ஏராளன்

4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?

Recommended Posts

4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?

 
5g_tholilnutpam.com_.jpg

நமது நாட்டில்  4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து  5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G  ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும்  4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ?  இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா ? அல்லது வேறு ஏதாவது தொழிநுட்ப சாதனங்களில் பயன் படுத்த முடியுமா ? என்ற நிறைய கேள்விகள்  
எல்லாருடைய மனதிலும்  ஓடிக்கொண்டிருக்கும் இந்த  5G தொழிநுட்பம்  
என்ன என்பதை பற்றி காண்போம்.
 
5G என்றல் என்ன ?
 
( 5th Generation Of Internet ) என்பது தான் இதன் விரிவாக்கம் . 5G என்று சொன்னவுடன் நம் மனதில் தோன்றுவது அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தான். 5G யின் வேகம் 10 Gbps  அப்போது   இதன் வேகம் எவ்வளவு இருக்கும் நீங்கள் எவ்வளவு வேகமாக தகவல் மற்றும் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்  என்று நினைத்து பாருங்கள் . இதன் வேகம் உண்மையிலேயே அதிகம் தான்.
 
4G மற்றும்  5G  யின் வித்தியாசம் என்ன ?
 
4G மற்றும்  5G  தொழிநுட்பத்தின் என்ன  வித்தியாசம் என்பதை அடிப்படையில் இருந்து பார்ப்போம்.
 
1G சேவை :
 
முதன் முதலில் வர்த்தக ரீதியாக பயன்படுத்த பட்ட மொபைல் சேவை தான் 1G . இந்த  சேவையை பயன்படுத்தி அலைபேசியின் மூலம் ஒருவர் மாற்றுவருடன் பேசி கொள்ள  மட்டுமே முடியும்.
 
2G சேவை :
 
முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியை இந்த சேவையில் தான் கொண்டுவரப்பட்டன  ஒருவர் மற்றொவருடன் போனில் பேசமுடியும். குறுந்செய்திகள்( SMS ) மற்றும் காணொளிகளை ( MMS ) அனுப்பும் வசதியும் கொண்டு வரப்பட்டது இந்த சேவையில் தான்.

 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.jpg
 
3G சேவை :
 
இந்த சேவையில் தான் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின இதன் காரணமாக சிக்னல்களை சிறிய பாக்கெட்களாக பிரித்து அனுப்பும் பாக்கெட் ஸ்விட்சிங் முறை கொண்டு வரப்பட்ட்டன. இவை 3G   சேவை தான் ஒயர் இல்லாமல் வேகமான இன்டர்நெட்டை பயன்படுத்தும்  வசதி மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ், ஐ.பி.எஸ் வசதி போன்றவை இந்த 3G சேவை தான் சாத்தியமாகின.
 
4G சேவை :
 
3G விடவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்த 4G சேவை கொண்டு வரப்பட்டது அதிவேக இன்டர்நெட் வசதி ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வரை 4G சேவையை பயன்படுத்த முடியும் , வீடியோ கால் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ,மொபைல் டிவி என இன்டர்நெட் உலகையே மாத்தியமைத்தது தான் 4G.
 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.jpg

 
5G சேவை :
 
4G விட நுறு மடங்கு டேட்டாக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தை 3G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 26 மணி நேரம் ஆகும் 4G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 6 நிமிடத்தில் டவுன்லோட் செய்ய முடியும்  ஆனால் 5யில் 3.6 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும் 

 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.png
 
 
இந்த சேவையானது நமது அன்றட வாழ்வில் நாம்  பயன்படுத்தும் அனைத்து கேஜெட்களிலும்  5G  சேவையை பயன்படுத்தும் வகையில் இருக்கும் . அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் தான் சேமித்து வைத்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

 
aa.png

 
 
5G சேவையின் நிறைகள் :
 
அதிவேகமாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில்  இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் , அனைத்து கேஜெட்களிலும் பயன்படுத்தும் வைகையில் இருக்கும். 
 
எதிர்காலத்தில் புதிதாக நிறைய தொழில்நுட்ப கருவிகளை உருவாக்க  மற்றும் அதிவேகமாக பயன்படுத்த முடியும்.
 
குறைகள் :
 
ஒரு 4G மொபைல் போனை  பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால்  5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு  சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.
 
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் . நன்றி 
 
 • Like 1
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு நன்றி ஏராளன்.

Share this post


Link to post
Share on other sites

யாரையாவது கேட்க வேண்டும் என்று இருந்தேன்.
பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி விரிவான தகவல்களை இணைத்துள்ளீர்கள் ஏராளன்.
இணைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நானும் இதுபற்றித் தேடிக்கொண்டு இருந்தேன். எளிமையான விதத்தில் விளக்கம் தரப்பட்டுள்ள இந்த தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஏராளன். 

இது உங்கள் சொந்த வலைப்பக்கமா? 😊

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு பதிவை இணைத்தமைக்கு... நன்றி ஏராளன்.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ஏராளன் said:

ஒரு 4G மொபைல் போனை  பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால்  5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு  சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.

இது மிகவும் பாதகமாகவல்லவா இருக்கிறது.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மல்லிகை வாசம் said:

நானும் இதுபற்றித் தேடிக்கொண்டு இருந்தேன். எளிமையான விதத்தில் விளக்கம் தரப்பட்டுள்ள இந்த தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஏராளன். 

இது உங்கள் சொந்த வலைப்பக்கமா? 😊

இல்லை, வாசித்ததை பகிர்ந்தேன்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .. ஏராளன் 

https://www.tholilnutpam.com/2019/03/4g-5g.html

புதிதாக ஆரம்பித்துளேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே 

தொழில்நுட்பம் இது எனது தளம்  https://www.tholilnutpam.com

On 3/5/2019 at 8:18 AM, ஈழப்பிரியன் said:

இது மிகவும் பாதகமாகவல்லவா இருக்கிறது.

என்னுடைய தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .. ஏராளன் 

https://www.tholilnutpam.com/2019/03/4g-5g.html

புதிதாக ஆரம்பித்துளேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே 

 தொழில்நுட்பம் இது எனது தளம்  https://www.tholilnutpam.com

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும்.   
  • சுப்பிரமணியன் சுவாமி உட்பட பல தமிழின கொலையாளிகள் ஒன்று கூடிய வைபவம்.  அக்கா கனிமொழியும் கலந்து வாழ்த்தி இருப்பா என்று நினைத்தேன், படத்தை காணவில்லை. 
  • கடஞ்சா, 1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை. 2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி. 
  • எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம்.   கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்
  • இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை? இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை. பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்? அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே? சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம். அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும். ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள்.