Jump to content

சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு


Recommended Posts

2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.
நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர்.
வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் கந்த முருகேசனாருடைய கல்வி முறையை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவாயா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்துச் சாதிய அனுபவத்தைப் பதிவாக்கியுள்ள முதல் நூல் என்று குறிப்பிட்ட ரயாகரன் தமிழ்ச் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையைப் பற்றிப் பேசும், நூலாக இருக்கிறது என்றும் “இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை”. என்றும் கூறினார் இதன் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது. என்று குறிப்பிட்ட ரயாகரன்
“இலங்கை வாழும் தமிழ் மக்களும், இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என்றும் . சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமின்றி, இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமும் சரி, இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்பதையும் வலியுறுத்தினார்.
1981 ல் தனது தந்தை உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத நிலையில் வாழ்ந்த தான்,1983 ல் அவரது குரல் போராளிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழத்தின் குரல் வானொலியில் ஒலித்த போது, தன்னுடைய நண்பர்கள் தன்னை போராளியின் மகன் என்று தோளில் தூக்கிக் கொண்டாடியதை நினைவு கூர்ந்த நூலாசிரியரின் மகன் வசந்த ரூபன்1980 களின் நடுப்பகுதியில் தஞ்சாவூரிலிருந்த தனது தந்தையின் வீரியத்தையும் போர் குணத்தையும் ஆளுமையையும் அவர் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர் பார்க்க முடியவில்லை என்றும்  குறிப்பிட்டார்.தனக்கு ஊர் மற்றும் சாதிய அடையாளங்கள் கிடையாதென்றும் தமிழ்த் தேசிய அடையாளம் என்ற ஒன்றுதான் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். 
தமிழீழத்தில் இப்போது சாதிக்கொரு கோவில்,சாதிக்கொரு திருமண மண்டபம், சாதிக்கொரு மயானம் கூட கட்டப்படும் நிலையை விரி.இளங்கோவன் எடுத்துரைத்தார்.
இறுதியாக ஏற்புரை வழங்கிய சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்ததுடன் தன்னுடைய மகனின் குற்றச்சாட்டைத் தான் ஏற்பதாகவும் புலத்தில் நேர்மையற்ற போலிகளை வெல்லமுடியாமல் போனது தனது தோல்வி என்பதையும் ஒத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வை முன்னாள் போராளி அமலன் தொகுத்து வழங்கினார்.

https://www.facebook.com/pg/நினைவழியா-வடுக்கள்-2122148908082914/photos/?ref=page_internal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ....நினைவழியா வடுக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்க பட வேண்டும்......!   🌺

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா.

7 minutes ago, Justin said:

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

ஏன் அண்ணா?!

Link to comment
Share on other sites

17 hours ago, Justin said:

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

வாழ்த்துக்கள். 

நன்றி ஜஸ்டின் 

17 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் ....நினைவழியா வடுக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்க பட வேண்டும்......!   🌺

 

நன்றி சுவி 

எனது நூலுக்கு வந்தவிமர்சனங்கள் 

 

தங்களின் நூலை வாசித்தேன். ஏற்கெனவே வாசித்துள்ள 'அனார்யா'இ 'உச்சாலியா' முதலிய - மராத்திய தலித்துகளின் தன்வரலாற்று நூல்களைப்போல்இ சிறப்பான நூலாக உள்ளது. ஈழத்தின் வடபிரதேசத்தில் முன்னர் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிஇ அவ்வப்போது வாசித்தும் செவிவழி கேள்விப்பட்டும் அறிந்துள்ளேன். உங்கள் அனுபவங்களூடாக அக்காலச் சூழல் பதியப்பட்டிருப்பதில் புதியனவற்றை அறிய முடிந்தது. அவற்றுக்கு வரலாற்று ஆவணத்தன்மையையும் கொடுத்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரங்களைத் தமிழர்களே தம்மில் ஒருபிரிவினருக்குச் செய்துள்ளார்கள் என்பதுஇ வெட்கத்தையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றது! கதிர்காமர் ஆசிரியரின் சின்னத்தனங்கள்இ சிறுவனாக நீங்கள் கையில் பிழாவில் பாலை வைத்துக்கொண்டு பாண்துண்டைப் பெறப் பட்ட சிரமம்இ சின்னாச்சி என்ற கன்னிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் அதனால் ஏற்பட்ட தற்கொலையும்இ குடிசையுடன் மூவர் எரித்துக்கொல்லப்பட்டதுஇ நெல்லியடிச் சந்தியில் எம். சி. சுப்பிரமணியம் குழுவினருக்குச் செய்யப்பட்ட அவமரியாதைஇ இணுவில் சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கும் ஐயாவுக்கும் நடைபெற்ற கொடுமைகள்இ விறகுமலையைக் கொத்தி அடுக்கும் குரூரத் தண்டனை போன்றவை எல்லாம்இ மனத்தில் பதிந்தவை. அதுபோல் பொன் கந்தையாஇ கந்தமுருகேசனார்இ மேரி ரீச்சர்இ நாகர்கோவில் சம்மாட்டியார் போன்ற ஏனைய சமூகத்து நல்ல மனிதரின் ஆதரவான செயல்கள் பதியப்பட்டுள்ளமையும் முக்கியமானது! சாதிய மாற்றங்கள்இ சாதிக்குள் சாதி பார்த்தல் பற்றிய குறிப்புகளும் (கே. வி. நடராஜன் 'ஒன்றுக்குள் ஓராயிரம்' சிறுகதையை எழுதி 'மல்லிகை'க்குக் கொடுத்தபோதுஇ டொமினிக் ஜீவா அதனை வெளியிட மறுத்துவிட்டாராம்!) முக்கியமானவை.
இணுவில் சம்பவத்தில் மகனுக்கு முன்னால் தந்தை அடிவாங்கி அவமானமுறுவதன் வலிபற்றிய சித்திரிப்பு கவனத்துக்குரியது. இத்தாலிய நவயதார்த்தவாத திரைப்பட நெறியாளரான 'விற்றோறியோ டி சீக்கா'வின்இ 'பைசிக்கிள் தீவ்ஸ்' என்னும் புகழ்பெற்ற திரைப்படத்திலும்இ இவ்வாறான நிகழ்வும் துயரும் சித்திரிக்கப்படுகின்றன. தனது சைக்கிள் களவுபோனபின் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் – இன்னொருவரின் சைக்கிளைத் திருடும்போது பிடிபடும் ஒருவர்இ மகனான சிறுவனின் முன்னாலேயே கும்பலால் தாக்கப்படுகிறார். அவர்படும் வேதனையும்இ மகனின் அழுகையும் மனத்தை உருக்குவன! 
நூலின் அட்டைப்படங்களை வரைந்த வீரக்கொடிகே வசந்த பெரேராவைப் பாராட்டவேண்டும்; அட்டையைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பொதுவில் புத்தகம் நன்றாக வந்துள்ளது.

மேலும்இ தங்களின் தந்தையார் வாசகர் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். நீங்கள் (நாங்களும்) மரியாதை கொடுக்கும் அவரின் ஒளிப்படம் கட்டாயம் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும்; ஆயினும்இ 2000 இல் இறக்கும் அவர்இ பிந்திய காலத்தில் இடம்பெறும் ஒளிப்படம் ஒன்றாவது கிடைக்கவில்லையா! இரண்டாவது பதிப்பில்இ தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். 
சாதி வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரிகளின் - குறிப்பாக சீனசார்பு கொம்யூனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியமானதே; ஆயினும்இ அதே காலகட்டங்களில் பொதுவான (ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் உட்பட) தமிழ் மக்கள் இனவன்முறைகளினாலும்இ மொழிப் பாரபட்சங்களினாலும்இ சிங்களக் குடியேற்றங்களினாலும் பாதிப்புற்றதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஸ்டாலினின் வரையறைகளில் ஒன்றான 'பொதுப் பொருளாதாரம்' ஈழத் தமிழருக்கு இல்லையெனஇ 'தேசிய இனம்' என்ற அடையாளத்தையே நீண்டகாலமாக மறுத்தார்கள். அதேபோலஇ பிழையான சமப்படுத்தல்களையும் பிரச்சாரம் செய்தனர். உ 10 ம் வெளிமடை நா. உ.இ கே. எம். பி. ராஜரத்தினாஇ 'தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்' என்று கூறியதைப் போல்இ அமிர்தலிங்கமும் சிங்களவரை வைத்துப் பேசியதாகப் பொய்யாய்ச் சமப்படுத்தினர். இரண்டு மாதங்களாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக அலுவல்களை முடக்கிய – வெகுஜனங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற – சத்தியாக்கிரகப் போராட்டத்தை வெறுமனேஇ 'சப்பாணிப் போராட்டம்' என்று நக்கலடித்தார்கள்! இவைபோன்றவற்றை (விரிவாக இல்லாவிடினும்) கோடிகாட்டியாவது உங்கள் 'என்னுரை'யில் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்! இல்லையாயின்இ நமது கொம்யூனிஸ்டுகள் பற்றிஇ 'ஒருபக்க' - ஒளிவட்டத் தோற்றமே வாசகரின் மனதில் பதியும்!
எவ்வாறாயினும் உங்களின் எழுத்துப் பணி முக்கியமானது; உங்கள் வெளிப்பாட்டு மொழிநடை தெளிவுடனும் எளிமையுடனும் உள்ளது. வாழ்த்துகள்! 
அ. யேசுராசா
குருநகர்.

Link to comment
Share on other sites

New Democratic People's Front
6 பிப்ரவரி, பிற்பகல் 9:52 ·

2019 தை மாதம் தமிழகத்தில் நடந்த நூல் கண்காட்சியில் "நினைவழியா வடுக்கள்" நூல், விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, முழுப்பிரதியும் விற்றுவிட்ட நிலையில், இரண்டாவது பதிப்பு வெளிவர இருக்கின்றதை அறிய முடிகின்றது. இந்த நூல் குறித்து இரண்டு வருடத்துக்கு முன்பு டென்மார்க்கில் எமது தோழர் ஒருவரின் மரணச்சடங்குக்கு சென்று திரும்பிய போது, கடந்தகால சாதிய ஒடுக்குமுறையின் வரலாறு குறித்து சிவா சின்னப்பொடியுடன் விமான நிலையத்தில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. நூலாக கொண்டு வருமாறு வேண்டினேன். நூல் வெளிவந்தவுடன், எனக்கு அதைக் கொண்டு வந்து தந்திருந்தார். நூலை வாசிக்க தொடங்கியவுடன், வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு, நூல் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுடன் இணைந்;துவிடுகின்றது.

"தமிழர்கள்" என்ற கூறிக் கொண்டவர்கள், தங்கள் தந்தையுடன் - தாயுடன் இணைந்து எமது இளமைக் காலத்தில் பிற மனிதர்களுக்கு இழைத்த கொடூரங்களையும், கொடுமைகளையும் இந்த நூல் பதிவாக்கி இருக்கின்றது. மறுக்க முடியாத ஆதாரங்களை, சாதிய சமூக அடிப்படையில் முன்வைத்து இருப்பதுடன், மனித மனச்சாட்சிக்கு முன் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. இன்றைய சாதிய சமூகம், அன்றைய சாதியத்தின் நீட்சியாக இருப்பதை புரிந்துகொள்ள, இந்த நூல் முக்கியமான வரலாற்று நூலாகும்.

நீ யார் எனின், நீயொரு மனிதன், ஆனால் மனித வரலாறு என்பது, மனித வரலாறாக இல்லை. மாறாக மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாக இருக்கின்றது. இந்த வகையில் சிவா சின்னப்பொடியின் "நினைவழியா வடுக்கள்" நூல், தமிழ் சமூகத்தினால் வெறுக்கப்படும் என்பது உண்மை. தமிழ் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையை பற்றிப் பேசும், நூலாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை. இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது.

Link to comment
Share on other sites

•சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்”

கலை இலக்கியத்தின் பணி சதா சர்வகாலமும் அம்பலப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதுதான்.- தோழர் மாவோ சேதுங்

சிவா சின்னபொடி அவர்கள் ஏழதிய “ நினைவழியா வடுக்கள்” நூல் 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.

அவர் அதனை தன் சொந்த அனுபவங்களினூடாக விபரித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

சிவா சின்னபொடி அவர்களை நான் 1985ல் தஞ்சாவூரில் சந்தித்தேன். அப்போது அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். ஆனாலும் அவர் புரட்சிகர அமைப்புகளுடன் உறவுகளை கொண்டிருந்தார்.

என்;னை கேரளாவுக்கு அழைத்தச் சென்று அங்குள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த சிவா சின்னபொடி அவர்களின் பங்களிப்பை என்னால் மற்க்க முடியாது.

நானும் சிவா சின்னபொடி அவர்கள் நூலில் குறிப்பிட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அறிந்திருக்கிறேன்.

ஆனால் அக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அனுபவித்திருக்கிறார் என்பதை அவரது இந்த நூலின் மூலமே அறிகிறேன்.

1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் டானியல் போன்றவர்களினால் எற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக 1980 களுக்கு பின்னர் இளைஞர்களின் ஆயதப் போராட்டங்களின் போதும் அதன் பின்னரும் சாதீய மற்றும் தீண்டாமை கொடுமைகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றி போதிய பதிவுகள் இல்லை.

எனவே சிவா சின்னப்பொடி போன்றவர்கள் அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் போன்றவர்களின் விரும்பமும் வேண்டுகோளும் ஆகும்.

தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவை என்பதையும் இனியும் போராட வேண்டும் என்பதையும் இந் நூலில் சிவா சின்னபொடி அவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நண்பரே ..... நீங்கள் உங்களை யாழ் அரிச்சுவடியில் ஒரு சிறிய அறிமுகம் செய்யலாமே . அங்கு இந்த இணைப்பை கொடுத்து விட்டால் பலரும் வந்து பார்வையிடுவார்கள் .......!  😁

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நல்லது நண்பரே ..... நீங்கள் உங்களை யாழ் அரிச்சுவடியில் ஒரு சிறிய அறிமுகம் செய்யலாமே . அங்கு இந்த இணைப்பை கொடுத்து விட்டால் பலரும் வந்து பார்வையிடுவார்கள் .......!  😁

அவர் பழைய உறுப்பினர் :)

வாழ்த்துகள் ,புத்தகத்தை வாங்கி படிக்க முயற்சிக்கிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்ட கால வரலாற்றையே திரித்து எழுதி தம்மை நிலைநிறுத்த முன்னெடுக்கும் பலர் உள்ள இந்தக் காலத்தில் அதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாற்றை ஒளிவுமறைவின்றி கொண்டுள்ள நினைவழியா வடுக்கள் நூலை நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

இலண்டனில் பெளசர் மூலம் எடுக்கமுடியுமா? அல்லது இணையவழியாக ஓர்டர் செய்யமுடியுமா?

Link to comment
Share on other sites

12 hours ago, Siva Sinnapodi said:

நன்றி ஜஸ்டின் 

நன்றி சுவி 

எனது நூலுக்கு வந்தவிமர்சனங்கள் 

 

தங்களின் நூலை வாசித்தேன். ஏற்கெனவே வாசித்துள்ள 'அனார்யா', 'உச்சாலியா' முதலிய - மராத்திய தலித்துகளின் தன்வரலாற்று நூல்களைப்போல், சிறப்பான நூலாக உள்ளது. ஈழத்தின் வடபிரதேசத்தில் முன்னர் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி அவ்வப்போது வாசித்தும் செவிவழி கேள்விப்பட்டும் அறிந்துள்ளேன். உங்கள் அனுபவங்களூடாக அக்காலச் சூழல் பதியப்பட்டிருப்பதில் புதியனவற்றை அறிய முடிந்தது. அவற்றுக்கு வரலாற்று ஆவணத்தன்மையையும் கொடுத்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரங்களைத் தமிழர்களே தம்மில் ஒருபிரிவினருக்குச் செய்துள்ளார்கள் என்பது வெட்கத்தையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றது! கதிர்காமர் ஆசிரியரின் சின்னத்தனங்கள் சிறுவனாக நீங்கள் கையில் பிழாவில் பாலை வைத்துக்கொண்டு பாண்துண்டைப் பெறப் பட்ட சிரமம் சின்னாச்சி என்ற கன்னிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் அதனால் ஏற்பட்ட தற்கொலையும்இ குடிசையுடன் மூவர் எரித்துக்கொல்லப்பட்டது, நெல்லியடிச் சந்தியில் எம். சி. சுப்பிரமணியம் குழுவினருக்குச் செய்யப்பட்ட அவமரியாதை, இணுவில் சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கும் ஐயாவுக்கும் நடைபெற்ற கொடுமைகள், விறகுமலையைக் கொத்தி அடுக்கும் குரூரத் தண்டனை போன்றவை எல்லாம், மனத்தில் பதிந்தவை. அதுபோல் பொன் கந்தையா, கந்தமுருகேசனார், மேரி ரீச்சர், நாகர்கோவில் சம்மாட்டியார் போன்ற ஏனைய சமூகத்து நல்ல மனிதரின் ஆதரவான செயல்கள் பதியப்பட்டுள்ளமையும் முக்கியமானது! சாதிய மாற்றங்கள், சாதிக்குள் சாதி பார்த்தல் பற்றிய குறிப்புகளும் (கே. வி. நடராஜன் 'ஒன்றுக்குள் ஓராயிரம்' சிறுகதையை எழுதி 'மல்லிகை'க்குக் கொடுத்தபோது, டொமினிக் ஜீவா அதனை வெளியிட மறுத்துவிட்டாராம்!) முக்கியமானவை.
இணுவில் சம்பவத்தில் மகனுக்கு முன்னால் தந்தை அடிவாங்கி அவமானமுறுவதன் வலிபற்றிய சித்திரிப்பு கவனத்துக்குரியது. இத்தாலிய நவயதார்த்தவாத திரைப்பட நெறியாளரான 'விற்றோறியோ டி சீக்கா'வின், 'பைசிக்கிள் தீவ்ஸ்' என்னும் புகழ்பெற்ற திரைப்படத்திலும், இவ்வாறான நிகழ்வும் துயரும் சித்திரிக்கப்படுகின்றன. தனது சைக்கிள் களவுபோனபின் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் – இன்னொருவரின் சைக்கிளைத் திருடும்போது பிடிபடும் ஒருவர், மகனான சிறுவனின் முன்னாலேயே கும்பலால் தாக்கப்படுகிறார். அவர்படும் வேதனையும், மகனின் அழுகையும் மனத்தை உருக்குவன! 
நூலின் அட்டைப்படங்களை வரைந்த வீரக்கொடிகே வசந்த பெரேராவைப் பாராட்டவேண்டும்; அட்டையைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பொதுவில் புத்தகம் நன்றாக வந்துள்ளது.

மேலும், தங்களின் தந்தையார் வாசகர் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். நீங்கள் (நாங்களும்) மரியாதை கொடுக்கும் அவரின் ஒளிப்படம் கட்டாயம் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும்; ஆயினும்இ 2000 இல் இறக்கும் அவர், பிந்திய காலத்தில் இடம்பெறும் ஒளிப்படம் ஒன்றாவது கிடைக்கவில்லையா! இரண்டாவது பதிப்பில், தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். 
சாதி வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரிகளின் - குறிப்பாக சீனசார்பு கொம்யூனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியமானதே; ஆயினும், அதே காலகட்டங்களில் பொதுவான (ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் உட்பட) தமிழ் மக்கள் இனவன்முறைகளினாலும், மொழிப் பாரபட்சங்களினாலும்இ சிங்களக் குடியேற்றங்களினாலும் பாதிப்புற்றதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஸ்டாலினின் வரையறைகளில் ஒன்றான 'பொதுப் பொருளாதாரம்' ஈழத் தமிழருக்கு இல்லையென, 'தேசிய இனம்' என்ற அடையாளத்தையே நீண்டகாலமாக மறுத்தார்கள். அதேபோல, பிழையான சமப்படுத்தல்களையும் பிரச்சாரம் செய்தனர். உ 10 ம் வெளிமடை நா. உ.இ கே. எம். பி. ராஜரத்தினா, 'தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்' என்று கூறியதைப் போல்இ அமிர்தலிங்கமும் சிங்களவரை வைத்துப் பேசியதாகப் பொய்யாய்ச் சமப்படுத்தினர். இரண்டு மாதங்களாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக அலுவல்களை முடக்கிய – வெகுஜனங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற – சத்தியாக்கிரகப் போராட்டத்தை வெறுமனே 'சப்பாணிப் போராட்டம்' என்று நக்கலடித்தார்கள்! இவைபோன்றவற்றை (விரிவாக இல்லாவிடினும்) கோடிகாட்டியாவது உங்கள் 'என்னுரை'யில் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்! இல்லையாயின்இ நமது கொம்யூனிஸ்டுகள் பற்றி 'ஒருபக்க' - ஒளிவட்டத் தோற்றமே வாசகரின் மனதில் பதியும்!
எவ்வாறாயினும் உங்களின் எழுத்துப் பணி முக்கியமானது; உங்கள் வெளிப்பாட்டு மொழிநடை தெளிவுடனும் எளிமையுடனும் உள்ளது. வாழ்த்துகள்! 
அ. யேசுராசா
குருநகர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சின்னப்பெடி..

சாதீய கொடுமைகள், தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகமிருந்திக்கும் போல தெரியுதே!

Link to comment
Share on other sites

On 3/2/2019 at 4:31 PM, கிருபன் said:

விடுதலைப் போராட்ட கால வரலாற்றையே திரித்து எழுதி தம்மை நிலைநிறுத்த முன்னெடுக்கும் பலர் உள்ள இந்தக் காலத்தில் அதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாற்றை ஒளிவுமறைவின்றி கொண்டுள்ள நினைவழியா வடுக்கள் நூலை நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

இலண்டனில் பெளசர் மூலம் எடுக்கமுடியுமா? அல்லது இணையவழியாக ஓர்டர் செய்யமுடியுமா?

நன்றி கிருபன் விரைவில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன் 

21 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சின்னபொடி.

நன்றி ஈழப்பிரியன் 

16 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், சின்னப்பெடி..

சாதீய கொடுமைகள், தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகமிருந்திக்கும் போல தெரியுதே!

நன்றி ராஜவன்னியன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். அண்ணா

Link to comment
Share on other sites

23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாழ்த்துக்கள். அண்ணா சகோதரி 

நன்றி 

Just now, Siva Sinnapodi said:

நன்றி சகோதரி 

 

7 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.

நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2019 at 7:53 PM, Siva Sinnapodi said:

நன்றி கிருபன் விரைவில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன்

பெளசரிடம் இருந்து வாங்கிக்கொண்டேன்.  தெரிந்த ஊர்களின் தெரியாத வரலாறுகளை தெரிந்துகொள்ள உதவியது. 

ஹாட்லிக் கல்லூரி புட்டளைக்கு இடம்பெயர்ந்திருந்த காலத்தில் கந்தமுருகேசனார் சிலையைத் தாண்டி ஒவ்வொருநாளும் போயிருந்தாலும் அவரது முக்கியத்துவம் தெரியாமல்தான் இருந்தது. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 3/2/2019 at 11:10 PM, Siva Sinnapodi said:

 

On 3/2/2019 at 11:10 PM, Siva Sinnapodi said:

 

நினைவழியா வடுக்கள் - சிவா சின்னப்பொடி

நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி யாழ்ப்பாணம் செல்லும் வரை எனக்கு யாழ்ப்பாணத் தமிழ் சாத்தியக்கூறுகள் பற்றிய எந்த அறிவும் கிடையாது. சாதியத்தின் தீவிரத்தன்மை, மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் தெரியாது. நான் அதுவரை வாழ்ந்த சமூகத்தில் வர்க்கம் சார்ந்த ஒடுக்கு முறைகளைப் பார்த்திருக்கிறேன் நேரடியாகவும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் தமிழர் வாழ்வியலில் சாதியம் பெரும் பங்கு வகிக்கின்றதென்பதை யாழ்ப்பாணம் வந்த பின்பே உணரத் தொடங்கியிருந்தேன்.

ஆனால் சாதியம் சமூகத்தில் எவ்வாறு வேறூன்றியிருக்கிறது அது இன்னும் தலைமுறைகளாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யாழ்ப்பாணத்தில் அனுபவமாகவே உணர்ந்து கொண்டேன் இது தவிர விதை குழுமத்தால் மாதாந்தம் இடம்பெற்ற இலங்கை இன முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் பல விடயங்களை அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் வாய்ப்பாக அமைந்தது.

‘நினைவழியா வடுக்கள்’ எனும் இப்புத்தகம் இவற்றுக்கெல்லாம் மேலாகவொரு புதிய தரிசனத்தையும் கூடவே மன உழைச்சலையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தையும் மிகச் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. சாதியத்தின் அடிப்படையில் நடந்த கொடூரங்களின் சாட்சிகளாய் சிவா சின்னப்பொடி அவர்கள் இருக்கிறார். சாதியப் பிரச்சினைகளுக்கு ஈழத்தில் இப்படியொரு வரலாறு இருந்திருக்குமென்பதை இதற்கு முன் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தின் முற்பகுதியில் நடந்த சம்பவங்கள் மற்றும் எழுபதுகளில் நடந்தவை தொடர்பில் படித்தும் கேட்டும் இருக்கிறேன். அதற்கு முன்பான காலங்கள் குறித்த மிக முக்கிய பதிவுசெய்தலாக ‘நினைவழியா வடுக்கள்’ இருக்கிறது.

நாம் காலம் காலமாக பேசிவரும் பெருமைமிகு தமிழர் வாழ்வியலும் வரலாறுகளும் வெட்கி நிற்கும் மிக மோசமான வரலாற்றுப் பக்கங்களும் நமக்குள்ளே நம் அண்மிய காலத்தில்தான் நடந்ததேறியிருக்கின்றது. அதன் வேறொரு பரிணாமமாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

என்னுடைய எட்டு வயது ஞாபங்களை நினைவுறுத்தும் போது முதல்நாள் பள்ளிக்கூடம் போனது அந்த வகுப்பறை கொஞ்சம் இருளாக இருந்ததால் பயந்து அழுதது மாதிரி மிகச் சொற்ப சம்பவங்களே நினைவிருக்கின்றன. ஆனால் வெறும் எட்டு வயதில் ஒரு சிறுவனுக்கு நடந்த விடயங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இத்தனை தெளிவாய் நினைவிருக்கிறதென்பது அந்த வயதில் இந்த சமூகம் அந்தச்சிறுவனுக்கு எவ்வளவு ஆறா வடுக்களை அளித்திருக்கின்றதென்பதை ஊகிக்க முடிகின்றது. அதிலிருந்து விடுபட்டு இன்று ஓரளவுக்கேனும் சமுக விடுதலை பெற்றதன் பின்னால் இருந்த வலிகளையும் அதற்காக அயராத போராட்டங்களையும் அவரது ஞாபக அடுக்களிலிருந்து விவரிக்கின்ற போது பெரும் ஆற்றமை எழுகிறது. அதற்காக அவரின் தந்தையின் போராட்டமும், வலிகளும், முனைப்புக்களுடனும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வீரியத்துடன் அசராது நின்றதெல்லாம் அசாத்தியமானதொன்று.

மிகப் பிரதானமாக ஆதிக்க சாதிகளின் வெவ்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளையும், அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் சொல்லிச் சென்றாலும் அக்காலத்தில் இருந்த போலித் தமிழ்த் தலைவர்களின் உண்மை முகங்களையும் அவர்களின் போலி சமத்துவச் செயற்பாடுகள் பற்றியும் சொல்கிறார் மற்றும் ஆதிக்க சாதிகள் எவ்வாறெல்லாம் இந்த ஆண்டான் அடிமை முறையை தக்க வைக்கவும், தொடர்ந்தும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்படுகின்ற மக்களை சிந்திக்கவிடாமல், இவர்களின் அடக்குமுறை சரியானதே என எண்ணுமளவிற்கு வைத்திருக்க, அவர்களின் மூலதன உருவாக்கத்தை தடுக்க இன்னும் என்னவெல்லாமோ செய்து தமது மேட்டுக்குடி மனோபாவத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார்கள் என்பதெல்லாம் வாசிக்கும் போது வியப்பேதுமெழவில்லை ஏனென்றால் அதன் வேறொரு வடிவ ஒடுக்கு முறையையும், மேட்டுக்குடி மனோபாவத்தையும் இப்போதும் பார்க்கிறோம் தானே. மனிதத் தன்மையற்ற மிக மோசமான இந்தச் சமூகங்களின் மத்தியில் தான் கந்த முருகேசனார், பசுபதி ஆசிரியர், மேரி ரீச்சர், நாகர்கோயில் கிராம மக்களென சக மனிதர்களைப் புரிந்து கொன்கின்ற சாதரண மனிதர்களும் இருந்தார்கள்.

தமிழ் மக்களிடையிலான இந்தப் பிரிவினைகளை வைத்து அதில் லாபமடைந்த இலங்கை அரசின் செயற்பாடுகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்த பேரினவாதச் சிந்தனையின் தோற்றம் பற்றியும் அங்கங்கு சொல்லிச் செல்கிறார். தோள்சீலைப் போராட்டம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் நடந்ததென்பது எனக்கு புதிய தகவலாயிருந்தது.

இந்தச் சம்பவங்களின் தொகுப்பில் ஒரு விடயம் இன்னமும் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. 
பள்ளிக்கூடத்திற்கு புது சட்டை அணிந்து வந்த போது அதைப் பொறுக்காது வாழை மடலால் அடித்து ஆடையை கறை படச் செய்வதெல்லாம் எவ்வளவு வக்கிரம் அதுவும் ஒரு ஆசிரியர் அதைச் செய்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம் அல்லவா. இந்த தடித்தனம்தான் தங்களை ஆண்ட சாதிகளாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நம் காலத்தின் முன்னால் நடந்த இந்த மோசமான அடக்கு முறை பற்றியும் எம் வலாற்றில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதாகவிருக்கிறது. அந்த வரலாற்றின் மிகச் சிறியதொரு பகுதியை பதிவு செய்த வகையில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‘நினைவழியா வடுக்கள்’ முக்கியம் பெறுகிறது. இன்றைய புத்தக தினத்தில் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 
 
Dear friend, You are invited to the ”late Kalaichelven's Memorial Day” meeting . In this even :-we will be introducing three books:
1. Sri Ranjanai- Canada (short stories)
2. Siva Sinappodi- France (autobiography) 3. The Full Collection of Kalaichelven's work.
Sri Ranjanai(Canada ), Siva Sinappodi (France), Luxmy (France) will be participating. On Saturday 27th April '19, from 3pm to 7.30 PM at London Tamil Sangem ,
369, High Street North Manor Park, Eastham. E12 6PG (Near Eastham station on the high street road). Please come on time and participate in this event. For more information contact 07817262980
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நீங்கள் சாதியத்தினூடாக அனுதாபத்தை பெற முயற்சிற்பதாக தெரிகிறது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.