Jump to content

ஸ்டெர்லைட் தீர்ப்பு: ’மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’ - வைகோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமை Getty Images

"ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நீதி வென்றது, அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஆனால், தாங்கள் உச்ச நீதிமன்றம் கூறியபடி உயர்நீதிமன்றத்தை விரைவில் அணுக உள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் தெரிவித்திருக்கிறார். தீர்ப்பு வெளிவந்த பிறகு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து முடிவெடுக்குமாறு கூறியுள்ளதால், நாங்கள் மீண்டும், உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்த உத்தரவின் கோப்புகளை முழுவதுமாகப் படித்து, அதில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பார்த்து முடிவுசெய்வோம்.

எங்களின் ஆலையிலிருந்து எந்த கழிவும் வெளியேறுவதில்லை என பசுமைத் தீர்ப்பாயமே தெரிவித்துவிட்டது. 2013லேயே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆலையின் மேலாண்மை குறித்தே உச்சநீதிமன்றத்தில் பேசியுள்ளனர். ஆலையின் சிறப்பம்சங்கள் (Merits) குறித்து பேசவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில், சிறப்பம்சங்கள் குறித்து நாங்கள் முன்வைப்போம். அவை எங்களுக்கு சாதகமாக இருப்பதாக் கருதுகிறோம்" என ராம்நாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

’தொழிற்சாலைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது’

இன்று வெளிவந்த தீர்ப்பை தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்தத் தீர்ப்புத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்குவதை வரவேற்கிறோம். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "இந்தத் தீர்ப்பு தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று என்பதையும், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடரும்போது ஆலை மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடவும் வலிமையான வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசு தயாராக வேண்டும்" என அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆலை மூடப்பட்டே இருக்கும்: தூத்துக்குடி ஆட்சியர்

இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படிதான் இந்த ஆலை மூடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டால், அது குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லையென வாதிடப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த ஆலை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். தேவைப்பட்டால் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளைச் சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

வேதாந்தாபடத்தின் காப்புரிமை VEDANTA

ஸ்டெர்லைட் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாவதை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. "காவல்துறை பாதுகாப்பு, அந்தந்தச் சூழலைப் பொறுத்து அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்" எனவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம்

ஸ்டெர்லைட் வழக்கில் எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் ஜெ. வெங்கடேசனிடம் கேட்டபோது, "இந்த மேல்முறையீட்டில், தமிழக அரசு வைத்த முக்கிய வாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்பதுதான். இதில் சுற்றுசூழல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு சட்ட பிரச்னைகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், ஆலையை சேர்ந்தவர்கள் எவ்வாறு மாசுகளையும், கழிவுகளையும் வெளியிடுகிறார்கள் என்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் முழுமையாக விசாரிக்கவில்லை என்ற வாதத்தையும் அவர்கள் தங்களின் குறிப்புகளில் தெரிவித்து இருந்தனர். அதனடிப்படையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.இந்த மேல்முறையீட்டின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்ற அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில், தமிழக அரசு மேல் முறையீட்டில் கூறியிருந்ததை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இதை விசாரிக்க முகாந்திரம் இல்லை. ஸ்டெர்லைட் புதிய ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளன.

ஸ்டெர்லைட்

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடுவதற்காக அளித்த உத்தரவிற்கு தடை வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை கேட்பதால், அதை சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" என்று விளக்கினார்.

https://www.bbc.com/tamil/india-47278282

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.