Jump to content

Recommended Posts

விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம்  கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. 

இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை "ஊர்ல  உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு" என்று பரிகாசித்தாள் கல்யாணி. "சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு" என்று சொன்னவனை, "என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி.

"இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ?, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ?, வேறு ஏதும் சொத்தோ?. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே?" என்றவனை "ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினாள் கல்யாணி. 

குளிக்கும் போதும் மீண்டும், மீண்டும் அந்தக் கனவு பற்றியே சிந்தித்த அவன் மனம் அவனைச் சிட்னியை விட்டுத் தாயகத்தில் யாழ்ப்பாணத்துக்கு - கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது.

(புதையலுக்கான தேடல் தொடரும்...)
 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மல்லிகை . நாங்களும் சேர்ந்து புதையலை தேடுகிறோம் ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதையலுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 2):

யாழ்ப்பாணத்திலே பசுமையான தோட்டவெளிகளும், வீதிகளின் இரு மருங்கே நிழல்தரு மரங்களும், ஆலயங்கள் பலவும் நிறைந்த சொர்க்கபுரி போன்ற ஓர் ஊரிலே கண்டிப்பான ஓர் அதிபருக்கும், ஆசிரியைக்கும் ஏகபுதல்வனான வசந்தனுக்கு அவனை விட இரு வயது கூடிய சகோதரி மட்டுமே இருக்கிறாள். அவனை ஒரு புகழ்பெற்ற வைத்தியராக்குவதே பெற்றோரின் நெடுநாள் கனவு. எனினும் வசந்தனின் இலட்சியம் தான் ஒரு கணக்காளனாக வருவதே. எனவே, பெற்றோரின் வற்புறுத்தலையும் மீறி உயர்தர வகுப்பில் வணிகவியல் துறையைத் தேர்ந்தெடுத்த அவன் 1999ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவுக்கும் தகுதி பெற்றான்.

எனினும், இதனால் பெற்றோருக்கு அவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு இன்னொரு விடயத்தால் மேலும் அதிகரித்து முற்றியது; அதே 1999ஆம் ஆண்டு தானும், தன்னுடன் உயர்தர வகுப்பில் படித்த கல்யாணியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கும் விடயத்தைத் தன் பெற்றோருக்குத் தெரிவித்த வசந்தன் அவர்களது மனப்பூர்வமான சம்மதத்தைக் கேட்டபோது வீடே அல்லோலகல்லோலப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் யாழ்பாணத்துப் பெற்றோரின் வழமையான 'காதலிப்பது கேவலமான, கௌரவமற்ற ஒன்று' என்ற மனநிலையில் அவனது காதலைக் கடுமையாக எதிர்த்த அவர்கள், கல்யாணி வீட்டாருக்கு இவர்கள் காதலிக்கும் விடயத்தைக் கூற அவர்களும் இவர்கள் காதலுக்குச் சம்மதிக்கவில்லை. எனவே வசந்தனும், கல்யாணியும் அவரசமாகப் பதிவுத்திருமணம் செய்துகொண்டமை இருவீட்டாரின் வெறுப்பை மட்டுமல்ல, ஊரார் பலரின் புறக்கணிப்புக்கும் ஆளாயினர்; பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராகக் காதலித்து இவர்கள் எடுத்த இந்த முடிவு தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஓர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடுமே என்ற கிராமத்தாரின் மனநிலை தான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம். 

பல்கலைக்கழகக்  கல்வியுடன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கும் தயாராக வேண்டிய நிலையில் இருந்த இந்த இளஞ்சிட்டுக்கள், தங்கள் வாழ்க்கையைப் பெற்றோர், மற்றும் உறவினர், ஊரவருடன் கூடிக் கொண்டாடி நடத்த முடியாத வேதனையில் தாம் இதுவரை சுதந்திரப் பறவைகளாகச் சிறகடித்துத் திரிந்த யாழ் மண்ணை விட்டுப் பிரிந்துசெல்ல முழுமனதின்றி கொழும்பு சென்றன, தாம் புது வாழ்க்கை அமைக்கப் புதிய களம் தேடி. தாம் நேசித்த செம்மண்ணின்  வாசனையை நுகரவும், கோவில் மணியோசையும், கூடவே கூவிய சேவலும் அலாரமடித்துத்  தூக்கம்கலைக்கவும் இனிச் சில தசாப்தங்கள் ஆகுமென அறியாமல், மோட்டார் வண்டிகள் உமிழும் புகையின் 'சுகந்தத்தை' நுகரவும், பொழுது சாய்ந்ததும் குருவி நுழையப் பெரு மரத்தின் சிறு பொந்து போன்ற 'அப்பார்ட்மென்ட்' வாழ்க்கையை அனுபவிக்கவும் கொழும்பு நகரில் காலடி வைத்தனர். 

(தேடல் இன்னும் தொடரும்... தேடலுக்கு உத்வேகமூட்டிய உறவுகளுக்கு நன்றி! 😊)

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 3):

இவ்வாறு புதையல் பற்றிய கனவு மூலம் பழைய நினைவுகளில் புதையுண்ட வசந்தனை "என்னப்பா, இன்னுமா குளிச்சு முடிக்கேல?! உங்கையும் ஏதும் கனவில இருக்கிறீங்களோ? இல்லை... உதுக்குள்ள ஏதும் புதையல் தேடுறீங்களோ?!" என்று கிண்டலாகவும், அவசரத்துடனும் கேள்விக்கணைகளைத் தொடுத்த கல்யாணி "7 மணியாகப் போகுதப்பா; கெதியா வாங்கோ" என்றாள். 

**************************

மனைவிக்கும், பள்ளிக்கு வெளிக்கிட்டுக்கொண்டிருந்த தனது ஒரே பிள்ளைச்செல்வம் அனந்தனுக்கும் முத்தமிட்டுவிட்டுத் தனது டொயோட்டா கமேரியில் ஏறி வேலைக்கு விரைந்தான் வசந்தன். வண்டியின் திருப்புச் சக்கரத்தில் அவனது கை கவனமாகத்  திருப்பியும், சுழற்றியும் இயங்கிக்கொண்டிருந்தாலும், அவனது மனம் மீண்டும், மீண்டும் கனவை எண்ணிச் சுழன்று அவனது ஊர், ஒரு வருடக் கொழும்பு வாழ்க்கை, கடந்த 19 வருட கால இயந்திரமயமான சிட்னி வாழ்க்கை என்று பல நினைவுகளை அவன் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. 

விருப்பமின்றி, சந்தர்ப்ப சூழ்நிலையால் தமது இருபதாவது வயதில் கொழும்பு வந்த  வசந்தனுக்கும்,கல்யாணிக்கும் ஆதரவாக அவர்களது யாழ்ப்பாண நண்பர்கள் மூலம் கிடைத்த சில மூத்த நண்பர்கள் இருந்தாலும், நாட்டின் அரசியல் கெடுபிடிகளின் தாக்கத்தை மேலும் உணர்ந்த அவர்கள் வெளிநாடு செல்வதே மேல் என்று தீர்மானித்தார்கள்.  எனினும், வசந்தனுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான உயர்கல்வி விசா புலமைப் பரிசிலுடன் ஒரு வருடத்தில் கிடைத்தது. கல்யாணி தனித்து விடப்போகிறாளே என்று யோசித்தபோது தான் கொழும்பில் விதவைத் தாயாகத் தனது இரு சிறு மகன்களுடன் வசித்துவந்த வசந்தனின் சித்தி ரஞ்சனி அவளைத் தனது வீட்டில் தங்குவதற்கு இடமளித்தாள்.

கற்பதற்கு சிட்னி வந்த வசந்தன் தனது மூன்று வருட வணிகக்கல்வியை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் மிகச் சிறப்பாக முடித்து உதவிக் கணக்காளராக முதலாவது வேலையை ஆரம்பித்து, அவுஸ்திரேலியா நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுக்கொண்டான். அந்த 3, 4 வருட காலப்பகுதியில்  படிப்பு, பகுதி நேர இரவு வேலை என அவன் பட்ட கஷ்டங்களும், அவன் மிகவும் நேசித்த தாய் மண்ணையும், புது மனைவி கல்யாணியையும், உதவி செய்த சித்தியையும் பிரிந்து ஓர் அந்நிய தேசத்தில் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும், ஒட்டாத அந்த வாழ்வும் தாய் மண், உறவுகள் பற்றிய அவனது பார்வையை வெகுவாக மாற்றியது. 

காதலித்த குற்றத்திற்காக ஒதுக்கிய உறவுகளும், ஊரவரும் மனித உணர்வுகளை மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமாகவும், அவுஸ்திரேலியப் பழங்குடியினரிலும் (இவர்களைப் பற்றி பின்னாளில் அவன் வாசித்த போது அவர்களின் மேன்மையைப் புரிந்துகொண்டது வேறு கதை!)  கீழான மனிதராகவும் அவன் பார்வையில் தென்படத்தொடங்கினர். இந்தப்பார்வை அவனது ஊரவர் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த யாழ்பாணத்தவர் மீதான  வெறுப்பாகவும், இன்னும் மொத்த தமிழ்ச் சமுதாயம் மீதான வெறுப்பாகவும் படிப்படியாக விரிந்து சென்றது. எனவே சிட்னியிலும் அவனது நண்பர்கள் என வெள்ளை, சீன இனத்தவர்களையே பல்கலைக்கழகத்திலும், வேலையிடத்திலும் சேர்த்துக்கொண்டான். நம்மவர்களுடன் பேசிப் பழகுவதை முடிந்தவரை தவிர்த்த அவனுக்கு ஒரு சில யாழ்பாணத்து நண்பர்களே இருந்தனர். 

தனது காதல் மனைவி கல்யாணியை குடும்ப விசாவில் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த சில வருடங்களில் அழைத்தது, மகன் பிறந்தது, அவன் பள்ளி செல்ல ஆரம்பித்தது என வேகமாகக் காலம் உருண்டோடிய பின்னரும் வசந்தனுக்கு நம்மவர்கள் மீதான வெறுப்புத் தணியவில்லை. பல்லின மக்கள் வாழும் சிட்னியில் நம்மினமும் ஓர் சிறந்த இனம் என்பதையும், நம் பழமையையும் மறந்து தான், தன் குடும்பம், வேலை, சில பல்லின நண்பர்கள் என தனது வட்டத்தைச் சுருக்கிக்கொண்டான். எனினும், அவனது வாழ்வின் அடித்தளம்  யாழ்ப்பாணத்திலேயே இடப்பட்டதாலும், ஒப்பீட்டளவில் மனைவி கல்யாணி நாட்டுக்குப் புதியவள் என்பதாலும் அவுஸ்திரேலிய வழி வாழ்க்கைமுறைக்கு முழுமையாக அவனால் மாறவும் முடியவில்லை. எனவே இரண்டும்கெட்டானான வாழ்க்கையொன்றையே அவன் இதுநாள் வரை சிட்னியில் வாழ்ந்து வருகிறான்.

இவ்வாறு நெடுதூரம் தாவியோடும் கங்காரு போல் வசந்தனின் மனம் கடந்த கால நினைவுகளைத் தொட்டுக்கொண்டு அலைபாய அவனது மோட்டார் வண்டியும் அவனது வேலைத்தளத்தை அடைந்தது. 

(தேடல் இன்னும் தொடரும்...) 

Link to comment
Share on other sites

On 2/28/2019 at 3:26 AM, suvy said:

தொடருங்கள் மல்லிகை . நாங்களும் சேர்ந்து புதையலை தேடுகிறோம் ......!   😁

 

On 2/28/2019 at 8:13 AM, புங்கையூரன் said:

மல்லிகையின் வாசம்... தொடரட்டும்.....!

 

On 2/28/2019 at 8:59 PM, putthan said:

புதையலுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்

ஊக்கத்திற்கு நன்றி சுவி அண்ணா, புங்கையூரான், புத்தன். தேடல் தொடரும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைவாசம் உங்கள் புதையலை வாசிக்கும்போது  நேர்த்தியானபடைப்பை உணர்த்துகிறது. எழுதுங்கள் முழுமையாக வாசித்தபின்னர் மேலும் உணர்வதை எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, வல்வை சகாறா said:

மல்லிகைவாசம் உங்கள் புதையலை வாசிக்கும்போது  நேர்த்தியானபடைப்பை உணர்த்துகிறது. எழுதுங்கள் முழுமையாக வாசித்தபின்னர் மேலும் உணர்வதை எழுதுகிறேன்.

வாசித்துக் கருத்திட்டமைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி, சகாறா அக்கா.

உங்கள் கருத்துக்கள் நேர்த்தியாக எழுதவேண்டும் என்ற பொறுப்புணர்வைத் தந்துள்ளது! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதையலைத்தேடி மல்லிகை வாசத்துடன் நாமும் பயணிக்கிறோம். தொடருங்கள்

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 4):

மாலையில் வீடு திரும்பிய வசந்தன் இராப்போசனம் முடிந்ததும் மனைவியுடன் தனது கனவைப் பற்றிய பேச்சை மீண்டும் ஆரம்பித்தான். "கல்யாணி, இண்டைக்கு முழுக்க மனம் ஒரு நிலையில் இல்லை. வேலையிலும் முழுக்கவனம் செலுத்த முடியேல. பழைய ஞாபகங்கள் எல்லாம் மண்டையைப் போட்டுக் குடையுது" என்று பெரு மூச்சுடன் சொன்ன வசந்தனிடம் "என்னப்பா, இன்னும் அந்தப் புதையலைத் தோண்டி முடியேல்லையோ? சும்மா பேசாம விடுங்க. டீவில நாடகம் தொடங்கப் போகுது" என்று கல்யாணி அவசரமாகச் சொல்ல, இடைமறித்து வசந்தன் "நீர் இஞ்ச வந்த நாள் தொடக்கம் ஒரே நாடகமாத் தான் எங்கட பொழுது போகுது. வாழ்க்கை ஒரே நாடகமேடை எண்டு சொன்னாலும் சொன்னாங்கள். அதை பிழையாய்ப் புரிஞ்சுகொண்டீர் போல. எங்கட வாழ்க்கையே ஒரே நாடகமாய்த் தானே போய்க்கொண்டிருக்கு" என்று சலிப்புடன் சொன்னான். 

"ஏன் நீங்களும் தானே நாடகம் பார்க்கிறீங்கள்? உள்ள சொந்த பந்தம் எல்லாம் வேண்டாம். நாடகம் பார்த்தாலே சொந்தங்களோட உறவாடினமாதிரி இருக்கு எண்டு ஒரு காரணம் வேற சொல்லிக்கொண்டு" என்று முறைப்பான சிரிப்புடன் சொன்ன கல்யாணிக்கு "சரி அதை விடுமப்பா. இந்தக் கனவிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கு. இன்னும் என் மனசில நல்லாப் பதிஞ்சிருக்கு" என்று ஆழ்ந்த யோசனையுடன் சொன்ன வசந்தனிடம் "சரியப்பா, இப்ப என்ன புதையல் தானே? ஊருக்குப் போய்க் கிண்டிப் பாருங்கோவன். பெரிய தொகை கிடைச்சா எங்கட மோர்ட்கேஜ்ம் வெள்ளணக் கட்டி முடிக்கலாம்" என்ற கல்யாணி "அது சரி, ஊருக்குப் போற பிளைட் டிக்கெட் காசாவது புதையல்ல கிடைக்கும் தானே?... ஹிஹிஹி" என்று சிரித்தபடி குரலைத் தாழ்த்திச் சொன்னாள். "பகிடியை விடும் கல்யாணி, ஊருக்குப் போகத் தான் வேணும். எண்டாலும் 20 வருசத்துக்குப் பிறகு போறன். அங்க போய் எப்படிச் சமாளிக்கப் போறனோ தெரியல்ல. நீரும், வரேலாது. அனந்தனோட படிப்பைப்பார்க்க வேணும்" என்றவனிடம் "உங்கட ரஞ்சனிச் சித்தி இப்ப யாழ்ப்பாணத்தில தானே இருக்கிறா. அவ கொழும்பில இருக்கேக்க எங்களுக்கு உதவி செய்தவ தானே. மகன்மாரும் வளர்ந்து பெரியவங்களாகி விட்டாங்கள் தானே." என்று நினைவூட்டினாள் கல்யாணி. 

"ம்... எல்லாம் உமக்கு நினைவில இருக்கு என்ன?!" என்று அதிசயமாகப் புன்னகைத்தபடி கேட்ட வசந்தனை "ஓமோம், அவங்க செய்த உதவியை மறக்கக் கூடாது தானே?" என்று கல்யாணி சொல்ல "நீர் சொல்லுறதைப் பார்த்தால் செய்த உதவிக்காக மறக்கக்கூடாது என்ற அர்த்தத்தோட சொல்லுறதாத் தெரியல்ல. இனிக் கிடைக்கப் போற உதவிக்காகத் தான் மறக்கக் கூடாது என்று சொல்லுற போல இருக்கு" என்று கிண்டலடித்தான் வசந்தன். "என்னில எப்படியாவது பிழை கண்டுபிடிப்பதே உங்க வேலையாய்ப் போச்சு. சரி இனியும் நேரத்தை மினக்கெடுத்தாமல் கெதியா ஊருக்கு பிளைட் டிக்கெட்டைப் போடுங்கோ" என்று அவசரப்படுத்திய கல்யாணி "போகேக்க உங்கட வீட்டையும் ஒருக்கா எட்டிப்பார்த்திட்டு வரலாமே" என்று சிரிப்புடன் சொல்ல "இல்லையப்பா, அது சரி இல்லை. இவ்வளவு காலமாகியும் எண்ட அம்மா, அப்பாவோ, அக்காவோ எங்களை நாயென்றும் மதிக்கிறதில்லை. அவை இப்ப லண்டன்ல செட்டில் ஆகியும் கூட மாறேல. சும்மா பூட்டிக்கிடக்கிற வீட்டுக்குப் போய் ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான். ஊரவங்களுக்கு என்மேல கடுப்பு என்னும் இருக்குமோ என்னவோ" என்று உதட்டை விரித்தபடி சொன்னான் வசந்தன்.

"இல்லை, ஒருவேளை புதையல் உங்கட வீட்டு வளவில் தான் என்று இருந்தால்?" என்று விழிகளை உயர்த்தியபடி புன்னகைத்து கல்யாணி சொல்ல, "அப்படி இருந்தால் அது கனவில கூட வராது" என்று தடித்த தொனியில் வேகமாகப் பதிலளித்தான். "சரி எதோ பார்த்துச் செய்யுங்கோ. நானும் அனந்தனும் படுக்கைக்குப் போறம். குட் நைட் பா" என்று சொல்லிவிட்டு அடுத்த அறையிலே பள்ளிப்பாடங்களைச் செய்துகொண்டிருந்த அனந்தனிடம் சென்றாள் கல்யாணி. அந்நிய நாடொன்றுக்கு உல்லாசப்பயணம் செல்லும் வெள்ளைக்காரன் மனநிலையில் வசந்தன் விமான நுழைவுச்சீட்டைப் பதிவுசெய்வதற்காக மடிக்கணணியைத் திறந்தான் வசந்தன்.

(தேடல் தாய் மண்ணில் தொடரும்...) 

  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 3:38 AM, மல்லிகை வாசம் said:

விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம்  கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. 

எனக்கு கனவு காண்பதில் அலாதி பிரியம்.முழித்த பின்பும் கனவு நினைவில் தொடரும்.
சில கனவுகள் ஏனடா முழித்தோம் என்றிருக்கும்.

யுத்தம் நடந்த காலங்களில் கனவு காண்பது மட்டுமல்ல அதிலும் பங்கு கொள்வேன்.

அனேகமான இரவுகளில் ஓடடா சுடடா என்று எழும்பி சுவருக்கு உதைந்து அடித்த நாட்கள் எத்தனையோ.

இரவிரவாக செய்திகளைப் பார்க்கிறது படுக்கேக்கை திருநீறும் பூசுறல்லை என்று விடிய எழும்பி அரிச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில கனரக வாகனங்ளெல்லாம் கொண்டு புதையலைத் தேடுகிறார்கள்.

அனந்தன் என்ன தான் தோண்டப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலா இருக்கு, புதையல் தேடப்போய் பூதம் வராமல் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புதையலைத்தேடி ... நாங்களும்  ஆர்வமுடன்  ... தொடருங்கள்.

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 5 )

முகநூலுக்கு முற்பட்ட காலத்தில் தாய்மண்னை விட்டு வெளியேறிய வசந்தன், முழு உலகமும் அதன் பாவனை வியாபித்திருக்கும் தற்காலத்தில் முதன் முறையாக மீண்டும் யாழ் மண்ணில் ஓர் குளிர்கால மாலைப்பொழுதில் காலடி வைக்கிறான். சித்தி ரஞ்சனியின் மூத்த மகன் சிவா அவனை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தான். யாழ் டவுனிலிருந்து ஓர் வாடகைக்காரில் ரஞ்சனிச்சித்தியின் வீட்டுக்கு வசந்தனின் பயண மூட்டைகள் சகிதம் இருவரும் பயணிக்கின்றனர். சிட்னியின் கோடைகால வெயிலில் கடந்த சில வாரங்களைக் கழித்தவனுக்கு காரின் ஜன்னல்களினூடு பாய்ந்த இளந்தென்றல் காற்று இதமாக இருந்தது. 

ராஜா தியேட்டரைத் தாண்டிச் செல்லும்போது 'பேட்டை' படம் பார்ப்பதற்கு இளைஞர்கள் பலர் முண்டியடித்துச் செல்வத்தைப் பார்த்தான். அங்கே தான்அவன் கடைசியாக ரஜினியின் 'படையப்பா' படம் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 20 வருடங்களில் ரஜினி படங்களின் கதையில் அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லையே என உள்ளூர நகைத்த அவன் தன் வாழ்க்கையும், தனது தாய்மண்ணும் பாரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன என்பதை உணர்ந்தான். துவிச்சக்கர வண்டிகளும், உந்துருளிகளும் ஆதிக்கம் செலுத்திய காங்கேசன்துறை வீதியில் தற்போது பல்வேறு வகை மோட்டார்வாகனங்கள் கடுகதியில் பாய்ந்து செல்வது அவனுக்குப் புதிதாக இருந்தது. சல்வார், ஹமீஸ் அணிந்த நமது நங்கையர் பலரைக் காணும்போது தான் ஏதோ இந்தியத் தமிழ்த்திரைப்படத்தையோ அல்லது, இந்திய கலாசார நிகழ்வில் கலந்துகொள்ளும் உணர்வைக் கொடுத்தது! 

இவ்வாறு யாழ் நகரின் காட்சிகளில் வசந்தன் லயித்திருக்க, வாடகைவண்டி அவனது கிராமத்துக்குள் நுழைந்தது. விவசாயக் கிராமமான அதன் இயற்கை அழகு குன்றாமல் இருந்தாலும் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயங்கள், புதிதாக முளைத்த பல்பொருள்  அங்காடிகள், அழகுசாதனக் கடைகள் எனப் புதுப்பொலிவுடன் வசந்தனின் பார்வையில் காட்சியளித்தது. இங்கே தான் அவனது பிறந்த வீடும், தற்போது அவனது சித்தியின் குடும்பத்தினர் வாழும் வீடும் சில நிமிடங்கள் நடை தூரத்தில் இருக்கின்றன. ரஞ்சனிச் சித்தி வீட்டு பிரதான வாயிலின் முன்னால் அவர்களது வண்டி சென்றடைந்த கணமே வண்டிச் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் சித்தி. அவளைக் கண்டதும் பயணக்களைப்பையும் மீறி உற்சாகமாகக் குழந்தை போல வண்டியிலிருந்து இறங்கி ஓடி வந்து அவளை கட்டியணைத்துக்கொண்டான் வசந்தன். ஊருக்குள் நுழைந்த போது அவன் மனதில் தோன்றிய ஒட்டுமொத்த வெறுப்புணர்வையெல்லாம் ஈடு செய்வது போல் அந்த அன்பான அணைப்பு இருந்தது; அவன் அங்கு வர ஒரே காரணமாக இருந்தவள் அவனது அம்மாவின் சொந்தத் தங்கையான அவள் அல்லவா!

******************

அன்றிரவு இராப்போசனத்தை சித்தியுடனும், அவளது மகன்மார் சிவா, நரேன் ஆகியோருடனும் எடுத்த பின் பரஸ்பரம் இரு குடும்பத்தாரின் சுகங்களை விசாரித்துக்கொண்டனர். ஊர்ப்புதினங்களும், அவுஸ்திரேலியப் புதினங்களும் பரிமாற்றப்பட்டன. சிவாவும், நரேனும் மறுநாள் தூர இடத்திற்கு வேலைக்குச் செல்லவேண்டி இருந்ததால் சிறிது நேரத்திலேயே படுக்கைக்குச் சென்றுவிட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சித்தியைக் கண்ட சந்தோஷம் வசந்தனின் பயணக்களைப்பை நீக்கவே அவனும் சித்தியுடன் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தான். 

பேச்சின் இடையே சித்தி கேட்டாள் "தம்பி, நீர் ஊருக்கு வந்தது உங்கட அம்மா (ரஞ்சனியின் அக்கா), அப்பா, அக்காவுக்குத் தெரியுமா"? 

"இல்லைச் சித்தி, உங்களுக்குத் தெரியும் தானே? அவை இப்பவும் என்னை ஒதுக்கித் தான் வச்சிருக்கினம். நாங்கள் அவையோட  இப்பவும் பேசுறதில்லை" என்று சொன்ன வசந்தன் "நான் உங்கட வீட்டை தங்குறது அவங்களுக்குத் தெரியாது. இதனால உங்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லையே சித்தி?" என்று பரிதாபமாய்க் கேட்டான். 

"இல்லை தம்பி, எனக்கும் வயது போகுது... இனி எனக்கென்ன பிரச்சினை வரப் போகுது? அக்காவும் எப்பவாவது இருந்திட்டு ஒருக்காத் தான் கோல் எடுத்துக் கதைப்பா. அங்கையும் அவையும் ஒரே பிசியாத் தானே இருப்பினம்" என்று சொன்னவள் "நீர் அவையோட கதைக்க முயற்சித்தனீரோ?" என்று கேட்டாள்.

"இல்லைச் சித்தி, அவை தானே நானும், கல்யாணியும் அப்ப யாழ்ப்பாணத்தில இருக்கும் போதே எங்களை ஒதுக்கி வச்சிட்டினம். பிறகெண்டாலும் என்னையோ, கல்யாணியையோ தொடர்புகொள்ள முயற்சிக்கேல்ல. அதால, நாங்களும் பேசாமல் விட்டுட்டம்" என்று உள்ளுர எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொன்னான் வசந்தன். 

"சரி தம்பி, நடந்தது நடந்து போச்சு. மூளையைப் போட்டுக் குழப்பதையுங்கோ. உங்களுக்கு நானும், என் மகன்களும் இருக்கிறம். கன நாளைக்குப் பிறகு வந்தனீங்கள், சந்தோஷமா ஊரைப் பார்த்திட்டுப் போங்க" என்ற சித்தி "நாளைக்குக் காலையில பக்கத்தில இருக்கிற கோயில்களுக்குப் போய்ட்டு வருவம். பிறகு எனக்கு தோட்டப்பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொன்னாள்.  "தோட்டவேலையா? யாருடைய தோட்டம்" என்று உடனே இடைமறித்துக் கேட்டான் வசந்தன். 

"இப்ப போன மாதம் தான் தோட்டக்காணி ஒரு துண்டை வாங்கினனாங்கள். கனடாக்காரர் ஒராள் தான் வந்து வித்திட்டுப் போனவர். எனக்கும் பொழுது போகவேணுமெல்லோ. சும்மா இருக்காமல் மரவள்ளித் தோட்டம் போடலாம் எண்டு யோசிக்கிறன்" என்றாள் சித்தி. 

உடனே வசந்தன் "அப்படியா சித்தி, நானும் நாளைக்கு தோட்டப்பக்கம் வரலாமா? நிறைய நாளைக்குப் பிறகு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தமாதிரியும் இருக்கும், உங்களுக்கு உதவியாவும் இருக்கும்" என்றான் உற்சாகமாக, தனது புதையல் பற்றிய கனவை மனதில் எண்ணிக்கொண்டு. 

"உங்கட விருப்பம் தம்பி, நான் ஏன் தடுக்கப் போறன்?" என்று சிரித்தபடியே ஆமோதித்த சித்தி "சரி தம்பி, உங்களுக்கும் நித்திரை ஒழுங்கில்லாமல் இருந்திருக்கும். போய்ப்படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்கோ" என்று சொல்ல "சரி சித்தி, குட் நைட்" என்று சொல்லிவிட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றான் வசந்தன்.

(தேடல் இன்னும் தொடரும்...) 

  •  
Link to comment
Share on other sites

On 3/4/2019 at 3:30 AM, ஈழப்பிரியன் said:

என்ன தான் தோண்டப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளோம்.

 

On 3/3/2019 at 1:18 AM, Kavallur Kanmani said:

புதையலைத்தேடி மல்லிகை வாசத்துடன் நாமும் பயணிக்கிறோம். தொடருங்கள்

 

On 3/4/2019 at 4:05 AM, ஏராளன் said:

ஆவலா இருக்கு, புதையல் தேடப்போய் பூதம் வராமல் இருந்தால் சரி.

 

On 3/4/2019 at 9:47 AM, நிலாமதி said:

உங்கள் புதையலைத்தேடி ... நாங்களும்  ஆர்வமுடன்  ... தொடருங்கள்.

புதையலுக்கான தேடலை வாசித்து, சோர்ந்துவிடாமல் தொடர்ந்து தேட உற்சாகமூட்டிய உறவுகளுக்கு நன்றி. 😊 தேடல் மீண்டும் நாளை தொடரும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2019 at 1:38 AM, ஈழப்பிரியன் said:

எனக்கு கனவு காண்பதில் அலாதி பிரியம்.முழித்த பின்பும் கனவு நினைவில் தொடரும்.
சில கனவுகள் ஏனடா முழித்தோம் என்றிருக்கும்.

யுத்தம் நடந்த காலங்களில் கனவு காண்பது மட்டுமல்ல அதிலும் பங்கு கொள்வேன்.

அனேகமான இரவுகளில் ஓடடா சுடடா என்று எழும்பி சுவருக்கு உதைந்து அடித்த நாட்கள் எத்தனையோ.

இரவிரவாக செய்திகளைப் பார்க்கிறது படுக்கேக்கை திருநீறும் பூசுறல்லை என்று விடிய எழும்பி அரிச்சனை.

உங்கள் கனவு...அதிகமாகக் கறுப்பு வெள்ளையில் வருமா....அல்லது ஈஸ்மன்ற் கலரில் வருமா....?
நினைவிருந்தால் சொல்லுங்கள்,  ஈழப்பிரியன்!
நான் கேட்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது....!

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 6 )

மறுநாள் காலையில் வசந்தனும், சித்தியும் அவர்களின் ஊரிலுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். சிட்னியில் கோயில்கள் இருந்தாலும் அவன் அவ்வப்போது வரும் ஏதும் விஷேட தினங்களில் மட்டும், அதுவும் நேரமிருந்தால் குடும்பத்துடன் சென்று வருவான். அன்றும் அவனின் அன்புச்சித்தி விரும்பியபடியே ஒரு கடமைக்காக போய் வரலாம் என்று சென்றவன் புனருத்தாரணம் செய்யப்பட்டு வித்தியாசமாகக் காட்சியளிக்கும் கோயிலின் கோபுரங்களையும், சிற்ப, ஓவிய வேலைப்பாடுகளையும் சிட்னி ஓபரா ஹௌசை இரசிக்கும் ஓர் வெளிநாட்டுப் பயணிபோல் ஆச்சரியமாக உற்றுப்பார்த்தான், ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டான். 

20 வருடங்கள் கழித்து அவன் ஊருக்கு வந்திருப்பதால் கோவில்களில் பலரும் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவனுக்குத் தெரிந்த முகங்களும் இப்போது நடுத்தர, முதிய வயதை எட்டியிருந்தனர். சித்தி அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவே சில முதியவர்கள் கட்டித்தழுவிச் சுகம் விசாரித்தது அவனுக்குப் புதுமையாக இருந்தது. பழைய நினைவுகள் அவன் மனதில் எட்டிப்பார்த்து அவனை அவர்களுடன் மனம்விட்டுப் பேசவிடாமல் செய்தது. எனவே, அவனை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலர் அவனோடு பேச வந்தபோது ஓரிரு வார்த்தைகளில் சம்பாஷணையை முடித்துக்கொண்டு விலகிச் சென்று இறைவனை வழிபடுவதாகப் பாசாங்கு செய்தான். ஒரு கோவிலில் 50 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி "முந்தின அதிபரின்ர ஓடிப்போன மகன் வந்திருக்கு" என்று இன்னொரு பெண்ணின் காதில் மெதுவாகக் கிசுகிசுத்தபடி வெளியே சென்றதும் அவனது காதில் விழுந்தது. வந்த கோபத்தை சித்திக்காக அடக்கிக்கொண்டு இருந்தவனை அங்கு வாசிக்கப்பட்ட நாதஸ்வர இசை சற்று ஆறுதல்படுத்தியது.

பூஜை முடிந்து அய்யர் கொண்டுவந்த தீபத்தில் எழுந்த கற்பூர வாசமும், பிரசாதமாக வழங்கப்பட்ட விபூதி, சந்தன, மல்லிகை மலர்களின் வாசமும் அவன் ஆவியை வருடி முகத்தில் புதுவித மலர்ச்சியை ஏற்படுத்தின. சிட்னியில் அவன் வீட்டிலும் மல்லிகைச் செடி உண்டு; எனினும் இது போல் இந்த அளவுக்குத் தெய்வீகமான வாசனையை அங்கே அவை தரவில்லை என்று அவனுக்குப்பட்டது. வசந்தன் இறைவனை பொறுமையாக வழிபட்டானோ இல்லையோ, கோயிற்சூழலில் அவனுக்குக் கிடைத்த இவ்வாறான இனிய அனுபவங்கள் அவனுக்குத் தெய்வீக உணர்வு போன்ற ஒரு மனநிலையைக் கொடுப்பதை உணர்ந்தான். எனினும் சித்தியுடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது அந்த 'கொஸிப் அடித்த அன்ரியை' மீண்டும் கண்டதும் அந்தத் தெய்வீக உணர்விலிருந்து விடுபட்டான்!

***************************

மதிய உணவை சித்தியின் வீட்டில் முடித்துக்கொண்டு சித்தியும், வசந்தனும் சித்தியின் தோட்டத்துக்குச் சென்றனர். சித்தியின் வீட்டருகே இருந்த அந்தத் தோட்டக்காணியைக் கண்டதும் தான் கனவில் கண்ட புதையல் இங்கு இருக்கலாமோ என்று யோசித்தான். சித்தியிடம் தனது கனவைச் சொல்லவும் தயக்கமாக இருந்தது; நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த ஓர் உண்மையான சொந்தத்தை கனவில் கண்ட புதையலுக்காக இழக்க அவன் தயாராக இல்லை. இவ்வாறு இவன் சிந்திக்கையில் "தம்பி, போன மாதம் வாங்கினதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா நானும், மகன்மாரும் இந்தக் காணியை ஒரு மாதிரி துப்புரவு பண்ணிட்டம். இனிமேல் நிலத்தை கொத்தி, உழுது மரவள்ளிக் கட்டைகளை நட தயாராக்க வேணும். மகன்மார் சனி, ஞாயிறில தான் லீவில இருப்பங்கள். எனக்கும் பொழுது போக வேணுமே" என்று சித்தி சொல்ல "சரி தான் சித்தி, அப்ப நிலத்தை நீங்களா கொத்தப் போறீங்க?" என்று வசந்தன் கேட்டான்.

"ஓம் தம்பி, எனக்குப் பழகிப் போச்சு. முந்தி எங்கட ஐயா, அம்மா தோட்டம் செய்யேக்க நானும், உங்கட அம்மாவும் தோட்ட வேலை செய்து போட்டுத்தான் பள்ளிக்குப்போறது." என்று சொன்ன சித்தியை இடைமறித்து "பரவாயில்ல சித்தி, நான் உங்களுக்கு உதவி செய்யுறன்" என்று சொல்லிக்கொண்டு மண்வெட்டியை எடுக்கப் போனான் தன் வீட்டில் மனைவிக்கு மரக்கறி வெட்டிக்கொடுக்கச் சோம்பலுறும் வசந்தன்! "இஞ்ச தம்பி, விடுங்கோ. உந்த மண்வெட்டியைத் தந்திட்டு அந்தக் குந்தில போய் இருங்கோ. சித்தி கொத்துறன். பேச்சுத்துணைக்கு நீங்க சும்மா கதைச்சுக்கொண்டு மட்டும் இருங்கோ." என்று அவன் கையிலிருந்த மண்வெட்டியை வாங்கச் சென்றாள். சித்தி எவ்வளவோ சொல்லியும் மறுத்த வசந்தன் சித்தியை அமரச் சொல்லிவிட்டு தானே நிலத்தைக் கொத்தத் தொடங்கினான். 

அவன் மனதை புதையல் கனவு கிண்டிக்கொண்டிருக்க, அந்த உற்சாகத்தில் அவனும் நிலத்தைக் கொத்தினான். சிறிது நேரம் சென்றது சித்தி மீண்டும் இடைமறித்தும் கேளாமல் கொத்திக்கொண்டே இருந்தான். அவனது பிடிவாதத்தை உணர்ந்த சித்தி அவனுக்குக் குடிக்க தேசித்தண்ணி எடுக்கச் சென்ற போது அவசர அவசரமாக அங்குமிங்கும் பல இடங்களில் நிலத்தைத் தோண்டிப் பார்த்தான். அப்போது தேசித்தண்ணி கொண்டுவந்த சித்தி "என்ன தம்பி, அதுக்குள்ள இவ்வளவு இடத்தைக் கொத்தியாச்சோ? பலசாலி தான் நீங்கள்!" என்று கூறி வியந்தாள், கனவில் கண்ட புதையல் தான் அவனுக்கு இந்த 'திடீர் பலத்தைக்' கொடுத்தது என்று அறியாதவளாய்! எவ்வளவு வேகமாகக் கொத்தினானோ அதைவிட மிக வேகமாக தேசித்தண்ணியை ஒரே வீச்சில் குடித்து முடித்தவன் சோர்வின் மிகுதியால் பொத்தென அமர்ந்தான் சிட்னியில் H&Mல் போன வாரமே வாங்கிய டெனிம் ஜீன்ஸ் மண்தரையை  முத்தமிட.

"தேவையில்லாத வேலை பார்த்து களைச்சுப் போனீங்களே தம்பி" என்று வருத்தத்துடன் சொன்ன சித்தி "வாங்கோ, இண்டைக்கு இவ்வளவும் காணும். இனி வீட்டை போய் றெஸ்ட் எடுங்கோ. பின்னேரம் எங்கட சொந்தக்காரப் பிள்ளையிண்ட மகனுக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாடுகினம். நீங்களும் வாங்கோ; உங்களுக்கும் அவை சொந்தம் தானே" என்று சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். கொத்திய மண்ணுள் கால்கள் புதையப், புதைய தேடிய புதையல் கிடைக்காத ஏமாற்றத்தோடு சித்தியைப் பின்தொடர்ந்தான் வசந்தன். அங்கும் இங்குமாகக் கொத்தப்பட்ட அந்த நிலம் அவனது மனநிலையைச் சித்தரிப்பதுபோல் காட்சியளித்தது. 

(தேடல் இன்னும் தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தட்டும் நானும் வேலியால எட்டிப் பார்த்துக்கொண்டுதான் நிக்கிறன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கொத்தட்டும் நானும் வேலியால எட்டிப் பார்த்துக்கொண்டுதான் நிக்கிறன்......!   😁

புதையல் கிடைக்குதோ என்றா அண்ணை?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ...நானும் உங்களோட இணைந்திருக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

On 3/5/2019 at 7:41 PM, ஜெகதா துரை said:

புதையலைத் தேடி உணர்வோட்டத்தோடு நகருகின்றது. தொடருங்கள். 

 

21 hours ago, suvy said:

கொத்தட்டும் நானும் வேலியால எட்டிப் பார்த்துக்கொண்டுதான் நிக்கிறன்......!   😁

🤣🤣🤣

13 hours ago, ரதி said:

தொடருங்கள் ...நானும் உங்களோட இணைந்திருக்கிறேன் 

 

வாசித்தமைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி, கள உறவுகளே... 😍

தேடல் மீண்டும் நாளை தொடரும் 😊

Link to comment
Share on other sites

புதையலைத் தேடி... (பாகம் 7 )

புதையலைத் தேடி வசந்தன் ஊருக்கு வந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவன் சித்தியின் தோட்டக்காணிக்குப் பலமுறை சென்று கொத்திப்பார்த்தும் புதையல் எதுவும் கிடைக்கவில்லை. இது தவிர அவனது ஊர் இளைஞர்கள் நடாத்திய சிரமதானத்துக்கும் சென்று நிலத்தைக் கொத்தியும், தொலைந்த பொருளைத் தேடுவது போல புல், புதர்களில் தேடியும், மரப்பொந்துகளில், வெள்ளம் தேங்கியிருந்த சிறு குழிகளில் கையை நுழைத்துத் துழாவியும் பார்த்தான்; கீரிமலை, கஸூறினா பீச் என்று சுற்றுலா சென்றபோது கடலில் முக்குளித்தும், கடற்கரை மணற்பரப்பில் நெடுநேரம் 'நடைப்பயிற்சி' செய்தும் ஏதாவது கிடைக்கிறதா எனப்பார்த்தான். இவ்வாறு தென்பட்ட இடமெல்லாம் வசந்தன் புதையல் தேடி ஆராய்ந்தது, நெடுங்காலமாக அவன் தாய்மண்ணைப் பிரிந்திருந்த குறையை எல்லாம் ஒரே வாரத்தில் மண்ணுடன் உறவாடி ஈடு செய்ய முயற்சித்தது போலிருந்தது!  

இவ்வாறு வசந்தனின் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிட, ஒரு கட்டத்தில் சலிப்படைந்த அவன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு மீண்டும் சிட்னிக்குத் திரும்பிவிடலாமா என்றும் எண்ணினான். எனினும், காலைக் கனவு மீது அவன் கொண்ட அதீத நம்பிக்கையும், சித்தி குடும்பத்தினரின் விருந்தோம்பலும் அவனைத் தடுக்கவே மேலும் ஒரு வாரம் தேடிப்பார்த்துவிட்டுப் போகலாம் என்ற முடிவுக்குவந்தான்.

காலையில் ஆவிபறக்க ஆவியை வருடும் நறுமணத்துடன் மல்லிக்கோப்பி, சிவத்த அரிசிமா அப்பம், மதியத்தில் சம்பாச் சோறுடன்  பல்வேறு மரக்கறி உணவுவகைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா சேர்த்துச் சுவையாகச் சமைக்கப்பட்ட ஊர்க்கோழி இறைச்சிக்கறி, வாழைப்பூ வடகம், அப்பளம், தேசிக்காய் ஊறுகாய் என வாழையிலையில் இராசபோசனம், ஓடியற்கூழ், மாலையில் சுவையான வெறும் தேநீருடன், உளுந்துவடை, பனங்காய்ப் பணியாரம் இரவில் தேங்காய்ச் சம்பலுடன் பூப்போல இட்லி, தோசை என தினம் தினம் சித்தியின் கைவண்ணத்தில் விதவிதமான உணவுவகைகளை உண்டு மகிழ்ந்தது நீண்ட காலத்துக்குப் பிறகு அவன் வயிற்றுக்குப் பெரும் புதையல் கிடைத்தது போலிருந்தது! சிட்னியில் கல்யாணி இவற்றை எல்லாம் மிஸ் பண்ணுவாளே என்று வசந்தனுக்கு அவள் மீது ஏற்பட்ட பரிதாப உணர்வு, கல்யாணி இப்படி ஏன் சுவையாகச் சமைப்பதில்லை என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தவுடன் முற்றாக மறைந்துபோனது.

**************************

இது இவ்வாறு இருக்க, ஒரு நாள் வசந்தன் யாழ்ப்பாணம் டவுனுக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் சித்தியின் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அவனது ஆசனத்துக்குப் பக்கத்து ஆசனத்தின் கீழே சிறு பையொன்றைக் கண்டான். உடனே அந்தப்பையை எடுத்துத் திறந்து பார்த்த அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; அங்கே அவன் கண்டது பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுக்களை!  அவசரமாகவும், ரகசியமாகவும் அவற்றை எண்ணிப்பார்த்த அவனுக்கு 3000 பவுண்டுகள் இருப்பதைக்கண்டு சந்தோசம் தாங்கவில்லை. எனினும், இது யாருடைய பணமாக இருக்கும் என்ற எண்ணமும் வந்து சிந்திக்கையிலே அவனுக்குப் பக்கத்துக்கு ஆசனத்தில் ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இருந்ததும், சற்று முன்னரே அவர் பஸ்ஸை விட்டு இறங்கியிருந்தார் என்பதும் நினைவுக்கு வந்தது. உடனே அடுத்த தரிப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்த முதியவர் இறங்கிய பஸ்தரிப்புக்கு மிகவேகமாகப் பணப்பையுடன் ஓடிச் சென்றடைந்தான். அங்கே அந்த முதியவர் முகத்தில் மிகுந்த  வேதனையையும், திகைப்பையும் தாங்கிக்கொண்டு நிலத்தை வெறித்தபடி அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். 

அவரிடம் சென்ற வசந்தன் பணப்பையை மறைத்துக் கொண்டு அவரின் கவலைக்கான காரணத்தைக் கேட்டான். அவனை அடையாளம் தெரியாத அவரும் தான் 3000 பவுண்டுகளோடு ஓர் பையை பஸ்ஸில் தொலைத்ததாகச் சொல்லி வருத்தப்பட்டார். உடனே அவரது பணப்பையை அவரிடம் கொடுத்து அதைத் தான் பஸ்ஸில் கண்டெடுத்ததாகச் சொல்ல, அவர் நன்றியுணர்ச்சியுடன் அதை வாங்கிக்கொண்டு தழுதழுத்த குரலில் "இப்ப தான் என் உயிர் மீண்டு வந்தது ராசா. இது என்ர மனிசியின்ர மருத்துவச் செலவுக்கு லண்டனில இருந்து என்ர மகன் அவனின்ர நண்பனிட்ட கொடுத்துவிட்டது. தெய்வம் தான் உங்கட வடிவில வந்து மீட்டுத் தந்திருக்கு. இந்தக் காலத்திலையும் இப்படி ஒரு பிள்ளை இருக்கிறதைப் பார்க்க சந்தோசமா இருக்கு" என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவ்வளவும் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. புதையல் போல் கிடைத்த பணத்தை அவசரத்தில் திரும்பக் கொடுத்துவிட்டோமோ என்று ஒரு கணம் அவன் சிந்தித்தாலும், மறுகணம் அந்த முதியவர் சொன்ன வார்த்தைகளும், அவர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும் அவனுக்கு அந்த நாளுக்குரிய மன நிறைவைத் தந்தன. 

மீண்டும் பஸ் எடுத்து சித்தியின் வீட்டை அடைந்தவனுக்கு சித்தி ஓர் அதிர்ச்சியான செய்தியைச்  சொன்னாள்; அவன் சாதாரண தரம் படிக்கும் காலத்தில் அவனுக்கு விஞ்ஞான பாடத்தை இலவசமாகக் கற்றுக்கொடுத்த, அந்தக்காலத்தில் அவனுக்கு மிக நல்ல நண்பனாகவும் இருந்த ஒருவரின் மாரடைப்பால் ஏற்பட்ட மரணச்செய்தி தான் அது. அவனை விடவும் சில வருடங்களே மூத்தவரான அவர் தற்போது அவனது ஊரில் மருத்துவ சேவை வழங்கும் பணியை ஆற்றிவந்திருந்தார். நீண்டகாலமாக அவரது தொடர்பு இல்லாத நிலையில் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதையும் அறியாமல் இருந்த அவனுக்கு இந்தச் சோகச் செய்தி இடியாக வந்து விழுந்தது. 

செய்தி கேட்ட உடனேயே அவரது வீடு சென்ற அவன் அங்கே ஏற்கெனவே திரண்டிருந்த ஊர் மக்களையும் தாண்டிச் சென்று அவரது உடலைப் பார்த்தான். கண்கள் கலங்கி, தலை சுற்ற அருகே இருந்த சுவரில் சற்று நேரம் சாய்ந்திருந்தான். பின்னர் அருகே கதறி அழுதுகொண்டிருந்த அவரது மனைவிக்கும், தாய்க்கும் என்ன ஆறுதல் சொல்லலாம் என்று தெரியாதவனாய், அவர்களின் கையை அழுத்தமாகப் பிடித்து கண்களாலும், அவன் அடக்கியும் அதை மீறிச் சொரிந்த கண்ணீராலும் பிரிவுத் துயரைப் பகிர்ந்துவிட்டு வெளியே நகர்ந்தான். மரணச்சடங்கான மறுநாள் முழுவதும் அங்கேயே நின்று தேவையான உதவிகளைச் செய்து தனது நண்பனும், ஆசானுமான அவரது பிரிவுத் துயரைத் தணிக்க முயன்றான். அவரது உன்னதமான சேவைக்கும், தாராள மனதுக்கும் சாட்சியாக ஊரே திரண்டு வந்து நின்று கண்ணீர் வடிப்பதைக் கண்டு வியக்காமலும் இருக்கவில்லை. ஊரில் ஒரு சாவுவீட்டுக்கு இரு தசாப்தங்களுக்குப் பிறகு இன்று தானே அவன் சென்றிருக்கின்றான். 

அன்று அவன் கேட்ட பறையடியின் சத்தம் அவன் மனதையும் ஓரிரு தினங்கள் அடித்துக் கொண்டே இருந்து அவனது தூக்கத்தையும் கெடுத்தது; புதையல் பற்றிய நினைப்பையும் சில தினங்களாக மறக்கச் செய்தது.  

 

(எனினும் தேடல் இன்னும் தொடரும்...!)

  •  
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.