• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

சிங்கள அரசு, பணம் செலுத்திய ஆயுதங்களை "சிங்களத்துக்கு தண்ணி காட்டி" முல்லைத்தீவுக் கடலில் வைத்து இறக்கிய புலிகள்.!

Recommended Posts

Image may contain: 1 person, sky, ocean, outdoor and water

சிங்கள அரசு, பணம் செலுத்திய ஆயுதங்களை "சிங்களத்துக்கு தண்ணி காட்டி" முல்லைத்தீவுக் கடலில் வைத்து இறக்கிய புலிகள்.!

★1997-05-13 அன்று புத்த பிக்குகளால் பிரித்தோதி, நல்ல சுபமுகுர்தம் பார்த்து, முப்படைகளின் திட்டமிடல், மற்றும் வல்லரசுகளின் ஆலோசனைகளுடனும் ஆரம்பிக்க பட்டது ஜெயசிக்குறு (OPERATION JAYASIKURU) இராணுவ நடவடிக்கை. ஆரம்பம் என்னவோ பெரும் விளம்பரத்துடன் நல்லா தான் இருந்தது. ஆனால் சண்டையின் போக்கு தான் எதிரிக்கு சாதகமாக இருக்கவில்லை.

புலிகளின் தொடர் முறியடிப்பு தாக்குதலால் எதிரி திணறடிக்க பட்டான். உலகின் நீண்ட இராணுவ நடவடிக்கையாக (108நாட்கள் ஜெர்மன் படைகளால் ரசியாவுக்கு எதிராக 2ம் உலகப்போரின் போது மேற்கொள்ளப் பட்ட இராணுவநடவடிக்கை) பதிவு செய்யப்பட்ட "பப்ப ரோசா" நடவடிக்கையையும் தாண்டி, நீண்ட நாட்கள் நடந்த இராணுவ நடவடிக்கை என்ற பெயரை அது எடுத்திருந்தது.

தினமும் எதிரி இழப்புகளை சந்தித்த படி இருந்தான். இந்த இழப்புகளை குறைக்கும் முடிவில், அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையின் பெயரில், பெருமளவில் மோட்டாரை பயன் படுத்தி, புலிகளுக்கு பெரும் சேதத்தை உண்டு பன்னிவிட்டு முன்னேறித் தாக்குவது தான் அவர்களின் உத்தியாக இருந்தது.

இந்த முறையில் தான் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேற்றோ படைகளால், விமானம், மற்றும் கனரக ஆட்லறி, மோட்டர், ஏவுகணைகள் கொண்டு தாக்கி, பெரும் சேதத்தை எதிரிக்கு உண்டு பன்னிவிட்டு, முன்னேறி இடங்களை பிட்டிக்கும் திட்டமே அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. இதன் மூலம் தங்கள் பக்க இழப்பை குறைக்க முடியும், அடுத்தது எதிரியின் உளவுரணை பெருமளவில் சிதைக்க முடியும்.என நம்புகின்றனர்.

இதில் அமெரிக்கருக்கு வெற்றி கிடைத்தது என்னவோ உண்மைதான். இந்த திட்டத்தை தான் எமது எதிரிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, அவர்கள் போட்டு கொடுத்து முன்னேற வைத்தனர். ஆனால், புலிகளிடத்தில் அவர்கள் திட்டம் சாத்தியப் படவில்லை. மாறாக அவர்களது திட்டத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டனர் புலிகள். இது எம் தலைவரின் மதிநுட்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

சிங்கள அரசின் வெடிபொருளின் உச்சப்பாவனையால் குறைந்து வரும் கையிருப்பை நிரப்புவதற்காகவும், புலிகளின் வேகத்தை முறியடிக்கவும், சிங்கள அரசு சிம்பாவே நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பெரும் தொகை மோர்ட்டார், மற்றும் அதற்கான எறிகணைகள் (120MM மோட்டர்,81MM மோட்டர்) 32,000மும் எதிரியால் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டது.

No photo description available.

அதற்கான பணமும் கைமாறிய பின் அந்த ஆயுதங்களை சிறிலங்காவிற்கு கொண்டு செல்வதற்கு சிங்கள அரசால் உலகில் உள்ள கப்பல் கம்பனிகளிடம் இருந்து "டெண்டர்" கோரியிருந்தது.(சிங்கள அரசு அந்த நேரத்தில் வாடகை கப்பலில் தான் ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்) ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பாதுகாப்பு நிமித்தம், அந்த விபரங்களை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பது வழமை. இதை எப்படியோ புலிகளின் சர்வதேச ஆயுத வலையமைப்பினர் மணந்து பிடித்து விட்டனர்.
உடனே சர்வதேசப்புலிகள் போலியான கப்பல் கம்பனி ஒன்றை உருவாக்கி, குறைந்த பணத்திற்கு "கோர்ட்"பன்னியிருந்தனர். இது புலிகளின் கப்பல் என்று தெரியாது, தனியார் நிறுவனம் என நம்பிய சிங்கள அரசு 1997 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் "மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா" துறைமுகத்தில் வைத்து புலிகளின் கப்பலான "லிமசோல்" இல் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

 

அன்று இரவு சிங்கள அரசால் பணம் செலுத்தப்பட்ட ஆயுதங்களை ஏற்றியபடி, அவர்களின் வைர எதிரியான புலிகளின் கப்பல் இரவு சிறிலங்காவை நோக்கி புறப்பட்டது. இங்கே யுத்தம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. புலிகளின் எதிர் தாக்குதலினால் புலிகளது ஆயுத கையிருப்பும் கணிசமான அளவு குறைந்து விட்டிருந்தது.

மேலதிக ஆயுத வழங்கல் கிடைக்காவிட்டால் நிலமை மோசமாகும் சந்தர்ப்பமே அதிகமாக இருந்தது. எம்மை போலவே பணத்தை கட்டிவிட்டு ஆயுதங்களுக்காக எதிரியும் காத்திருந்தான்.!
ஆனால் அவனுக்கு ஜூன் இறுதியில் வந்து சேரவேண்டிய ஆயுதங்கள் வந்து சேரவில்லை. ஆனால் அதே போல ஒரு வாரத்தினுள் இன்னுமொரு ஆயுதத் தொகுதிக்கு சிங்கள அரசு பணம் செலுத்தி, அதே கப்பல் கம்பனியின் (புலிகளின் கப்பலில்) இன்னொரு கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

முதல் கப்பல் புறப்பட்டு ஒரு வாரத்தில் இரண்டாவது கப்பலும் சிறிலங்காவை நோக்கி புறப்பட்டு இருந்தது. ஆனால் சேரவேண்டிய நேரத்தில் கப்பல் போய்ச் சேராததினால், சிங்கள அரசால் கப்பல் கம்பனியை தொடர்பு கொண்டு விபரம் கேட்கப் பட்டது.
அதற்கு அவர்களால் (புலிகளால்) காலநிலையை காரணம் காட்டி அவகாசம் கேட்கப்பட்டது. இப்படியே சிங்கள அரசுக்கு போக்கு காட்டி விட்டு, கொழும்பில் இறக்க வேண்டிய இரண்டு கப்பல் ஆயுதங்கலும் முல்லைத்தீவில் வைத்து புலிகளால் இறக்கப் பட்டிருந்தது.

தொடந்து சிங்கள அரசால் கப்பல் கம்பனியில் உள்ளவர்களுடன் பேசிய போதும் மழுப்பலான பதிலே வந்தது. அடுத்த நாளும் சிங்கள அரசு தொடர்பு கொண்டது.ஆனால், தங்கள் வேலை கச்சிதமாக முடிந்த காரணத்தால் புலிகள் அந்த தொடர்பை துண்டித்து விட்டிருந்தனர். அப்போது சந்தேகமடைந்த சிங்கள அரசு அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தது.

அவர்களின், விசாரணைகளின் மூலம் அந்த ஆயுதங்கள், புலிகளின் கப்பலில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது. இது தெரிய வந்த போது, புலிகளின் சாதுரியத்தையும், சிங்களரின் முட்டாள் தனத்தையும் எண்ணி நிச்சயம் அமெரிக்கர்கள் வாய் விட்டு சிரித்திருப்பார்கள்.

அதன் பின்பு தான் சிங்கள அரசு சொந்தமாக கப்பல்களை கொள்முதல் செய்து போக்கு வரத்தில் ஈடுபட்டனர். ஆனால், 1984 லேயே புலிகள் அமைப்பு வளர்ச்சி அடைந்திராத நேரத்திலேயே, புலிகளால் கப்பல்களை கொள்முதல் செய்து, வர்த்தகத்திலும், ஆயுத விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர். தமிழர் பெருமைகளில் இதுவுமொன்று.

அதன் தொடர்ச்சியாக பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள் புலிகளின் கைகளில் வந்து சேர்ந்திருந்தது. எதிரி எமக்காக பணம் செலுத்திய எறிகணைகளால், எதிரியை புலிகள் துவசம் செய்தனர். எதிரியின், எறிகணைகள் கொண்டே புலிகள், எதிரியை ஓட ஓட விரட்டி, ஜெயசிக்றுச் சமர் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

இந்த சாதனைகளின் பின்னால் பல கண்ணுக்கு தெரியாத போராளிகளின் தியாகங்கள் நிறைந்துள்ளது. அந்த நேரத்தில் தமிழனின் மதிநுட்பம் சர்வதேச அளவில் சிலாகிக்க பட்டு, எதிரிக்கு பெரும் தலை குனிவையும் ஏற்படுத்தி இருந்தது. போரில் மட்டுமல்ல சர்வதேச, முறியடிப்பு புலனாய்விலும் தமிழர் தேசம் முத்திரை பதித்தது.

அந்த நேரத்தில் இது புலிகளின் "கடல் கொள்ளையென" சர்வதேசத்திடம் , சிங்களம் குற்றம் சாட்டியிருந்தது. அவனின் புலம்பலில் தெரிந்தது.! இப்படியொரு "கடல் கொள்ளையை எதிரி நிச்சயம் கனவிலும்" எதிர் பாத்திருக்கவில்லை என்பது ..!!
தமிழர் வீரம் தொடரும்..

https://www.facebook.com/rasan.sri.7/posts/656849134735928

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மருது, நான் முன்பே சொல்லியது போல - 1.பல்லவர்கள் தமிழர்களா? என்பதில் எனக்கு ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை. 2. பல்லவர்களுடன் புனான், சென்லா நாடுகள் தொடர்பில் இருந்தன என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். 3. ஆனால் அங்கர்வாட்டை கட்டியது ஒரு தமிழ் மன்னர் இல்லை. அங்கே அப்போ இருந்த அரசும் தமிழ் அரசில்லை. எனது இன அபிமானத்தை தூக்கி வைத்து விட்டு, இப்போ இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நான் ஊகிப்பது இதைத்தான். 4. இல்லை அது பல்லவ வழி வந்த ஒரு தமிழ் அரசாக இருக்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள். ஒரு பேச்சுக்கு பல்லவர்கள் தமிழர்கள் என்றே வைத்தாலும் - அங்கர்வார்ட் எழும்பிய காலம் ஒன்றும் சங்க காலமில்லை. நான் முன்பே கூறியது போல, ராஜேந்திரனுக்கு பின்னான, சேக்கிழார் காலத்தில், சோழ சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில்தான் அங்கர்வாட் கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய கடலைதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோழனுக்கு, இப்படி ஒரு மாபெரும் தமிழரசு இருந்த செய்தி தெரிய இல்லை என்பது நம்பும் படியாக இல்லை. எனவே நம்பதகுந்த ஆதாரம் வரும்வரை இதை தமிழர் தொன்மை என்பதை நானும், இந்த உலகமும் ஏற்கப் போவதேயில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஆதாரங்கள் இன்றி, இல்லை இது தமிழ் அரசே என சொல்லிக் கொண்டிருக்கலாம், சில யுடீப் லைக்குகளை விட அதில ஒரு பலனுமில்லை. —————— இப்போ இன்னொரு தலைபுக்கு சம்பந்தமற்ற விடயம். நான் மேலே போல்ட் செய்திருப்பது. இங்கே நீங்கள் எழுதி இருப்பதுதான் திராவிட அரசியல் கொள்கையின் அடிநாதம். இது உங்களுக்கு தெரியாததல்ல. பல்லவர்களை உரிமை கொண்டாட வசதிப்படும் போது நாயக்கரை தமிழராக ஏற்க முடிகிற உங்களால், சீமானுக்காக, கட்ட பொம்ம்மனை, திருமலை நாயக்கரை, வைகோவை, விஜயகாந்தை, கருணாநிதியை தமிழன் அல்லாத தெலுங்கன் என திட்டும் போது மட்டும் ஏன் தமிழனாக ஏற்க முடியவில்லை ? பிஜு பட்நாயக், பண்டரநாயக்க எல்லாரும் நாயக்கர் என்றீகளே அப்போ இவர்கள் எல்லாம் கூடத் தமிழரா? இதே போலத்தான், கண்டியின் கடைசி மன்னன் தமிழன் என மார்தட்டுவோம் - மிக இலகுவாக அவர் நாயக்க வம்ச மன்னன் என்பதை மறந்துவிட்டு. எமக்கு வசதிப்பட்டால் தமிழன், இல்லாட்டி தெலுங்கன் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? பிகு: பேசாமல், எகிப்திய (ஏகனை பற்றிய என்பதே பின்னாளில் எகிப்து ஆகியது) , மாயன் (மாயோனை வழிபட்டோரே மாயன்), அபொர்ஜினி (அரன்+பார்வதி= அபர்ஜினி) எல்லாத்துக்க்குமே அடி தமிழ்தான் எனச் சொல்லி விடுவோமா? சும்மா சின்ன சின்னதாய் பிடுங்குப் படாமல், டோட்டல் வேள்ர்ட்டையும் புல் டமேஜ் பண்ணிரலாம் 😂  
  • இதுதான் என்னுடைய வாதத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையே  கால நேரங்களை   தனி தனியாகவே விளக்கம் கொடுக்கிறார்கள்  இவர்கள் தரும் கால நேரங்கள் முரண்பாடு உடைவை மட்டும் அல்ல முற்றுமுழுதாக  சாத்தியம் இல்லாதவை. சேர பேராசின் எழுச்சி என்பதே பின்னைநாளின் விஜயநகரம் இருந்த இடத்தில் தொடங்கியதுதான்  பல ஆயிரம் வருடம்  முன்பு எங்கு உதயன் சேரலாதன்  நெடும் சேரலாதன் போன்ற சேர அரசர்களின் ஆடசி இருந்ததோ அங்குதான் பின்பு விஜயபேரரசு  (நாயக்கர்) தோன்றுகிறது. நாயக்கர்கள் தமிழர் இல்லை என்பது இங்கு பொய்யாகி போகிறது ஆயிரம் வருடங்கள் கழிந்து அவர்கள்  தமிழ் மருவி வேறு ஒலி வடிவம் எழுத்த்து வடிவத்தை பெற்றார்கள் என்பது ஒன்றுதான் சாத்தியமானது. தமிழ் மொழி தோற்றம் .... சேர பேராசின் உச்ச காலம் போன்றவை   கிரந்தம்  சமஸ்கிருதம் போன்றவற்றுக்கு முந்தியவை அதை தமிழ் மொழி  கீழடி போன்ற ஆய்வில் ஏற்றுக்கொள்ளும் நாம்  ............. கிரந்தம் வந்தது என்று எப்படி சொல்வது? கிரந்தம் தமிழ் மருவி தோன்றியது என்பதுதான் சாத்தியமானது. கிரந்தமோ சமஸ்கிருதமோ எங்கிருந்தும் வந்திருக்க சாத்தியம்  இருப்பின்  சேர பேரரசின் முன்பு இன்னொரு இந குழுமமோ  அரசோ இப்போதைய ஒரிசா மகாராஸ்திரா  சத்தீஸ்கர் ஆந்திர மேல் பகுதியை அண்டி வாழ்ந்திருக்க வேண்டும் ... அப்படி ஒன்றை யாரும்   இதுவரையில் ஒப்பவில்லை. சிந்து வழி நாகரீகத்தில் தமிழை ஏற்றுக்கொள்கிறார்கள்  கரப்பாவில் தமிழ் எச்சம்  இருக்கிறது .........  ஈரானின் தோற்றம்மே  நாம் முழுமையாக ஆராயவில்லை  சுமேரியர்    ஈழம்  போன்றவை   3000 வருடம் முன்பு ஈரானில் தோன்றியவை  .......... சுமேரிய  ஈழம் போன்றவற்றை 3000 ஆண்டளவில்  ஈரானின் பகுதிகளில் சுட்டி காட்டுகிறார்கள்.  நாம் தமிழ் மொழியை இப்போதைய தமிழ் நாட்டுக்குள்  முடக்க முனையும் போது சேர பேர் அரசை மறந்துவிடுகிறோம். சில இடங்களில்  லூசுத்தனமாக பாண்டிய பேர் அரசு சேரர்க்கு முந்தியது என்று சொல்கிறார்கள். தமிழ்மொழியின் பாதையில் நாம் பயணிக்கும்போது ..... பல பொய்யாகவும் சாத்தியம் இல்லாததும் ஆகா இருக்கிறது இவற்றுக்கு எம்மிடம் எழுத்தில் ஆதாரம் இருக்கிறது  எல்லோரா குகை கோவில்கள் எல்லாம் சிவனை கடவுளாக கொண்டவை  குறைந்த பட்ஷம் இன்று மக்கள் சென்று பார்க்க அனுமதி இருக்கும் 16 கோவில்களும் சிவன் கோவில்கள்   சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்று  கொண்டவர்கள் இப்போதைய இந்திய நிலப்பரப்பில்  யார்?  அப்போ வைஸ்ணவம் வந்தது என்றால் ... வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்?  மேலும் சிவன் கீழும் சிவன் என்றால் இடையில் வைஷ்ணவம் என்பது இதை மருவிதான் தோன்றியிருக்க வேண்டும்.. அதுதான் சாத்தியமானது.  கஜுராகோ கோவில்கள்  எல்லாம்  விஜயநகரத்துக்கு உட்பட்டதுதான். மதங்கள்  மொழிகள்  இனங்கள்  இராச்சியங்கள்  இவை நான்கையும் ஒரே கோட்டில் வைத்து கொண்டு செல்லும் எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை  எதாவது ஒரு கோவிலை கண்டவுடன் அந்த கோவில் காட்டிய கால பகுதியில் நின்றுகொண்டு  அதன் அருகே இருக்க கூடிய  சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு வெளியாகும் ஆய்வு முடிவுகள்தான் எம்மிடம் இப்னு இருப்பவை . 
  • நீங்கள் பொறுமையாக வாசித்து எல்லாம் தெரிந்து வைத்து எழுதுகிறீர்கள். எனக்கு உங்கள் அளவு அறிவு இல்லை. கட்டாயம் நீங்கள் சரியானதை எழுதவேண்டும். பெண்கள் எழுதுவதற்கு நேரம் இன்மை இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் எழுத.😀 நீங்களும் எழுதாவிட்டால் பலர் எழுதுவது,  போடுவது உண்மை என்று எல்லாரும் நம்பிவிடுவார்கள்
  • உண்மைதான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன்.