Jump to content

உடும்பன் குளம் படுகொலை உறவினர்கள் கூடி அஞ்சலி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் பகுதியில் 126 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வைகோல் சூட்டில் போடப்பட்டு தீவைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் ஆத்ம சாத்தி வேண்டி உறவுகளால் நேற்று நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் தங்கவேலாயுதபரம் மலையடிப் பிள்ளையார் கோவிலில் நிகழ்வு நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தீபங்களை வரிசையாக எற்றி, அதனை மலையில் மேல் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டடனர். இறந்தவர்களின் நினைவாக அர்ச்சனைகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

உடும்பன் குளம் அப்பாவி தமிழர்கள் படகொலையானது 1986 பெப்ரவரி 19 ஆம் திகதி அன்று நடைபெற்றது. வீடுகளில் இருந்து காலை உணவைக் கட்டிக்கொண்டு வயல் அறுவடைக்காக வயல் காட்டிற்குச் சென்ற அப்பாவி தமிழ்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் வைக்கோல் சூட்டின் மேல் போட்டு தீயிட்டு கொழுத்தி கொலை செய்ததாக சம்பவத்தை நேரில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_8213.jpegIMG_8222.jpeg

DSC_1204.jpg ???????????????????????????????????? DSC_1211.jpg ????????????????????????????????????

IMG_8169.jpegIMG_8174.jpegIMG_8190.jpeg

 
 
 
Link to comment
Share on other sites

தயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்!

கடந்த 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் நாள், இனந்தெரியாத நபர்களினாலும் இராணுவத்தினராலும் மிக கொடூரமான முறையில் 130க்கு மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியும் வயல் வெட்டும் கத்தியினாலும் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

அதன் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருக்கோவில் தங்கவேயுதபுரம் மலைப்பிள்ளையார் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் அகல்விளக்கேற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, அந்த பிரதேச மக்கள் தமது அன்றைய அனுபவங்களை வழங்கினர்.

 

அன்று 1986.02.19 ஆம் திகதி காலை 7 மணியளவில் உடும்பன்குளம் சாகாமம் தங்கவேலாலுதபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வயல் அறுவடைக்காக சென்றிருந்தனர் அன்று சுமார் ஒருமணி நேரத்திற்கு பின்னர் சற்றுத்தூரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

அச்சத்தத்தின் பகுதியை நோக்கி நாங்கள் ஓடிச்சென்று பார்த்தபோது இராணுவ உடைகளில் பலர் அங்கு துப்பாக்கிகளுடன் எனது கணவரை துன்புறுத்துவதை கண்டோம். அதில் முஸ்லீம் இனத்தவர்களும் இருந்தனர். பின்னர் நான் அங்கு செல்ல முற்பட்டதும் என்னையும் இன்னும் சில பெண்களையும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தினர். பின் அங்குவந்த இளம் பெண்களை எனது கண் எதிர்க்கவே தயிர் உண்ணக்கொடுத்துவிட்டு கதறக்கதற பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதன்பின்னர் எங்களை சுடுவதாகவும் வெட்டுவதாகவும் என கூற நாங்கள் ஓடி வந்துவிட்டோம் பின்னர் பயத்தில் மறுநாள் தான் போய் பார்த்தோம். அங்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தனர் கொல்லப்பட்டவர்களை இனங்காண்பது கடிணமாக அமைந்திருந்தது அதில் எனது கணவரை நான் இனங்காணவில்லை அவரை பிடித்துச்சென்றதாக கூறினர் நான் தேடாத இடமில்லை இன்றுவரை அவர் கிடைக்கவில்லை.

இச்சம்பவம் நடைபெற்று 33 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதற்காக நீதியும் நியாயமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை இதற்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும் என கண்ணீர்மல்கி கருத்துத் தெரிவித்தனர் உடும்பன்குளம் பிரதேச மக்கள்.

இந்நினைந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் மற்றும் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் தங்கவேலாயுதபுரம் மலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் மதிய பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்காக அகல்விளக்கேற்றி நினைவுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/114382?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.