தமிழினி

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்!

Recommended Posts

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்

காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது.

எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது.

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம்.

கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது.

நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது?

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 

 • Like 17

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, தமிழினி said:

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள்.

குழந்தைப் பருவத்தில் நல்ல ஒரு ஆரம்பத்தைக் கொடுக்க விரும்பும் பெற்றோர் - முக்கியமாக நமது ஈழத்தில் உள்ள பெற்றோர் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். 

தேவையான பதிவு. தொடருங்கள் தமிழினி. 😊

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தமிழினியின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் எந்த முடிவையும் எம்மைவிட எம் பிள்ளைகள் சரியாக முடிவெடுக்க பழகிவிட்டார்கள். அவர்களைப் புரிந்து கொண்டு நாம் சேர்ந்து நடக்கலாம் இல்லாவிட்டால் எம்மை விட்டு அவர்கள் தம் பாதையில் நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. அவர்களின் சிந்தனை வித்தியாசமானது. பெற்றவர்களாகிய நாம் எம் பிள்ளைகளின் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து செயற்படுவது சாலச் சிறந்தது. 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நானும் உயர்தரத்தில் வணிகவியல் கற்க இருந்தேன், பெற்றோரும் அதிபருமா உயிரியல் படிக்க வற்புறுத்தி அதோட முடிஞ்ச கதை தான்.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

52865297_389121391636982_123531514360102912_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-syd2-1.xx&oh=c8ba54a6d6194e36d874ede2cf90220d&oe=5D1C199Aகாலத்திற்க்கு ஏற்ற படைப்பு.....

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய கல்விமுறை அதிக வருமானத்தை நோக்கியே பிள்ளைகளை நகர்த்துகின்றது. அன்று டாக்டர் , என்ஜினியர் எல்லோரினதும் கனவு. ஆனால் இன்று அவற்றைவிட அதிக வருமானம் தரக்கூடிய அநேக தொழிற்துறைகள் வந்து விட்டன. அதனால் இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு அநேக தெரிவுகள் வேலை விடயத்தில் கிடைக்கின்றது......!  😁 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, தமிழினி said:

 

 

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

இது இன்னமும் எமது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.காலம் கடந்த பின்பு தான் கவலைப்படுகிறார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/27/2019 at 7:05 PM, தமிழினி said:

தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

ஒரு குடும்பத்தில்  தந்தை பெரிய உத்தியோகம். தாயும் நல்ல வேலை. ஒரு களியாட்ட நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வு ஒன்று வந்தது. அதில் பெரிய உத்தியோககாரரின் மகனும் பங்கு பெற்றார். அப்போது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவர்  எல்லா பிள்ளைகளிடமும்....நீங்கள் பெரியவர் ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது பெரிய உத்தியோகக்காரரின் மகனிடமும்....நீங்கள் பெரியவன்
 ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் என கேட்டார்.அதற்கு அந்த சிறுவன் நான் பெரியவன் ஆனால் கார் மெக்கானிக் ஆக வேண்டும் என்று சொன்னார். அப்போது அந்த பிள்ளையின் தாய் தந்தையரின் முகத்தில்  வந்த கடுப்பு வர்ணிக்க முடியாத கடுப்பு.
தற்போது சம்பந்தப்பட்ட பிள்ளையின் தாயார் அப்பாவை விட நீ நல்ல ஜொப்பிலை ஜொயின் பண்ண வேணுமெண்டு ஒரே நச்சரிச்சலாம்.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக  தங்களின் விருப்பத்துக்கு தெரிவு செய்யும் துறை(கள்) இறுதியில் பெற்றோரையும் பிள்ளைகளையும் கவலையில் ஆழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். பிள்ளைகள் எத்துறையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என சிறுவயதில் இருந்தே அவதானித்தால்  தெரியும்.அவர்களுக்கு விருப்பமான துறையை  தெரிவு செய்ய முழு உரிமையையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்  மகிழ்சியாகவும் இருப்பார்கள். 

குறிப்பிட்ட துறையில் தான்  உழைக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கு பொருந்தாது. சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறும் போது அதிக பணம் உழைக்க முடியும்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

படிப்பு மட்டுமல்ல வாழ்க்கை விடயத்திலும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் அவர்களுக்கு பிடித்தவழியில் அவர்களைப்பயணிக்க விட்டால் நம் சமூகம் அதி விரைவாக முன்னேறும். விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக திணிக்கப்பட்ட பலர் அத்துறையில் எதையும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்கு இல்லாதவர்களாகவே உள்ளார்கள்.

விருப்பப்பட்ட  விடயத்தை மட்டுமே அதிகமாக தேடலுக்கு உள்ளாக்கும் தீவிரம் மனதில் தோன்றும்.

திணிக்கப்படும் விடயங்களில் தேடல் தோன்றாது. நல்ல விடயம் தமிழினி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஊரில் , இலங்கையில் தாய் தந்தையரின்  விருப்புக்களுக்குள் மட்டும் சிக்கி விடுறார்கள் பிள்ளைகள் அவர்கள் விருப்பமென்பது அமிழ்த்தி வைக்கப்படுகிறது  இந்த சமூகத்தின் நிலையை நிலையை காட்டி

 

கல்வி முறை இனிவரும் காலங்களில் மாறினாலும் ஆணும் பெண்ணும் கல்யாணம் முடிக்காமல் இருக்கும் வரைக்கும் அவர்கள் பெற்றோரை நாங்கள் அப்ப்டி இருக்க அவர்கள் விடவில்லை என குற்றம் சாட்டியவர்கள் அவர்கள் திருமணமாகி பெற்றோர்களாக ஆகும் போது அதே குற்றத்தையே செய்கிறார்கள் அவர்கள் பிள்ளைக்கும் இது சங்கிலி தொடராக வருகிறது ஒரே ஒரு காரணம் தான் எங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பிக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் நல்ல பிள்ளையாக ஆக்க வேண்டும் என சிந்தனை மட்டுமே பிள்ளைகள் நலன் சார்ந்தது அல்ல

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/27/2019 at 6:05 PM, தமிழினி said:

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை.

குழந்தைகள் தமக்கு விரும்பிய துறையில் படிப்பதற்கு பெற்றோர் துணைநிற்கவேண்டும் தமது விருப்பங்களைத் திணிக்கக்கூடாது என்பது உண்மைதான்.

ஆனால் முதிர்ச்சி அடையாத குழந்தைகளை சரியான துறைகளை இனங்காட்டும் பொறுப்பும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் உள்ளது.

ஆனாலும் தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகள் அதிக சம்பாத்தியமும் புகழும் தரும் வைத்தியத்துறைக்கும், பொருளாதார/கணக்கியல் துறைக்கும், அல்லது சட்டத்துறைக்கும் எந்திரவியல் துறைக்குமே அனுப்பவிழைகின்றனர். இது தமது குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற காரணம்தான். தன்னம்பிக்கையையும், சமூக அக்கறையையும் குழந்தைகளிடம் வளர்த்துவிட்டால் அவர்கள் 16- 18 வயதுகளில் சுயமாகவே முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சியை அடைவார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மிக முக்கியமான, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

பெற்றோர் கூறிய துறையை அவர்களுக்காக தேர்ந்தெடுத்து படிப்பில் கோட்டை விட்ட பலர் உள்ளார்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தற்போது தான் 'ஜீனியஸ்' என்ற தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்து முடித்தேன். உங்களின் இந்தத் திரி ஞாபகத்துக்கு வந்தது, தமிழினி.

பிள்ளைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கதிகமான அழுத்தங்களைப் பெற்றோர் கொடுப்பதன் எதிர்மறை விளைவுகளை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்டிப்பாக நமது பெற்றோர் பார்க்க வேண்டிய படம். 

(இருந்தாலும், சில பெற்றோர் இப்படியான படங்கள் தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது என வெகுண்டெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) 😊

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • படம்: மனம் போல் மங்கல்யம்(1957) பாடியோர்: A.M.ராஜா & P.லீலா வரிகள்: சுரதா இசை: A.ராமாராவ்.... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்.. ... கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய் சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு, மனசுக்குள்ளே நினைச்சிடுவார் மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பெண்களுக்கு அழகாகுமோ? ஸா ரி ஸ் ஸரிஸநி தபமப ஸரிஸரி மபடப மப ஸா ரிஸ ஸரிஸநி ஸரிஸநி தபமப ஸரிஸரி மபதப ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப தபம ரிக மகரிஸ நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்.. ... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்  
  • யாழ்ப்பாணத்தில் கிடைத்த சந்தர்ப்பங்கள் எனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று: பேராசிரியர் நிசான் கனகராஜா யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடைபெற்றவேளை பல கஷ்டங்கள் இருந்தபோதிலும் அங்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் தனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் யாழ் பரியோவான் கல்லூரியில் வளர்த்துக்கொண்ட ஆளுமை பிரித்தானியாவில் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லெஸிஷ்டர் பல்கலைக்கழகத்தின் துணையவேந்தராக பதவி ஏற்கவிருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலியாவின் SBS தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா எதனை சாதிக்க நினைக்கிறீர்களோ அதனை ஒருபோதும் கைவிடாமல் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள், எல்லோருடனும் நன்றாக பழகுங்கள், மாறும் சூழ்நிலைமைக்குக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள பழகுங்கள் என்ற மூன்று அறிவுரைகளை வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூறியிருக்கிறார். பேராசிரியர் நிசான் கனகராஜா வழங்கிய நேர்காணலை கீழே கேட்கலாம் :   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-கிடைத்த/
  • விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019 ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நேற்று மாலை வரையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் நன்மை அடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து முன்னெடுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கடந்த இரு தினங்களிலும் ஆயிரத்து 293 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் 23ம் திகதி முதல் நாளாந்தம் யாழ்.மாவட்டத்தில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருவதுடன் நடை முறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றாடல், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுவர், மகளிர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும், தொழில் முயற்சிகள், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளும், வட மாகாணத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கின்றது. கிராம சக்தி, ஸ்மாட் ஸ்ரீலங்கா, சுத்தமான குடிநீர், சிறுநீரக நோய் நிவாரணம் என்பன உட்பட விவசாய, மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்திகளுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் பாரிய பங்களிப்புக்களை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்) http://globaltamilnews.net/2019/129519/