• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பிழம்பு

சென்றலைட்ஸ் அணிக்குக் கிண்ணம்!!

Recommended Posts

சென்றலைட்ஸ் அணிக்குக் கிண்ணம்!!

 

யாழ்ப்பாணம் கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் நடாத்திய விக்ரம், ராஜன், கங்கு ஞாபகர்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக கிண்ணம் வென்றது.

  • 20190303_160507.jpg?zoom=1.2100000262260

கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று இடம் பெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி. ஸி விளையாட்டுக் கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி. விளையாட்டுக்கழக அணியினர் 40பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஜெயறூபன் 39 ஓட்டங்களையும். பீரதீஸ் 33 ஓட்டங்களையும், சத்தியன், பிரதாபன் இருவரும் தலா 32 ஓட்டங்களையும், பெற்றனர்.

பந்து வீச்சில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணி சார்பில் அலன் ராஜ் 5 இலக்கினையும். தசோபன் 2 இலக்கினையும் 2 வீழ்த்தினர்.

201 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்தாடி சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியினர் 36 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்கினையும் இழத்து 202 ஒட்டங்களைப் பெற்றனர்.

ஜெனோசன் 48 ஓட்டங்களையும், பிரிய லக்சன் 47 ஓட்டங்களையும், செல்ரன் 26 ஓட்டங்களையும், நிரேசன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் கே.ஸி.ஸி விளையாட்டுக்கழக அணி சார்பில் பீரதீஸ், துயந்தன், இருவரும்.
2 இலக்கினையும் வீழ்த்தினர்.

https://newuthayan.com/story/16/சென்றலைட்ஸ்-அணிக்குக்-க.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.