Jump to content

ஐநாவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தை ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தை ஆரம்பம்

February 20, 2019

un.jpg?resize=605%2C402

எதிர்வரும் பெப்ரவரி 25 ம் திகதி ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா , கனடா , ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ ஆகிய நாடுகளுடனேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறு மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்று கொண்டுவரப்படவுள்ளதை இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே உறுதி செய்துள்ளார்

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறுதல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதை தன்னால் உறுதி செய்யமுடியும் எனவும் புதிய தீர்மானத்தின் நகல்வடிவம் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக காலவகாசம் எதற்குக் கேட்கிறார்கள்? இதுவரை கொடுக்கப்பட்ட கால அவகாசங்களுக்கு என்ன நடந்தது? போர் முடிந்து 10 வருடங்கள் ஆகின்றது, ஆனால் சொல்லப்பட்டவை ஏதும் இதுவரை நடக்கவில்லை. ஏனென்று கேட்பாரும் இல்லை.

இந்த லட்சணத்தில் இன்னும் கால அவகாசம். இம்முறை ஐ. நா கூட்டத்தில் கூட்டமைப்புக் கலந்துகொள்ளுமா என்று தெரியவில்லை. அவர்களுடன் தொடர்புடையவர்கள் இதுபற்றித் தெளிவுபடுத்தினால் நல்லது. அத்துடன், காலவகாசம் தொடர்பாக கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாடொன்றை எடுக்கவிருக்கிறது என்பதுபற்றியும் தெரிந்துகொள்ள ஆசை.

சிலவேளை, ரணிலின் அரசுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் கால அவகாசத்திற்கு கூட்டமைப்பு தமது ஆதரவினை வழங்கலாம். ஏனென்றால், இன்றைய நாட்களில் ரணில் பேசுவதற்கும், கூட்டமைப்பின் குரல் தரவல்ல மக்கள் பிரதிநிதியொருவர் பேசுவதற்குமிடையில் அதிக வேறுபாடில்லை. 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

ஐநாவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தை ஆரம்பம்

அதுக்கு சுத்துமாத்து சுமந்திரன் சுழண்டு சுழண்டு வேலை செய்வாரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.