nunavilan

பெண்கள் தனியே எதிர்ப்படும் போது ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….

Recommended Posts

Vasu Sangarapillai
பெண்கள் தனியே எதிர்ப்படும் போது ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….

ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..

நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..//

ஒரு காஷ்மீர் மாணவியின் உளக் குமுறல்...

இராணுவத்துடன்

படுப்பதுதான் தேசபக்தியா?

காஷ்மீர் மாணவி....

"நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”

“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”

”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?
வினவு

”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செலவு செய்கிறது என்று சொல்ல வேண்டும்.

அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…..

உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”

“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”

“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்…

அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”சொல்லுங்கள்”

”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை..

கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது…

ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”

”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”

“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்..

அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா.

இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”

“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”

“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..

நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..

நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்..

ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்..

எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”

”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”

“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன்

. நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்…

ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?

எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்…

நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”நன்றி,மனிதன் சென்னை.

Image may contain: one or more people and text
  • Sad 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:
 
Image may contain: one or more people and text

அன்புச்சகோதரியே!

உங்களைப்போன்றுதான் இலங்கை தமிழ்மக்களும், தமிழ்பெண்களும், தமிழ்மாணவமணிகளும் இந்திய கொடூர காமுக ராணுவத்தால் பாதிக்கப்பட்டார்கள்.இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மறக்கமாட்டார்கள்.

உங்கள் வேதனை புரிகின்றது சகோதரியே.....

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

பெண்களின் சேலைகளைத் திருடிவைத்து அவர்களை அம்மணமாகப் பார்த்து ரசித்த ஒருவரை கடவுளாக வணங்கிவரும்******* ***** எப்படி இருப்பான் என்பதற்கு இந்தத் திரியும் ஒரு உதாரணம். Quellbild anzeigen

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நா.தனுஜா) இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார்.     கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர். இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை அர­சாங்கம், அர­சியல் கட்­சிகள், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் மக்­க­ளுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்­யப்­படும் என்றும் அவர் அறி­வித்தார். பூர்­வாங்க அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு: இலங்­கையின் தேர்­தல்கள் ஆணைக்­குழு நாடு பூரா­கவும் தேர்தல் செயன்­மு­றை­களை மிகவும் நேர்த்­தி­யான முறை­யிலும், செயற்­றி­ற­னு­டனும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­பட்ட தேர்தல் செயன்­மு­றைகள் மூலம் தேர்­தல்­களை முறை­யாக நடத்­து­வதில் இலங்­கையில் காணப்­படும் நீண்­ட­காலப் பாரம்­ப­ரியம் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது. வாக்­கா­ளர்­களில் 84 சத­வீ­த­மா­ன­வர்கள் தேர்­தலில் பங்­கேற்­றார்கள். இது மிகவும் கவ­னத்தைத் தூண்­டு­வ­தாக இருக்­கின்­றது. இலங்­கையின் பிர­ஜைகள் ஜன­நா­யகம் மற்றும் பொது­ந­ல­வா­யத்தின் அடிப்­படை விழு­மி­யங்கள் தொடர்பில் தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றார்கள். என்­றாலும் இந்தத் தேர்தல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய சில முக்­கிய பிரச்­சி­னை­க­ளையும் கிளப்­பி­யி­ருக்­கி­றது. ஒரு நம்­ப­க­மான ஜன­நா­யக செயன்­முறை என்­பது இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பத்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தற்­கான உரி­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்ற, சக­ல­ருக்கும் இடம்­த­ரு­கின்ற ஒன்­றாக இருக்­க­ வேண்டும். எதிர்­கா­லத்தில் இலங்கை சமூ­கத்தின் சகல பிரி­வி­ன­ரையும் அர­வ­ணைக்­கக்­கூ­டிய முறையில் தேர்­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக மேம்­பா­டு­களைச் செய்­ய­ வேண்டும் என்று இலங்கை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம். இலங்­கையின் செழிப்­பான கலா­சார மற்றும் பன்­மைத்­துவம் மதிக்­கப்­பட வேண்டும். கொண்­டா­டப்­பட வேண்டும். சமூக ஒன்­றி­ணை­விற்கும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்­கிற்கும் முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்றோம். தேர்­த­லுக்கு முன்­ன­ரான நாட்­களில் இன மற்றும் மத பதற்ற ­நி­லையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சில குழுக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­ன­தையும் நாங்கள் அவ­தா­னித்தோம். ஐக்­கி­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கு­மாறும், அர­சியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்­புத்­தன்மை பண்­பு­களை வெளிக்­காட்­டு­மாறும் அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்­ த­லை­வர்­க­ளையும், சகல பிர­ஜை­க­ளையும் கோரு­கின்றோம். தனியார் ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக ஊட­கத்­த­ளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்­சுகள் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட்­டமை விச­னத்­திற்­கு­ரிய மற்­றொரு அம்­ச­மாகும். பிர­சா­ரங்கள் முடி­வ­டைந்த பின்­ன­ரான 48 மணித்­தி­யால நேரத்­திற்­குள்ளும் கூட இந்த வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் தொடர்ந்­ததைக் காண­ மு­டிந்­தது. ஒரு தொகுதி ஊடக வழி­காட்­டல்கள் ஊடாக அர­சாங்க ஊட­கங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல்கள் ஆணைக்­குழு கொண்­டுள்­ளது. ஆனால் தனியார் ஊட­கங்கள் பெரு­ம­ள­விற்கு ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு சட்­ட­ரீ­தி­யான கட்­ட­மைப்பின் ஊடாக தனியார் மற்றும் அர­சாங்க ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும். இது ­கு­றித்து எமது இறுதி அறிக்­கையில் விரி­வாகக் கூறுவோம். இலங்­கையின் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு குறை­வாக இருப்­பது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். இந்த ஜனா­தி ­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட 35 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே பெண் வேட்­பா­ள­ராவார். உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட ­ஒ­துக்­கீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு விட­யத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தலின் ஊடாக இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை பொதுநலவாயத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மீதான தங்களது பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தப் பண்புகளை சகல பிரஜைகளுக்குமாக மேலும் மேம்படுத்திப் பாதுகாக்குமாறு நாம் இலங்கையின் புதிய தலைமைத்துவத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம். https://www.virakesari.lk/article/69302
    • நியுஸ் இன் ஏசியா   இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது.   நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும்,  முடிவடைந்துள்ள தேர்தல் வாக்களிப்பின்போக்கைஅடிப்படையாக வைத்து பார்க்கும்போது புலனாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச சிங்களதீவிரவாத போக்கை கொண்டவர் என கருதியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவிற்கு தமிழர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். சஜித்பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவி;த்த சிறிய அரசமைப்பு சலுகைகளை கூட தங்களிற்கு கிடைக்காது என அவர்கள் அஞ்சினர்.கோத்தபாய ராஜபக்ச அதிகாரப்பகிர்வு குறித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கவில்லை,சஜித் தெரிவித்தது போன்று அதிகாரங்களை அதிகரிப்பது  குறித்தோ,மத்தியில் அதிகாரப்பகிர்வு குறி;த்தோ அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அனைவரையும் உள்;ளடக்கிய சமாதானம் வளம்  ஆகியவற்றிற்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தான் விடுத்த அழைப்பிற்கு தமிழர்களும் முஸ்லீம்களும் பதிலளிக்காதது குறித்து  கோத்தபாய ராஜபக்ச கவலைவெளியிட்டார். தான் அனைத்து இலங்கையர்களினதும்  ஜனாதிபதி, ஒரு பகுதியினரின் ஜனாதிபதி இல்லை என்ற அறிக்கை தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் செவிகளில் விழவில்லை என  அவர். தெரிவித்தார். மேற்குலகின் உதவியுடன் சிங்கள தமிழ் மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது ,2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நசுக்கப்பட்ட தமிழ் தீவிரவாதத்தை ஈது மீண்டும் வளர்ச்சியடைய  செய்யலாம். கடந்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக சாதாரண பிரஜைகள் நியமிக்கப்பட்டதிலிருந்து , பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் போர்வீரருமான ஜெனரல் கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை மாறுபட்ட நடவடிக்கையாகும்.தற்போது பதவி விலகிச்செல்லும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேகொட மாத்திரமே இதில் விதிவிலக்காக காணப்பட்டார்.2019 ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற ஜிகாத் தாக்குதல் குறித்துஇந்தியா வழங்கிய புலனாய்வு தகவல்களை கையாள்வதில் தோல்வியடைந்ததன் காரணமாக பாதுகாப்பு துறை சாராத முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்தே இலங்கை புலனாய்வு ஒத்துழைப்பின் அடிப்படையின் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் உடனடி முக்கியத்துவம் எடுப்பதன் அவசியத்தையும் உணர்ந்தது. யுத்தத்தின் மிகமுக்கியமான தருணத்தில் 53 வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய கட்டளை தளபதி கமால் குணரட்ண புலனாய்வு தகவல்களின் முக்கியத்துவத்தைஅறிந்தவர் மாத்திரமல்ல  அவற்றை ஒருங்கிணைப்பு செய்து உரியநடவடிக்கையை எடுப்பதிலும் திறமையானவர். தலைமை அதிகாரியின் உத்தரவினை கண்டிப்பாக பின்பற்றக்கூடிய படைவீரர் அவர்,இதன் காரணமாக அவரது  தலைமை அதிகாரியான கோத்தாபய  -நம்பக்கூடியவராக குணரட்ண காணப்படுகின்றார். கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் கோத்தாபய ராஜபக்ச உருவாக்கிய புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கிய வியத்மகா அமைப்பின் உறுப்பினருமான ஜெனரல்குணரட்ண,இனப்பிரச்சினை மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த கோத்தாபயவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகும் நபராக காணப்படுகின்றார். 2016 செப்டம்பரில் நந்திக்கடலிற்கான வீதி என்ற தனது நூல் வெளியிட்டின் பின்னர் டெய்லி எவ்டியின் சானிக சிரியானந்தவிற்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலிகளின் கொள்கை இன்னமும் உயிர்ப்புடன்  உள்ளதால்,; சாதகமான சூழ்நிலை உருவானால் அவர்கள் மீண்டு;ம் திரும்பி வருவார்கள் என குணரட்ண தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல் ஈழத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதால் அவர்கள் காணி நீதித்துறை பொலிஸ் அதிகாரங்களுடன் திருப்தியடைய மாட்டார்கள் என நான் கருதுகின்றேன் எனவும் அவர் குறி;ப்பிட்டார். நிலைமையை சரிவர கையாளவிட்டால் விடுதலைப்புலிகள் மீண்டும் வரலாம்,12000ற்கும் அதிகமான முன்னாள் புலிகள் சமூகத்தில் உள்ளனர் எனவும்அவர் தெரிவித்திருந்தார். அவர்கள் முழுமையான புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டபோதிலும் அவர்கள் 100 வீதம் மாற்றமடைந்துவிட்டனர் என தெரிவிக்க முடியாது எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படையினர் தங்கள் பணியை ஈவிரக்கமற்ற விதத்தில் செய்துள்ளனர் என அவர்  தனது நூலில் தெரிவித்துள்ளார். குணரட்ணவின் நூல் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ் பொதுமக்களின் வீடுகளிற்கு தீவைப்பது,அப்பாவிபொதுமக்களை கொலை செய்வது தமிழ் மக்களின் வீடுகளி;ல் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டனர் என் குறிப்பிட்டுள்ளதாக  ஏஎவ்பி தெரிவித்துள்ளது. மங்களசமரவீர அந்த நூலை இலங்கை படையினருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என  வர்ணித்திருந்தார். ஆனால் மாவோ சே துங் தெரிவித்துள்ளதை போல யுத்தம்என்பது தேநீர் விருந்தல்ல,இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத யுத்தமில்லை.மேலும் இரு தரப்பும்அநீதிகளில் ஈடுபட்டன, இதன் காரணமாக ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டி தாக்குவது நியாயமானது இல்லை. மேலும் இலங்கை இராணுவத்தினர் 30 வருடங்களிற்கு மேல் எதிர்கொண்ட எதிரியை அமெரிக்கா உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத இயக்கம், என வர்ணித்துள்ளது. பிரபாகரன் மிகவும் திறமையான அர்ப்பணிப்பு மிக்க படையணியை உருவாக்கினார் என குறிப்பிட்டுள்ள குணரட்ண இந்த படையணிக்கு தீபன் சூசை பால்ராஜ் போன்ற திறமையான தளபதிகள் தலைமை தாங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/69311    
    • கடந்த தேர்தல் காலங்களின் பின்னர் இலங்கையின் பழம் பெரும் கட்சிகளில் ஒன்றான சுதந்திர கட்சி ஒரு பலமிழந்த கட்சியாக, எதிர்காலம் எதுவென்று தெரியாமல் உள்ளது.  ஐ.தே.க. இந்த சனாதிபதி தேர்தலின் பின்னர் கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. பல பிரிவுகளுக்காகும் நிலை. சிலர் மொட்டுவில் இணையும் சாத்தியம். ரணில் என்ற குள்ள நரி செய்வினை சுயஅழிப்பிற்க்கு உள்ளானது.   
    • ஒரு சரியான அரசியல் தலைமை தேவை. அதை பெறக்கூடிய ஒரு பொறிமுறை எம்மிடம் இல்லை.  அமெரிக்கா போன்ற நாட்டில் இப்பொழுது யார் சனநாயக கட்சியின்  சனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற விவாதம் பல மாதங்களாக, வெளிப்படையான விவாதங்கள் நடக்கின்றன. அதன் மூலம், மக்கள் ஒரு தலைமையை தெரிவுசெய்யக்கூடிய படிமுறை உள்ளது.  எமது மக்களுக்கு அவ்வாறான தெரிவுகள் இல்லை. இவர்தான் அரசியல் தலைவர் என்று ஒருவரை நிறுத்தி அவரின் முடிவுகளை ஆதரிக்க வேண்டிய நிலை.   
    • நடந்­து ­மு­டிந்த நாட்டின் 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் பல செய்­தி­களை உல­குக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்­ளது. 16.11.2019இல்­இ­டம்­பெற்ற 8ஆவது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். 41.99வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற புதிய ஜன­நா­ய­க­ முன்­னணி வேட்­பாளர் சஜித்­ பி­ரே­ம­தாச தோல்­வி­யைத்­த­ழு­வி­யுள்ளார். இம்­முறை 50வீத வாக்­கு­களை யாரும் பெற­மாட்­டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்­குகள் எண்­ண­வேண்­டி­வரும் என்­றெல்லாம் கூறப்­பட்­டன. அத­னைப்­பொய்­யாக்கி 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெ­ற­ மு­டிந்­த­தற்கு பல்­வேறு வகை­யான யுக்­திகள் பயன்­பட்­டன எனலாம். கோத்த­பாய வெற்­றி­ய­டைந்­த­தற்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் கார­ணமோ என்­னவோ மொத்­தத்தில் சிறு­பான்­மைதான் காரணம் என்­பதை மறுக்­க­மு­டி­யாது. சஜித்­தோடு அணி­சேர்ந்த முஸ்லிம், தமிழ் பிர­தான கட்­சி­களின் கூட்­டுத்தான் கோத்தாவின் வெற்­றியை இல­கு­வாக்­கின என்று அர­சியல் நோக்­கர்கள் கோடிட்­டுக்­காட்­டு­கி­றார்கள். கடந்த ஏழு முறை இடம்­பெற்ற ஜனா­தி­ப­தி­ தேர்­தல்­க­ளின்­போது பெறப்­பட்ட வாக்­கு­வீ­தத்­தைப்­பற்றி சிறு­கண்­ணோட்டம் செலுத்­துவோம். 20.10.1982இல் நடை­பெற்ற  முத­லா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 52.91வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். 19.12.1988இல் நடை­பெற்ற  இரண்­டா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 50.43வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற ஆர்.பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். 09.11.1994இல் நடை­பெற்ற  மூன்­றா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 62.28வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். 21.12.1999இல் நடை­பெற்ற  நான்­கா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 51.12வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். 17.11.2005இல் நடை­பெற்ற  ஐந்­தா­வது ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் 50.29வீத வாக்­கு­க­ளைப் ­பெற்ற மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­ செய்­யப்­பட்டார். 26.01.2010இல் நடை­பெற்ற  ஆறா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 57.88வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். 08.01.2015இல் நடை­பெற்ற  ஏழா­வது ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் 51.28வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். நாட்டில் இன­மத பேதங்கள் வேண்டாம் நீதி­யான சுதந்­தி­ர­மான நல்­லாட்சி வேண்டும் சிறு­பான்­மை­யி­னரை ஒதுக்­கக்­கூ­டாது. உண்­மை­யான ஜன­நா­யகம் வேண்டும் போன்­ற­பல செய்­தி­களை உரத்­துச்­சொல்­லி­யுள்­ளது என்­ப­தற்­கப்பால் நாம் பெரும்­பான்மை சிங்­கள்­மக்கள் நினைத்தால் சிறு­பான்­மை­யின வாக்­குகள் இல்­லா­மலே ஜனா­தி­ப­தியை உரு­வாக்­க­மு­டி­யு­மென்ற உண்­மையை எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது. நிற்க இத்தேர்தலில் தமி­ழர்கள் குறிப்­பாக சிறு­பான்­மைச்­ச­மூகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடி­வுகள் மேலும் ­பல செய்­தி­களைச் சொல்­லி­யுள்­ளன. இம்­முறை தமிழ்­மக்கள் ஆர்­வத்­துடன் வாக்­க­ளித்­த­மையே இச்­செய்­திக்­குக்­கா­ர­ண­மாகும். 80வீதத்­திற்கு மேலாக வாக்­க­ளிப்பு இடம்­பெற்­றுள்­ளது. 2005இல் மஹிந்த வெல்­லவும் 2015இல் மஹிந்த தோற்­கவும் காரணம் வடக்­கு ­கி­ழக்கு மாகா­ணமே அதிலும் தமிழ்­மக்­களே எனலாம். ஆம் 2005 இல் ரணி­லுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டா­மென விடு­த­லைப்­பு­லிகள் கூறி­ய­மை­யினால் மஹிந்த வென்றார். 2015இல் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று தமிழ்த்­த­ரப்பு கூறி­ய­மை­யினால் மஹிந்த தோற்றார். ஆனால் அந்­தச்­ச­மன்­பாடு இம்­முறை பொய்த்­துள்­ளது என்­பதை நாம் ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும். நாம் தான் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்தி நாம் தான் ஜனா­தி­ப­தி­யைக்­கொண்­டு­வந்தோம் என்ற மம­தை­யு­ட­னான கோசம் இனிமேல் எழுப்ப சந்­தர்ப்­ப­மில்லை.அந்த கோசமே அவர்­களை இவ்­வா­றான ஒரு முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ர­க்கா­ரணம் என்­ப­தையும் நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது. குறிப்­பாக சஹ்ரான் தாக்­கு­த­லுக்­கு ­பிற்­பாடு முஸ்­லிம்­கள்­மீ­துள்ள எதிர்ப்­ப­லைகள் பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தி­யிலே நிறை­யவே இருந்­தன. அதனை சஜித் தேசி­யத் ­த­லைவர் என்று கருதி அதனை கவ­னி­யாமல் விட்­டி­ருக்­கலாம். ஆனால் இன்­றைய முடி­வுக்கு அதுவும் ஒரு கார­ண­மென்­பதை நாம் மறுக்­க­மு­டி­யாது. அடுத்து தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும் அடுத்­த­ கா­ரணம். ஒரு­வாறு பல்­கலை மாண­வர்­களின் முயற்­சி­யினால் கூட்­டுச்­சேர்ந்த அவர்கள் தட்­டுத்­தடு­மாறி முடி­வு­களை தனித்­த­னி­யாக அறி­வித்­ததும் 13 என்ற அதிஷ்­ட­மற்ற இலக்­கத்தில் கோரிக்­கையை முன்­வைத்து மண்கௌ­விய சந்­தர்­ப்பங்­களும் முழு தமிழ்ச்­ ச­மூத்­தையே தலை­கு­னி­ய­வைத்­துள்­ளது. மேலும் த.தே.கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால போக்­குகள் தமிழ் ­மக்கள் மத்­தியில் சொல்­லு­ம­ள­விற்கு வர­வேற்­பைப்­ பெற்­றி­ருக்­க­வில்­லை­யென்­பதை அவ­தா­னிக்­க­வேண்டும். அவர்கள் அளித்த வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டமை, பிர­தே­ச­வாதம் தலை­தூக்­கி­யி­ருந்­தமை, கட்­சி­க­ளி­டையே ஒற்­று­மை­யின்மை போன்ற பல்­வேறு கார­ணிகள் பல­வீ­னத்­திற்கு கார­ண­மென்­பதை நோக்­கர்கள் சுட்­டவும் தவ­ற­வில்லை. த.தே.கூட்­ட­மைப்பு மீண்­டு­மொ­ரு­முறை தன்னை இத­ய­சுத்­தி­யுடன் மீள சுய­ப­ரி­சீலனை செய்­து­கொள்­ள­வேண்டும். இல்­லா­விடில் அடுத்த தேர்­தலில் மிகவும் பல­வீ­ன­மான நிலை­­யை­ அ­டையக்­கூ­டு­மெ­ன­ க­ரு­தப்­ப­டு­கி­றது. இம்­முறை வடக்கு கிழக்கு தமி­ழர்கள் கூடு­த­லாக சஜித்­திற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள் என்­பது தேர்தல் முடி­வு­களில் தெரி­கி­றது. அதற்­காக த.தே.கூட்­ட­மைப்புக் கூறித்தான் இவர்கள் அத­னைச்­ செய்­தார்­களா? என்­பதில் ஐய­முள்­ள­தென ஒரு நோக்கர் கூறு­கிறார். சரி இனி வட-­கி­ழக்கு தேர்தல் முடி­வு­களை சற்று ஆய்வு செய்வோம். வடக்கில் யாழ்ப்­பாணம், வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்­டங்­களும் 14தேர்தல் தொகு­தி­களும் கிழக்கில் திரு­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய மூன்று மாவட்­டங்­களும் 10 தேர்தல் தொகு­தி­களும் உள்­ளன. இத்­தேர்­தலில் 5 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த 22 தேர்தல் தொகு­தி­க­ளிலும் உயிர்ப்­பான வாக்­க­ளிப்பு இடம்­பெற்­றன. இப்­ப­கு­தி­களில் வாழும் சிறு­பான்­மைச் ­ச­மூ­கங்­க­ளான தமிழ், முஸ்லிம் மக்கள் கூடிய வீதத்தில் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளித்­தனர். இதன்­படி வடக்கில் சகல தேர்தல் தொகு­தி­க­ளிலும் புதிய ஜன­நா­ய­க­ முன்­னணி வேட்­பாளர் சஜித்­ பி­ரே­ம­தாச வெற்­றி­பெற்­றுள்ளார். யாழ். ­மா­வட்­டத்தில் மட்டும் அவர் 312722வாக்­குக­ளைப் ­பெற்­று ­சாதனை படைத்­துள்ளார். அங்கு கோத்தபா­ய­விற்கு ஆக 23261வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைக்­கப்­பெற்­றன. மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு ஆகிய நிரு­வாக மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வன்னி தேர்தல் மாவட்­டத்தில் 174739வாக்­கு­களை சஜித் பிரே­ம­தாச பெற்­றுள்ளார். அங்கு கோட்­ட­பாய 26105வாக்­கு­க­ளையே பெற்­றுள்ளார். ஆக வட­மா­காணம் பூராக சஜித் அலையே வீசி­யுள்­ளது எனலாம். கிழக்­கிலும் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்கள் சஜித் வசமே வந்­துள்­ளன. மட்டு.மாவட்­டத்தில் சஜித் 238649 வாக்­கு­க­ளையும் கோத்தா 38460வாக்­கு­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்­தில் ­சஜித் 259673வாக்கு­க­ளையும் கோத்தா 135038 வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளனர். திரு­மலை மாவட்­டத்தில் சஜித் 166841வாக்­கு­க­ளையும் கோட்டா 54135வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளனர். எனினும் அம்­பாறை சேரு­வில தொகு­திகள் கோத்தா வெற்­றி­பெற்­றுள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்­டக்­கூ­டி­யது. அம்­பா­றை ­தேர்­தல்­தொ­கு­தியில் கோத்த­பாய ராஜ­பக் ஷ 89674 வாக்­கு­க­ளையும் சஜித் 42242 வாக்­க­க­ளை­யும் ­பெற்­றுள்­ளனர். அதே­போன்று சேரு­வில தொகு­தியில் கோத்தா 31303வாக்­கு­க­ளையும் சஜித் 28205வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளார். அதா­வது வடக்கு கிழக்கில் கோத்தாவை விட சஜித் முன்­னி­லையில் நின்­றுள்ளார். வெற்­றி­யைத்­ தீர்­மா­னித்த வாக்­குகள் முழு நாட்­டிலே கோத்த­பாய ராஜ­பக் ஷ   பெற்ற வாக்­குகள் 69லட்­சத்து 24 ஆயி­ரத்து 255 வாக்­குகள் சஜித்­ பி­ரே­ம­தாச  பெற்ற வாக்­குகள் 55 இலட்­சத்து 64   ஆயி­ரத்து 239 வாக்­குகள் அதா­வது சுமார் 14 இலட்சம் வாக்­கு­களால்  கோத்தா வெற்­றி­பெற்­றுள்ளார். இதன்­கா­ர­ண­மாக கோத்தாவின்  வெற்­றி யைத் தீர்­மா­னித்த வாக்­கு­க­ளாக வட­கி­ழக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை விட தென்­னி­லங்கை சிங்­கள வாக்­கு­க­ளாக  திகழ்­வ­தைக் ­கா­ணலாம். இவ்­வாக்­குகள் நாட்டில் சிறு­பான்மை மக்­களில் வெற்றி தங்­க­வில்லை. எனினும் அவர்­களை   அர­வ­ணைத்­துச்­ செல்­ல­வேண்டும் என்ற செய்­தியை சொல்­கி­றது. கோத்த­பாய கூட ஆரம்­பத்­தி­லேயே தமிழ்­பேசும் வாக்­குகள் இல்­லா­மலே நான் வெற்­றி­பெ­றுவேன் என்று பகி­ரங்­க­மா­கவே கூறி­ய­தை­யும்­ இங்கு பதி­வி­டுதல் பொருத்­த­மென கரு­து­கிறேன். வடக்கில் கோத்தா தோல்­வி­ய­டை­ய­வில்லை  மாறாக தோல்­வி­ய­டைந்­தது த.தே.கூட்­ட­மைப்பே என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளமை ஈண்­டு ­கு­றிப்­பி­டத்­தக்­கது. மாவட்­ட ­ரீ­தியில் யாழ்.முத­லிடம் வட-­கி­ழக்கில் மாவட்­ட­ ரீ­தியில் பார்த்தால் யாழ்ப்­பாண மாவட்­டம்தான் அதி­கூ­டிய வாக்­கு­வித்­தி­யா­சத்தில் சஜித் முன்­னி­லை­யி­லுள்ளார். இதுவே வட-­கி­ழக்கில் அதி­கூ­டிய வாக்கு வித்­தி­யா­ச­மாகும். சம்­மாந்­துறைத் தொகு­தியில் 86.22வீத வாக்­குகள் சஜித்­திற்கு. அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சம்­மாந்­துறை தொகு­தி­யி­லுள்ள பதி­வு­செய்­யப்­பட்ட 85911 வாக்­கா­ளர்­களில் 67166 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தனர். 494வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.செல்­லு­ப­டி­யான வாக்­குகள் 67165 ஆகும். இந்த 67165 வாக்­கா­ளர்­களில் 57910 வாக்­கா­ளர்கள் சஜித்­திற்கு  அதா­வது 86.22 வீத­மான வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன. கோத்தாவுக்கு ஆக 7151வாக்­கு­களே அதா­வது 10.65 வீத வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன. சம்­மாந்­து­றைத்­தொ­கு­தியில் தமிழ் முஸ்லிம் வாக்­கா­ளர்­களே உள்­ளனர். பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்கள் உள்­ள­போ­திலும் தமிழ் வாக்­கா­ளர்­க­ளும் உள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மு.கா., ஐ.தே.க. மற்றும் த.தே.கூட்­ட­மைப்பின் பிர­சாரம் கார­ண­மாக சஜித்­திற்கு 86.22வீத­மான தமிழ்­வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன என கரு­த ­இ­ட­முண்டு. அதன்­படி சம்­மாந்­துறைத் தொகு­தியில் அமோக வெற்­றி­யீட்­டி­ய­தற்கு தமிழ் பேசும் இரு சமூகங்­களும் பாரிய பங்­க­ளிப்­பைச்­ செய்­துள்­ளன. வட-­கி­ழக்­கிற்கு அப்பால் மலை­யகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லுள்ள தமிழ் பேசும் சமூகத்­தி­னரும் கணி­ச­மான ஆத­ரவை சஜித்­திற்கு  வழங்­கி­யுள்­ளனர் என்­பதும் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டி­ய­தல்ல. தென்­னி­லங்­கையில் சஜித்­ பி­ரே­ம­தாச பெரும்­பான்­மை­யின வாக்­கு­க­ளைப்­ பெ­று­வதில் கோட்­டை ­விட்­டு­விட்டார் என்றே கூற­வேண்டும். சுமார் 14லட்சம் வாக்­குகள் மாறி­விட்­டன. அதற்கும் கோத்தா அணி­யினர் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நன்­றி­ சொல்­ல­வேண்டும். மொத்­தத்தில் சிறு­பான்­மை­யி­னரை துரும்­பாக வைத்து பெரும்­பான்­மை­யின  வாக்­கா­ளர்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களால் தெரி­வான புதிய ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­­பக் ஷ  சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தோடு அவர்­க­ளது தேவைகள் அபி­லா­சைகள் அனைத்­தையும் பூர்த்தி செய்ய ஆவன செய்­ய­வேண்­டு­மென மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். புதிய ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­­பக் ஷவின் கன்­னி ­உ­ரையில் இன­ம­த­பே­த­மற்ற நாட்டை உரு­வாக்­குவேன் எனக்கு வாக்­க­ளித்த வாக்­க­ளி­யாத அனைத்­து ­மக்­க­ளுக்கும் தேசி­யத்­த­லை­வ­ரென்ற அடிப்­ப­டையில் சேவை­யாற்­றுவேன் என்று கூறி­யி­ருப்­பது வர­வேற்­புக்­கு­ரி­யது.. எனவே அவர்  இன்றைய அமைச்சர்களைப்போல் தங்கள் தங்கள் இனத்திற்கு சேவை­யாற்றுபவர்கள் போலல்லாமல் தேசியத் தலைவராக சகல இனமக்களுக்கும் சேவை யாற்றவேண்டுமென எதிர்பார்க்கிறோம். வி.ரி.சகாதேவராஜா https://www.virakesari.lk/article/69309