Jump to content

போர் மேகம் சூழ் உலகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர் மேகம் சூழ் உலகு

Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:32

image_e7ce5a1d68.jpg

 

இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் வர்ணிக்க முடியும். ஆனால், ‘போர் மேகம் சூழ் உலகு’ என்று சொல்வது, பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பதற்றங்களும் அதிகரித்திருக்கும் சூழல் தான் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைமை தான், இலங்கையின் புவியியலில் நெருக்கமான இரு நாடுகளுக்குமிடையிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும், புவியியல் ரீதியாக நெருக்கமானவை மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவை.

இந்த நிலையில் தான், காஷ்மிரில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில், இந்தியாவும் பாகிஸ்தானும் போரொன்றை மேற்கொள்ளுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பகுதியில், இல்லாவிட்டால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய விமானப் படையால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல், இவ்வச்சத்தை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லைப் பிரச்சினையென்பது, பாகிஸ்தானின் இருப்பு எப்போது ஆரம்பித்ததோ, அப்போதிருந்து காணப்படுகிறது. ஆனால், தற்போது எழுந்திருக்கும் மோதல் சூழல், அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னரெப்போதையும் விடப் போருக்கான அச்சம் ஏற்பட்டிருக்கின்றமைக்கான பிரதான காரணமாக, இவ்வாண்டு மே மாதத்தில் இடம்பெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு, மக்களிடத்தில் வரவேற்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயமாக இருக்கிறது. பொதுமக்களின் ஆதரவை மீளப் பெறுவதற்கு, எதிரி நாடு மீதான போரையோ அல்லது தாக்குதல்களையோ மேற்கொண்டு, தேசியவாதத்தை ஊக்குவிப்பதென்பது, மிகவும் பயன்தரக்கூடிய வழியாக உள்ளது.

உதாரணமாக, காஷ்மிரில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் எப்படிச் செயற்பட வேண்டுமென்பது தொடர்பாக அதிக கலந்துரையாடல்கள் காணப்பட்டன. எனினும், இந்திய விமானப் படையால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற தகவல் வெளியான பின்னர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயாதீனமான கட்சிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள் என்று, எந்த வித்தியாசமுமின்றி, இந்திய இராணுவத்தைப் புகழ்ந்து, தமது நாட்டின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியிருந்தனர். அப்படியான சூழலில், ‘பாகிஸ்தான் மீதான தாக்குதலை நடத்திய உறுதியான தலைமைத்துவத்துக்கு வாக்களியுங்கள்’ என்று வாக்குக் கேட்பது, பிரதமர் மோடிக்கு இலகுவாகிறது. அதை எதிர்த்துப் பிரசாரம் செய்வதென்பது, எதிர்க்கட்சிக்குக் கடினமாக அமையும்.

இத்தாக்குதல்களைத் தனது பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி பயன்படுத்தக் கூடுமென்ற தகவல், பிரதமர் மோடி மீதான தவறான பார்வையை ஏற்படுத்தலாம். ஆனால் யதார்த்தத்தில், அவருக்கான தெரிவுகள் குறைவு. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஆயுதக்குழுவொன்று, இந்தியாவில் தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொன்ற பின்னர், ‘போரெல்லாம் வேண்டாம்; பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்’ என்று அவர் புறப்படுவாராயின், அவரது கடும்போக்கு ஆதரவாளர்களே அவரைக் கைவிட்டுவிடுவர். எதிர்க்கட்சிகளோ, அவரை ‘ஒன்றுக்கும் இயலாத பிரதமர்’ என்று, பலவீனமான ஒருவராக, அவரைக் காண்பிக்க முயலும். எனவே, பிரதமர் மோடிக்கும் வேறு தெரிவுகள் இல்லையென்பது தான் உண்மையானது.

image_e4c9acc96f.jpg

மறுபக்கமாக, பாகிஸ்தானின் பிரதமராக அண்மையில் தெரிவான இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்தின் விருப்புக்குரிய ஒருவர் என்று தான் கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு, இராணுவத்தின் பங்களிப்பு முக்கியமானது என்ற குற்றச்சாட்டு, சர்வதேச அமைப்புகள் பலவற்றாலும் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில், பொதுவாகப் போரில் ஈடுபடுவதற்கான விருப்பத்தைக் கொண்ட இராணுவத்தால், போரொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டால், அதை எதிர்ப்பதற்கான பலத்தையோ, திறனையோ அவர் கொண்டிருக்கிறாரா என்றால், இல்லை என்பது தான் பதிலாகக் கிடைக்கிறது.

இவ்வாறு, இரு தரப்புகளுக்குமான தெரிவுகள் இல்லையென்பதற்காக, ஏற்படக்கூடிய போரென்பது, சரியாக அமையுமென்றோ, பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென்றோ உறுதியாகக் கூற முடியாது. மாறாக, உறுதியான பாதிப்பை ஏற்படுத்துமென்று, ஓரளவுக்கு உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்படும் எந்த மோதலும், பிராந்திய மோதல்கள் என்பதைத் தாண்டி, உலக வல்லரசுகளின் நிழல் போராக மாறுவதற்கான ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. உலகில் ஏற்படும் எந்த முரண்பாடும், முன்னெப்போதையும் இல்லாததைப் போல், நிழல் போர்களாக உருவெடுத்திருக்கின்றன.

சிரியாவில், அந்நாட்டு ஜனாதிபதிக்கும் ஆயுதக்குழுக்களுக்குமிடையிலான போராக அது இருந்தாலும், உண்மையில் அது, நிழல் போராகவே இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் ஒரு பக்கம் இருக்கின்றன. ரஷ்யாவும் அதன் தோழமை நாடுகளும், ஜனாதிபதியின் பக்கம் இருக்கின்றன. இப்போரில், பெரும் அழிவுகள் ஏற்படத் தொடங்கியமை, இப்போரில் ரஷ்யா பங்குபற்ற ஆரம்பித்த பின்னர் தான்.

யேமனில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஐ.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு செயற்படுகிறது. மறுபக்கத்தில், ஆயுததாரிகளுக்கு ஆதரவாக ஈரான் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இப்போரில், பிரதான தரப்புகளை விட, சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணியின் விமானத் தாக்குதல்களால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தான் மிக அதிகமானது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறான போர்ச் சூழல் தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது. இப்போதிருக்கின்ற நிலையில், பாகிஸ்தான் மீதான எந்தத் தாக்குதலையும், சீனா பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையும் அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையும், பாகிஸ்தானுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான தாக்குதலை, சீனா நிச்சயமாகவே எதிர்க்கப் போகிறது. அதிலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், ஏற்கெனவே எல்லை மோதல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கான பதிலடி வழங்குவதற்கான வாய்ப்பாகவும், சீனா இதைக் கருதும்.

இந்நிலைமை இவ்வாறிருக்க, ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்பு எவ்வாறு அமையுமென்பது அடுத்த கேள்வியாகவுள்ளது. ஏனென்றால், இரு நாடுகளும் வலதுசாரிகளால் ஆளப்படுகின்றன. இரு நாட்டின் தலைவர்களையும், தீவிர வலதுசாரிகள் என்று தெளிவாகவே அழைக்க முடியும். இருவருக்குமிடையில் தனிப்பட்ட உறவென்று வரும் போது, அது சிறப்பாகவே காணப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சீரற்ற தன்மையொன்று காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், குடிவரவைக் கட்டுப்படுத்தும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். அதன் ஓர் அங்கமாக, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், போலியான பல்கலைக்கழகமொன்றில் இணைந்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டின் குடிவரவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட போது, இந்திய வெளிவிவகார அமைச்சு, மிக வெளிப்படையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால் மறுபக்கமாக, ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு, கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அதைத் திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உடனடியாக அதில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளில்லை. அத்தோடு, சீனா ஆதரிக்கும் ஒரு நாட்டை, ஐ.அமெரிக்காவும் ஆதரிக்கும் வாய்ப்பில்லை. எனவே, இந்தியாவின் பக்கமே ஐ.அமெரிக்கா சாயுமெனக் கருதப்படுகிறது.

இந்நிலை ஏற்பட்டால், ரஷ்யாவின் நிலைமையென்பது இன்னமும் சுவாரசியமாக மாறிவிடும். ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும், இன்னமும் பரம வைரிகளாகவே உள்ளன. ஆனால், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவென்பது, முன்னெப்போதும் இல்லாதளவுக்குப் பலமாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் மாத்திரமன்றி, இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் அதிகமாக இணைந்து செயற்படுகின்றன. அப்படியான சூழலில், ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் இருப்பதற்கான சூழ்நிலையொன்று ஏற்படும். இது, வித்தியாசமான ஒரு நிலையாகக் காணப்படும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர் ஏற்படக்கூடிய சூழல் தான் இன்னும் காணப்படுகிறது என்பது தெளிவானது. இவற்றுக்கு மத்தியில், பொறுமையாக முடிவெடுக்கும் தலைமைகளின் ஆதிக்கம் அதிகரித்து, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்பது தான், இப்போது கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/போர்-மேகம்-சூழ்-உலகு/91-230154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் பெரியளவில் இடம்பெறாது, பா.ஜ.க வெற்றி பெறுவதற்காக துல்லிய தாக்குதல் என்று பிரச்சார போர் நடக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.