• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மன்னிக்கவும் இந்திய என்ற சொல்லை பயன்படுத்தியது, பிற்கால ஆராய்சியாளர்கள்.  கெமர் மொழியின் பயன்பாடு 9ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.  கெமர் பேரரசு கிபி 802-1432 வரையானது. அங்கோர்வாட் அண்ணளவாக 1150 இல் கட்டப்பட்டது. கெமர் பேரரசு எழ முன்னர், கெமர் மொழி உருவாகும் முன்னர்; சென்லா என்ற அரசும் (கிபி 550-850) (F)புனான் என்ற அரசும் (கிபி 50 -550) இன்றைய தாய்லாந்து, கம்போடிய, வியட்நாம் நாடுகளை உள்ளடக்கி இருந்ததாக சீன பயணக் குறிப்புகள் சொல்கிறன. புனானும், சென்லாவும் கிரந்த மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிரதத்தை ஆட்சி மொழியாகவும், இந்து சமய வழிபாட்டை கொண்டிருந்ததாயும் நம்பப் படுகிறது. இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அவர்கள் பல இனக் குழுக்களா அல்லது ஒரே இனக் குழுவா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மக்களிடம் இருந்தே இன்நாளைய கம்போடிய மக்களும் வியட்நாமிய மக்களும் வந்துள்ளார்கள். புன்னானுக்கு 4ம் 5ம் நூற்றாண்டுகளில் இந்திய தொடர்புகள் அதிகரித்து, குப்தர்கள் மற்றும் பல்லவர்களின் தாக்கம் அங்கே அதிகரித்தது. பின்னநாளில் இது வலுவடைந்து சென்லா காலத்திலும் தொடர்ந்தது. பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சமஸ்கிரத குறிப்புகள் புனான் பற்றி உள்ளன ஆனால் அங்கே வாழ்ந்த மக்கள் பற்றி தகவல் இல்லை. ஆனால் நிச்சயமாக பல்லவர்களுக்கும் புனான், சென்லாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மறுக்கவியலாது.  ஆனால்; 1. இவ்வளவற்றையும் வைத்து 12ம் நூற்றாண்டில் ஆண்ட சூர்யவர்மன் தமிழன் என சொல்ல முடியாது. 2. பல்லவர்கள் தமிழ் மன்னர்களா? என்பதே விவாதத்துக்குரியதல்லவா? சேர, சோழ பாண்டியர்கள் தானே தமிழ் மூவேந்தர்கள்? பல்லவர்கள், சமஸ்கிரத, தெலுங்கு, தமிழ் மும்மொழி வேந்தர்கள். நிச்சயமாக சீமானின் வரையறையில் பல்லவர்கள் தமிழர்கள் கிடையாது.  ஆக, இங்கே அடைய கூடிய துணிபுதான் என்ன? 1. அங்கர்வோட் எழுந்த காலத்தில் (12ம் நூற்றாண்டு) அங்கே இருந்தது கெமர் மொழி பேசும், சைவ/வைஸ்ணவ/பெளத்த கெமர் பேரரசு. தமிழ் அரசல்ல. 2. கெமர் பேரரசு எழ முன்னர் - அந்த பெருநிலப்பரப்பில் பல்லவர்கள், குப்தர்களுடன் மிக நெருங்கிய உறவை பேணிய இரு அரசுகள் இருந்தன. இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் கெமர் பேரரசிலும் இருந்தன (பெயரிடும் முறை, மதம்). 
    • இலங்கையர்களை மீள அழைத்துவர நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பீஜிங்க், ஷென்ஹூ ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 40 மாணவர்களையும் மீள நாட்டுக்கு அழைத்துவருதற்கும் தேவையன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயரகள-மள-அழததவர-நடவடகக/150-244517
    • வெளிச்சம் வந்தவுடனை அதை எடுக்கிறவை விட்டிட்டினம்...அதுவரை இங்கத்தை பேப்பர் காரருக்கும் உழைப்புத்தான்.....கனாவில் கரிபடிந்த காலம்..
    • இன்னும் பத்தாண்டில் சீனன் இலங்கை முழுவதும் குடியேறிவிடுவான்.  எதற்கும் அந்த மொழியை முன்னெச்சரிக்கையாய்  படித்து வைப்பது நன்மை பயக்கும். 
    • பயமுறுத்தியும், ஆசைவார்த்தை கூறியும் வாக்கு சேர்த்து தமிழ் மக்கள் எங்கள் கொள்கைகளை ஏற்று எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம். தமிழர் வாயைப்பொத்திக்கொண்டு நாங்கள் தருவதை பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பவுத்தம் முக்கிய மதம், சிங்களம் பிரதான மொழி, வாய்பிளந்த சிலதுகள் தமிழ்த்தலைமைகள். இதற்காக அவன் செய்யும் ஏற்பாடுகள் இவை. அறிவிலிகளோடு கதைப்பதால்: அதை சிங்கள மக்களிடத்தில்  பெரிது படுத்தி எதிர்க்கட்சி ஒன்று இல்லாமல் தாங்களே சர்வாதிகாரிகளாக அரசியல் செய்யவும் வாய்ப்புண்டு. ஆகவே இவர்களோடு கதைப்பதை விடுத்து, நம்மை நாம் நிர்வகிக்க வேண்டிய காரணம் என்ன என்பதற்கான ஆதாரங்களை திரட்டி, அதற்கான ஆதரவுகளை திரட்டுவதும், சிங்களம் தெரிந்தவர்கள் தங்கள் முகநூல் மூலம் சிங்கள இளம் தலை முறையினருக்கு விளங்கப்படுத்தவும், வெளிநாட்டிலுள்ளோர் தங்கள் அரசாங்ககங்களுக்கு விளங்கப்படுத்தியும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நாங்கள் அழியப்போகிறோம் என கூப்பாடு போடுவதிலும் பார்க்க, அதற்குமுன் எம்மாலான முயற்சிகளை செய்து பார்த்தபின்பு அழிவதில் தப்பில்லை.