Jump to content

வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா?

இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர்.

1989_clip0050.jpg

அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும்.

பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. 

எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகின்றனர் நம் இளைஞர்கள்.

இவ்வாறு இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று வெளிநாட்டு வேலைக்காக வீடு, நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் பணம் சேர்த்தவர்கள், இறுதியாக அந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவாவது உழைப்போம் என அதிகமானோர் தயாராகிவிடுகிறார்கள். பின்பு அவர்கள் சொந்த இடத்திற்கு திரும்பியவுடன், சொந்த நாட்டிலே வேலைதேட முடியாமல் திண்டாடுகின்றனர்.

பெரும்பாலும் வெளிநாட்டு வேலையை தேடிச் செல்பவர்கள், அங்குள்ள நிறுவனங்களின் தரத்தினை தெரிந்துகொண்டு செல்வது மிகவும் அரிதாகும். அவ்வாறு படித்து முடித்தவுடன், எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வெளிநாடு செல்வோரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக ஆகிவிடுகின்றன. பொறியியல் போன்ற மேல் படிப்பு படித்தவர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சினை இல்லை. 

குறைந்த அளவிலான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தையல், கட்டுமானம், மீன் பிடித்தல், தோட்டத் தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் நிலைமை பரிதாபத்துக்குரிய நிலைமையாகி விடுகின்றது.

அதிக ஊதியம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், அங்கு அடிமைகளாகவும், வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் படும் இன்னல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தாலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன.

இவ்வளவு சிக்கலை கேட்டும், மக்களிடம் வெளிநாட்டு மோகம் இன்னும் உள்ளதால் வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும்.

வெளிநாடு செல்ல நினைப்போர் செய்ய வேண்டியவைகள்.

0. இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற வெளிநாட்டு முகவர்களே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு வெளிநாட்டு முகவரை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் அனுமதிப்பத்திர எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வலைதளத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்

·1 பின் அந்த வெளிநாட்டு முகவருக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள், தேவைக்கான கோரிக்கை கடித்தில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விபரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த கடிதத்தின் மூலம் கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த கோரிக்கை கடித்தில் வேலை வழங்கும் நிறுவனம், அந்த நாட்டில் பெற்ற அனுமதிப்பத்திர எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

·2 அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம். வேலைக்கு ஆள் எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனம், தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து 'நோ ஒப்ஜெக்ஷன்' கடிதம் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர், நிறுவனம் இருவருக்கும் அது சிக்கல்களைத் தரும்.

ஆகவே நம்நாட்டிலே ஏராளமான வேலைவாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. வெளிநாட்டு வேலை மோகத்தை ஒழித்துவிட்டு இங்கேயே வேலை, வியாபாரம் செய்தாலும் வாழ்வில் உயரலாம்" என்ற எண்ணக் கருவை மனதில் பதித்துக் கொள்வது சிறந்ததாகும்.

http://www.virakesari.lk/article/50968

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு என்றதும் இப்ப விக்கியர் சொன்ன ஞாபகம் தான் வருது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி,   வேலைத்  தகைமைகளுடன்  முறையாக  குடிபெயர்ந்து  வருபவர்கள்  பொதுவாக   குறைந்த  சிரமங்களை  எதிர்நோக்கி     விரைவாகவே   புலம்  பெயர்  வாழ்வை  நிலைப்படுத்தி  விடுகின்றனர் , தாய்  மண்ணில்  இருந்திருக்கக்  கூடிய  சில  வசதிகள்  இல்லாமை  தவிர   இவர்களில்  பெரும்பாலோர்  தங்கள்  நிர்ணயித்துக்  கொண்ட  இலக்குகளை  அடைந்து   சந்தோஷமாகவே  இருக்கின்றார்கள்  என்று  சொல்ல  வேண்டும்.    இவர்களை  பற்றி  அல்லது  இவர்களின்  மத்தியில்  இருந்து  இவர்களை  பற்றி  பொது  வெளியில்  எழுதுபவர்கள்  குறைவு .

அகதிகளாக  வருபவர்கள்-   இவர்களில்  பலவகை  .

தங்களின்  பொறுப்புகளை  உணர்ந்து  கடுமையாக  வேலை  செய்து  முன்னுக்கு  வருபவர்கள்- இவர்களுக்கு   புலம்  பெயர்  வாழ்வின்  தொடக்கம்  மிகுந்த  சவாலாக  இருப்பினும்  இந்த  வகையினரில்  மிக  மிக  முன்னேறியோர்  பலர்  உண்டு .

தாய்  நாட்டின்  உள்ளூர்  நிலைமைகளில்  நேரடியாக  உண்மையாகவே  சம்பந்தப்பட்டு  பின்னர்  விரும்பியோ  விரும்பாமலோ  புலம்  பெயர்ந்தவர்கள்   இவர்கள்  பொதுவாக  ஆர்ப்பாட்டம்  இல்லாமல்   கடும்  பிரயத்தங்களுடன்  வாழ்வை  நேர்  சீராக்க    தெண்டித்துக்  கொண்டிருக்கின்றனர்.  இந்த  வகையினரின்  வருகை  10 ஆண்டுகட்கு  உட்பட்டதொன்று.    சிலர்  ஓரளவு  முன்னேறியிருக்கின்றனர்,    பலருக்கு  இன்னமும்  கடக்க  வேண்டிய  தூரம்  இன்னமும்  இருக்கின்றது .

உள்நாட்டு  நிலைமைகளில்  நேரடியாக  ஈடுபடாமல்  நிலைமையை  சாக்காக  வைத்து  புலம்  பெயர்ந்தவர்கள்  இவர்களில்  பலரும்  தங்கள்  கடைமைகளை  உணர்ந்து  மிகுந்த  பிரயாசைப்பட்டு  முன்னேற  பார்க்கின்றனர் .

இதில்  இன்னொரு  வகை  உண்டு -  குளிர்  காய்ப்பவர்கள்.   உண்மையிலேயே  தாயகத்தில்   நிலைமைகளில்  நேரடியாக  சமபந்தப்  படாது,  புலம்  பெயர்  நாட்டில்  தாங்கள்  தலைமையுடன்  ஒன்றாக  இருந்தவர்கள்  என்ற  range இல்  கதை  பல  பேசி   வேறு  விரும்பத்  தகாத  விடயங்களில்   ஈடுபட்டு  வருபவர்கள்.    இவர்களில்  பெரும்பாலோர்  புலம்  பெயர்  வாழ்வு  கடினம்  என்று  கதைப்பவர்கள்.

சில  காலத்திற்கு  முன்னர்  அகதி  நிலை  கோரி  வந்த  இரு  இளம்  பையனிடம்  கேட்டேன்  “ஏனடா  தம்பி  வந்தனீ “ என்று. 

“இல்லையண்ணே  சவூதிக்குப்  போயிற்று  கொஞ்சகாலத்தால் அலுப்படிச்சுப் போச்சு,  ஊருக்கு  வந்து  பம்பல்  பண்ணிக்க  கொண்டிருந்தனான்.  இப்படி   இருந்தால்  எப்படி  முன்னேருவது  என்று  அண்ணன்  Dubai  இல் இருக்கிறவர்  ஏஜெண்சிக்குள்ளால  எடுத்து  விட்டவர்”   என்கிறான். ( வன்னி  முகாங்களில்      இருந்தவர்கள்  மனதில்  ஒரு  தரம்  வந்து  போனார்கள்  – ஷெல்  பட்டு  காயத்தில்  சீழ்  பிடித்து  மருந்து  கட்ட   வழியில்லாமல்  முகாமில்  புழுத்துச்  செத்த  உறவினப்  பையன்  உட்பட )

இன்னொமொரு  பகுதி  இருக்கு ஊர்  சண்டித்தனம்  காட்டிக்கொண்டு  . அண்மையில்  உள்ளூர்    கோயில்  ஒன்றில்  ஏற்பட்ட  ஒரு  கருத்து  வேறுபாட்டில்  இவர்களில்  நியாயத்  தீர்ப்பு  “ இங்க  நீங்கள்  பெரிய  ஆட்களாக  இருக்கலாம்  எங்களுக்கு  இங்க  இருக்க  வேண்டிய  அவசியம்  இல்லை   ஆனால்  நீங்கள்  நாட்டுக்கு  வரத்  தானே     வேண்டும்  “ என .

இப்படி  ஐயா  உலகம்  பல  விதமாகத்  தான்  இருக்கு  .. ஆனால்   வெளிநாட்டுக்கு  சென்று  தீங்கை தான்   விளைவித்துக்  கொள்கின்றனர்  என்பது   சரியான  வார்த்தையே    அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2019 at 7:37 AM, கிருபன் said:

வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா?

எனக்கு நினைவுக்கு வருவது இன்றும் ப்ரிச்சனில் இருக்கும் மருத்துவமனைகளின் துணிகள் துவைக்கும் லோன்ரி அங்கு வேலை செய்பவர்களுக்கு வாரம் ஒருமுறை தடுப்பூசி வேலையாட்ட்க்கள் அனைவரும் மூன்றாம் உலக நாட்டை சேர்ந்தவர்கள் .

இங்குள்ள மருத்துவமனைகளுக்கு எடுபிடி வேலைகள் செய்ய சேட்டன்களும் சேட்சி களும் கொன்ராக் அடிப்படையில் கடவுளால் ஆசிர்வதிக்கபட்ட கேரளா எனும் தேசத்தில் வந்து சேர்க்கிறார்கள் இங்கிலாந்தின் பெரிய மருத்துவமனைகளின் அயல்பக்க்ம் மூலைக்கடை வைத்து நடத்துவது சேட்டன் களே வரும்காலத்தில் இன்னும் கூடும் அநேகமா செட்சிகளின் கண்காணிப்பில் இருப்பவர்கள் கான்சர் போன்ற நோயாளிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வாழ்க்கை பெருமையும் அல்ல, அதே நேரம் கொடுமையும் அல்ல..!

நாம் ஒன்றைப் பெற வேண்டுமெனில் மற்றொன்றை இழந்துதான் பெற இயலும். அந்த வகையில் வெளிநாட்டு வாழ்க்கையும் அப்படியே!

 வேலைக்கான தகுதியிருந்து நேர் வழியில் பொறுமையாக முயன்றால், தக்க வெளிநாட்டு வேலை நிச்சயம் சாத்தியப்படும். ஆனால் பொறுமையின்றி, குறுக்கு வழியில் அல்லது கண்மூடித்தனமான ஆசையில் வெளிநாட்டிற்கு வந்துவிட்டு ஏஜன்ஸிக்காரனையும் வெளிநாட்டு அரசாங்கத்தையும் குறை சொல்லிப் பயனில்லை.

எங்கேயுமே 'டிமாண்ட் Vs சப்ளை' தான் தாரக மந்திரம்..

கெடை மாடு மாதிரி 'அடிமாட்டு விலைக்கு வேலைக்கு வர்ரியா..?' என்றால் தலையாட்டிவிட்டு, அயல்நாடு செல்ல வேண்டியது, பின்னர் அங்கே இறங்கியவுடன் "ஐயோ என் தகுதி ஏற்ற வேலை இல்லை..!" என பொலம்ப வேண்டியது

சமீபத்தில் ஒரு செய்தி படித்த ஞாபகம் உள்ளது..

'ஓர் பட்டதாரிப் பொறியாளர், பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்ப்பதாக..!' - இவரின் வேலை தேடிய பின்புலத்தை ஆராய்ந்தால் கதைகள் பல வரும், ஆனால் அவர் அந்த விடயத்தை யாருக்கும் சொல்வதில்லை. இந்த மாதிரி ஊதிப் பெருக்கும் கவர்ச்சி தலைப்புகளை படிக்கும் மக்களும் பின்புலமுள்ள காரணிகளை சிந்திப்பதில்லை..

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தபோது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் பொறியியலாராக வர முடியாது. ஆனால் இன்று 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே நீங்கள் பொறியாளர்தான்.. தற்பொழுது தமிழ்நாட்டில் ஏறக்குறைய 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த குறைந்த மதிப்பெண்களில் அனுமதிபெற்று படித்து வெளிவருபவர்களின் கல்வித்தரம், அறிவுத்திறன் எம்மாதிரி இருக்குமென சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

போட்டிகள் நிறைந்த வேலை சந்தையில் இவர்களுக்கு எப்படி உள்ளூரில் வேலை கிடைக்கும்? ஆகவே இம்மாதிரிப்பட்டவர்களின் அடுத்த குறி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுவதுதான்..! அனைவருக்கும் தெரியும் மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலைக்கு நுழைய அதிக நுண்ணிய அளவில் தரக்கட்டுப்பாடு சோதனைகளோ, சரிபார்க்கும் பொறிமுறைகளோ அதிக அளவில் இல்லை என்பது.

ஏஜன்ஸிகாரரிடம் "எப்படியாவது என்னை வெளிநாட்டு மண்ணில் இறக்கிவிடுங்கள், அப்புறம் அங்கே சென்றவுடன் தத்தளித்து கரையேறிக்கொள்கிறேன்" என மன்றாடி வந்து அல்லல்படுபவர்கள்தான் அதிகம். இந்த வேலை சந்தையையும், வேலை தேடுவோரின் மனநிலையையும் பயன்படுத்தி பலவிதங்களில் துஷ்பிரயோகம் செய்வதுதான் அதிகம் நடக்கிறது. அதற்கு வேலை தேடுவோரும் ஒத்துழைக்கின்றனர்.

சரியான முறையில், தகுதிக்கேற்ற வேலையை நாடி, வேலையையும், அதைக் கொடுக்கும் நிறுவனத்தையும் பற்றி முழுமையாக விசாரித்துவிட்டு, கிடைத்திருக்கும் விசா மற்றும் வேலை நிபந்தனைகளை படித்து சரிபார்த்துவிட்டு வெளிநாடு சென்றால் வெளிநாட்டு வேலை நிச்சயம் நிம்மதியானதே..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனக்கு நினைவுக்கு வருவது இன்றும் ப்ரிச்சனில் இருக்கும் மருத்துவமனைகளின் துணிகள் துவைக்கும் லோன்ரி அங்கு வேலை செய்பவர்களுக்கு வாரம் ஒருமுறை தடுப்பூசி வேலையாட்ட்க்கள் அனைவரும் மூன்றாம் உலக நாட்டை சேர்ந்தவர்கள் .

“அனைவரும் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்கள்”  எனும் தொனியில் ஒரு எதிர்மறையான சுரண்டல் போன்ற தொனி இருப்பது போல் தென்படுகிறது

என் எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுக்க வேண்டும்.

 இந்த தொழிலாளிகளை அந்த வேலை கொள்வோர் அவர்களுடைய ஊரிலே போய் கட்டாயப்படுத்தி கூட்டிக் கொண்டு வந்தார்களா .

இங்கே ஒரு 6,7  வருடங்களின் முன்பு பல்பொருள் அங்காடிகளில் ட்ரொல்லி சேகரித்து அதனிடங்களில் திரும்ப கொண்டு வந்து சேர்க்கும் வேலையை 100% வெள்ளைக்கார இளைஞர்களே செய்தார்கள் இன்று பெரும்பாலும்  இலங்கையரும் இந்தியரும் ( சீனர்கள் மிக மிக குறைவு ஒருவரையாவது பார்த்த ஞாபகம் இல்லை ).

ஒரேயொரு வித்தியாசம் வெள்ளைக்கார இளைஞர்கள் வேலை செய்யும் போது கைத்தொலைபேசிய பாவித்தபடியே வேலை செய்ததை பார்த்த ஞாபகம் இல்லை

ஊரிலே வசதி குறைந்தவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தி வேலை வாய்ப்பு கொடுத்திருக்கவில்லையா.  அவர்களின் பிள்ளை குட்டிகள் இன்று வெகு நல்லாக இருக்கவில்லையா..

எந்த தொழிலை  சேய்வதானாலும் ஒப்புக் கொண்ட நிபந்தனைகளுக்கு அமைய மனமொத்து செய்வதே முன்னேற்றத்திற்கு வழி . நடக்கத் தொடங்க முன்னரே பறக்க நினைப்பது அல்ல .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

வெளிநாட்டு வாழ்க்கை பெருமையும் அல்ல, அதே நேரம் கொடுமையும் அல்ல..!

நாம் ஒன்றைப் பெற வேண்டுமெனில் மற்றொன்றை இழந்துதான் பெற இயலும். அந்த வகையில் வெளிநாட்டு வாழ்க்கையும் அப்படியே!

 வேலைக்கான தகுதியிருந்து நேர் வழியில் பொறுமையாக முயன்றால், தக்க வெளிநாட்டு வேலை நிச்சயம் சாத்தியப்படும். ஆனால் பொறுமையின்றி, குறுக்கு வழியில் அல்லது கண்மூடித்தனமான ஆசையில் வெளிநாட்டிற்கு வந்துவிட்டு ஏஜன்ஸிக்காரனையும் வெளிநாட்டு அரசாங்கத்தையும் குறை சொல்லிப் பயனில்லை.

எங்கேயுமே 'டிமாண்ட் Vs சப்ளை' தான் தாரக மந்திரம்..

கெடை மாடு மாதிரி 'அடிமாட்டு விலைக்கு வேலைக்கு வர்ரியா..?' என்றால் தலையாட்டிவிட்டு, அயல்நாடு செல்ல வேண்டியது, பின்னர் அங்கே இறங்கியவுடன் "ஐயோ என் தகுதி ஏற்ற வேலை இல்லை..!" என பொலம்ப வேண்டியது

சமீபத்தில் ஒரு செய்தி படித்த ஞாபகம் உள்ளது..

'ஓர் பட்டதாரிப் பொறியாளர், பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்ப்பதாக..!' - இவரின் வேலை தேடிய பின்புலத்தை ஆராய்ந்தால் கதைகள் பல வரும், ஆனால் அவர் அந்த விடயத்தை யாருக்கும் சொல்வதில்லை. இந்த மாதிரி ஊதிப் பெருக்கும் கவர்ச்சி தலைப்புகளை படிக்கும் மக்களும் பின்புலமுள்ள காரணிகளை சிந்திப்பதில்லை..

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தபோது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் பொறியியலாராக வர முடியாது. ஆனால் இன்று 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே நீங்கள் பொறியாளர்தான்.. தற்பொழுது தமிழ்நாட்டில் ஏறக்குறைய 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த குறைந்த மதிப்பெண்களில் அனுமதிபெற்று படித்து வெளிவருபவர்களின் கல்வித்தரம், அறிவுத்திறன் எம்மாதிரி இருக்குமென சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

போட்டிகள் நிறைந்த வேலை சந்தையில் இவர்களுக்கு எப்படி உள்ளூரில் வேலை கிடைக்கும்? ஆகவே இம்மாதிரிப்பட்டவர்களின் அடுத்த குறி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுவதுதான்..! அனைவருக்கும் தெரியும் மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலைக்கு நுழைய அதிக நுண்ணிய அளவில் தரக்கட்டுப்பாடு சோதனைகளோ, சரிபார்க்கும் பொறிமுறைகளோ அதிக அளவில் இல்லை என்பது.

ஏஜன்ஸிகாரரிடம் "எப்படியாவது என்னை வெளிநாட்டு மண்ணில் இறக்கிவிடுங்கள், அப்புறம் அங்கே சென்றவுடன் தத்தளித்து கரையேறிக்கொள்கிறேன்" என மன்றாடி வந்து அல்லல்படுபவர்கள்தான் அதிகம். இந்த வேலை சந்தையையும், வேலை தேடுவோரின் மனநிலையையும் பயன்படுத்தி பலவிதங்களில் துஷ்பிரயோகம் செய்வதுதான் அதிகம் நடக்கிறது. அதற்கு வேலை தேடுவோரும் ஒத்துழைக்கின்றனர்.

சரியான முறையில், தகுதிக்கேற்ற வேலையை நாடி, வேலையையும், அதைக் கொடுக்கும் நிறுவனத்தையும் பற்றி முழுமையாக விசாரித்துவிட்டு, கிடைத்திருக்கும் விசா மற்றும் வேலை நிபந்தனைகளை படித்து சரிபார்த்துவிட்டு வெளிநாடு சென்றால் வெளிநாட்டு வேலை நிச்சயம் நிம்மதியானதே..!

உண்மையில், இந்த வெளிநாடுகளுக்கு போக கொடுக்கும் பணமே, அங்கே ஒரு சிறு தொழில் தொடங்க போதுமானது.

இலங்கையாயிருந்தாலும், தமிழகமாக இருந்தாலும், சினிமா மோகத்தில், உலகமே புரியாமல் இருக்கின்றார்கள்.

அதேவேளை மலையாளிகள், சினிமாவின் எல்லை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மத்தியகிழக்கு முழுவதும் அவர்கள் நல்ல தொழில், வேலைகளில் உள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சந்தையை இலக்கு வைத்து, பரோடா, மரவள்ளி கிழங்கு பொரியல், மிக்ஸ்சர், தவிட்டு அரிசி (குத்தரிசி) எல்லாம் கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்கள்.

அட, யாழ்பாணத்து தமிழர்கள் கூட, இந்த சந்தை தெரியாமல், வெளிநாட்டு வேலை என்று வாழ்கிறார்கள்.

மீன் பிடிக்க வந்து சூடு வாங்குகிறார்கள் தமிழகத்து தமிழர்கள். அந்த மீனை சிங்களவர்கள் அடாத்தாக பிடித்து இங்கே அனுப்பினார்கள். இப்போது, எதிர்ப்பு வர, தமிழர்களிடம் வாங்கி, கொழும்பு ஊடாக இங்கே அனுப்புகிறார்கள். ஆனால் தமிழர்களோ, இங்கே வர வேண்டும் என்ற ஆவலில் தான் இருக்கிறார்கள்.

1990 களிலேயே பல மலையாளிகள், இலங்கைத் தமிழர்கள் என்று கூறி இங்கே அரசியல் தஞ்சம் எடுத்து இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

திரை கடலோடியும் திரவியம் தேடு என்று சும்மா போன போக்கில் சொல்லிச் செல்லவில்லை .  புது நாடு காணப் போய் எவ்வளவோ இழப்புகளுக்கு மத்தியில் சென்றடைந்தவர்களின் சந்ததிகள் நன்றாக இருக்கிறார்கள்.
வெளிநாடு செல்வதற்கு செலவழிக்கும் பணம் உள்ளூரில் ஒரு சிறு தொழில் செய்ய போதும் உண்மை தான் பொருளாதாரமும் சற்றே தெரிந்திருக்க வேண்டும் GDP  கூடுதலாக இருக்கும் நாட்டில் அதே சிறு தொழிலை செய்தால் முன்னேற்றத்தின் வித்தியாசம் என்னவென்று தெரியும்.

மலையாளியை மரவள்ளி விற்கிறான் என பொரியும் போது நம்மவனும் குகன் மிக்ஸர் விற்று நல்லா இருக்கிறான் கிங்ஸ் தூள் குடுத்து சூடு கிளப்பியிருக்கிறான் என்று சொல்ல என் மனம் வரவில்லை .   

அது சரி  90 களில் மலையாளிகள் பொய் சொல்லியாவது  Asylum  அடித்தார்கள் வெளிநாடு போனார்கள் என புளகாங்கிதம் அடையும் நீங்கள் எம்மவர் அதையே செய்தல் கடுப்படைவது போல இருக்கே,  ஏதேன் typo  வா ?     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனை எது வெளிநாடு நோக்கி தள்ளுகின்றது? இலங்கை போன்ற நாடுகளில் உள்ள‌ வறுமையும் / வாழ்க்கை செலவு அதிகரிப்பும், நிம்மதியில்லா வாழ்க்கையுமே. மேலெயுள்ள கட்டுரை சட்ட ரிதியாக வெளி நாடு செல்பவர்களை குறித்து எழுதப்பட்டுள்ளது. 

சரியான தகைமயும் அனுபவமும் இருந்தால் இலகுவாக குடிபெயரலாம். இதற்கேற்படும் செலவும் குறைவு.   

5 minutes ago, சாமானியன் said:

அது சரி  90 களில் மலையாளிகள் பொய் சொல்லியாவது  Asylum  அடித்தார்கள் வெளிநாடு போனார்கள் என புளகாங்கிதம் அடையும் நீங்கள் எம்மவர் அதையே செய்தல் கடுப்படைவது போல இருக்கே,  ஏதேன் typo  வா ?     

மலையாளிள் போரினால் பாதிப்படைந்தவர்களா? எம்மவர்கள் எல்லாம் இழந்தவர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

திரை கடலோடியும் திரவியம் தேடு என்று சும்மா போன போக்கில் சொல்லிச் செல்லவில்லை .  புது நாடு காணப் போய் எவ்வளவோ இழப்புகளுக்கு மத்தியில் சென்றடைந்தவர்களின் சந்ததிகள் நன்றாக இருக்கிறார்கள்.
வெளிநாடு செல்வதற்கு செலவழிக்கும் பணம் உள்ளூரில் ஒரு சிறு தொழில் செய்ய போதும் உண்மை தான் பொருளாதாரமும் சற்றே தெரிந்திருக்க வேண்டும் GDP  கூடுதலாக இருக்கும் நாட்டில் அதே சிறு தொழிலை செய்தால் முன்னேற்றத்தின் வித்தியாசம் என்னவென்று தெரியும்.

மலையாளியை மரவள்ளி விற்கிறான் என பொரியும் போது நம்மவனும் குகன் மிக்ஸர் விற்று நல்லா இருக்கிறான் கிங்ஸ் தூள் குடுத்து சூடு கிளப்பியிருக்கிறான் என்று சொல்ல என் மனம் வரவில்லை .   

அது சரி  90 களில் மலையாளிகள் பொய் சொல்லியாவது  Asylum  அடித்தார்கள் வெளிநாடு போனார்கள் என புளகாங்கிதம் அடையும் நீங்கள் எம்மவர் அதையே செய்தல் கடுப்படைவது போல இருக்கே,  ஏதேன் typo  வா ?     

நான் சொல்ல வந்ததை சரியாக விளங்கிக் கொள்ளாமல் உங்கள் பதிவை இட்டுள்ளீர்கள்.

யுத்தம் இல்லாத இன்றய காலப்பகுதியில், 35, 40 லச்சம் கொடுத்து லண்டன் வருவதிலும் பார்க்க, அந்த பணத்தினை அங்கேயே முதலீடு செய்யலாம் என்கிறேன்.

கிங்ஸ் தூள் பெருமுதலாளி, குகன் லண்டன் வாசி. நான் சொல்ல வருவது, யாழ்ப்பாணத்தில் இருந்து ஏன் வீச்சு ரொட்டி, மரவள்ளி பொரியல் வரக்  கூடாது, அது ஏன் கேரளாவில் இருந்து வரவேண்டும்? மேலே சொன்ன 35, 40 லச்சம் போதாதா, அங்கே தொழில் செய்ய?

மலையாளிகள் 90 ல் வந்தார்கள் என்று சொல்லும்போது, விசாவில் வந்து, செலவே இல்லாமல் இங்கே தங்கிக்  கொண்ட  அவர்கள் திறமையினை சொன்னேன்.  

முதலில் பதிவினை நன்கு வாசித்து உங்கள் பதிலை தாருங்கள். நீங்கள்  அனுமானிப்பதனை அப்படியே பதிவாக போடாதீர்கள். நன்றி.

இப்போது  இதனை type செய்யும் போது, கொழும்பில் இருந்து, வாட்ஸ் ஆப் செய்தி, சிங்களவர், றோயலில் படித்தவராம்.... கணிதம் tuition கொடுக்கிறாராரம், skype  மூலமாக..... யாராவது தேவையானால் தொடர்பு கொள்ளட்டுமாம்.

இதனைத்தான் முயற்சி என்கிறோம்.

யாழ்ப்பாணத்தில், என்ன மாங்காய் ஆய்கிறார்களா? இப்போது எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படிக்கிறார்கள். 

கேட்டால் வேலை இல்லை, வெளிநாடு போகவேண்டும் என்பார்கள். 

ஒரு சிறு தகமை கூட வளர்ப்பது இல்லை.

லண்டனில் ஒரு மொரட்டுவ பல்கலை கழக பட்டதாரி பொறியியலாளர். தனது சுஜ விபரக் கோவையை (CV ) செக் பண்ணி தருமாறு கேட்டார். பெட்ரோல் நிலையத்தில் வேலை.

அவரிடம் சொன்னேன்,  பொறியியலாளர் என்று மட்டும் போடுங்கள். இலங்கை பல்கலை கழகம்  என்பதை எடுத்து விடுங்கள் என்றேன்.

ஏன் என்றார். வேலை தரும் வெள்ளையர்களுக்கு, இலங்கையும், சோமாலியும் அகதிகளை அனுப்பும் நாடு, அந்த கோணத்தில் தான் பார்ப்பார். ஆகவே போடதீர்கள். நேர்முகத்தில் கேட்டால் சொல்லுங்கள் என்றேன்.

அமைதியாக எழுந்து சென்ற அவர், அன்றிரவு ஈமெயில் போடுகிறார்;  நீங்கள் எப்படி, இலங்கையின் தரமான பல்கலைக் கழகத்தினை , சோமாலியாவின் பல்கலைக் கழகத்துடன் ஒப்பிட முடியும் என்றாரே பார்க்கலாம்.

ஹலோ, ப்ரோ, இலங்கை பல்கலைக்கழக தரம் எனக்கு தெரியும், சோமாலியாவில் பல்கலைக்கழகம் இருக்கிறதோ, இல்லையா என்றே தெரியாது. வெள்ளைக்காரன் எப்படி பார்ப்பார் என்று உதாரணம் சொன்னேன் என்று பதில் போட்டேன்.

பல ஆண்டுகள், இன்றும் கூட, பெட்ரோல் நிலையம் தான்... எப்படி வேலை கிடைக்கும். இதுதான் நோய்.... 

இதைத்தான் முன்னரே சொன்னேன், முதலமைச்சராக விக்கியர்  இருந்த போது, அரசுடன் சில விடயங்களில் சேர்ந்து இயங்கி, வரி இல்லா  மண்டலங்களை உருவாக்கி, மேலை நாட்டு தூதுவர்களுடன், அரசுகளுடன்  பேசி, GSP + போன்ற மேலதிக சலுகைகளை வாங்கி, பொருட்களை தமிழர் சந்தைக்கு அனுப்பி இருக்கலாம். வேலை வாய்ப்புகளை அதிகரித்திருக்கலாம். 

ஆனால் அவர் நீதிபதி, வியாபார பின்புலம் இருக்கவில்லை என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லண்டனில் ஒரு மொரட்டுவ பல்கலை கழக பட்டதாரி பொறியியலாளர். தனது சுஜ விபரக் கோவையை (CV ) செக் பண்ணி தருமாறு கேட்டார். பெட்ரோல் நிலையத்தில் வேலை.

அவரிடம் சொன்னேன்,  பொறியியலாளர் என்று மட்டும் போடுங்கள். இலங்கை பல்கலை கழகம்  என்பதை எடுத்து விடுங்கள் என்றேன்.

ஏன் என்றார். வேலை தரும் வெள்ளையர்களுக்கு, இலங்கையும், சோமாலியும் அகதிகளை அனுப்பும் நாடு, அந்த கோணத்தில் தான் பார்ப்பார். ஆகவே போடதீர்கள். நேர்முகத்தில் கேட்டால் சொல்லுங்கள் என்றேன்.

அமைதியாக எழுந்து சென்ற அவர், அன்றிரவு ஈமெயில் போடுகிறார்;  நீங்கள் எப்படி, இலங்கையின் தரமான பல்கலைக் கழகத்தினை , சோமாலியாவின் பல்கலைக் கழகத்துடன் ஒப்பிட முடியும் என்றாரே பார்க்கலாம்.

ஹலோ, ப்ரோ, இலங்கை பல்கலைக்கழக தரம் எனக்கு தெரியும், சோமாலியாவில் பல்கலைக்கழகம் இருக்கிறதோ, இல்லையா என்றே தெரியாது. வெள்ளைக்காரன் எப்படி பார்ப்பார் என்று உதாரணம் சொன்னேன் என்று பதில் போட்டேன்.

பல ஆண்டுகள், இன்றும் கூட, பெட்ரோல் நிலையம் தான்... எப்படி வேலை கிடைக்கும். இதுதான் நோய்.... 

பட்டதாரிப் படிப்பு முக்கியம் தான்.

பல வேளைகளில், படிப்பை விட மனப்பாங்கும், apptitude உம் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

மொரட்டுவ ஏன், இங்கு ஒகஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் அல்லது Ruissell Group பல்கலைக்களங்களில்  இல் படித்த அனைவருக்குமே உடனடியாக வேலை அமைவதில்லை.

அதற்காக மொறட்டுவவில் இருக்கும் தனி சிறப்புகளை உதாசீனப்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

வெளிநாடு செல்வதற்கு செலவழிக்கும் பணம் உள்ளூரில் ஒரு சிறு தொழில் செய்ய போதும் உண்மை தான் பொருளாதாரமும் சற்றே தெரிந்திருக்க வேண்டும் GDP  கூடுதலாக இருக்கும் நாட்டில் அதே சிறு தொழிலை செய்தால் முன்னேற்றத்தின் வித்தியாசம் என்னவென்று தெரியும்.

அதே சிறு தொழில் அநேகமாக வளர்ந்த நாடுகளில் செய்யக் கூடிய தொழிலாக இருக்காது.
 
வளர்ந்த நாடுகளில், அதே சிறு தொழில் தொடங்குவதத்திற்கு கூடிய முதலீடும், விதிமுறைகளும் மிகவும் கூடுதலாக இருக்கும்.

கிங்ஸ் தூள் உற்பத்தியே இதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில், கிங்ஸ் தூளை வாங்குவதற்கு ஓர் நெருடல் எனக்குள் உண்டு.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

கிங்ஸ் தூள் உற்பத்தியே இதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில், கிங்ஸ் தூளை வாங்குவதற்கு ஓர் நெருடல் எனக்குள் உண்டு.  

கிங்க்ஸ் தூள் தமிழ் முதலாளியால் சிங்களவர்களை வைத்து தயாரிக்கப்படும் தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்படும் பொருள் அதே தயாரிப்பை யாழிலோ அல்லது மட்டகளப்பில் வைத்து தயாரிக்க முடியாது என்று கை விரித்து விட்டனர் ?

இங்கு லண்டனில் கிங்க்ஸ் புதிய டீலர் தங்களுடைய பிராண்ட்  பொருள்களை வேண்டினால்தான் கிங்க்ஸ் தூள் சப்பிளை செய்வம் எனும் ஒருவகை மோனோபோலி வியாபாரம் செய்யும் அளவுக்கு அதன் செல்வாக்கு தரம் .

நாம எப்பவும் ஊரில் இருந்து உரலில் இடித்து எடுத்த மிளகாய்த்தூள்தான் பாவிப்பது கிலோ 3 பவுணுக்குள் முடியும் கிங்க்ஸ் 900g சில கடைகளில் ஆறுபவுன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சந்தையை இலக்கு வைத்து, பரோடா, மரவள்ளி கிழங்கு பொரியல், மிக்ஸ்சர், தவிட்டு அரிசி (குத்தரிசி) எல்லாம் கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டு தமிழர்களை வேலைக்கு அமர்த்தி மலையாளி முதலாளிகளால் ஐரோப்பாவுக்கு அணுப்படும் பொருள்கள் பூநகரி மொட்டைகருப்பன் எனும் பெயரில் வந்து இறங்கும் அரிசி உண்மையிலே மலையாளிகளின் பவளம் எனும் பெயர் கொண்ட அரிசி அந்த அரிசியும் தஞ்சை சுற்றுவட்டாரத்தில் தமிழர்களால் விளைவிக்கப்படும் பொருள் அவர்களால் நேரடியாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது காரணம் கப்பல் போக்குவரத்து நாட்கள் அடுத்து தமிழகத்தின் துறைமுகம்களில் காணப்படும் அதிகூடிய ஊழல் மரவள்ளி கிழங்கு சிப்ஸ் போன்றவைக்கு யாழில் வன்னியில்  இருந்து கொண்டுவருவது என்றால் விளைச்சல் காணாது தமிழ்க்கடைகளில் காணப்படும் பணம் கிழங்கு கூட தாயகம் தமிழ்நாடுதான்  பூநகரி மொட்டைகருப்பன் அரிசிக்கு லாண்ட்மார்க் குறியீடு நம்ம அரசியல்வாதிகள்தான் செய்யணும் அவர்களுக்கு கொழும்பில் வீடு பெற்றுகொள்வதில் தான் முழுகவனமும் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

கிங்க்ஸ் தூள் தமிழ் முதலாளியால் சிங்களவர்களை வைத்து தயாரிக்கப்படும் தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்படும் பொருள் அதே தயாரிப்பை யாழிலோ அல்லது மட்டகளப்பில் வைத்து தயாரிக்க முடியாது என்று கை விரித்து விட்டனர் ?

வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளரை சிக்கப் பண்ணுதல் என்பவற்றிற்க்கு, வளைந்த நாடுகளில் உள்ள முதலைகளே business intelligence, preditive analytics என்று பணத்தை வாரி இறைத்தது ஆராய்ச்சி நடத்திகிறார்கள்.

எம்மது  கைவண்ணம் வந்த பொருளை, நாமே மெருகூட்டாமல், யாருக்கோ  எடுத்து எறிந்து விட்டார்கள்.

காரணம், உலகின் வளர்ச்சி தெரியவில்லையா?    

சொறி சிங்களம் எம்மைக்கு எப்படி இருந்தாலும், வியாபாரம் மற்றும் வணிகம் செய்வதற்கான இலகு சுட்டியில் சொறி சிங்களதின் நிர்வாகம் மிகவும் தாராளமாக நிர்வகிக்கிறது.

தமிழருக்கும் அதில் சிங்களம் இனவாதத்தால் இடம் கொடாமல் இருக்கிறதோ தெரியவில்லை.      

முதலில் நாங்கள் எதிரிகளை விட பணத்திலே ,அறிவிலே , பலமாக இருந்தபோதும் எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வை உடைக்கப்பண்ணுவதில் அவர்கள் வெற்றிகொண்டு உள்ளார்கள் அதன் அறுவடையை தமிழ்நாட்டிலும் வடகிழக்கிலும் நன்றாகவே பெற்று கொள்கிறார்கள் .

ஒற்றுமை உணர்வை கொண்டுவர யாராவது முயற்சித்தாலும் அவர்களை எதோ ஒரு விதத்தில் அழித்து விடுவதில் எதிரிகள் மீண்டும் மீண்டும் வெற்றி கொள்கிறார்கள்  மே 18ல்  நடந்ததும் அதுதான் . திருக்கேதிஸ்வர சம்பவங்கள் மூலம் நாம் இன்னும் பலத்தை இழந்துகொண்டு இருக்கிறேம் அதை அறிந்தோ அறியாமலோ சில ஊடகங்களும் எண்ணெய் ஊற்றுவது வேதனைக்கு உரியது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கிங்க்ஸ் தூள் தமிழ் முதலாளியால் சிங்களவர்களை வைத்து தயாரிக்கப்படும் தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்படும் பொருள் அதே தயாரிப்பை யாழிலோ அல்லது மட்டகளப்பில் வைத்து தயாரிக்க முடியாது என்று கை விரித்து விட்டனர் ?

நாம எப்பவும் ஊரில் இருந்து உரலில் இடித்து எடுத்த மிளகாய்த்தூள்தான் பாவிப்பது கிலோ 3 பவுணுக்குள் முடியும் கிங்க்ஸ் 900g சில கடைகளில் ஆறுபவுன்.

அதைத்தான் attitude என்கிறார் கடைஞ்சா.

பெரும் முதலாளிகளுடன் மோதப்  பயம். ஓவொருவரும் தமது comfort zone இனுள்  தான் இருக்க விரும்புவார்கள். வேலை, வீடு, குடும்பம்.

எனது நண்பரின் அண்ணன், இப்போது கொழும்பில் வியாபாரம் செய்கிறார். ஒரு விழாவில், சந்திரிகா வந்து பக்கத்தில் இருக்கிறார். 

நீங்கள் டெல்லியோ என்றாராம், இல்லை லண்டன் என்றவுடன், இன்னும் கவுரவமாக பேசியுள்ளார்.

அவர் சொன்னார்.... லண்டன், விஸ்கி, எடுப்பு காட்டினால்.. கொழும்பில், எதுவும் செய்யமுடியும் என்கிறார்.

அதுவே attitute.

இங்குள்ளவர்கள் தான் தொடங்கி, அங்குள்ளவரை வழி நடத்த வேண்டும். 

மரவள்ளி, விளைச்சல் காணாது தான். ஆனால் கொத்தமல்லி, சிறந்த வகை ருமானியவாம் என்று அங்கிருந்து இறக்கி இங்கு மிளகாய்த்தூளை அனுப்புகிறது கிங்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடு என்றதும் இப்ப விக்கியர் சொன்ன ஞாபகம் தான் வருது 

விக்கியர்

80 களில்  நிற்கிறார்

பார்த்து ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

பட்டதாரிப் படிப்பு முக்கியம் தான்.

பல வேளைகளில், படிப்பை விட மனப்பாங்கும், apptitude உம் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

மொரட்டுவ ஏன், இங்கு ஒகஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் அல்லது Ruissell Group பல்கலைக்களங்களில்  இல் படித்த அனைவருக்குமே உடனடியாக வேலை அமைவதில்லை.

அதற்காக மொறட்டுவவில் இருக்கும் தனி சிறப்புகளை உதாசீனப்படுத்தவில்லை.

ஓர் முக்கியமான விடயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன்.

பட்டதாரிப் படிப்பு பற்றியது.

இங்கு ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில், இரு முக்கிய பட்டமளிப்பு நிகழ்வுகள் இருக்கின்றன.

ஒன்று, graduation ceremony -பட்டமளிப்பு  விழா.

மற்றது, matriculation - ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஓர் நபரை பட்டதாரிப் படிப்பிடற்கு உகந்தவராக ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கல் ஏற்றுக்கொள்வது.

Matriculation விழா கூட வெளியாருக்கு பட்டமளிப்பு விழாவாகவே தோற்றமளிக்கும்.

Matriculation ceremony யில், முதல் அறிவுரை, உரை  துணை வேந்தர் வழங்குவார். வெவ்வேறு பொறுப்பில் இருப்போரும் வழங்குவர்.

அறிவுரையின், உரையின்  முதல் கூற்று - 'This is  NOT your passport to success.' அதன் பின் பல அறிவுரைகள் - கடின உழைப்பு, காலத்துக்கேற்றப்ப தகமையை வளர்த்தல், எதிர்பாராத இடர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் விதம், மீண்டெழுதல், Oxford இன் பாரம்பரியத்தை பேணி காப்பது, academic honesty - இப்படி பல வழங்கப்படும்.

இறுதியில், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அதன் படி ஒழுகுவதாக சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும்.

மெட்ரிகுலேஷன் விழா வேறு எந்த UK பல்கலைக்கழகங்களிலும் நடப்பதாக நான் அறியவில்லை. ஆயினும், St. Andrews இல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

University of London - 1940 களில் மெட்ரிகுலேஷன் நடத்தியது. எனது அம்மா இலங்கையில் இருந்தவாறே BA பட்டதாரி  University of London இல் 1940 களில் செய்து முடித்தார். Matriculation இல் அவர் பங்குபெற முடியாவிட்டாலும், University of London கடிதம் மூலமாக அவரின் பிரசனத்தை உறுதிப்படுத்தியிருந்தது.

US இல் உள்ள சில பல்கலைக்கழகங்களில் Matriculation ceremony நடைபெறுகிறது. ஆனால், அதில் பாரம்பரியங்கள் அவ்வளவாக இல்லை.

அதனால், பட்டதாரிப் படிப்பு மற்றும் பட்டம் என்பது எவரினதும் வளர்ச்சிப் பாதையில் ஓர் சிறு, மாற்றீடு செய்யக்கூடிய படிக்கல்   மட்டுமே. சில வேளைகளில், தடைக் கல்லாகவும் அமைந்து விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. 

தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியில், பட்டதாரிப் படிப்பும் பட்டமும் (மருத்துவப் பட்டம் கூட) காலாவதியாகுவதற்கோ அல்லது அடிபட்டு போவதற்கோ பல இடைவெளிகளும், வாய்ப்புகளும் உள்ளது.

உ.ம். புற்று நோய்க்கான சாத்தியாக்கூறை, தற்போதய Aritifical Intelligence - அதாவது machine learning, deep learning, neural networks, 90% துல்லியத்துடன் எதிர்வு கூறும் நிலையை அடைந்து விட்டது.  

சமீபத்தில், Dr பட்டம் பெற்றவர்கள் தமது சலுகைகைகளை காப்பதற்கு போராட வேண்டி வந்தது.

Dr பட்டம் கூட கால மாற்றத்தில், அரசாங்க, சமூக மாற்றத்தில், அரசாங்கமே அதை மாற்ற வேண்டி வரும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை. படிப்புக்குரிய வேலை கிடைக்காவிடில் சம்பந்தப் படுத்தவும் கூடாது.

பார்மசி கோர்ஸ் செய்து, வேகாத வெயிலில், மெடிக்கல் ரெப்  ஆக வேலை செய்து அலுத்துக்  கொண்டிருந்த ஒரு தமிழக நண்பர், தனது IT நண்பர் அறிவுரையால், 6 மாதம்  ஒரு கோர்ஸ் செய்து, இப்போது நோர்வேயில் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை. இப்படி பலர்.

இந்தியாவில், தென் ஆப்பிரிக்காவில், நைஜீரியாவில் இருப்பவர்களுக்கு, மான்செஸ்டர் பக்கத்தில் உள்ள வாரிங்க்டோன் நகரில் உள்ள IT வேலை தெரிகிறது. இங்கே படித்த நம்மவர் பிள்ளைகளுக்கோ தெரிவதில்லை. History விருப்பம் என்று டிகிரி எடுத்தார், வேலை இல்லாமல், டெஸ்கோவில் odd  jobs செய்கிறார் என்கிறார்கள்.

ஒரு 2,000 பௌண்ட்ஸ் முதலீடு செய்து ஒரு IT கோர்ஸ் செய்ய சொல்லுங்கோ என்றால், வேலை கிடைக்கும் என்று என்ன, gurantee என்கிறார்கள்.

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்....

அமேரிக்காவில் டிரம்ப்பும் , பிரிட்டனில் மேயும்  இருக்கும் வரை, அவர்கள் IT  காரர்களுக்கு விசா கொடுக்க தயங்குவதால் வேலை இருக்கும் என்று, தண்டோரா போட்டு  தான் சொல்ல வேண்டுமா?

Link to comment
Share on other sites

19 hours ago, விசுகு said:

விக்கியர்

80 களில்  நிற்கிறார்

பார்த்து ...???

இதை யாழில் சொல்லி அடி வாங்காத ஒரே ஒருவர் நீங்கள்தான் 

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இது சண்டை பிடிப்பதற்கான கருத்தில்லை 

ஏன் யாழ் களம் முன் நின்று ஏதாவது தொழிற்சாலையை அல்லது சுய தொழில் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது?

கள நண்பர்கள் ஓடிவிடுவார்கள் என்ற பயமா?

இது வெறும் வாய்ப்பேச்சிற்கான களம் மட்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

இது சண்டை பிடிப்பதற்கான கருத்தில்லை 

ஏன் யாழ் களம் முன் நின்று ஏதாவது தொழிற்சாலையை அல்லது சுய தொழில் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது?

கள நண்பர்கள் ஓடிவிடுவார்கள் என்ற பயமா?

இது வெறும் வாய்ப்பேச்சிற்கான களம் மட்டுமா?

கேள்விக்கு  நன்றி சகோ

ஆனால்  தாயகத்திலுள்ளவர்கள்  அதை  பொறுப்பெடுக்க

அல்லது பொது  நோக்கோடு பணியாற்ற  தயாராக  உள்ளனரா  சகோ....??

நான் ரொம்ப நொந்து  போயுள்ளேன் அதனால்  இக்கேள்வியை  முன் வைக்கின்றேன்

(வேண்டுமானால்  வேறு  ஒரு திரி திறந்து இதற்கான  விடையை  தேடுவோம்)

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

கேள்விக்கு  நன்றி சகோ

என்னால் முடிந்தளவு உதவி செய்வேன் 

ஆனால் பணத்திற்கு மட்டும் நான் பொறுப்பெடுக்க மாட்டேன் - ரொம்ப நொந்து விட்டேன் 

சொந்த பணத்தில் ஊர் சுற்றினாலும் - தங்கட பணம் என்பார்கள் பரதேசிகள்.

என்னாலும் ஒரு தொகையை எந்த வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காக முதலிடமுடியும்.

ஆனால் ஓரளவிற்கு வேறு விடயங்களிலும் உதவ முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

இது சண்டை பிடிப்பதற்கான கருத்தில்லை 

ஏன் யாழ் களம் முன் நின்று ஏதாவது தொழிற்சாலையை அல்லது சுய தொழில் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது?

கள நண்பர்கள் ஓடிவிடுவார்கள் என்ற பயமா?

இது வெறும் வாய்ப்பேச்சிற்கான களம் மட்டுமா?

ஊரில் இருக்கும் நீஙகள் எந்த வகையில் உதவ முடியும் என்று சொல்லுங்க.

முதலாவது மீன்வளத்துறையை வளர்தெடுக்கலாம். புலம் பெயர் மக்கள் அதிகமாக வாங்குகின்றனர்.

இரண்டாவது தகவல் தொழில்நுட்பம் 

மூன்றாவதாக புலம் பெயர் மக்களை நோக்கிய, மளிகைப் பொருள் உற்பத்தி.

தீவுப்பகுதிக்கும், அராலி முதல் காரைநகர் வரைக்கும் இடையான ஆழமில்லாத கடல், மீன், றால் பண்ணைகள் வைக்க சிறப்பானது.

முதலீடுகள், சட்டபூர்வமான கம்பனி, பங்குகள் மூலம் புலத்தில் பெறப்படலாம். அவ்வாறு செய்தால் மட்டுமே நம்பகத்தன்மை வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.