Jump to content

‘’இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்’’ - இம்ரான் கான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
இம்ரான்கான்படத்தின் காப்புரிமை Getty Images

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறியது.

இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என குறிப்பிட்டது.

இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய இம்ரான் கான், ''பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்'' என்று தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல்படத்தின் காப்புரிமை Getty Images

''காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்'' என்று இம்ரான்கான் தெரிவித்தார். ''தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார்.

''பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது?

இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிதா என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது.

காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு உரையாடலை துவங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது.

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்ன விரும்புகிறோமா? '' என்றும் கேட்டுள்ளார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=BG0I336zs2s"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: யார் இந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு? Jaish-e-Mohammed" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=BG0I336zs2s~/tamil/global-47287734" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

''இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது எதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராய்ந்தறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன்.

நாங்கள் இன்னொருவரின் அழுத்தத்திற்கு உள்ளாகி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பயங்கரவாததுக்கு பாகிஸ்தான் மண்ணை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரி என உணர்கிறோம். அவர்கள் எங்களது விருப்பங்களுக்கு எதிரானவர்கள்.

எப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் முதலில் பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டும் என முன் நிபந்தனை விதிக்கிறது இந்தியா. பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என உறுதியளிக்கிறேன். அது ஒரு பிராந்திய விவகாரம். அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

இம்ரான் கான்படத்தின் காப்புரிமை AFP

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் பயங்கரவாதம் குறித்து பேச தயாராகவே இருக்கிறோம்.'' என்கிறார் இம்ரான்கான்.

''இந்தியா சற்று சுயபரிசோதனை செய்ய வேண்டும் . இந்தியாவில் புதிய சிந்தனை இருக்க வேண்டும். காஷ்மீரி இளைஞர்கள் ஏன் தீவிரவாதிகளாகுகிறார்கள் ஏன் அவர்கள் மரணத்தை பற்றி கவலைப்படுவதில்லை ? என்பது குறித்து இந்தியா ஆன்ம பரிசோதனை செய்ய வேண்டும். காஷ்மீரி இளைஞர்களின் முடிவுகளுக்கு பின் சில காரணங்கள் இருக்கும்.

இம்ரான் கான்படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/AFP/GETTY IMAGES

ராணுவத்தின் மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என இந்தியா நம்புகிறதா? ஆப்கானிஸ்தானில் 17 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒட்டுமொத்தக உலகமும் ராணுவ நடவடிக்கை தீர்வை தராது என்பதை உணர்ந்திருக்கின்றன. பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைகளை தீர்க்க உதவும்.

இந்திய ஊடகங்கள் மூலமாக அங்குள்ள அரசியல் தலைவர்கள், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும், மறுதாக்குதல் நடத்தி வழிவாங்க வேண்டும் போன்ற குரல்களை எழுப்புவதைப் பார்க்கிறோம். உலகில் எந்த சட்டம், ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ, தாங்களாகவே நீதிபதியாகவோ, தண்டனை விதிப்பாளராகவோ செயல்படும் அதிகாரத்தை அளித்துள்ளது... என்ன நீதி முறை இது.

இது உங்கள் நாட்டில் தேர்தல் ஆண்டு என்பதால் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதாக கூறுவதன் மூலம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்த நீங்கள் முயல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்கலையும் நடத்தலாம் என்று நீங்கள் கருதினால், அதற்கு பதிலடி கொடுப்பது பற்றி நாங்கள் சிந்திக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். உரிய பதிலைத் தர எங்களுக்கு வேறு தேர்வு இல்லை. போரை தொடங்குவது எளிது. மனிதர்கள்தான் அதை உருவாக்குகிறார்கள். எனினும், முடிவு நமது கைகளில் இல்லை. அது எந்த திசையில் செல்லும் என்பதை அல்லாவே அறிவார்.'' எனப் பேசியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47287734

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

India-pakistan.jpg

இந்தியா தாக்க நினைத்தால் நாமும் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் இந்தியா எதனையும் செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர் முதன்முறையாக இது தொடர்பாக இம்ரான் கான் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எமது விருப்பமில்லை. தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் செயற்படாது.

பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் எமக்கு இப்படிச் செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

இந்தியா இன்னும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிறதா என நான் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது.

காஷ்மீர் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வைத் தராது. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்.

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடி கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற அமைப்பே புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றஞ்சாட்டிய இந்தியா, இதற்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறியது.

இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்தியா-தாக்க-நினைத்தால்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடி கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சவூதி இளவரசர் கொடுப்புக்குள் சிரிக்கின்றார்.

mohammed bin salman à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

India-pakistan.jpg

இந்தியா தாக்க நினைத்தால் நாமும் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் இந்தியா எதனையும் செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர் முதன்முறையாக இது தொடர்பாக இம்ரான் கான் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எமது விருப்பமில்லை. தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் செயற்படாது.

பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் எமக்கு இப்படிச் செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

இந்தியா இன்னும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிறதா என நான் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது.

காஷ்மீர் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வைத் தராது. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்.

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடி கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற அமைப்பே புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றஞ்சாட்டிய இந்தியா, இதற்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறியது.

இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்தியா-தாக்க-நினைத்தால்/

இந்தாள் கிரிக்கெட் மாட்ச் லெவலில கதைக்கிறார்...

பழைய பழக்கம் போல...

Link to comment
Share on other sites

Quote

இது உங்கள் நாட்டில் தேர்தல் ஆண்டு என்பதால் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதாக கூறுவதன் மூலம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்த நீங்கள் முயல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. 

இந்தியாவை நன்றாக புரிந்து வைத்துள்ளார். இந்தியாவுக்கு யார் தான் பயப்படுகிறார்கள்?? ஆப்கானிஸ்தான் இவர்களின் விமானத்தை கடத்திய போது  கடத்தல்காரர்கள் கேட்டதை கொடுத்து  தம்மக்களை மீட்டவர்கள் வல்லரசு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்கள். இஸ்ரேல் இந்தியாவில் இடத்தில் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.