Jump to content

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், யுத்தக்குற்றங்கள் பற்றியும் விசாரணை அவசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 முகம்மது தம்பி மரைக்கார் - 
 
சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.  பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.    சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார்.   
 
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என, இரண்டு தரப்பாலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.   “உள்நாட்டுச் சண்டையின் போது, இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில், இரு தரப்பினரும் உண்மையைப் பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பைக் கோரி, முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார். 
 
இதனால், பேரினவாதச் சிங்களத் தரப்பிலிருந்து மட்டுமன்றி, தமிழர் பக்கமிருந்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை, ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.   பிரதமரின் இந்தக் கருத்தையடுத்து, “படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டார்” என்று, சிங்களத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   
 
மறுபுறம், “இலங்கை இராணுவம் போர்க் குற்றம் இழைத்தமையை, பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதை வரவேற்கும் அதேநேரம், இதை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு 10 ஆண்டுகள் எடுத்திருக்கின்றன” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.   ஆயினும், இராணுவத்தினரின் யுத்தக் குற்றத்தை மன்னிப்பதற்கு, தாம் தயார் இல்லை என்றும், அது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழர் தரப்பு வலியுறுத்தி உள்ளது. 
 
எது எவ்வாறாயினும், உள்நாட்டுச் சண்டை தொடர்பாகப் பேசப்படும் ஒவ்வொரு தருணத்திலும், அதனால் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினராகிய முஸ்லிம் மக்கள் குறித்துப் பேசுவதிலிருந்து, அரசாங்கங்களும் தமிழர் தரப்பும் தவிர்த்துக் கொள்வதைத் தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கிறது.    அதையும் தாண்டிப் பேசுவதற்கான முயற்சிகள் எழுகின்ற போது, மிக நாசூக்காக, அவை தட்டிக் கழிக்கப்பட்டு வந்துள்ளன.  
 
இலங்கையின் உள்நாட்டுச் சண்டையில், தனித்தரப்பாக முஸ்லிம்கள் பங்கு கொள்ளவில்லை என்றாலும் கூட, இராணுவத்தால், புலிகளால் உயிர், பொருளாதார இழப்புகளை முஸ்லிம்கள் அதிகளவில் சந்தித்துள்ளமையை மறைக்க முடியாது. அதிலும் புலிகளால், அதிகளவில் இழப்புகளையும் வலிகளையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டனர் என்பது கசப்பான உண்மையாகும்.  
 
1990ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த விடுதலைப் புலிகள், அங்கு தொழுது கொண்டிருந்தவர்கள் மீது நடத்திய தாக்குதலில், 140 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.  
 
1990ஆம் ஆண்டு மட்டும், கிழக்கு மாகாணத்தில் 700க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் கொன்றதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் எழுதிய நூலொன்றுக்கு வழங்கிய குறிப்பொன்றில், தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ். அருளானந்தன் தெரிவித்திருக்கிறார்.  
 
அதேபோன்று, 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 முஸ்லிம் பொலிஸார், படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சுற்றி வளைத்த புலிகள், அங்கிருந்த பொலிஸாரைச் சரணடையுமாறு கோரினர். அதையடுத்து, புலிகளிடம் சரணடைந்தவர்களில் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பொலிஸாரை விடுவித்த புலிகள், ஏனையவர்களை அழைத்துச் சென்றார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சுமார் 600 முஸ்லிம் பொலிஸாரை, புலிகள் சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மிக அதிகமானோர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.   இந்தச் சம்பவம் தொடர்பாக, நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் 2011ஆம் ஆண்டு, பல முஸ்லிம்கள் சாட்சியம் வழங்கியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.   
 
புலிகளிடம் சரணடைந்த முஸ்லிம் பொலிஸார் 600 பேர் தொடர்பில், முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று, நல்லிணக்க ஆணைக்குழுவினர் யோசனைகளை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  
 
இன்னொருபுறம், 1990ஆம் ஆண்டில் வடக்கில் வாழ்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை, 48 மணி நேரத்துக்குள் புலிகள் துரத்தியடித்தமை குறித்தும் பேசப்பட வேண்டியுள்ளது. புலிகளின் அந்தச் செயற்பாடானது ஓர் ‘இன அழிப்பு’ நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 
 
வடக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தக் கறுப்பு தினத்தன்று, புலிகள் விடுத்த அறிவித்தலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்’ எனும் நூலில் இப்படி நினைவு கூருகிறார். ‘இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு, விடுதலைப் புலிகளின் அறிவித்தல்: முஸ்லிம்கள் அனைவரும், 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேற வேண்டும். பணம், நகை, விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். நகைகளையும் பணத்தையும் புலிகளின் காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். வழிச் செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். வாகனங்கள், மோட்டார் சைக்கிள், இழுபொறி, சைக்கிள்கள் போன்றவையும் காரியாலயங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். 48 மணி நேரம் தவறும் பட்சத்தில் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை’.   
 
ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்பதும், அன்றைய நிலைவரங்களை நேரடியாகக் கண்டும் கேட்டும் அனுபவித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.   
 
இவ்வாறு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்களுக்குச் சொந்தமான சுமார் 22 ஆயிரம் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தோணிகளும் வலைகளும் பறிபோயுள்ளன. முஸ்லிம்களின் 79 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. 65 வரையிலான முஸ்லிம் பாடசாலைகள் அழிந்து போயுள்ளன என்று, ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் நூலில், சுஐப் எம் காசிம் குறிப்பிடுகின்றார்.  
 
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், சேதமாக்கப்பட்ட அவர்களுடைய வீடுகளின் அப்போதைய மொத்தப் பெறுமதி, சுமார் 192 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 1990ஆம் ஆண்டின் பெறுமதியாகும். அப்போது தங்கம் ஒரு பவுணின் விலை சுமார் 6,000 ரூபாயாகும். இப்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை, 60 ஆயிரம் ரூபாயாகும். அந்த வகையில் பார்த்தால், வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களின், சேதமாக்கப்பட்ட வீடுகளின் இன்றைய பெறுமதி, 1,920 கோடி ரூபாய்களாகும்.   
 
அதேபோன்று, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, அவர்கள் இழந்த சொத்துகளின் அன்றைய மொத்தப் பெறுமதி, சுமார் 254 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவற்றுக்கான இப்போதைய பெறுமதி 2,540 கோடி ரூபாய்களாகும்.   
 
இந்த அநீதிகளைப் புரிந்த விடுதலைப் புலிகள், இறுதியில் மன்னிப்பை மட்டுமே முஸ்லிம்களிடம் கோரியிருந்தனர். அதுவும் அந்த மன்னிப்பு, ‘பூசி மெழுகலாக’ மட்டுமே அமைந்திருந்தது. 
 
2002ஆம் ஆண்டு, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில், கிளிநொச்சியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, புலிகளின் ஆலோசகராகப் பதவி வகித்த அன்ரன் பாலசிங்கம், “கடந்த காலங்களில் நடந்தவற்றுக்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கேட்கிறோம்; நடந்தவை மறக்கப்பட வேண்டும். முஸ்லிம்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண, நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று, கூறியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.  முஸ்லிம்களுக்கு எதிராகப் புலிகள் புரிந்த அத்தனை நடவடிக்கைகளுக்கும், அந்த மன்னிப்பு மாத்திரம் போதுமானது என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். அதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராகத் தாங்கள் புரிந்தவற்றுக்குப் பதிலீடாக, வேறு எதையும் செய்வதற்குப் புலிகள் முயற்சிக்கவில்லை.   
 
முஸ்லிம்களைக் கொன்று, அவர்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டுப் பின்னர், “மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று, அன்ரன் பாலசிங்கம் அப்போது கோரிக்கை விடுத்தமைக்கும், வடக்குக்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, “உள்நாட்டுச் சண்டையின் போது, இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையைப் பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பைக் கோரி, முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டமைக்கும் இடையில், பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.  
 
எனவே, உள்நாட்டுச் சண்டையின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்படுமானால், முஸ்லிம்களுக்கு எதிராக, புலிகள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.    ஆனால், புலிகளின் தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் அனைவரும் இறந்து போயுள்ளதாக நம்பப்படும் நிலையில், புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை யாரின் ‘தலை’களில் சுமத்துவது என்கிற கேள்வியும் உள்ளது.  
 
எவ்வாறாயினும், தமிழர்களுக்கு எதிராக இராணுவம் புரிந்த அட்டூழியங்களுக்கு எதிராக, நீதி வேண்டும் எனக் கோரி, தமிழ் அரசியல் தலைவர்கள் போராடி வருகின்றமை போல், முஸ்லிம்கள் மீது, புலிகள் கட்டவிழ்த்து விட்ட அநீதிகளுக்கும் நியாயம் கோரி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் களத்தில் இறங்க வேண்டும்.  
 
நீதி எல்லோருக்கும் பொதுவானது; நீதியின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள். 
Link to comment
Share on other sites

நல்லது சிறந்த யோசனை. நன்றி முகம்மது தம்பி மரைக்கார். அதே வேளை  தமிழ்மக்களுக்கு எதிராக முஸ்லீம் ஊரகாவல் படைகளாலும் ஜிகாத் மதவெறிக் கும்பல்களலும் கிழக்கு மாகாணத்தில் 1989/ 90 களில் ந டத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களையும் கொடூர கொலைகளையும் இருந்த இடம் தெரியமல் ஆக்கப்பட்ட கிராமங்களையும்   இதனுடன் சேர்த்து விசாரிப்பது நீதியின்  முன் எல்லோரும் சமமானவர்கள் என்ற கூற்றை நிரூபிக்கும். 

Link to comment
Share on other sites

அதென்ன எங்களுக்கு எவனும் எதுவும் செய்யலாம் ....யாரும் அதனை கேட்க கூடாது ....ஆனால் பாதிக்கப்பட்ட தரப்புக்கு மட்டும் விசாரணை வேண்டும் ......நன்றாக உள்ளது ......சுமந்திரனை சேரும் இதன் சாபக்கேடு ? 

Link to comment
Share on other sites

புலிகள் தமிழருக்கு எதிராக புரிந்த கொடுமைகள் + அட்டகாசங்களுக்கும் விசாரணை வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா உங்களது கருத்தை நான் நூறுக்கு நூறு விகிதம் ஆதரிக்கிறேன் அனைவரையும் விசாரிக்கவேண்டும் கிழக்கில் இன்றுநடக்கும் தமிழர்க்கெதிரான காணி புடுங்கல்கள் முஸ்லீம்களது மதம்மாற்றும் காடைத்தனங்கள் அனைத்தும் உட்பட மண்டையன் குழு ரெலோ சிறீ ரெலோ புலொட் புலி ரெலா செவிண்ரெலா நாகபடை ஐம்பத்திஎட்டு கலவரம் இவை அனைத்தையும் விசாரிக்கவேண்டும்.

கையோட  செல்வம் அடைக்கலநாத மாவையர் சுமந்திரன் ஆகியோர் தற்போது தங்களது பிள்ளைகளுக்கு எப்படி மத்திய வங்கியிலும் வெளிநாட்டில் அரச்பணத்தில் புலமைப்பரிசிலில் மேற்படிப்பு இவைகளையும் விசாரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

8 minutes ago, Elugnajiru said:

 மண்டையன் குழு ரெலோ சிறீ ரெலோ புலொட் புலி ரெலா செவிண்ரெலா நாகபடை ஐம்பத்திஎட்டு கலவரம் இவை அனைத்தையும் விசாரிக்கவேண்டும்.


 

புலிகளின் அட்டூழியங்களை, மேற்படி சகோதர இயக்கங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட, ஐ.நாவிடமே கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதனால்தான் என்னவோ, சர்வதேசமே போர்க்குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து, 'மன்னிப்போம் மறப்போம்' என்ற நிலைக்கு எல்லாத் தரப்பினரையும் பயணிக்கச் சொல்கிறது.

Link to comment
Share on other sites

இப்போது துரோகியாகிவிட்ட கருணா 

புலிகளின் பெரும்புள்ளியாக இருந்த காலத்தில் செய்த அநியாயங்களை மட்டக்களப்பின் படுவாங்கரைப் பிரதேசம் கதை கதையா சொல்லும்.

எத்தனை கொலைகள், எத்தனை ஆள் கடத்தல்கள், வலுக்கட்டாயமாக அட்சேர்ப்பு - ஒரு பிரதேசத்தையே கொன்னுட்டாங்கள். இதற்கு கருணா மீது பழியைப்போட்டு தப்பிவிட முடியாது. விதவைகளின் உலகமாகிப்போன இதற்கு சகலரும் உடந்தை.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

 

கையோட  செல்வம் அடைக்கலநாத மாவையர் சுமந்திரன் ஆகியோர் தற்போது தங்களது பிள்ளைகளுக்கு எப்படி மத்திய வங்கியிலும் வெளிநாட்டில் அரச்பணத்தில் புலமைப்பரிசிலில் மேற்படிப்பு இவைகளையும் விசாரிக்கவேண்டும்.

போர்க்குற்ற விசாரணைக்கும்,  புலமைப்பரிசிற்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒருத்தரையும் மன்னிக்கவும் வேண்டாம் ம..... புடுங்கவும் வேண்டாம் புலிகள் போர்க்குற்றம் செய்தார்கள் என்றால் அவர்களையும் விசாரிக்கவேண்டியதுதான் 

போர்குற்ற விசாரணையைக் கண்டுக்காது விடுகிறதுக்காகத்தான் சுமந்திரனது பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்  அப்போ அதையும் விசாரிக்கவேண்டும்

யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதை விசாரிக்கவேண்டுமெனில் இன்று இராஜஸ்தானில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை 48 மணிநேரத்தில் வெளியேறச்சொல்லியிருக்கு அதையும் விசாரிக்கவேணும் காரணம் தாக்குதல் செய்தது பாகிஸ்தான் என இதுவரை நிரூபிக்கவில்லை ஆகவெ அவர்களை வெளியேற்றுவதும் குற்றமே அந்தகுற்றத்தைச் செய்யும் இந்தியாவின் துணைத்தூதரக யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆகவே ஆகவேதான் இந்தியாவையும் விசாரிக்கவேண்டும். ராவுல் கக்கீம் நானா காதல்கொண்ட ஒரு பெண் நெருப்பில் எரிந்து செத்துப்போனா அவசெத்த விடையத்தைவைத்து மகிந்த வெருட்டி கனக்க விசையத்தை அதிகாரத்திலிருக்கும்போது செய்துகொண்டார் அதனால் முஸ்லீம்களுக்கு பாரிய பின்னடைவு அதையும் விசாரிக்கவேண்டும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எதிரான ஜிகாத்.. மற்றும் முஸ்லீம் ஊர்காவல்படை நடத்திய இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளும்.. சிங்களப் படையுடன் இணைந்து கிழக்கு மாகாணம்.. மற்றும் கல்முனையில் நிகழ்த்திய படுகொலைகள் மற்றும் யாழில் கிருசாந்தி குமாரசாமி மாணவி பாலியன் வன்புணர்வுப் படுகொலை உள்ளடங்க முஸ்லீம் பயங்கரவாதக் காவலிகள்.. காடைகள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பிலும் முழு விசாரணை அவசியம். குறிப்பாக சவுதி நிதியில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகள் அவசியம். 

Link to comment
Share on other sites

16 hours ago, ஜீவன் சிவா said:

புலிகள் தமிழருக்கு எதிராக புரிந்த கொடுமைகள் + அட்டகாசங்களுக்கும் விசாரணை வேண்டும்.

கிஸ்புல்லாவை விசாரித்தால் அவரின் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அப்போதில் இருந்து இப்போ வரை தெரிய வரும். அதுவும் இவ்விசாரணைக்குள் வர வேண்டும்.

15 hours ago, thulasie said:


 

புலிகளின் அட்டூழியங்களை, மேற்படி சகோதர இயக்கங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட, ஐ.நாவிடமே கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதனால்தான் என்னவோ, சர்வதேசமே போர்க்குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து, 'மன்னிப்போம் மறப்போம்' என்ற நிலைக்கு எல்லாத் தரப்பினரையும் பயணிக்கச் சொல்கிறது.

போரை நடாத்தியவர்கள் தங்களில் சின்ன கீறல்கள் , சிராப்புகள் வர விடமாட்டார்கள்.

இருவரும் பிழை விட்டால் உண்மையான நடுநிலையான ஐ.நாவாக இருந்திருந்தால்  மறு பேச்சுக்கு இடமில்லாமல் விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

43 minutes ago, nunavilan said:

 

இருவரும் பிழை விட்டால் உண்மையான நடுநிலையான ஐ.நாவாக இருந்திருந்தால்  மறு பேச்சுக்கு இடமில்லாமல் விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இருவரும் பிழைவிட்டது, ஐ.நாவிற்கு ஏற்கனவே தெரியும்.

நடுநிலையாக விசாரித்தும் என்ன பயன்?

அதற்குத்தான் இருக்கிறது, மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்.

Link to comment
Share on other sites

17 hours ago, thulasie said:

இருவரும் பிழைவிட்டது, ஐ.நாவிற்கு ஏற்கனவே தெரியும்.

நடுநிலையாக விசாரித்தும் என்ன பயன்?

அதற்குத்தான் இருக்கிறது, மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்.

மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிட்டு விட்டுட்டு போக முடியாது - சம்பந்தன் ஐயா😲

https://www.tamilwin.com/politics/01/207

http://globaltamilnews.net/2019/113499/?fbclid=IwAR3P4d_Mx_Zy4ZbA5850PJLa_gjZzWJjRv-IjvPVh6V9MqFV0tC2UMalPxw

சம்பந்தரும், விக்கி அவர்களும் அப்படி சொல்லவில்லையே. இதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.