Jump to content

மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 12:54 Comments - 0

மன்னார், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பு மற்றும்  முரண்பாடுகள், தமிழ்ச் சூழலில் மதவாத, சாதியவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத உரையாடல்களை மீண்டும் தோற்றுவித்து இருக்கின்றன.   
தமிழ் மக்களிடம் எப்போதுமே, ‘இருகோடுகள் தத்துவம்’ கோலொச்சி வந்திருக்கின்றது. ஒரு பிரச்சினையை மறைக்க, அதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவித்தல், திணித்தல் எனும் நிலை. அது, வெளி எதிரிகளால் மாத்திரமல்ல, உள்ளிருக்கும் எதிரிகளாலும் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.   

அதுவும், வாக்கு அரசியல் கோலொச்ச ஆரம்பித்த புள்ளியில், அவற்றைப் பல்வேறு தரப்புகளும், பல்வேறு வழிகளில் மக்களை நோக்கித் தள்ளுகின்றன.   

மதம், மார்க்கம் சுதந்திரத்துக்கும், மதம், மார்க்கம் வெறிக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாத சமூகமொன்று, எவ்வளவு உச்சியில் நின்று, நியாயம் பேசினாலும் அது, நியாயமாகக் கொள்ளப்படாது. அதுமாதிரித்தான், சாதிய வெறியும் பிரதேசவாத சிந்தனையும். ‘சமூக அரசியல்’ என்பது, மக்களுக்கான நியாயங்களைப் பேசுவதுதானே அன்றி, மதங்களின், சாதிகளின் வெறிகளைப் பேசுவதல்ல.  

 திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பும், அதற்கு முன்னரும் பின்னருமான முரண்பாடுகளை, யாழின் முன்னணி ஊடகங்கள் சில எவ்வாறு அறிக்கையிட்டிருக்கின்ற என்பதைப் பார்த்தாலே, அங்கு வெளிப்பட்டிருக்கின்ற வன்மத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அறிக்கையிடல்கள், வன்மத்தைத் தூண்டி, அதிலிருந்து அறுவடைகளைப் பெறும் நோக்கிலானவை.   

நீண்டதோர் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னாலும், அதன் பெரும் விளைவுகளைத் தாங்கி நிற்கின்ற போதிலும், தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களையோ, அதுசார்ந்த வெறியையோ விட்டுக்கொடுத்துவிடவில்லை.   

அவை, நீறுபூத்த நெருப்பாக, அதுவும் எரிவதற்குண்டான வெம்மையோடுதான் இன்றுவரை இருந்து வருகின்றது. அதற்குத் தாயகம், புலம்பெயர் தேசங்கள் என்கிற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. அப்படியான கட்டமொன்றையே, மதம், மார்க்கம் ஆகியவற்றின் வேறுபாடுகளுக்குள்ளும் விதைக்கும் திட்டத்தைச் சில தரப்புகள் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன.   

தமிழ்ச் சூழலில், மதம், மார்க்கம் அடையாளங்களுக்குள் சாதிய அடையாளங்களும் சேர்ந்தே இருக்கின்றன. இது, சைவக் கோவில்களில் ஆரம்பித்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க ஆலயங்கள் வரையில் நீள்கின்றன.   

மக்களிடம் அதன் வீச்சம் பெரிய அளவில் சென்று சேரவில்லை என்கிற போதிலும், இந்த மதம், மார்க்கம் நிறுவனங்களுக்குள் இருக்கும் சாதிய பாகுபாடுகள் என்பது, சொல்ல முடியாதவை. சாதிக்கொரு கோவில் இருப்பது மாதிரி, தேவாலயங்களும் சாதிய ரீதியாகப் பங்கிடப்பட்டிருக்கின்ற தன்மையைக் காணுகின்றோம்.   

கோவில் தேரை, இன்னொரு சாதிக்காரன் இழுப்பது தகுதிக்குறைவு என்று நினைத்து, இராணுவத்தினரை வைத்து இழுக்கின்ற மனநிலைபோல, கிறிஸ்தவ, கத்தோலிக்க நிறுவனங்களுக்குள்ளும் சாதிய,  பிரதேசவாத பாகுபாடுகள் அனைத்துப் படிநிலைகளிலும் காணப்படுகின்றன. இந்தப் படிநிலைகள், மக்களை நோக்கி வருகின்ற போதுதான், மக்களிடம் காணப்படும் நல்லிணக்க நிலை காணாமற்போகின்றன.   

தமிழ்ச் சூழலில், திருக்கேதீஸ்வரத்துக்கும், மடுமாதாவுக்கும் உண்டான புனிதமான மதிப்பு என்பது, எந்தவொரு தருணத்திலும் இழக்கப்பட்டதில்லை. இன்றைக்கும் இரண்டு புனித தலங்களையும் தங்களின் பெரும் அடையாளமாகவே தமிழ்ச் சமூகம் பார்க்கின்றது.   

ஆனால், நிர்வகிக்கின்ற தரப்புகளின் மூர்க்கமான அணுகுமுறை சார்ந்துதான் பிரச்சினைகள் மேலெழுகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறுகிய அரசியல் செய்ய வேண்டும் என்கிற கடும்போக்கு மதம், மார்க்கம், தேர்தல் அரசியல் சக்திகள், சகதிகளை நோக்கி மக்களைத் தள்ளுகின்றன. தற்போதும் பெருமளவில் நிகழ்ந்திருப்பது அதுதான்.   

திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு பிரச்சினை என்பது, இரு மத நிறுவனங்களுக்கு இடையிலானது என்கிற கட்டத்தைத் தாண்டி, நீதிமன்றங்களை நாடிவிட்டது. ஓர் இணக்கமான சூழலில் கையாளப்பட வேண்டிய பிரச்சினை, அதன் அடுத்த கட்டங்களை அடைந்துவிட்ட பின்னர், அங்கு மக்களை அழைத்து வருவதும், ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்வதும் இரு மத நிறுவனங்களுக்கும் அழகல்ல.   

ஏனெனில், அந்த மத நிறுவனங்களுக்கு அவை, தன்முனைப்புப் போட்டியாக இருக்கலாம். ஆனால், அது, மதவாத சக்திகளுக்கான பெரும் களம். அப்படியான களமொன்று, தமிழ்ச் சூழலில் விரிவது என்பது, எந்தவொரு நன்மையையும் எவருக்கும் வழங்கிவிடாது. தமிழ் மக்களின் முன்னால், இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினை என்பது, நுழைவு வளைவொன்றை நடுவதோ, புடுங்குவதோ சார்ந்தது அல்ல. அவற்றை மீறிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரானது.   அந்தக் கட்டங்களை மறக்கடிக்கும் தந்திரங்களின் நின்று, சேற்றை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து, உரையாட முடியாது. உண்மையில் அதற்கான நேரமும் இதுவல்ல.   

மதம், மார்க்கம், பிரதேசவாதம் போன்ற முரண்பாடுகள் எழும்போதெல்லாம், அரசியல்வாதிகளில் அநேகர் ஒழிந்து கொள்கிறார்கள். அந்த முரண்பாடுகள் சார்ந்து நியாயம் பேசுவதால் அல்லது பிரச்சினைகளை முடித்து வைக்க முன்வருவதால், தேர்தல் கால இழப்பு, தமக்கு நிகழ்ந்துவிடும் என்று கருகின்றார்கள்.   

திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு பிரச்சினையில், அரசியல் கட்சிகள் தலையீடு செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், அந்தப் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளின், உண்மையான வகிபாகம் என்ன என்பது சார்ந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உருவாகின்றது.   

அந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த மக்கள் பிரதிநிதிகள் மீதும் அவர்களின் திட்டங்கள் மீதும் மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அந்தச் சந்தேகங்களின் அளவு, மதம், மார்க்கம், சாதி, பிரதேசவாதம் போன்ற அடையாளங்கள் சார்ந்தும் நோக்கப்படும்.   

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக ஆயுதப் போராட்டம் கோலொச்சிய முப்பது ஆண்டுகளில் மதம், சாதியம், பிரதேச வேறுபாடுகள் இன்றி, அனைவரும் அர்ப்பணிப்பான கட்டங்களை ஆற்றியிருக்கிறார்கள்.  

 கடும்போக்கு மதம், மார்க்கம் நிறுவனங்களோ, சாதிய வாதமோ கூட, ஆயுதப் போராட்டத்தின் முன்னால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டம் இருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் பின்னரான காலம் என்பது, பிரதேசங்களைப் பிரித்துக் கொண்டு, ‘ஜமீந்தார்தனம்’ செய்கின்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.  

 தனக்கு வாக்களித்த மக்களை நோக்கியே, தரங்கெட்ட வார்த்தையை மக்கள் பிரதிநிதி சொல்லுகின்ற ‘தடித்தனத்தை’ நோக்கித் தமிழ்ச் சமூகம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.   

ஆயுதப் போராட்டத்தின் அர்ப்பணிப்புக்கு முன்னால், மதவாதம்,  சாதியவாதம், பிரதேசவாதம் போன்ற தடித்தனங்கள் எடுபடாமல் போனாலும், அவற்றைப் பற்றிய முறையான உரையாடல்களின் வழி, அவற்றைக் கடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் நீடித்தே வருகின்றது. பல்லாண்டு காலமாக ஊறிய பிற்போக்குச் சிந்தனைகளை, ஆயுதப் போராட்ட இயக்கமொன்று சில காலப்பகுதிக்குள் மாத்திரம் சரி செய்திருக்க முடியாதுதான். ஆனால், அது சார்ந்த உரையாடல்களை, மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகவே முன்னெடுத்திருக்க முடியும்.   

அதன்மூலம் அதன் அடுத்த கட்டங்களை எட்டியிருக்கலாம். ஏனெனில், ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான இன்றைய காலம் என்பது, அனைத்து வகையிலும் மதம், சாதியம், பிரதேச வாதம் கோலோச்சும் நிறுவனங்களின் கைகளிலேயே சென்று சேர்ந்திருக்கின்றன.   

அதற்கு, இங்குள்ள எந்தவோர் அரசியல் கட்சியோ, சிவில் சமூக அமைப்புகளோ, பேரவைகளோ விதிவிலக்கல்ல.   

மேம்போக்கான உரையாடல்களின் வழி, ‘நாம் எல்லோரும், ஒரு தாய் மக்கள்’ என்கிற எம்.ஜி.ஆர் வழி பசப்பு மொழியால், எந்தவொரு முன்னேற்றத்தையும் கண்டுவிட முடியாது. ஏனெனில், பசப்பு நிலைக்கு அப்பாலான கட்டத்தை அடையும் சூழலொன்றை நோக்கி, நாம் நகர்ந்தாக வேண்டும்.   

இல்லையென்றால், சிறு முரண்பாடுகள் எழும்போதெல்லால், அவற்றில் எண்ணெய் ஊற்றிவிட்டுக் குளிர்காய பல்வேறு தரப்புகள் இங்கே ஓநாய்களாகக் காத்திருக்கின்றன. கடந்த சில நாள்களாக, திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பை முன்வைத்து, சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளில், பெரும்பாலானவை நியாயம் கோரல்களுக்கு அப்பால் சென்று, மற்றவர்களைச் சீண்டும் தன்மையைக் கொண்டவையாக இருந்தன.  

 இவ்வாறான கட்டத்தை அடைந்திருப்பது குறித்து, வெட்கமும் வேதனையும்பட வேண்டுமே அன்றி, வெற்றி வீராப்புக் கோசமெல்லாம் போட வேண்டியதில்லை. இந்தச் சிறிய முரண்பாடுகளை, அதன் நியாயப்பாடுகள் சார்ந்து அணுகிப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.   இல்லையென்றால், எம்முடைய உண்மையான, பிரதான பிரச்சினைகளை மறந்துவிட்டு, அலைக்கழிய வேண்டியிருக்கும். அதனையே, எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மன்னார்-முரண்பாடுகள்-நாம்-என்ன-செய்ய-வேண்டும்/91-230403

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.