Jump to content

சாணக்கியபுரியாக மாறிய தமிழகம்! – தேவிபாரதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியபுரியாக மாறிய தமிழகம்! – தேவிபாரதி

12.jpg

மக்களவைத் தேர்தல் கூட்டணிகளின் உண்மையான இலக்கு என்ன?

வருகிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணிகளை அமைப்பதில் தமிழகக் கட்சிகள் மற்ற மாநிலங்களை முந்திக்கொண்டிருக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி.

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதால் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இது முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் எட்டு சட்டமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்றாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் இருக்கிறது. கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஆட்சியதிகாரத்தை இன்னும் இரண்டரையாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிமுக, இந்தக் கூட்டணியின் மூலம் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் கூடியிருக்கின்றன.

12a.jpg

‘மோடியா, லேடியா?’ எனச் சவால்விட்டுக் கடந்த மக்களவைத் தேர்தலைத் தனித்து நின்று எதிர்கொண்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமோ அவரைப் போல யாருடனும் சவால்விட்டுக் கொண்டிருக்க முடியாது அல்லவா? கட்சியில் ஏற்பட்ட பிளவுகளையும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனிடம் தங்கள் அம்மாவின் தொகுதியைப் பறிகொடுத்ததையும் கெட்ட கனவாக நினைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அதிமுக, கடந்த இரண்டாண்டுகளில் தங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த பாஜகவுடன் கைகோக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?

தேர்தலை எதிர்கொள்வது கொள்கைகளோடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அன்புமணி ராமதாஸ் சொன்னது போல சாணக்கியத்தனமே வெற்றிக்குக் கை கொடுக்கும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் தம் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டாண்டுகளாகவே ஒருங்கிணைந்து செயல்பட்டுவரும் நிலையில் கொள்கைகளின் கடிவாளத்தில் சிக்கிக்கொள்வது ஆபத்தானது என்பதைத் தமது முன்னோடிகளான எம்ஜிஆரிடமிருந்தும் ஜெயலலிதாவிடமிருந்தும் இருவரும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அரசியல் சாணக்கியர் எனப் போற்றப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்துகூட அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதில் அதிமுகவும் திமுகவும் எப்போதுமே எதிரெதிரான நிலைபாடுகளை எடுத்து வந்திருப்பவை. தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் உத்திகளை வகுப்பதில் இரண்டு கட்சிகளுமே அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்திலாழ்த்தும், கட்சிகளிடையே குழப்பங்களை உருவாக்கும் முடிவுகளை எடுத்திருக்கின்றன.

1977, 1984, 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுடன் இயற்கையான, கொள்கை சார்ந்த கூட்டணியை அமைத்த அதிமுக, பிறகு கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமலேயே அவர்களுடனான அரசியல் கூட்டணியை முறித்துக்கொண்டது, 1998இல் காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுடன் அணி சேர்ந்தது. அதிமுகவுடனான உறவை முறித்துக்கொண்டவுடன் காங்கிரஸுடன் கொள்கை ரீதியில் உறவை ஏற்படுத்திக்கொண்டது திமுக. அதே கொள்கை சார்ந்த தேர்தல் கூட்டணியை பாஜகவுடன் ஏற்படுத்திக்கொள்ள திமுகவும் தயங்கவில்லை. கொள்கை சார்ந்த கூட்டணிகளுக்கு நியாயம் கற்பிக்கவும் கோட்பாட்டு ரீதியான விளக்கங்களை அளிக்கவும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உருவாக்கிய அரசியல் சொல்லாடல்களுக்குக் கணக்கே இல்லை. அவர்கள் உருவாக்கிய சொல்லாடல்களுக்குக் கொள்கை விளக்கங்களை அளிப்பதன் மூலம் கூட்டணிக் கட்சிகள் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கொள்கைகள்தாம் அரசியல் பார்வையாளர்களாலும் ஊடகவியலாளர்களாலும் சமூக ஊடகங்களின் பதிவர்களாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன, கேலி செய்யப்படுகின்றன, கடும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகின்றன.

ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் ஒருபோதும் அந்தக் கேள்விகளைப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் பொருட்படுத்தப்போவதில்லை. அவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், வாக்கு வங்கி சார்ந்த கணக்குகளையும் சாதி சார்ந்த கணக்குகளையும் மண்டையைக் குழப்பிக்கொள்ளாமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளை அழிப்பதையும் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதைப் பற்றியும்கூட இப்போது யோசிக்க முடியாது. அது தேர்தலை ஒட்டிய சடங்கு. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் காரணி அல்ல. கொள்கைகளின் அடிப்படையில் உருவான கூட்டணிகள் என்பதால் யாரும் வாக்காளர்களுக்குக் கையூட்டுத் தருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

12b.jpg

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் ஒரு கெட்ட கனவு என்பதில் சந்தேகமில்லை.

எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துடன் தேர்தலைச் சந்தித்த ஆளும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி, கருணாநிதியின் தலைமையிலான திமுகவைக் கட்டுத் தொகையைக்கூடத் திரும்பப் பெற முடியாமல் செய்த தினகரனிடம் அப்போது என்ன இருந்தது? தினகரன் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருந்த அவருடைய சின்னம்மா சசிகலா மீதும் அரசியல் ரீதியில் என்ன விதமான மதிப்பு இருந்தது? தனது கொள்கையாக எதை முன்வைத்தார் தினகரன்? வாக்காளர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் என்ன? இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் போனால் நீங்கள் அரசியல் ரீதியில் வேதாளத்திடம் சிக்கிக்கொண்ட விக்கிரமாதித்தன் என்றுதான் சொல்ல முடியும்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட அம்மாவின் ஆட்சியைத் தொடர, அவரது கனவுகளை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் படாதபாடு படுகிறார்கள். திமுகவை எதிர்கொள்வதைவிட தினகரனை எதிர்கொள்வதுதான் அவர்களுக்குச் சிக்கலானதாக மாறிக்கொண்டிருக்கிறது. தாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என நிறுவிக்கொள்ள முற்படுகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது தவிர அரசு மக்களுக்கு ரொக்கமாகப் பணம் கொடுத்திருக்கிறது. பொங்கல் பரிசாக அரசு வழங்கிய 1,000 ரூபாய் தவிர வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குத் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி. யாராலும் அரசின் நடவடிக்கைகளை நேரடியாக எதிர்க்க முடியவில்லை. அரசின் கருவூலத்திலிருந்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் குற்றம் சுமத்தக்கூட முடியாது. அப்படி யாராவது சொன்னால், அரசின் அந்தத் திட்டம் தடைப்படுமானால் மக்களின் கோபத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என்னும் அச்சம் கட்சிகளுக்கு இருக்கக்கூடும்.

12c.jpg

அதிமுகவுக்கு மாற்றாக இருப்பது என்றால் என்ன?

மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற தனது பாரம்பரியமான கொள்கைகளை முன்னிறுத்துவதன் மூலம் அதிமுகவின் வெகுஜன அரசியலுக்கு மாற்றாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. பழனிசாமி அரசை மோடியின் தலைமையிலான பாஜகவின் பினாமி அரசு என விமர்சிப்பது, ஆளுநரின் சுற்றுப்பயணங்களுக்கெதிரான போராட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது என திமுக தமிழகத்தின் மதச்சார்பற்ற சக்திகளோடும் இடதுசாரிகளோடும் தலித் அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டுவருகிறது.

ஆனால், இதுபோன்ற கொள்கை சார்ந்த செயல்பாடுகளால் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட முடியும் என நம்பும் அளவுக்கு திமுக அப்பாவித்தனமான கட்சி அல்ல. பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர முடியாமல் போனது குறித்த பதற்றம் திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம். வடமாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கியைக் கொண்டிருக்கும் பாமகவைக் கூட்டுச் சேர்த்துக்கொள்வது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய ஓர் உத்தி. அந்த உத்தியைத்தான் திமுகவிடமிருந்து அதிமுக தட்டிப் பறித்திருக்கிறது.

மதில் மேல் பூனையாக இருக்கும் தேமுதிகவை என்ன செய்வது? என்னதான் அரசியல் ரீதியில் தேமுதிகவை அரசியல் ரீதியாகக் கேலி செய்தாலும் அதன் வாக்கு வங்கியைப் புறக்கணித்துவிட முடியாது அல்லவா? திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அந்தக் கணக்கைத்தான் போட்டுக்கொண்டிருக்கின்றன. தேமுதிக தவிர ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சீமானின் நாம் தமிழர் கட்சி, வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் கட்சி, வெவ்வேறு பெயர்களில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்குலத்தோர் புலிப்படைகளும் யானைப்படைகளும் எனத் தனித்தனிக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கண்ட இயக்கங்களும் கட்சிகளும்கூட தமிழக அரசியலில் தமக்கான இடத்தைப் பிடிக்க முண்டியடித்துக்கொண்டிருக்கின்றன.

தனித்துக் களம் காணத் தயாராகிக்கொண்டிருக்கும் கமலைவிட, வ.கௌதமன் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கிவிட்டார் எனச் சற்றுமுன் வந்த ஒரு செய்திதான் அதிர்ச்சியளிக்கிறது. அவர் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் ஒதுக்குமாறு கேட்டால் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான யுத்தம் தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்தில் அனைவருமே இருமுனை வியூகம் அமைத்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். ஒன்று, 21 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்ச இடங்களைப் பெற்று மாநில அரசின் தலையெழுத்தை மாற்றி எழுதுவது. இதில் அதிமுக, அமமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு ஆளுக்கொரு கணக்கு இருக்கிறது.

வியூகத்தின் அடுத்த முனையில் வேறொரு கணக்கு இருக்கிறது. மக்களவையில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நாளுக்கு நாள் உறுதியாகிவரும் நிலையில் ஒரு சில மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளும்கூட ஆட்சியில் பங்கு வகித்துவிட முடியும்.

மத்திய மாநில அரசுகளில் ஏதேனும் ஒரு வகையில் பங்கு வகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை முன்னிறுத்திக் கூட்டணி அமைத்துக் கொள்வதுதானே சாணக்கியம்? அதைத்தானே பல கட்சிகளும் செவ்வனே கற்றுச் செயல்படுத்தி வருகின்றன?

தமிழகமே சாணக்கியபுரியாக மாறியிருக்கிறது என்பதை நினைத்தால் பூரிப்பாக இருக்கிறது.

 

https://minnambalam.com/k/2019/02/25/12

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.