Jump to content

சுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

swiss-flag-surveillance-exports_0.jpg

சுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு

மின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணையத்திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இணையத்திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம்.

ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்யவுள்ளது.

ஒரு இணையத்திருடரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பினால் இணையத்திருடர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

http://athavannews.com/சுவிஸ்-அரசின்-வித்தியாசம/

Link to comment
Share on other sites

ஒரு சுப்பர் மாக்கற் உள்ளே நுளைந்து ஒரு ஜொனிவோக்கர் பிளாக் லேபலை திருடினால் எவ்வளவு சன்மானம் கொடுப்பார்கள் தமிழ்சிறி. அவனவன் தன்னோன லெவலுக்கு தானே யோசிக்க முடியும். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

ஒரு சுப்பர் மாக்கற் உள்ளே நுளைந்து ஒரு ஜொனிவோக்கர் பிளாக் லேபலை திருடினால் எவ்வளவு சன்மானம் கொடுப்பார்கள் தமிழ்சிறி. அவனவன் தன்னோன லெவலுக்கு தானே யோசிக்க முடியும். 😃

கொஞ்ச தர்ம அடி கொடுப்பார்கள் என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையில்லாத வேலை அவ்வளவுதான் சொல்லமுடியும் காரணம் இதை கண்டு பிடிக்க போவது எதிகால் கைக்கர்ஸ் ethical hackers. எப்பவுமே ரியல் திருடனுக்கும் திருடன் போல் யோசிக்கும் போலீசுக்கும் வித்தியாசம் உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்கபட்ட புதுதில் அதை உலகில் யாருமே ஹக் பண்ண முடியாது என்று சுஜதா போன்றவர்கள் வீரம் பேசினர் ஆனால் எக்ஸ்ட்ராவ ஒரு சிறிய சிப் ஒன்றை உள்ளே வைத்து விரும்பிய கட்சிக்கு ஓட்டு போடும் வித்தையை வெளிநாடுகளில் செய்து காட்டியும் இந்திய தேர்தல் ஆணையம் நம்ப மறுக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.