Jump to content

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019):

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது.

முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதலாவதாக ஐம்பது இடங்களுக்குள்ளும், தற்பொழுது பத்து இடங்களுக்குள்ளும் யசோதை முன்னேறியமை அளப்பெரும் சாதனை என அந்த ஊடகங்கள் புகழ் மாலை பொழிகின்றது.

பத்து இறுதி தேர்வாளர்களில் முதலாவது நிலையினை பெரும் போது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர் பரிசாக பெறுவதற்கு வாய்ப்புண்டு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் நாளன்று இந்த சாதனைக்கான பரிசுத்தொகை முதலாம் இடத்தினை பெறுபவருக்கு டுபாயில் வைத்து வழங்கப்படும். இந்த வாய்ப்பும் இவருக்கே பெரும்பாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாசாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர்.
இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலிய பழங்குடியினர் கல்வியின் மீது மிகவும் நாட்டம் குறைந்தவர்கள், மிகவும் பின்ணிலையில் உள்ள ஓர் சமூகம். ரூட்டி ஹில் கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன.

179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகலிலிருந்தே இந்த பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ல் உருவாக்கப்படட இலண்டனை தலைமையக்கமாகக் கொண்ட " The Varkey Foundation " எனும் அமைப்பே இந்த நிகழ்வினை வருடா வருடம் நடாத்திவருகின்றது.

எதிர்வரும் மார்ச் 24 ம் திகதியில் அறிவிக்கப்படும் முதல் பரிசினையும் இவரே பெற்று தன் குடும்பத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும், ஆஸ்திரேலிய நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென நாமும் வாழ்த்துவோம் நண்பர்களே...!!

https://education.nsw.gov.au/news/latest-news/western-sydney-teacher-named-in-the-worlds-top-10?fbclid=IwAR1aGfWPYw08frFQ85pwxHH54B-AQEjV_JNok-l-JOvCfaw1jdQ0hls9cvc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, standing

ஆசிரியர் பணியில்..... உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக, தமிழ் பெண்மணி இருப்பது...
தமிழர்களுக்கெல்லாம் பெருமை தரும் விடயம்.
யசோதை செல்வகுமாரனுக்கு.... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யசோதைசெவ்வகுமாரன் வெற்றி பெற்று ஈழ மண்ணுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

திறமைக்கும், முயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துக்கள், சகோதரி! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் மென்மேலும் புகழ் பெற வேண்டும்.......!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யசோதாவுக்கு   பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் உப அதிபராக இருந்த வல்லிபுரத்தாரின்  பேத்தியார் ஆவர் இவர்  வடமராட்ச்சியை  சேர்ந்தவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யசோதாவுக்கு  வாழ்த்துக்கள்... 

Link to comment
Share on other sites

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தின் வல்வெட்டித்துறை மண்ணின் தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருக்கும் யசோதைக்கான இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் முகப்புச் செய்தியாக வெளியிட்டுள் ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி இந்த பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ”M.S.Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாகவும் சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
தான் கற்பிக்கும் மாணவர்களின் அன்புக்கும். மதிப்புக்கும் உரியவராகத் திகழும் யசோதையின் வெற்றி குறித்து அவரிடம் கற்ற மாணவர்கள் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விருதினைப் பெற்றமைக்காக இவருக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த சாதனைக்கான விருது வழங்கும் வைபவமும்,பரிசுத்தொகையும் டுபாயில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கொடுமை யிலிருந்து மீண்ட யசோதையின் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது.

அங்கு போய்ச் சேர்ந்த புதிதில் மிகவும் கடினமான சவால்களைச் சந்தித் யசோதை கல்வியில் மிக உயர்ந்த பெறுபேற்றை அடைந்ததுடன், அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள அகதிகளுக்கு நல்ல தரமான கல்வியைப் போதிக்கவேண்டும் என உறுதி உறுதி பூண்டு கல்விச் செயற்பாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

ரூட்டி ஹில் உயர் நிலைக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் 80வீதமான மாணவர்கள் அகதிகளாக வும் புலம்பெயர்ந்தவர்களாகவுமே உள்ள நிலையில் அவரது சேவையினால் பல ஆயிரக்கணக்கான வசதி குறைந்த மாணவர்கள் பயனடைந்தனர்.

யசோதை செல்வக்குமரன் அவர்களின் தாயும் தந்தையும் பொறியிலாளராக இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று இங்கேயே வாழவேண்டு மென்று விரும்பியிருந்த நேரத்தில், தமிழர்களுக் கெதிரான வன்முறைகளின் கொடுரத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சிட்னியில் வசித்தது வந்தார்கள்.

வல்வெட்டித்துறை,தெணியம்பையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவரது தாத்தா,பாட்டி இருவருமே கல்வித் துறையில் புகழ்பெற்றவர்களாக விளங்கினார். யசோதையின் அம்மப்பா திரு.வல்லிபுரம் அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூ}ரியின் உப அதிபராகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர. நாங்கள் எல்லோரும் கெங்கா ரீச்சர் என அழைக்க்ப்படும் இவரது பாட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதேவேளை இவரது மாமன்மார் பொறியிலாளர்களாக இலங்கை யிலேயே பணிபுரிந்தவர்கள். கெங்கா ரீச்சரின் சகோதரி திருமதி.ருக்மணி ரீச்சர் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புகழ்பூத்த அதிபராகவும், இவரது தாத்தாவின் சகோதரன் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் புகழ் பூத்த அதிபராகவும் சிறப்புடன் கடமையாற்றி ஓய்வு பெற்றனர்.

இவ்வாறான ஒரு பாரம்பரியம் மிக்க கல்விப் புலத்தில் இருந்து தோன்றிய யசோதையின் உள்ளத் திலும் கூட கல்வியில் மேலோங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் பாதிக்கப்பட்டுப் பின்தங்கி வாழும் சமுகங் களின் வாழ்க்கைத் தரத்தைக் கல்வியினூ டாகவே உயர்த்த வேண்டுமென்பதற்காக அகதிகள், புலம் பெயர்வாளர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள பழங் குடியினரின் சமத்துவ மான கல்விக்காக அவர் தினமும் போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற் திட்டங் களை முன்வைத்து அவர்களிடையே விழிப்புணர் வையும் ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்து வெற்றி கண்டவர்.

ரூட்டி ஹில் கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை செல்வகுமரன் அவர்களே காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன.

இதேவேளை யசோதையின் இந்த சாதனையானது இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளன.. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறி வல்வெட்டித்துறை மண்ணுக்குப் பெருமையையும் கௌரவத்தையும் தேடித் தந்த செல்வி.யசோதை செல்வகுமரன் அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் சார்பிலும், அவரின் தாய் மண்ணான வல்வெட்டித்துறையின் சார்பிலும் எங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஆசிரியர் தொழில் என்பது புனிதமானது மட்டுமல் லாது கல்வி ஒளியின் ஊடாக மனதில் உள்ள அறியாமை என்ற இருளை அகற்றி சமுகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்ற ஒரு பணி என்ற வகையில் அவரது இந்த வெற்றி உலகின் ஆசிரியர் சமுகத்திற்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரந்துபட்ட  உங்களின் விமர்சனத்துக்கு நன்றி .........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

இந்த விருதினைப் பெற்றமைக்காக இவருக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த சாதனைக்கான விருது வழங்கும் வைபவமும்,பரிசுத்தொகையும் டுபாயில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

அடப்பாவிகளா.. இவா இதுவரை முதல் 10 இடத்துக்குள் வந்திருக்கா. அவ்வளவே. அவாவை முதலாவதாக்கி.. அவாக்கு பரிசும் கொடுத்து டுபாய்க்கும் அனுப்பிட்டியளே..?!

அவுஸ்திரேலியாவில்.. பழங்குடி மக்களிடையே... ஆசிரியத் தொழிலை.. கொஞ்சம் சுவாரசியமாச் செய்கிறா போல. ஆனால் ஊரில் 248 பாடசாலைகளுக்கு மூடு விழாவாம். அதைக் கவனிக்க யாருமில்லை. 

எதுஎப்படியோ.. இந்தப் போட்டியில் முதல் 10 இடத்துக்குள் தெரிவாவதே சவாலான விடயம் தான். அதற்கு பாராட்டத்தான் வேண்டும். அதுக்காக.. அளவுக்கு அதிகமாக புளுகக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்யும் சேவையையும், அவரின் இதுவரைக்குமான சாதனையையும் வாழ்த்துவதோடு,   இதுவரையில் அவர் தலை சிறந்த முதல் 10 ஆசிரியர்களில் ஒருவராக தெரியப்பட்டுளார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

துபாயில் நடக்க இருக்கும் ஆசிரிய சேவையை கௌரவிக்கும் நிகழ்ச்சியிலேயே, பரிசு தொகையை யார் பெறுவார் என்பது தெரிய வரும்.

எதுவாயினும், பகிரங்கமாக ஊர் பெயரை, பரம்பரையை  பாவித்து ஒருவரின் சேவையை, சாதனையை மெய்ச்சுவதும் சரியானதாக தெரியவில்லை.

முக்கியமாக அவரின் ஈழத்தமிழ் அடையாளம் தெரிந்தோ தெரியாமலோ மறைக்கப்பட்டுவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தமிழ்ச் சொந்தத்திற்கு வாழ்த்துக்கள். தமிழ் வெல்லும்; மானுடம் வெல்லும். தமிழர் வெல்வார்; மானிடர் வெல்வார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.