Jump to content

ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரிவு

- ஈ.ரி.பி.சிவப்பிரியன்

காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநிலத்தில்  உறுதியான தொண்டர்கள்  தளத்தைக்கொண்ட மிகப்பெரிய கட்சியாகக் கட்டிவளர்த்து 12 வருடங்களுக்கும் அதிகமான காலமாக தேசியக்கட்சிகளை ஓரங்கட்டிவைத்திருக்கக்கூடிய துணிச்சலையும் வெளிக்காட்டினார். ஆனால், 2016 டிசம்பரில் அவரது மரணத்துக்குப் பிறகு இரு வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலம் கடந்துவிடுவதற்கு முன்னரே அண்ணா தி.மு.க. மக்கள் மத்தியிலான கவர்ச்சியையும் மத்திய அரசுடன் பேரம்பேசும் வல்லமையையும் இழந்து பெரும் சரிவைக்கண்டிருக்கிறது.

jeyalalitha.jpg

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவைச் சந்திப்பதற்கு மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் காத்திருந்த காட்சியும்  தமிழகத்தில் பாரதிய ஜனாதாவுடனான கூட்டணியை அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்று அழைக்கவேண்டுமென்று அதன் தலைவர்களினால் தெரிவிக்கப்பட்ட யோசனையை அமித் ஷா நிராகரித்தமையும் அந்த கட்சியை நீண்டகாலத்துக்கு ஓயாதுவந்து வெருட்டிககொண்டேயிருக்கும். அதேபோன்றே, அண்ணா தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தின் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஜெயலலிதா -- மோடி போயஸ்கார்டன் சந்திப்பு படங்களும் அச்சுறுத்தும்.

 பாரதிய ஜனதாவுக்கு இரண்டாம் பட்சமானதாக அண்ணா தி.மு.க. செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற போதிலும், கடந்த வாரத்தைய நிகழ்வுகள் தேசியக்கட்சிக்கு முன்னால் பிராந்திய கட்சி மண்டியிட்டுவிட்டது என்ற விமர்சனங்களுக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.இத்தகைய நிகழ்வுகள் ஜெயலலிதாவின் காலத்தில் கேள்விப்பட்டிருக்கவோ அல்லது எதிர்பார்த்திருக்கவோ முடியாதவையாகும்.

ஜரஞ்சகமான தலைவியின் மறைவுக்குப் பிறகு தினமும் ஒவ்வொரு பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட அண்ணா தி.மு.க.வின் அரசாங்கம் இவ்வளவு காலத்துக்கு நின்றுபிடிக்கிறதென்றால் அதற்கு பாரதிய ஜனதா வழங்குகின்ற ஆதரவு மாத்திரமே காரணம் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. அண்ணா தி.மு.க. அரசாங்கம் வீழ்ந்துவிடாமல் நீடிப்பதை உறுதிசெய்வதற்கு பாரதிய ஜனதா பெரும் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறது. தமிழகத்திற்குள் ஊடுருவி செல்வாக்கை அதிகரிப்பதற்கு  மேற்கொண்ட முயற்சிகள்  தோல்விகண்டதும் தன்னுடன் கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள அண்ணா தி.மு.க.வை நிர்ப்பந்தித்தது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எல்லாமே போயஸ்கார்டனில் உள்ள அவரது மாளிகை வீட்டிலேயே இடம்பெற்றன. தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஜெயலலிதாவின் வீட்டுக்கதவுகளை தட்டுவது வழமையான நடைமுறையாக இருந்தது.தமிழகத்துக்கு பாதகமாக அமையக்கூடியவை என்று அவர் நினைத்த சகல திட்டங்களையும் அவர் துணிச்சலுடன் எதிர்த்தார்.அத்துடன் மாநிலத்தில் தேசியக்கட்சிகள் தன்னைப் பின்பற்றுவதை அவர் உறுதிசெய்தார். மறுதலையாக நடக்க ஒருபோதும் அவர் இடங்கொடுக்கவில்லை.

பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்  பல தலைவர்கள் தங்களது அரசாங்கத்துக்கான ஆதரவுக்கடிதத்தை ஜெயலலிதாவிடமிருந்து பெறுவதற்காக அவரின் வாசஸ்தலத்துக்கு வெளியே காவல் இருந்ததை அண்ணா தி.மு.க.வின் பழைய தலைவர்கள் அடிக்கடி  நினைவூட்டுவார்கள்.

அண்ணா தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் இராணுவத்தைப் போன்ற கட்டுப்பாடுடைய கட்சி என்று அதன் தலைவர்கள் முன்னர் பெருமை பேசினார்கள். ஆனால், இன்று இருக்கும் அண்ணா தி.மு.க. அத்தகைய கட்சியாக இல்லை. அது பல்வேறு குழுக்களாகப் பிரிந்துகிடக்கிறது.அரசாங்கம் கவிழ்ந்துபோய்விடக்கூடாதே என்பதற்காக மாத்திரமே  இந்த குழுக்கள் ஐக்கியப்பட்டு நிற்கின்றன. அதன் வரலாற்றில் முதற்தடவையாக முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்  உட்பட அண்ணா தி.மு.க.வின் உயர்மட்ட தலைவர்கள் பாரதிய ஜனதாவின் பிரதிநிதியான ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயாலின் வருகைக்காக வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வாசஸ்தலத்தில் பல மணி நேரம் காத்திருந்தார்கள்.

2016 சட்டசபை தேர்தலில் 41 சதவீத வாக்குகளைப் பெற்ற அண்ணா தி.மு.க.வின் தலைவர்கள் மீண்டும் ஒரு தடவை கோயாலுக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் காத்திருந்தனர்.அந்த ஹோட்டலில்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்திமுடிக்கப்பட்டன. இறுதியாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவுடன் பன்னீர்செல்வம் மதுரையில் நடத்திய சந்திப்பிலேயே எல்லாம் முடிவுக்குவந்தது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாகத்தான் அண்ணா தி.மு.க. இருக்கிறது; தமிழகத்தில் சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களும் அந்த பதாதையின் கீழேயே நடத்தப்படும் என்று ஷா தெட்டத்தெளிவாகக் கூறிவைத்தார்.

பாரதிய ஜனதாவுக்கு  அண்ணா தி.மு.க. ஐந்து தொகுதிகளை மாத்திரம் ஒதுக்கியிருக்கக்கூடும், ஆனால்,  அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக கட்சிக்கு செய்யப்பட்டிருக்கின்ற சேதம் பாரதூரமானது என்று அவதானிகள் கூறுகிறார்கள். காவிக் கட்சியை எதிர்த்துநிற்பதற்கான தைரியம் இல்லாததால் அண்ணா தி.மு.க. மிகவும் கூடுதலாக பணிந்துவிட்டது என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிருவாக திணைக்களத்தின் தலைவரான பேராசிரியர இராமு மணிவண்ணன் கூறினார்.

" கடந்த இரு வருடங்களில் அண்ணா தி.மு.க.வின் தவைலவர்கள் குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் கடந்த காலத்தில் கட்சிக்கு இருந்த மரபுகள் சகலவற்றையும் இல்லாமல் செய்துவிட்டார்.எம்.ஜி.இராமச்சந்திரனும் அவருக்குப் பிறகு ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த  மாபெரும் கட்சியின் கட்டுமானத்தை பனானீர்செல்வம் சிதறடித்துவிட்டார்.ஜெயலலிதாவிடம் என்னதான் குறைபாடுகள இருந்தாலும் அவரால் அரசியல் சதுரங்கத்தில் கருணாநிதியையும் தி.மு.க.வையும் மடக்கிவைத்திருக்கக்கூடியதாக இருந்தது " என்று மணிவண்ணன் கூறினார்.

 "  பாரதிய ஜனதாவின் வாசற்படித்  தரைவிரிப்பு என்று  அண்ணா தி.மு.க.வை அழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அவ்வாறு தான் பாரதிய ஜனதாவினால் அண்ணா தி.மு.க. நடத்தப்படுகிறது " என்று அவர் சொன்னார்.

( டெக்கான் ஹெரால்ட் )

 

http://www.virakesari.lk/article/50950

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.