Jump to content

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியும் மதமும்

Recommended Posts

Bildet kan inneholde: sky, himmel, hav, vann, utendørs og natur

இந்த பாழாய் போன போரிலே எந்த சண்டையும் நடைபெறாமல் 29 வருடமாக (அதிகமான வருடங்கள்) இடம்பெயர்ந்தது காங்கேசன்துறை மக்களே. இங்கு பல்லின, பல்மத பலசாதி மக்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. அன்று யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையாகவும் பருத்தித்துறை, காங்கேசன்துறை நகர சபையாவும் கொடிகட்டிப்பறந்தன. எனது வீட்டை சுற்றி இருந்தவர்கள் வேறு ஜாதியினர், வேறு மதத்தவர், வேறு இனத்தவர் +வேறு மொழி பேசுபவர்கள்  - ஆனால் எங்களுக்குள் வேறுபாடு இருந்ததில்லை. இது காங்கேசன்துறை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே.

ஆனால் முப்பது வருடங்களின் பின்னான மாற்றம் - தொடரும்.

Bildet kan inneholde: sky, hav, himmel, skumring, utendørs, vann og natur

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் ஜீவன் ......!   😁

Link to comment
Share on other sites

அன்றொருநாள் காங்கேசன்துறையில் சில இடங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. ஓடிச்சென்று பார்த்த ஆயிரக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒரு காட்டைத்தான் பாக்க முடிந்தது. அதற்குள் மிளிர்ந்தது நடேஸ்வரா கல்லூரி. இராணுவம் குடியிருந்ததால் சேதம் குறைவு. ஆனாலும் பல கட்டிடங்களைக் காணவில்லை. இன்றும் பழைய Home science labதான் பொலிஸாரின் உணவுக்கூடம். 2000 மாணவர்கள் படித்த ஒரு பாடசாலை, எனது வயதினை ஒத்த 5 நண்பர்கள் அங்கிருந்து பொறியியலாளருக்கு தெரிவாகி பெரதேனியாவில் படித்திருந்தார்கள். அதில் இருவர் இன்று புகழ் பெற்ற மேலைத்தேய பல்கலை கழகங்களில் பேராசிரியர்கள். நான் அங்கு படிக்கவில்லையாயினும். எனது வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரி என்பதினால் நான் படித்த பாடசாலைகளைவிட இங்கிருந்துதான் எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்தார்கள். 

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

முற்றும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா, என்ன ஆயிற்று? ஆரம்பித்து 4 மணி நேரத்திலேயே முடித்து விட்டீர்களே? மதம், இனம் பற்றி எழுதும் விடயங்கள் கள விதிகளை மீறாமலிருக்க கொஞ்சம் நூல் மேல் நடப்பது போல் எழுத வேண்டியிருக்கும். கல்லூரியை நீக்கி விட்டு காங்கேசன் துறைபற்றித் தொடருங்களேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா எழுத ஆரம்பித்ததை எழுதி முடியுங்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசமானது. நீங்கள் உங்கள் பார்வையைப்பதிவு செய்கிறீர்கள். அதிலேன் தயக்கம்? அவரவர்களுக்கு தத்தம் பார்வை மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே கருத்துகளைப்பதிவிடுகிறார்கள். கருத்தாடல் களம் எல்லோருக்குமானது. உங்கள் நம்பிக்கைகள் உங்கள் பார்வைகள் என்பனவற்றை யாராலும் மறுதலிக்கமுடியாது ஏனெனில் அது உங்கள் சுயமான பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன் துறைக்கு சென்ற ரயின் பாதியில் நின்றால்போல இருக்கு பயணம் செல்லட்டும் பந்தியாக ஜீவன் அண்ண:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை மட்டுமல்ல உங்களது புகைப்படங்கள் மிகவும் சிறப்பானவை வந்து அவைகளைத் தொடருங்கள்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் எங்கும் ஓடமாடடார். வருவார். எங்காவது உதவி தேவைப்பட்டிருக்கும்... போட் டது போட்ட படியே விட்டுடு ஓடியிருப்பார் மனிதர். 

அவர் ஒரு வித்தியாசமான மனிதர். என்ன, கொஞ்சம் கொதியர்... ஆனால் பழகுவதுக்கு இனியவர். இங்கே நாம் நகைச்சுவையாக பார்க்கும் விடயங்களை, ஏன் அவர் மிகவும் சீரியஸ் ஆக அணுகுகிறார் என சில வேளைகளில் யோசிப்பேன். இருந்தாலும், கோபம் என்னுடன் கூடப் பிறந்தது என்று சொல்லும் நேர்மை அவருக்கு இருந்தது.

அவர் செய்யும் சமூகம் சார்ந்த வேலைகள் நம்மால் செய்ய இயலாது. அடுத்த முறை யாழ்ப்பாணம் போகும் போது, அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன்.

வேலைகள் முடிந்ததும், வாருங்கள் ஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 1:25 AM, ஜீவன் சிவா said:

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

முற்றும் 

இதென்ன ஜீவனண்ணா 30 ஆண்டுகால த.வி.பு வின் போராட்ட வரலாறை 10 ஆண்டுகளில் மறக்க முடியுமா?
கொஞ்ச காலம் செல்லும்தானே!
எனது கருத்து த.வி.பு நிறைய தவறுகள் விடுதலை போராட்டத்தின் பெயரால் செய்திருக்கலாம், அதனாலேயே அவர்களுடைய போராட்டம் தவறானது என்று அர்த்தமாகாது.
அந்தந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தாம் சார்ந்த அமைப்பை உயர்த்தி பிடிப்பது வழமை தானே! 
ஒப்பீட்டளவில் பெரும்பான்மை தமிழ் சமூகம் அவர்கள் பின்னால் இருந்ததை மறந்துவிடலாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் உங்கள் தனிப்பட்ட பார்வை மனவோட்டம் சிந்தனை அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானது. அதை வெளிப்படுத்த தயக்கமேன்? அவரவர் பார்வை அவரவர்க்கு சொந்தமானதுதொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2019 at 2:55 PM, ஜீவன் சிவா said:

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

இல்லாத புலியை இந்திய இலங்கை அரசியல்வாதிகளில் இருந்து இராணுவம் பொதுமகன் என்று வேறுபாடல்லாமல் தேவைப்படுகிறது.நீங்ளென்ன விதிவிலக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லாத புலியை இந்திய இலங்கை அரசியல்வாதிகளில் இருந்து இராணுவம் பொதுமகன் என்று வேறுபாடல்லாமல் தேவைப்படுகிறது.நீங்ளென்ன விதிவிலக்கா?

வணக்கம் ஈழப்பிரியன்!  இரண்டு வரிகளுக்கு மேற்படாமல் நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளீர்கள். 👍

Link to comment
Share on other sites

On 3/2/2019 at 5:46 AM, வல்வை சகாறா said:

ஜீவன் சிவா எழுத ஆரம்பித்ததை எழுதி முடியுங்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசமானது. நீங்கள் உங்கள் பார்வையைப்பதிவு செய்கிறீர்கள். அதிலேன் தயக்கம்? அவரவர்களுக்கு தத்தம் பார்வை மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே கருத்துகளைப்பதிவிடுகிறார்கள். கருத்தாடல் களம் எல்லோருக்குமானது. உங்கள் நம்பிக்கைகள் உங்கள் பார்வைகள் என்பனவற்றை யாராலும் மறுதலிக்கமுடியாது ஏனெனில் அது உங்கள் சுயமான பார்வை

எனது கருத்து புலிகளுக்கு எதிரானதாக இருக்கும்போது கேட்டு கேள்வியின்று மட்டுநிறுத்தினரால் தூக்கப்படும்போது இதே கேள்வியை நிர்வாகத்திடம் அல்லது சக உறுப்பினரிடம் கேட்டிருந்தால் தொடர்ந்திருப்பேன்.

பழைய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

எனது கருத்து புலிகளுக்கு எதிரானதாக இருக்கும்போது கேட்டு கேள்வியின்று மட்டுநிறுத்தினரால் தூக்கப்படும்போது இதே கேள்வியை நிர்வாகத்திடம் அல்லது சக உறுப்பினரிடம் கேட்டிருந்தால் தொடர்ந்திருப்பேன்.

பழைய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு 😀

சகாராவுக்குத் தெரிந்திருக்காது இதெல்லாம்! எல்லாரும் எல்லாத் திரிகளையும் பார்ப்பதில்லையே?

ஆனால், தகவல்கள், தரவுகள் அடிப்படையில் தங்கள் கருத்துகளை உருவாக்காதோர் சிலரால் எல்லோருக்கும் பிரச்சினை தான்! என்ன செய்வது? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முதுகைச் சொறிந்து சுகம் காணட்டும்! நீங்கள் தொடருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சகாராவுக்குத் தெரிந்திருக்காது இதெல்லாம்! எல்லாரும் எல்லாத் திரிகளையும் பார்ப்பதில்லையே?

ஆனால், தகவல்கள், தரவுகள் அடிப்படையில் தங்கள் கருத்துகளை உருவாக்காதோர் சிலரால் எல்லோருக்கும் பிரச்சினை தான்! என்ன செய்வது? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முதுகைச் சொறிந்து சுகம் காணட்டும்! நீங்கள் தொடருங்கள்! 

அவர் இன்னமும் எழுதவே இல்லை 
எந்த அடிப்படையில் அவர் தகவல்கள் தரவுகள் அடிப்படையில்தான் எழுதுகிறார் 
என்பது உங்களுக்கு தெரியும்? 
ஒருவரை எழுத உற்சாக படுத்துவது பாராட்டுக்கு உரியது 
திரிக்கு திரி ஓர் சர்ச்சையை எதோ ஒரு மமதையில் நீங்கள் தொடர்கிறீர்கள் 
எல்லா விசைக்கும் ஓர் எதிர்விசை உண்டு 

இன்னொரு திரியில் நீங்கள் எனக்கு எழுதிய பதிலுக்கு 
இன்னமும் நான் விளக்கம் எழுதவில்லை ... பதிலுக்கு நன்றி 
இன்னொரு மேஜரில் ஒரு டிகிரி முடிக்கலாம் என்பதால் 
மீண்டும் கல்லூரி போய்க்கொண்டு இருக்கிறேன் .... நேரம் இல்லை 
இரண்டு வேலை  கல்லூரி வீட்டு பாடம் என்று ஓடி திரிவதால் யாழில் எழுத முடியவில்லை 
நேரம் இருக்கும் பொது பதில் எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.