய போயிங் 757 விமானம் மோதிய பென்ரகன் கட்டிடத்தில், விமானத்தின் சிதைவுகளைக் காணவில்லை, ஆனால் அந்த விமானம் உட்புக இயலாத ஒரு சிறிய ஓட்டை மட்டுமே காணப்படுகிறது. எனவே பென்ரகனை விமானம் தாக்கவில்லை- சி.ஐ.ஏ தான் வெடி வைத்துத் தகர்த்து விட்டது". இதைக் கேட்டவர்களில் பலர் இன்றும் இந்த சதித் திட்ட தியரியை நம்ப உறுதியான காரணமாக இதை வைத்திருக்கிறார்கள். ஆனால், வென்சுராவும் அவரது விவரணப் படத்தை தயாரித்த சில டசின் நபர்களும் முட்டாள்களல்ல இதை நம்ப. கிழக்குக் கரையில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களுள் கடத்தப் பட்ட நான்கு விமானங்களும் மேற்குக் கரையில் இருக்கும் கலிபோர்னியாவுக்குச் செல்வதற்குத் தேவையான பெருமளவு ஜெற் எரிபொருளுடன் (jet fuel) தான் கடத்தப் பட்டு, கட்டிடங்களில் மோதப் படுகின்றன. ஜெற் எரிபொருள் திரவ எரிபொருட்களிலேயே உயர்ந்த தீப்பிடிக்கும் திறனுடைய எரிபொருள். இதனாலேயே பென்ரகனைத் தாக்கிய விமானமும் , பென்சில்வேனியாவில் விழுந்த விமானமும்  பெருஞ்சோதியாக எரிந்து சாம்பலாகின. இதைச் சொன்னால் தனது சதித்திட்டத் தியரியை விற்க முடியாது என்று தெரிந்த வென்சுரா இதைத் தவிர்த்து விட்டார். ஒரு சதித் திட்டத் தியரியின் அடிப்படையே இது தான்: சில உண்மையான சம்பவங்கள் இருக்கும், சில உண்மையான தகவல்கள் தவிர்க்கப் படும், சில கடந்த கால சென்ரிமென்ற் விடயங்கள் தடவப் படும்- பல தவறான தகவல்கள் பீசாவில் சீஸ் போல தூவப் படும்-  voila! தயாராகி விட்டது ஒரு சதித்திட்டத் தியரி!

ஒவ்வொரு சதித் திட்டத் தியரியும் இதே அடிப்படையில் உருவானாலும் யார் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்? அதிசயிக்கத் தக்க விதமாக அமெரிக்காவைப் பொறுத்த வரை, சில ஆய்வுகளில் மூன்றிலொரு பங்கு மக்கள் ஏதோவொரு சதித் திட்ட தியரியை நம்புவர்களாக இருக்கிறார்கள். யார் எதை நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்த வரையில் தான் வேறு பாடுகள். ஜனநாயகக் கட்சியும், தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் அமெரிக்காவின் பிரதான கட்சிகள். ஒரு உதாரணமாக, வென்சுராவின் 9/11 தொடர்பான சதித் திட்டத்தை நம்பும் பலர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்-ஏனெனில் ஜோர்ஜ் புஷ் குடியரசுக் கட்சிக் காரர். "ஒபாமா வெளிநாட்டில் பிறந்தார், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அமெரிக்க அரசினால் போலியாகத் தயாரிக்க பட்டது" என்று நம்பும் பலர் குடியரசுக் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக ஒருவரின் கல்விப் பின்னணியும் இந்தச் சதித் திட்ட தியரியை நம்புவாரா என்பதைத் தீர்மானிக்கிறது. கல்வி நிலையில் கீழ் நிலையில் இருப்போரில் 42% பேர் சதிகள் பற்றிய கதைகளை நம்பினால், பட்ட படிப்புப் படித்தவர்களில் 20% மட்டுமே இக்கதைகளை நம்புகின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவில் செய்யப் பட்ட ஆய்வுகளின் முடிவுகள். இவை சலிப்பூட்டும் புள்ளி விபரங்கள்.

ஏன் நாம் தரவுகள், உண்மைகளால் சாட்சி பகராத கதைகளை நம்புகிறோம்? இதுவே சுவாரசியமானது. 

புள்ளி வைத்தால் கோலம் போட்டு விடும் படைப்புத் திறன் மிக்கது எங்கள் மூளை. இது சில பத்து ஆண்டுகளாகவே தெரிந்த தகவல் என்றாலும், இக் கோட்பாட்டின் நரம்புயிரியல் (neuro-biology) இப்போது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. றே கர்ஸ்வைல் (Ray Kurzweil) மனிதக் குரலை கணணிகள் கேட்டுப் புரிந்து கொள்ளும் வகையிலான கண்டுபிடிப்புகளை  உருவாக்கி செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் சாதனைகள் புரிந்து வரும் ஒருவர். 14 வயதிலேயே neocortex தியரி எனும் கருதுகோள் மூலம் மனித மூளை தகவல்களை உள்வாங்கிக் கிரகிக்கும் முறையை ஆராய ஆரம்பித்த ஒரு prodigy இவர். இவரது கருத்தின் படி மனித மூளையின்  விருத்தியடைந்த பகுதியான நியோகோர்ரெக்ஸ் தான் காணும்/கேட்கும்/உணரும் தகவல்களில் "கோலங்களை"த் (patterns) தேடிக் கண்டு பிடிக்கும் ஒரு இயந்திரம். "அ" என்ற எழுத்தின் செங்குத்துக் கோட்டையும், மேல் சுழியையும் போடாமல் ஒரு குறியீட்டைக் கண்டால், எங்கள் மூளை மில்லி செக்கன்களில் அதை "அ" அல்லது "ஆ" என்று ஊகித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்கிறது. இது hierarchical ஆன ஒரு செயற்பாடு. இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு எளிமையான குறியீட்டை ஊகிப்பதில் காட்டும் அதே படைப்புத் திறனை, எங்கள் மூளை சிக்கலான, அருவமான கருத்துருவங்களை (abstract) சில துண்டு துணுக்குகளில் இருந்து ஒரு கதையை உருவாக்குவதிலும் காண்பிக்கிறது. 

இங்கே தான் ஒரு கணணியில் இருந்து மனித மூளை வேறு பட்டு, சதித் திட்டக் கதைகளை நிஜத்தில் இருந்து வேறான ஒன்றாக உருவாக்குகிறது. மூளை ஒரு super computer போல மட்டுமே தொழிற்பட்டால் அது யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமான கதையைப் பின்னும். எமது உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றின் பின்புலத்தில் மூளை புள்ளிகளை இணைத்துப் போடும் கோலத்தில் நிஜத்தை விடவும் எங்கள் விருப்பு வெறுப்புகளும் உள்ளக் கிடக்கைகளும் அதிகம் விரவிக் கிடக்கையில், நாமும் சதித் திட்டக் கதைகள் போன்ற தரவுகள் அற்ற கதைகளை நம்பவும், ஆதரிக்கவும் ஆரம்பிக்கிறோம். 

மனவியல் சமூகவியல் ரீதியில் மிகையான சந்தேகம் (paranoia) பல சதித் திட்டக் கதைகளுக்கும் ஒரு அடிப்படையான மனநிலை. இது கூர்ப்பியல் ரீதியிலும் விளங்கப் படுத்தக் கூடிய ஒரு மன நிலை என்கிறார்கள். மனிதனோ ஆதி மனிதனோ தங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த தங்கள் போட்டியாளர்களை மிகையான சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய தேவை இருந்தது.  இப்போது சக்தி மிக்க அரசுகள், நிறுவனங்கள் மீதான சந்தேகம் பல சதித் திட்ட தியரிகளுக்கும் மையமாக இருப்பதை கூர்ப்பின் வழி வந்த ஒரு சாதாரன நீட்சி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். எனவே மிகையான சந்தேகம் என்பது இப்போது ஒரு மன நோயின் அறிகுறியாக இல்லாமல், சாதாரண மனநிலையின் அங்கம் என்கிறார்கள்.

சதித் திட்டக் கதைகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்ற தற்காலத்தில்  அவற்றின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் நாம் இக்கதைகளின் போஷகர்களாக மாறாமல் இருக்கும் பலம் எமக்குக் கிடைக்கக் கூடும். இல்லாத ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுக்கு உங்களை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் கற்பனாவாதிகளால், உங்கள் கண்முன்னே இருக்கும் அழகான காட்சிகளை இழந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்த ஆக்கம்!.

-முற்றும். 
 
  • Like 9
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Justin said:

செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. 

அன்றைய தினம் WTCஇல் வேலை செய்த யூதர்கள் வேலைக்கு வரவில்லை இதை ஒரு பகிரங்க விசாரணை செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் கொடுக்கப்பட்டது.இன்று வரை எந்த ஒரு அரசியல்வாதியோ விசாரணை அதிகாரிகளோ வாய் திறக்கவில்லை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஜஸ்ரின், இரட்டை  கோபுரத்தில்... இரண்டு விமானங்கள் மோதிய காட்சியை, 
அன்று அந்த இடத்தில் சுற்றுலா பயணிகளாக நின்றவர்கள் எடுத்த காணொளிப்  படங்கள்... 
உலகம் முழுக்க பார்க்கப் பட்டது.  அப்போ அது எல்லாம் பொய்யா....

Share this post

Link to post
Share on other sites

:14_relaxed:ராஜீவ் காந்தி கொலையிலும் இப்படியான தியரி இருக்கு போல தெரிகின்றது ....சுப்பிரமணியசுவாமிகள்,சோனியா,மற்றும் காங்கிரஸ் என பல  (conspiracy theories) இருக்குமோ:14_relaxed:

i

Edited by putthan

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

:14_relaxed:ராஜீவ் காந்தி கொலையிலும் இப்படியான தியரி இருக்கு போல தெரிகின்றது ....சுப்பிரமணியசுவாமிகள்,சோனியா,மற்றும் காங்கிரஸ் என பல  (conspiracy theories) இருக்குமோ:14_relaxed:

i

உஷ் மெல்லமாய் கதையுங்கோ.......ராஜீவ்காந்தியை புலிகள் கொலை செய்ததாலைதான் தமிழீழம்/தனிநாடு கிடைக்காமல் போனது எண்டு இப்பவும் ஒப்பாரி வைக்கிறவையின்ரை காதிலை விழப்போகுது...😄

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின், இரட்டை  கோபுரத்தில்... இரண்டு விமானங்கள் மோதிய காட்சியை, 
அன்று அந்த இடத்தில் சுற்றுலா பயணிகளாக நின்றவர்கள் எடுத்த காணொளிப்  படங்கள்... 
உலகம் முழுக்க பார்க்கப் பட்டது.  அப்போ அது எல்லாம் பொய்யா....

சிறியர், இரட்டைக் கோபுரத்தில் இரண்டு கடத்தப் பட்ட விமானங்கள் மோதின! உண்மையே. உங்கள் கேள்வி என்ன இதைப் பற்றி?

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, Justin said:

ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத் துறையினால் மேடையேற்றப் பட்ட நாடகம் என முதலில் தியரியை வெளியிட்டார் வென்சுரா. இந்தச் சதித் திட்டத் தியரியை முன்னிறுத்த அவர் பல காரணங்களை முன்வைத்தார். அதில் ஒரு காரணம் இப்படி இருக்கிறது: "ஒரு பாரிய போயிங் 757 விமானம் மோதிய பென்ரகன் கட்டிடத்தில், விமானத்தின் சிதைவுகளைக் காணவில்லை, ஆனால் அந்த விமானம் உட்புக இயலாத ஒரு சிறிய ஓட்டை மட்டுமே காணப்படுகிறது. எனவே பென்ரகனை விமானம் தாக்கவில்லை- சி.ஐ.ஏ தான் வெடி வைத்துத் தகர்த்து விட்டது". இதைக் கேட்டவர்களில் பலர் இன்றும் இந்த சதித் திட்ட தியரியை நம்ப உறுதியான காரணமாக இதை வைத்திருக்கிறார்கள்.

இதில் தடிமன் படுத்தபட்ட கருத்து புரியவில்லை...

விமானம் தாக்கியதா அல்லது வெடி வைத்து தகர்க்கபட்டதா...

Edited by மியாவ்

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ஈழப்பிரியன் said:

அன்றைய தினம் WTCஇல் வேலை செய்த யூதர்கள் வேலைக்கு வரவில்லை இதை ஒரு பகிரங்க விசாரணை செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் கொடுக்கப்பட்டது.இன்று வரை எந்த ஒரு அரசியல்வாதியோ விசாரணை அதிகாரிகளோ வாய் திறக்கவில்லை.

இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்த 2071 பேரில், கிட்டத் தட்ட 1700 பெரின் மத அடையாளம் தெரிய வந்தது. இந்த 1700 பேரின் அடையாளத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் 10% ஆன இறந்தோர் யூதர்கள். நியூ யோர்க் ரைம்ஸ் உட்பட பல்வேறு செய்தி ஊடகங்களின் கணிப்பின் படி 15% ஆன இறந்தோர் யூதர்கள். யூதர்கள் வேலைக்கு பெருவாரியாக வரவில்லை என்ற புரளியை முதலில் ஆரம்பித்தது "மிக நம்பிக்கையான😎" ஊடகமான பிராவ்டாவும் முஸ்லிம் ஊடகமான அல் மனாரும்! அவர்களே "நூற்றுக் கணக்கான யூதர்கள் வேலைக்கு வரவில்லை!" என்று எழுத, எங்கள் சதித் திட்ட வியாபாரிகள் "4000 யூதர்கள் 9/11 அன்று வேலைக்கு வரவில்லை!" என்று கயிறு திரித்தார்கள்!

இணையத்தில் இதையெல்லாம் தேடப் போனால் உங்கள் காதுகளைக் கவனமாக மூடிக் கொண்டு தேட வேண்டும், இல்லையேல் காதில் பூந்தோட்டம் வைத்து, மலர்க் கண்காட்சி நடத்தி, உங்களிடமே ரிக்கற் விற்று விடுவார்கள்! காதுகள் பத்திரம்!😀

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Justin said:

நீங்கள் எந்த ஊடகத்தில் இருந்து தகவல்கள் எடுக்கிறீர்கள்??

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, nunavilan said:

நீங்கள் எந்த ஊடகத்தில் இருந்து தகவல்கள் எடுக்கிறீர்கள்??

NYT, CNN, Washington Post etc

மற்றும் பி.பி.சி. மேலும், மேலுள்ள குறிப்பிட்ட தகவலை Snopes.com என்ற போலிச் செய்திகளை சரி பார்க்கும் தளத்தில் இருந்து பெற்றேன். இந்தத் தளம் பக்கச் சார்பற்றதாக மேலுள்ள பத்திரிகை தராதரங்களைக் கடைபிடிக்கும் ஊடகங்களால் இனங்காணப்பட்டிருக்கிறது. பொய்ச் செய்திகளை இப்போது FactCheck.org என்ற இணையத்திலும் சரி பார்க்க முடியும். நான் இவற்றை நம்புகிறேன். இத்தளங்கள் கூட அமெரிக்க சி.ஐ.ஏ வின் இணைய சதியாக இருக்கக் கூடும், யார் கண்டது? 

Edited by Justin
கீழ் பாகம் சேர்க்கப் பட்டது

Share this post

Link to post
Share on other sites

எப்படி சுத்தி விட்டேன் பாத்தியா...

சுத்தோ சுத்தோனு சுத்துது...

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

மிக அருமையான ஆக்கத்திற்கு முதலில் நன்றிகள் 

இல்லாத ஊருக்கு வழிசொன்ன பல நூறுகதைகளில் ஒன்று கீழே..

ஒன்றரை மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் கொடுமையான போர்களில் ஒன்றான வியட்நாம் யுத்தத்தை அரங்கேற்றிய பொய்க் காரணத்தை சிஐஏ வின் வாய்களாலே கேட்கலாம். இதன் சுருக்கம் வியட்நாமியர்கள் அமரிக்க ரோந்துப் படகை டோபிடாவால் தாக்கிவிட்டார்கள் என்ற செய்தி என்பதை அறிந்தும் அதை உண்மை போல் மக்கள் முன்னால் வைத்து ஒரு கொடுர போரை அரஙகேற்றினார்கள்.  ஏன் மக்கள் முன்னால் இந்தப் பொய் ? வியட்நாமில் பொதுஉடமை வரக்கூடாது. முதலாளித்துவம் உலகில் நிலைக்கவேண்டும் என்பதற்காக. 

வளைகுடாவில் எண்ணை திருட சதாம் அணு ஆயுதம் தயாரிக்கின்றார் என்ற ஒரு  கதை ஆப்கானிஸ்தானில் லித்தியம் திருட ஒரு கதை.  எங்கெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அதற்கெல்லாம் செல்வதற்கு ஒரு கதை. 

இவ்வாறான கதைகளை எல்லாம் நம்ப முடியாவிட்டால் அது ஒரு மனநோய்.. அதற்கான தரவு ரீதியான விளக்கம் கீழே உள்ளது. 

(மேலும் தகவல்கள் உலகின் ஜனநாயகம் மனிதநேயததை நிலைநாட்டும் NYT, CNN, Washington Post etc இருந்து எடுக்கப்பட்டுளது)

16 hours ago, Justin said:

ஏன் நாம் தரவுகள், உண்மைகளால் சாட்சி பகராத கதைகளை நம்புகிறோம்? இதுவே சுவாரசியமானது. 

புள்ளி வைத்தால் கோலம் போட்டு விடும் படைப்புத் திறன் மிக்கது எங்கள் மூளை. இது சில பத்து ஆண்டுகளாகவே தெரிந்த தகவல் என்றாலும், இக் கோட்பாட்டின் நரம்புயிரியல் (neuro-biology) இப்போது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. றே கர்ஸ்வைல் (Ray Kurzweil) மனிதக் குரலை கணணிகள் கேட்டுப் புரிந்து கொள்ளும் வகையிலான கண்டுபிடிப்புகளை  உருவாக்கி செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் சாதனைகள் புரிந்து வரும் ஒருவர். 14 வயதிலேயே neocortex தியரி எனும் கருதுகோள் மூலம் மனித மூளை தகவல்களை உள்வாங்கிக் கிரகிக்கும் முறையை ஆராய ஆரம்பித்த ஒரு prodigy இவர். இவரது கருத்தின் படி மனித மூளையின்  விருத்தியடைந்த பகுதியான நியோகோர்ரெக்ஸ் தான் காணும்/கேட்கும்/உணரும் தகவல்களில் "கோலங்களை"த் (patterns) தேடிக் கண்டு பிடிக்கும் ஒரு இயந்திரம். "அ" என்ற எழுத்தின் செங்குத்துக் கோட்டையும், மேல் சுழியையும் போடாமல் ஒரு குறியீட்டைக் கண்டால், எங்கள் மூளை மில்லி செக்கன்களில் அதை "அ" அல்லது "ஆ" என்று ஊகித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்கிறது. இது hierarchical ஆன ஒரு செயற்பாடு. இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு எளிமையான குறியீட்டை ஊகிப்பதில் காட்டும் அதே படைப்புத் திறனை, எங்கள் மூளை சிக்கலான, அருவமான கருத்துருவங்களை (abstract) சில துண்டு துணுக்குகளில் இருந்து ஒரு கதையை உருவாக்குவதிலும் காண்பிக்கிறது. 

இங்கே தான் ஒரு கணணியில் இருந்து மனித மூளை வேறு பட்டு, சதித் திட்டக் கதைகளை நிஜத்தில் இருந்து வேறான ஒன்றாக உருவாக்குகிறது. மூளை ஒரு super computer போல மட்டுமே தொழிற்பட்டால் அது யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமான கதையைப் பின்னும். எமது உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றின் பின்புலத்தில் மூளை புள்ளிகளை இணைத்துப் போடும் கோலத்தில் நிஜத்தை விடவும் எங்கள் விருப்பு வெறுப்புகளும் உள்ளக் கிடக்கைகளும் அதிகம் விரவிக் கிடக்கையில், நாமும் சதித் திட்டக் கதைகள் போன்ற தரவுகள் அற்ற கதைகளை நம்பவும், ஆதரிக்கவும் ஆரம்பிக்கிறோம். 

மனவியல் சமூகவியல் ரீதியில் மிகையான சந்தேகம் (paranoia) பல சதித் திட்டக் கதைகளுக்கும் ஒரு அடிப்படையான மனநிலை. இது கூர்ப்பியல் ரீதியிலும் விளங்கப் படுத்தக் கூடிய ஒரு மன நிலை என்கிறார்கள். மனிதனோ ஆதி மனிதனோ தங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த தங்கள் போட்டியாளர்களை மிகையான சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய தேவை இருந்தது.  இப்போது சக்தி மிக்க அரசுகள், நிறுவனங்கள் மீதான சந்தேகம் பல சதித் திட்ட தியரிகளுக்கும் மையமாக இருப்பதை கூர்ப்பின் வழி வந்த ஒரு சாதாரன நீட்சி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். எனவே மிகையான சந்தேகம் என்பது இப்போது ஒரு மன நோயின் அறிகுறியாக இல்லாமல், சாதாரண மனநிலையின் அங்கம் என்கிறார்கள்.

சதித் திட்டக் கதைகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்ற தற்காலத்தில்  அவற்றின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் நாம் இக்கதைகளின் போஷகர்களாக மாறாமல் இருக்கும் பலம் எமக்குக் கிடைக்கக் கூடும். இல்லாத ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுக்கு உங்களை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் கற்பனாவாதிகளால், உங்கள் கண்முன்னே இருக்கும் அழகான காட்சிகளை இழந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்த ஆக்கம்!.

-முற்றும். 
 
Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, சண்டமாருதன் said:

"இங்கே தான் ஒரு கணணியில் இருந்து மனித மூளை வேறு பட்டு, சதித் திட்டக் கதைகளை நிஜத்தில் இருந்து வேறான ஒன்றாக உருவாக்குகிறது. மூளை ஒரு super computer போல மட்டுமே தொழிற்பட்டால் அது யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமான கதையைப் பின்னும். எமது உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றின் பின்புலத்தில் மூளை புள்ளிகளை இணைத்துப் போடும் கோலத்தில் நிஜத்தை விடவும் எங்கள் விருப்பு வெறுப்புகளும் உள்ளக் கிடக்கைகளும் அதிகம் விரவிக் கிடக்கையில்.."

உங்களுக்கல்ல பதில்! ஆனால் நான் மேலே மேற்கோள் காட்டியிருக்கும் மனவியல் தரவுக்கு நீங்கள் உதாரணம் என்று ஏனைய வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக மட்டும்! நன்றி ஒரு உயிர்வாழும் உதாரணமாக இருப்பதற்கு!

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மியாவ் said:

எப்படி சுத்தி விட்டேன் பாத்தியா...

சுத்தோ சுத்தோனு சுத்துது...

நாங்கள் வாசிக்கிறதும்.......நாங்கள் பார்க்கிறதும்......நாங்கள் சொல்லுறதும்.....நாங்கள் எழுதுறதும்......எல்லாம் சொக்கத்தங்கம்.
மற்றவன்ரை எல்லாம் உவாக்...

மற்றவன் என்ன சொன்னாலும் நாங்கள் அதிலை ஒரு பிழை பிடிப்பம்....அது எங்கடை பாலிசி.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மியாவ் said:

எப்படி சுத்தி விட்டேன் பாத்தியா...

சுத்தோ சுத்தோனு சுத்துது...

உங்களுக்கு சாதாரணமான விடயங்களே சுத்துமே? இது சுத்தாமல் இருக்குமா? எனவே கஷ்டப் படாதீர்கள்,  lower the bar!

6 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் வாசிக்கிறதும்.......நாங்கள் பார்க்கிறதும்......நாங்கள் சொல்லுறதும்.....நாங்கள் எழுதுறதும்......எல்லாம் சொக்கத்தங்கம்.
மற்றவன்ரை எல்லாம் உவாக்...

மற்றவன் என்ன சொன்னாலும் நாங்கள் அதிலை ஒரு பிழை பிடிப்பம்....அது எங்கடை பாலிசி.

மற்றவர்கள் தரமான தகவல்களைத் தந்தால் தரமான வரவேற்புக் கிடைக்கும்! தரமற்ற தகவல்களைத் தந்தால் கேள்வி வரும் தான்! இது என் பிழையில்லையே?  யூ டியூப் வியாபாரிகளை மேற்கோள் காட்டாமல் சொலிட்டான தகவல்களோடு ஒரு தொகுப்பை ஆதாரங்களுடன் எழுதி விட்டு என் துலங்கலைப் பாருங்கள். பெருமூச்சு எதற்கு?

Share this post

Link to post
Share on other sites

உண்மையும் ஆதாரங்களும் அற்ற தகவல்களை சவாலுக்குட்படுத்த வேண்டிய அவசியத்தைக் காட்ட இதை இணைக்கிறேன். இந்த தடுப்பு மருந்துகள் பற்றி என் தொடரில் "போலிகள்" பற்றி எழுதும் போது மேலும் எழுதுவேன். ட்ரம்பின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவரின் மனைவி "வக்சின் போட்டதால் தன் குழந்தைகள் நோயில் இருந்து பாதுகாப்பை இழந்து விட்டார்கள்" என்று போலி "விஞ்ஞானத்தை"ப் பரப்பியதற்கு ஒரு மருத்துவர் எதிர் விளக்கம் கொடுக்கிறார் கேளுங்கள்!

"Darla Shine, is boosting the dangerous anti-vaccine movement. After falsely tweeting that the measles vaccine won't confer lifelong immunity, she boldly declared, "Bring back our #ChildhoodDiseases they keep you healthy & fight cancer." -CNN

https://www.cnn.com/2019/02/14/opinions/darla-shine-trump-vaccine-conspiracy-dantonio/index.html

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, Justin said:

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. 

ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத் துறையினால் மேடையேற்றப் பட்ட நாடகம் என முதலில் தியரியை வெளியிட்டார் வென்சுரா. இந்தச் சதித் திட்டத் தியரியை முன்னிறுத்த அவர் பல காரணங்களை முன்வைத்தார். அதில் ஒரு காரணம் இப்படி இருக்கிறது: "ஒரு பாரிய போயிங் 757 விமானம் மோதிய பென்ரகன் கட்டிடத்தில், விமானத்தின் சிதைவுகளைக் காணவில்லை, ஆனால் அந்த விமானம் உட்புக இயலாத ஒரு சிறிய ஓட்டை மட்டுமே காணப்படுகிறது. எனவே பென்ரகனை விமானம் தாக்கவில்லை- சி.ஐ.ஏ தான் வெடி வைத்துத் தகர்த்து விட்டது". இதைக் கேட்டவர்களில் பலர் இன்றும் இந்த சதித் திட்ட தியரியை நம்ப உறுதியான காரணமாக இதை வைத்திருக்கிறார்கள். ஆனால், வென்சுராவும் அவரது விவரணப் படத்தை தயாரித்த சில டசின் நபர்களும் முட்டாள்களல்ல இதை நம்ப. கிழக்குக் கரையில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களுள் கடத்தப் பட்ட நான்கு விமானங்களும் மேற்குக் கரையில் இருக்கும் கலிபோர்னியாவுக்குச் செல்வதற்குத் தேவையான பெருமளவு ஜெற் எரிபொருளுடன் (jet fuel) தான் கடத்தப் பட்டு, கட்டிடங்களில் மோதப் படுகின்றன. ஜெற் எரிபொருள் திரவ எரிபொருட்களிலேயே உயர்ந்த தீப்பிடிக்கும் திறனுடைய எரிபொருள். இதனாலேயே பென்ரகனைத் தாக்கிய விமானமும் , பென்சில்வேனியாவில் விழுந்த விமானமும்  பெருஞ்சோதியாக எரிந்து சாம்பலாகின. இதைச் சொன்னால் தனது சதித்திட்டத் தியரியை விற்க முடியாது என்று தெரிந்த வென்சுரா இதைத் தவிர்த்து விட்டார். ஒரு சதித் திட்டத் தியரியின் அடிப்படையே இது தான்: சில உண்மையான சம்பவங்கள் இருக்கும், சில உண்மையான தகவல்கள் தவிர்க்கப் படும், சில கடந்த கால சென்ரிமென்ற் விடயங்கள் தடவப் படும்- பல தவறான தகவல்கள் பீசாவில் சீஸ் போல தூவப் படும்-  voila! தயாராகி விட்டது ஒரு சதித்திட்டத் தியரி!

ஒவ்வொரு சதித் திட்டத் தியரியும் இதே அடிப்படையில் உருவானாலும் யார் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்? அதிசயிக்கத் தக்க விதமாக அமெரிக்காவைப் பொறுத்த வரை, சில ஆய்வுகளில் மூன்றிலொரு பங்கு மக்கள் ஏதோவொரு சதித் திட்ட தியரியை நம்புவர்களாக இருக்கிறார்கள். யார் எதை நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்த வரையில் தான் வேறு பாடுகள். ஜனநாயகக் கட்சியும், தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் அமெரிக்காவின் பிரதான கட்சிகள். ஒரு உதாரணமாக, வென்சுராவின் 9/11 தொடர்பான சதித் திட்டத்தை நம்பும் பலர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்-ஏனெனில் ஜோர்ஜ் புஷ் குடியரசுக் கட்சிக் காரர். "ஒபாமா வெளிநாட்டில் பிறந்தார், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அமெரிக்க அரசினால் போலியாகத் தயாரிக்க பட்டது" என்று நம்பும் பலர் குடியரசுக் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக ஒருவரின் கல்விப் பின்னணியும் இந்தச் சதித் திட்ட தியரியை நம்புவாரா என்பதைத் தீர்மானிக்கிறது. கல்வி நிலையில் கீழ் நிலையில் இருப்போரில் 42% பேர் சதிகள் பற்றிய கதைகளை நம்பினால், பட்ட படிப்புப் படித்தவர்களில் 20% மட்டுமே இக்கதைகளை நம்புகின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவில் செய்யப் பட்ட ஆய்வுகளின் முடிவுகள். இவை சலிப்பூட்டும் புள்ளி விபரங்கள்.

ஏன் நாம் தரவுகள், உண்மைகளால் சாட்சி பகராத கதைகளை நம்புகிறோம்? இதுவே சுவாரசியமானது. 

புள்ளி வைத்தால் கோலம் போட்டு விடும் படைப்புத் திறன் மிக்கது எங்கள் மூளை. இது சில பத்து ஆண்டுகளாகவே தெரிந்த தகவல் என்றாலும், இக் கோட்பாட்டின் நரம்புயிரியல் (neuro-biology) இப்போது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. றே கர்ஸ்வைல் (Ray Kurzweil) மனிதக் குரலை கணணிகள் கேட்டுப் புரிந்து கொள்ளும் வகையிலான கண்டுபிடிப்புகளை  உருவாக்கி செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் சாதனைகள் புரிந்து வரும் ஒருவர். 14 வயதிலேயே neocortex தியரி எனும் கருதுகோள் மூலம் மனித மூளை தகவல்களை உள்வாங்கிக் கிரகிக்கும் முறையை ஆராய ஆரம்பித்த ஒரு prodigy இவர். இவரது கருத்தின் படி மனித மூளையின்  விருத்தியடைந்த பகுதியான நியோகோர்ரெக்ஸ் தான் காணும்/கேட்கும்/உணரும் தகவல்களில் "கோலங்களை"த் (patterns) தேடிக் கண்டு பிடிக்கும் ஒரு இயந்திரம். "அ" என்ற எழுத்தின் செங்குத்துக் கோட்டையும், மேல் சுழியையும் போடாமல் ஒரு குறியீட்டைக் கண்டால், எங்கள் மூளை மில்லி செக்கன்களில் அதை "அ" அல்லது "ஆ" என்று ஊகித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்கிறது. இது hierarchical ஆன ஒரு செயற்பாடு. இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு எளிமையான குறியீட்டை ஊகிப்பதில் காட்டும் அதே படைப்புத் திறனை, எங்கள் மூளை சிக்கலான, அருவமான கருத்துருவங்களை (abstract) சில துண்டு துணுக்குகளில் இருந்து ஒரு கதையை உருவாக்குவதிலும் காண்பிக்கிறது. 

இங்கே தான் ஒரு கணணியில் இருந்து மனித மூளை வேறு பட்டு, சதித் திட்டக் கதைகளை நிஜத்தில் இருந்து வேறான ஒன்றாக உருவாக்குகிறது. மூளை ஒரு super computer போல மட்டுமே தொழிற்பட்டால் அது யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமான கதையைப் பின்னும். எமது உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றின் பின்புலத்தில் மூளை புள்ளிகளை இணைத்துப் போடும் கோலத்தில் நிஜத்தை விடவும் எங்கள் விருப்பு வெறுப்புகளும் உள்ளக் கிடக்கைகளும் அதிகம் விரவிக் கிடக்கையில், நாமும் சதித் திட்டக் கதைகள் போன்ற தரவுகள் அற்ற கதைகளை நம்பவும், ஆதரிக்கவும் ஆரம்பிக்கிறோம். 

மனவியல் சமூகவியல் ரீதியில் மிகையான சந்தேகம் (paranoia) பல சதித் திட்டக் கதைகளுக்கும் ஒரு அடிப்படையான மனநிலை. இது கூர்ப்பியல் ரீதியிலும் விளங்கப் படுத்தக் கூடிய ஒரு மன நிலை என்கிறார்கள். மனிதனோ ஆதி மனிதனோ தங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த தங்கள் போட்டியாளர்களை மிகையான சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய தேவை இருந்தது.  இப்போது சக்தி மிக்க அரசுகள், நிறுவனங்கள் மீதான சந்தேகம் பல சதித் திட்ட தியரிகளுக்கும் மையமாக இருப்பதை கூர்ப்பின் வழி வந்த ஒரு சாதாரன நீட்சி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். எனவே மிகையான சந்தேகம் என்பது இப்போது ஒரு மன நோயின் அறிகுறியாக இல்லாமல், சாதாரண மனநிலையின் அங்கம் என்கிறார்கள்.

சதித் திட்டக் கதைகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்ற தற்காலத்தில்  அவற்றின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் நாம் இக்கதைகளின் போஷகர்களாக மாறாமல் இருக்கும் பலம் எமக்குக் கிடைக்கக் கூடும். இல்லாத ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுக்கு உங்களை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் கற்பனாவாதிகளால், உங்கள் கண்முன்னே இருக்கும் அழகான காட்சிகளை இழந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்த ஆக்கம்!.

-முற்றும். 
 
ஜெட் எரிபொருள் கண்னிமைக்கும் நொடியில் எரிந்துவிடும் 
பாரிய வெப்ப நிலையை குறுகிய நேரத்தில் உருவாக்குமே தவிர 
உலோகங்களை ஒருபோதும் எரித்து சாம்பல் ஆக்காது. இறகுடன் இருக்கும்பகுதி எரிபொருள் டேங்க் ஆகா இருப்பதாலும் விமானத்தின் 
அநேகமான பாகங்கள் அலுமினியம் கொண்டு செய்யப்படுவதாலும் அந்த பகுதி உருகி இல்லாமல் போய்விடும். உலகில் இதுவரை நடந்த 
எல்லா விமான விபத்தில் எரிந்த விமானங்களின் எச்சங்கள் கண்டு எடுக்கபட்டு உள்ளன 
முதன் முதலாக இந்த இரண்டு விபத்திலும்தான் பாரிய விமானமான 757னின் எந்த பாகமும் 
விபத்து நடந்த இடத்தில் இருக்கவில்லை.

See the source image

See the source image

See the source image

ஓடுபாதையிலேயே தீப்பிடித்த கான்கார்ட் அமெரிக்கா வரை செல்ல கூடிய 
எரிபொருளை சுமந்துகொண்டு வேற செல்கிறது 

Share this post

Link to post
Share on other sites

முதலாவது படத்தை கொஞ்சம் கவனமாக பாருங்கள் 
வலது கரையில் இருக்கும் லைட் போஸ்டில் எந்த காயமும் இல்லை 
ஒரு முழு 757 எப்படி பறந்து போயிருக்கும்?

விமாமனம் எரிந்து சாம்பல் ஆனது என்று ஏற்றுக்கொண்டால் ...
இரண்டாம் மூன்றாம் மடியில் 
மேசை (டெஸ்க்) கதிரை அப்படியே இருக்கிறதே 
மரம் ஏரியாதா?

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, Maruthankerny said:

முதலாவது படத்தை கொஞ்சம் கவனமாக பாருங்கள் 
வலது கரையில் இருக்கும் லைட் போஸ்டில் எந்த காயமும் இல்லை 
ஒரு முழு 757 எப்படி பறந்து போயிருக்கும்?

விமாமனம் எரிந்து சாம்பல் ஆனது என்று ஏற்றுக்கொண்டால் ...
இரண்டாம் மூன்றாம் மடியில் 
மேசை (டெஸ்க்) கதிரை அப்படியே இருக்கிறதே 
மரம் ஏரியாதா?

அப்ப உண்மை தான் போல கிடக்கு, உண்மையாகவே சி.ஐ.ஏ காரன் தான் வெடி வைத்து விட்டான் போல! 😎

மருதர், அதெப்படி இது மட்டும் தான் ஒரு எச்சமும் கிடைக்காத விமான விபத்திடம் என்கிறீர்கள்? கொன்கோர்ட் தானே எரியாமல் அணைந்ததா அல்லது தீயணைப்பு நடந்ததா? இருக்கிற ஏராளமான சாட்சியங்கள் தகவல்களை நிராகரித்து விட்டு எரியாதா மேசையும் கதிரையும் தான் பாரிய சாட்சியமாகி விட்டதா? விமானம் மேலிருந்து வந்து விழுந்ததா அல்லது நிலத்தில் உருண்டு வந்து முட்டியதா, லைற் போஸ்ட்டில் முட்ட? இது போன்ற கேனைத் தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல அல்ல இந்தப் பதிவு! எப்படி ஒரு பாரிய கண்முன் நடந்த சம்பவத்தையே யுரியூப் வியாபாரிகள் ஒரு துரும்பை வைத்துக் கொண்டு சதியாக்கி உங்கள் காதில் பூச்சுத்துகிறார்கள் என்று காட்டவே இது! இங்கே வருவோர் கேட்கும் கேள்விகளும் காட்டும் காரணங்களுமே யூரியூப் வியாபாரிகள் ஏன் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்று காட்டுகிறது!  
 
Share this post

Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

நாங்கள் வாசிக்கிறதும்.......நாங்கள் பார்க்கிறதும்......நாங்கள் சொல்லுறதும்.....நாங்கள் எழுதுறதும்......எல்லாம் சொக்கத்தங்கம்.
மற்றவன்ரை எல்லாம் உவாக்...

மற்றவன் என்ன சொன்னாலும் நாங்கள் அதிலை ஒரு பிழை பிடிப்பம்....அது எங்கடை பாலிசி.

இல்லாத ஊருக்கு வழி கண்டுபிடிக்கத்தான் நாங்கள் அப்படி எழுதுறனாங்கள்:14_relaxed:

Edited by putthan
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Justin said:

உங்களுக்கு சாதாரணமான விடயங்களே சுத்துமே? இது சுத்தாமல் இருக்குமா? எனவே கஷ்டப் படாதீர்கள்,  lower the bar!

எந்த சாதாரண விடையத்திற்காக சுற்றினேன் என்பதனை மேற்கோள் காட்ட முடியுமா??

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மியாவ் said:

எந்த சாதாரண விடையத்திற்காக சுற்றினேன் என்பதனை மேற்கோள் காட்ட முடியுமா??

நின்ற இடத்தில் பறவை பறந்ததையும், கணணியில் போட்ட என்ட்ரிகள் அழிந்ததையும் தான் நினைத்தேன் நண்பா! அவை உங்கள் அனுபவங்கள், உங்களுக்கு உண்மையாகத் தெரிபவை ஆனால் மற்றவர்களுக்கு இடம் மாற்ற இயலாதவை! உங்கள் perception வித்தியாசமாக இருப்பதால் என் நேரடியான எழுத்தே சுத்தலாகத் தெரிகிறதோ என நினைத்தேன்!

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Justin said:

கணிணியில் மட்டும் அல்ல, chart இல் எழுதி வைத்ததும் மறைந்து போனது, இடம் மாறியது...

இதற்கு விஞ்ஞானம் ஏதேனும் விளக்கம் அளித்திருக்கிறதா, கூறுபவன் சற்று மன நல பாதிப்படைந்தவன் என்பதை தவிர்த்து...

Edited by மியாவ்

Share this post

Link to post
Share on other sites

சதிக்கோட்பாடு இணையமில்லாத காலத்தில் பரவுவதற்கு வாய்ப்புக் குறைவு. ஆனால் இணையம்  வந்தபின்னர் சதிக்கோட்பாடு உருவாக்குபவர்கள் பெருகிவிட்டனர்.  வரலாறுகள் பலவற்றையும் மாற்றி எழுத முயன்றுகொண்டிருக்கின்றனர். ஒரு செய்தியை மூன்று நான்கு  விதங்களில் திரும்பத்திரும்பச் சொல்லும்போது அது உண்மைதான் என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதனூடாக நிறுவப்படுகின்றது. எதையும் ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள் அருகிவரும் இக்காலத்தில் சதிக்கோட்பாடுகள் வெற்றிபெறச் சாத்தியங்கள் உள்ளன.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

உண்மை. பாபநாசம் படத்தில் கமல் ஒரு பொய்யை எப்படி மீள மீளச் சொல்லி அதையே கேட்பவர் நம்பிப் பரப்ப வைக்கிறார் என்று பார்த்தால் இது புரியும். எங்கள் மூளைக்கு கடந்த காலம், நிகழ் காலம் எதிர்காலம் என்று எதுவும் இல்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப் படுகிறது. இது பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்! 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this