Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2019: நீங்களும் பரிந்துரை செய்யலாம்


Recommended Posts

நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2019: நீங்களும் பரிந்துரை செய்யலாம்

 

Tamil3s-Tretamiler19-300x201.jpgநோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது.

நோர்வே வாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தமிழ் 3 இன் தமிழர் மூவர்  2019 மதிப்பளிப்பிற்கான வரைமுறைகள்:

இந்த ஆண்டிற்கான ‘நோர்வேஜிய தமிழ்’ (Norwegian-Tamils) முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவுசெய்வதற்கு பின்வரும் வரையறையுடையோர் பரிந்துரைக்கப்படலாம்:

 • நோர்வேயை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்
 • 18 முதல் 33 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
 • பெற்றோரில் குறைந்தது ஒருவர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தமிழ் 3இற்கு அனுப்பிவைக்கப்படும் பரிந்துரைகள், ’தமிழர் மூவர்’ தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படும் மூவர் 26.05.2019 நடைபெறவுள்ள தமிழ் 3 வானொலியின் 6வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்கப்படுவர்.

உங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 15.04. 2019 ஆம் நாளுக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

தமிழ்3 இன் தமிழர் மூவர் பரிந்துரை செய்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி,  மின்னஞ்சல்,  விபரங்களும், “தமிழ் 3இன் தமிழர் மூவர் – 2018″ இற்கு உங்களால் பரிந்துரைக்கப்படுபவர் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல், பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் ஆகிய விபரங்களும் விண்ணப்பத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.puthinappalakai.net/2019/03/06/news/36746

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன.  கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும்  கதையெங்கும் இழையோடி நிற்கிறது.  அண்ணன் – தம்பி, அம்மா – மகன் உறவை இம்மியளவேனும் குறைவின்றிச் சொன்ன விதம் அழகு. சண்டை நடந்த காலத்துத் துயரங்களையும், சண்டைக்குப் பிந்திய இராணுவ அடக்குமுறை பற்றியும், தமிழர்களின் தியாகங்கள் பற்றியும் காலங்கடந்து வரும் எங்கள் சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டிய பலதரப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலைப் பார்க்க வேண்டி இருக்கிறது. எங்கள் பூர்வீக மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எங்கள் இளஞ் சந்ததிகள் ஒருமுறையேனும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காகவேனும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பன்மொழிப் புலமை உள்ள எழுத்தார்வம் உள்ளவர்கள் இந்த நாவலை வேற்று மொழிகளில் மொழி பெயர்க்க முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.  போர் எவ்வளவு கொடுமையானது என்பது, பிறந்த நாளில் இருந்து போரோடு வாழ்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். உலகில் யாரும் போரை விரும்புவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும் போது தவிர்க்க முடியாமல் போரே எங்கள் வாழ்வைத் தீர்மானித்தது. போர் எங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட போது அதற்குள் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை வந்தபோது போரும் எங்கள் வாழ்வின் அங்கமாகிப்போனது.  அன்றாடம் தினச் சாவுக் குறிப்புக்களால் எழுதப்பட்ட முற்றுப் பெறாத நினைவுகளை, அகதி வாழ்வின் அந்தர நிலைகளை, பெற்ற பிள்ளையைப் போரில் பறிகொடுத்த பெற்றோரின் நிலையை, கணவனை இழந்த மனைவியின் துயரை, தந்தையை இழந்த பிள்ளைகள் – சகோதரங்களைப் பறிகொடுத்த உறவுகளின் சொல்லொணாத் துயரங்களை முற்றுப் பெறாத தொடர் கதையாய் நீளும் போருக்குப் பின்னைய அடக்குமுறைகளை விரிந்த காட்சி அமைப்பில் கொண்டு வந்து ஒரு படம் போலக் கண் முன்னே விரிய வைக்கிறார். எல்லாவற்றையும் மீறி வெள்ளையன், கதை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார்.  போருக்குள்ளும் ஒரு அழகியல் சார்ந்த வாழ்விருந்தது என்பதை இக்கதையில் ஆங்காங்கு தொட்டுச் செல்லும் எழுத்தாளர் போரினால் ஏற்பட்ட வலிகளை வரிசைப்படுத்திச் சொன்ன விதமும் கையாண்ட இயல்பான மொழிநடையும் வாசிப்போரைத் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு கடுகதித் தொடர்வண்டி போல இழுத்துச் செல்கிறது. போரும் அதனால் ஏற்பற்ற இழப்புகளும் எம் வாழ்வில் ஏற்படுத்திய சொல்லொண்ணாக் காயங்களை ஒரு உள்ளிருந்த பார்வையாக வெளிக் கொண்டு வருவதற்கு, தீபச்செல்வன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இன்று முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் இது அவ்வளவு இலகுவான காரியமல்ல, கத்திமேல் நடப்பதிலும் கொடியது. தெரிந்தும் பேனாவைக் கையில் தூக்கிய தீபச்செல்வனைப் பாராட்டியே ஆகவேண்டும். ஒன்று மட்டும் உறுதி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தக் கதை என்னைத் தூங்க விடாமல் ஏதோ செய்யப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது. நன்றி  தியா https://www.panippookkal.com/ithazh/archives/22081?fbclid=IwAR2D3Y_8EkzpnAnhOuHvQEl9vjKUuBOOJsjsAuO4Rw9zRk4Yx2ZLPbA16j8
  • மன்னிக்கவும்.  ஊரில் சுங்கத்தோடு ஒரே இழுப்பாடு. இன்னும் மடிக்கணணியை பிடிச்சு வைச்சு ரூல்ஸ் கதைக்கிறாங்கள்.   தவளைகளுக்கு மாதம் நூறு டொலர் மாமி போடுறா! கையில பியருக்கும் பெட்லரோலுக்கும் காசு.  அம்மாவும் பிள்ளை அடுத்த சுந்தர் பிச்சை என்று அவித்து கொட்டுவா!  சுப்பர் வாழ்க்கை!   எங்கேயாவது கொழும்பு சென்று மாதம் இருபதாயிரம் ரூபாவிற்கு சிங்களவனிடம் அடிமையா வேலை செய்வார்கள். நான் 7 வருடங்கள் முயற்சி செய்து இப்போது எனது பாடசாலை பாட திட்டத்தை மேம்படுத்தும் நிலைக்கு வந்துள்ளேன். இப்போதுள்ளவர்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.  மற்றும் அவர்கள் எல்லோரும் எம்மை இளக்காரமா பார்க்கினம் அவை பெரிய புத்திசாலிகள் என்று படம் கதை வேறு! நன்றி முதல்வன்.  நாம் எமது சின்ன ஊர் சின்ன பாடசாலை சின்ன கோவிலை திருத்தி உதவினாலே போதும்.   பெரிதாக திட்டம் போட்டு வேலை செய்ய தமிழரால் முடியாது. சிறு துளிகள் போதும்.  
  • தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சுத்தாங்கத்து நற்சபையே சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை 4. சிங்காரக் கன்னிமாரே – உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து சிங்காரக் கன்னிமாரே மங்காத உம் மணவாளன் இயேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.