Jump to content

எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?????


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்......

இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. 

பாà®à®¿à®¸à¯à®¤à®¾à®©à¯

இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநகரத்தின்மீது குண்டு வீசியது. இந்திய-பாகிஸ்தான் எல்லையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலகோட்.  அங்கிருந்த தீவிரவாத முகாமைத் தாக்கி நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றதாக இந்திய அரசு பிரகடனப்படுத்தியது. ஆனால், அப்படிப்பட்ட எந்த முகாம்களும் அங்கு இல்லையென்றும் இந்தக் குண்டுவெடிப்பால் ஒரேயொரு பெரியவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவித்தது பாகிஸ்தான் தரப்பு. அந்நாட்டு காலநிலை மாற்றம் அமைச்சர் மாலிக் அஸ்லாம், ``இந்திய விமானப்படை எங்கள் வனப்பகுதிகள் மீது குண்டுவீசி அங்கு சூழலியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அங்கு நடந்தது சூழலியல் தீவிரவாதம். இது தொடர்பாக ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளோம்" என்று ராயிட்டர்ஸ் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்று அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.

``ராணுவ நடவடிக்கைகளாகவே இருந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதிப்பதுபோல் நடந்துகொள்வது சர்வதேச சட்டங்களின்படி குற்றம்" என்கிறது ஐ.நா.

ஆதாரத்தை பார்க்க...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für rajinikanth old age

அது....
ரசனி  ஸ்ரைலில்... சுவாசிக்கவும். 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் எடுத்து முதலாமிடத்தில் இருக்கின்றார்....😎 புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு.
  • சிலருக்கு வாய் நிறைய சோறு வேணுமெண்டால் பூனையையும் புலியாக்கி  பிழைத்துக்கொள்வார்கள்.
  • #CSKvsDC சிஎஸ்கேவை அசால்ட்டா ஊதித்தள்ளிய பிரித்வி ஷா, தவான்..! டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை அடித்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னில் வீழ்த்த, 7 ரன்னுக்கே சிஎஸ்கே அணி 2 விக்கெட்டை இழந்தது. கடந்த சீசனில் ஆடாமல், இந்த சீசனில் கம்பேக் கொடுத்த ரெய்னா, அதிரடியாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் ஸ்பின் பவுலிங்கை ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து அடித்து நொறுக்கினர்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி, அஷ்வின் பந்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ராயுடுவும் ரெய்னாவுடன் இணைந்து அடித்து ஆடினார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியில் செம கம்பேக் கொடுத்த வேளையில், ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு விக்கெட்டுக்கு பின், ஜடேஜா ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா ஆட, அதற்கு 2வது ரன் ஓட முயன்றபோது ஜடேஜா, பவுலர் ஆவேஷ் கான் மீது மோதியதால் 2வது ரன்னை ஓட முடியாமல் திரும்ப, பாதி பிட்ச்சுக்கு ஓடிவந்த ரெய்னாவால் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. எனவே 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தோனி, அதேஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து டெத் ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சாம் கரன் 15 பந்தில் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்தது. இதையடுத்து 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் அந்த இலக்கை எளிதானதாக்கினர். தொடக்கம் முதலே பிரித்வி ஷாவும் தவானும் அடித்து ஆடினர். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, பவர்ப்ளேயிலேயே 66 ரன்களை குவித்துவிட்டனர். அதன்பின்னர் மிடில் ஒவர்களிலும் அதிரடியாக ஆடினர். ரன் வேகம் கொஞ்சம் கூட குறையாமல் அபாரமாக அடித்து ஆடினர். பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து தவானும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து 13.3 ஓவரில் 138 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 38 பந்தில் 72 ரன்கள் அடித்து பிராவோவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த தவான்,  85 ரன்கள் அடித்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். தவான் 53 பந்தில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து வெற்றியை உறுதியாக்கிவிட்டதால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.   https://tamil.asianetnews.com/sports-cricket/delhi-capitals-beat-csk-in-ipl-2021-qrczrr  
  • தாட்டான் வைட்டமின் டி அதிகம்  எடுக்கிறதாலை வேற லெவல்....
  • ஐயா குணா, நீங்கள் குறிப்பிடும் தரம் 1 உணவகங்கள் ஏற்கனவே கழிவறை வசதிகளுடன் தான் இயங்குகின்றன.  இங்கு பிரித்தானியாவில் council களால் எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன ?  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.