Jump to content

மனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்! #AshWednesday


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதாவது, உண்ணா நோன்பிருந்து,அழுது புலம்பிக்கொண்டு,உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.  - யோவேல் 2:12

சாம்பல் புதன்', `விபூதி புதன்', `திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் முதல் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம். மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல். ``சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்கும்

à®à®¾à®®à¯à®ªà®²à¯ பà¯à®¤à®©à¯

தவக்காலத்தில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் சுத்த போசனமும், 18 வயதுக்கு மேற்பட்டோர் 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருக்க வேண்டும். உண்ணா நோன்பு என்பது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு. விவிலியத்தில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்தது. `இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.' `மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.' `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார்.' இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது. 

 

à®à®¾à®®à¯à®ªà®²à¯ பà¯à®¤à®©à¯திருவிவிலியம் படித்தல், எப்போதும் ஜெபம் செய்தல், பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருத்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்றவை தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்குமுறைகளாகும். வரும் ஏப்ரல் 14-ம் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழனும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டு, 21-ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

prayer

குருவானவர் `மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லிக்கொண்டு சாம்பலை நெற்றியில் பூசுவார்கள். நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திரும்பி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, பிறர் மீது வைத்துள்ள கோபம், பொறாமை, வஞ்சகம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற்று, நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்

https://www.vikatan.com/news/spirituality/151445-ash-wednesday-is-the-starting-day-of-lent.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.