Jump to content

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
March 7, 2019

mannar_gra.png?zoom=1.2100000262260437&r

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாக இருக்கலாம் என  அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.

mannar_gra.png?zoom=1.2100000262260437&r

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

maanar_report.png?zoom=1.210000026226043

அமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/115393/

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனிதப் புதைகுழியின் காலத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியல் ஆய்வு

  •  
எலும்புக்கூடுபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம்

இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

ஆய்வு ஆவணம்

இந்த விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான அறிக்கையொன்று ஏற்கனவே கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அறிக்கை தொடர்பிலான சுருக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை, அகழ்வுகளுக்கு பொறுப்பான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ விடுத்திருந்தார்.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திடம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று, இந்த மாதிரிகளை கையளித்திருந்தது.

இந்த குழுவில் காணாமல் போனோர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், காணாமல் போனோரின் உறவினர் உள்ளிட்டவர்களும் இந்த குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

சோதனை குழு

இந்த நிலையில், இவ்வாறு கையளிக்கப்பட்ட மாதிரிகளின் சுருக்கம் அடங்கிய அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகியுள்ள பின்னணியிலேயே, அதன் கால எல்லை இன்று வெளியிடப்பட்டது.

மன்னார் - சதொச கட்டட வளாகத்தில் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வுகள் இன்று 155ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

புதைக்குழு

இதேவேளை, இந்த அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், மண் மாதிரி, அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்கள் உள்ளிட்டவை மேலும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தியே, இந்த கால எல்லையை சரியாக நிர்ணயிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அறிக்கையில் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த விஞ்ஞான ரீதியிலான விடயங்களை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை ஆராய்வதற்காக, மன்னாரில் நாளை காலை வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் ஒன்று கூடி ஆராயவுள்ளதாகவும் காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் சுட்டிக்காட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47487170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் அமைப்பின் சட்டவாதியின் கருத்துத் தான் குழப்பகரமாக இருக்கிறது. அனேகமாக என்பு, மண், மற்றைய பொருட்கள் என்று வரும் போது, என்பு காட்டும் கால அளவு தான் நம்பிக்கையானது. மண்ணும், மண்ணோடு வந்த பொருட்களும் கடந்த 500 ஆண்டுகளில் பல தடவைகள் அந்தப் பகுதியில் மாறியிருக்கும்- இதனால் வேறு வேறு காலக்கணிப்பைக் காட்டக் கூடும்.

மேலும் இது போன்ற முக்கியமான பரிசோதனைகளை "ஏகாதிபத்திய" அமெரிக்காவில் செய்தால் பலர் நம்பி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! வட கொரியா, கியூபா போன்ற "உழைக்கும் வர்க்கம்" ஆளும் நாடுகளில் செய்தால் தான் நம்பிக்கை வரும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட மதம் மாறிய 600 தமிழர்களும் இங்கேயா புதைக்கப்பட்டனர்?!

எலும்புகளில் வெட்டுப்பட்ட அடையாளங்கள் ஏதும் இருப்பதாக செய்திகளில் வரவில்லையே?!

அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் நினைவு வழிபாடு செய்யப்படுவதாக செய்திகளில் வாசித்த நினைவு.

கார்பன் பரிசோதனையில் அதிர்ச்சியான செய்தி கிடைக்கும் என்று கௌரவ சுமந்திரன் (பா.உ) எப்படி தெரியும்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

சொன்னேனே பார்த்தீர்களா? இனி இப்படி "சதி சதி" என்று இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகளை வளர்த்துக் கொண்டு திரிய வேண்டியது தான்!

யாழ் பல்கலையில் டொக்டர் புஷ்பரட்ணம் என்றொரு தொல்லியல் ஆய்வாளர் இருக்கிறார். அவர் இந்தத் தகவலையும் கண்டெடுத்த இடத்தையும் வைத்து ஏதாவது செய்தால் யாழ் பல்கலையின் ஆய்வு இயலுமையாவது வளரும். விஷ ஊசிக் கதை போல இந்த என்பு விடயத்தையும் எங்கள் அரசியல் வாதிகள் விற்றுப் பிழைப்பு நடத்த வழி கோலாதிருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா தடுப்பில் இருந்து வந்த பல முன்னாள் போராளிகள் தமக்கு ஊசிகள் போடப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஊசி போடவருபவர்களிடம் எதற்கு போடுகிறீர்கள் என்று கேட்டபோது எச்.ஐ.வி தடுப்பு மருந்து என்று சொன்னார்களாம்.
எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை தமிழரை குழிதோண்டி புதைக்கும் சிங்களத்தின் பொழுதுபோக்கிற்கு,  அமெரிக்கா கூட  தனது நலனிற்காக கடைக்கு  கண் பார்வையால் சிங்களத்தை குளிர்விக்கப் ஈழத்தமிழரை பெயராக நினைக்கலாம்.

சிங்களமம் பொழுதுபோக்கோயிற்றுக்குத்தானே செய்கிறோம் என்று எண்ணி, வேறிடத்தில் எடுத்த எச்சங்களை அனுப்பியிருக்கலாம். இதற்கு, சும் பூடகம்  போட்டது நான் மறக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா தடுப்பில் இருந்து வந்த பல முன்னாள் போராளிகள் தமக்கு ஊசிகள் போடப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஊசி போடவருபவர்களிடம் எதற்கு போடுகிறீர்கள் என்று கேட்டபோது எச்.ஐ.வி தடுப்பு மருந்து என்று சொன்னார்களாம்.
எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கா?!

ஏராளன், நீங்கள் சொல்வது நடந்திருக்கலாம், நடக்காமலிருக்கலாம்! இதையெல்லாம் வாக்கு மூலமாக வைத்திய அதிகாரியிடம் போராளிகள் கொடுப்பதற்கு முன்னரே  அனந்தி சசிதரன் உட்பட்ட அரசியல் வாதிகள் வெளியே சொல்லி தங்கள் பிரபலத்தைக் கூட்டிக் கொண்டனர். பின்னர், இந்தப் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குப் போக இயலாமல் சிங்களப் புலநாய்வுக் காரருக்குப் பயந்து பின்வாங்க வேண்டி வந்தது. இதன் முடிவு என்ன இப்போது? எதுவும் இல்லை, பதிலும் தெரியாது.

இதே நிலைமை சுன்னாகம் தண்ணீர் பிரச்சினைக்கும் நடந்தது. பேராதனைப் பல்கலையில் நீரில் எண்ணைக் கசிவு பற்றி ஆய்வு செய்யும் ஒரு பேராசிரியர் இருக்கிறார். யாழ் பல்கலையில் புவியியல் விஞ்ஞானத் துறையொன்று இருக்கிறது. ஒரு மாதத்தில் கூட்டுறவு முயற்சியாக இந்த நீரில் எண்ணை பற்றி முடிவு கண்டிருக்கலாம்! இதையும், நிபுணத்துவம் எதுவும் அற்ற லோயர் மாரும் அரசியல் வாதிகளும் இணைந்து ஐங்கரநேசனைப் பழி வாங்கப் பயன்படுத்தி விட்டு ஓய்ந்தனர்! அரசாங்க பகுப்பாய்வு அறிக்கையையும் நம்பவில்லை அவர்கள். இப்ப என்ன ஆயிற்று? சுன்னாகத்தில் தண்ணீரில் எண்ணை இருக்கிறதா இல்லையா என்று சுன்னாக மக்களுக்கே தெரியாது இப்பொழுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

சொன்னேனே பார்த்தீர்களா? இனி இப்படி "சதி சதி" என்று இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகளை வளர்த்துக் கொண்டு திரிய வேண்டியது தான்!

ஜஸ்ரின்,

அரசும், அமெரிக்காவும் சொன்னால் எந்த கேள்வியும் இன்றி சந்தேகமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பெரும் இனவழிப்பை, அதுவும் இரசாயன ஆயுதங்களை கூட பாவித்து செய்த இனவழிப்பையே மூடி மறைக்க நினைக்கும் அரசும் அவர்களிற்கு ஆதரவு கொடுக்கும் ஏகாதிபத்தியங்களும் தமிழர்களுக்கு விரோதமாக நடக்காதா?

அனுப்பட்ட எலும்புக்கூடு மாதிரிகள் மன்னார் பிணகுழியில் இருந்து தான் எடுக்கப்பட்டவை என்பதற்கு என்ன உத்தரவாதம் என தெரியவில்லை.

இந்த முடிவுகள் வெளிவரும் காலம் எப்படியானது என பார்த்தால், மன்னாரில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி பதட்டம் ஏற்பட்ட காலப்பகுதி. அவ்வாறு நிகழ்ந்தவுடன் வடக்கெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சுவரொட்டிகள் திட்டமிடப்பட்டு வெளியான காலப்பகுதி.
சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்டவர்களும் கிறீஸ்தவ மதத்தவர்கள் என்பதால் 400 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து இருக்கு வெளிப்படுத்துவதும் கூட மதப்பதட்டத்தை அதிகரிக்க செய்யக்கூடிய செயல்..

எங்கேயோ எதுவோ சரியாக நடக்கவில்லை எனபதை உணர முடிகின்றது.

இப்படி கேள்விகள் சந்தேகங்கள் எல்லாம் இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள் அல்ல. எல்லாமே இழந்து போயிருக்கும் ஒரு இனம், தன் இழப்புகளுக்கு நியாயமான ஒரு தீர்வாவது கிடைக்குமா எனும் எழும் நியாயமான கேள்விகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நிழலி, முதலில் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை! இதை மட்டுமல்ல, எந்த விஞ்ஞான முடிவையும் கேள்வி கேட்கலாம். சந்தேகம் கிளப்பலாம்.

இந்தக் குறிப்பிட்ட விடயத்தில், சிறி லங்கா செய்யக் கூடிய ஒரு நாடா? ஆம் செய்யக் கூடிய ஒரு நாடு தான்! ஆனால் அமெரிக்க அரசின் பங்கு எங்கே இதில்? சிறிலங்காவுக்காக இப்படி ஒரு தகிடு தித்தம் செய்ய ஒரு தனியார் ஆய்வு கூடத்தைத் தூண்டி ரிஸ்க் எடுப்பார்களா? நீதிமன்ற காவலில் பெட்டியில் வைக்கப் பட்ட மாதிரிகளை காணாமல் போனோர் அமைப்பின் உறவினர்களையும் கூட அழைத்து சென்று ஆய்வு கூடம் வரை போயிருக்கிறார்கள். சாம்பிளை மாற்றியிருந்தால் கூட அவ்வளவு சாம்பிள்களையும் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை!  சந்தேகங்கள் வருவது இயல்பு, ஆனால் ஊகங்களை வைத்துக் கொண்டு இப்பவே சுமந்திரன் ஏதோ முதலே சொன்னார் என்று புள்ளி வைக்க முயன்றதால் தான் அப்படிச் சொன்னேன்! சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கின்றன, ஆனால் அவை தீர முதல் சதிக் கதைகள் பின்னுவது தான் ஏற்புடையதாக எனக்குப் படவில்லை.

இப்போது ஊகங்கள் சந்தேகங்கள் மட்டுமே கொண்டு பின்னப் படும் கதைகள் நிரூபிக்கப் பட்ட தகவல்களை விட அதிகம் பலம் வாய்ந்த ஆயுதங்களாக அரசியலிலும் சமூகத்திலும் எங்கள் ஆரோக்கியப் பேணலிலும் கூட மாறி விட்டன. இதனாலேயே நானும் எந்த விஞ்ஞானத் தகவல்களையும் இங்கே பகிர்வதை இப்போது தவிர்த்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

https://www.radiocarbon.com

40 வருடமாக இருக்கும் நம்பிக்கையான ஆய்வு கூடம் தான்! மேலே இருக்கிறது இணையத் தளம்.

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

நிழலி, முதலில் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை! இதை மட்டுமல்ல, எந்த விஞ்ஞான முடிவையும் கேள்வி கேட்கலாம். சந்தேகம் கிளப்பலாம்.

இந்தக் குறிப்பிட்ட விடயத்தில், சிறி லங்கா செய்யக் கூடிய ஒரு நாடா? ஆம் செய்யக் கூடிய ஒரு நாடு தான்! ஆனால் அமெரிக்க அரசின் பங்கு எங்கே இதில்? சிறிலங்காவுக்காக இப்படி ஒரு தகிடு தித்தம் செய்ய ஒரு தனியார் ஆய்வு கூடத்தைத் தூண்டி ரிஸ்க் எடுப்பார்களா? நீதிமன்ற காவலில் பெட்டியில் வைக்கப் பட்ட மாதிரிகளை காணாமல் போனோர் அமைப்பின் உறவினர்களையும் கூட அழைத்து சென்று ஆய்வு கூடம் வரை போயிருக்கிறார்கள். சாம்பிளை மாற்றியிருந்தால் கூட அவ்வளவு சாம்பிள்களையும் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை!  சந்தேகங்கள் வருவது இயல்பு, ஆனால் ஊகங்களை வைத்துக் கொண்டு இப்பவே சுமந்திரன் ஏதோ முதலே சொன்னார் என்று புள்ளி வைக்க முயன்றதால் தான் அப்படிச் சொன்னேன்! சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கின்றன, ஆனால் அவை தீர முதல் சதிக் கதைகள் பின்னுவது தான் ஏற்புடையதாக எனக்குப் படவில்லை.

பரிசோதனை செய்த ஆய்வு கூடம் தொடர்பான உங்கள் கேள்விகள் நியாயமானவை, ஆனால் அனுப்பட்ட மாதிரிகள் தான் சந்தேகத்துக்குரியவை.

எடுக்கப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட மாதிரிகளில் 6 இனைத்தான் அனுப்பியிருக்கின்றார்கள்.எடுக்கப்பட்ட எலும்புகள் மன்னாரில் இருந்து அமெரிக்கா வரை செல்லும் வரைக்குமான நீண்ட செயல்முறையின் இடையில் அரசால் இந்த உறவினர்களை ஏமாற்றி மாற்றுவதற்கு இலகுவாக முடியும்.

என் கருத்துகள் செய்தி தொடர்பான மட்டுமே. ஒருவர் சுமந்திரனை குற்றம் சொல்கின்றார், இன்னாரை குறை கூறுகின்றார் என்ற அடிப்படையில் நான் என் கருத்துகளை எழுதுவது இல்லை. ஆனால் நீங்கள் சொல்லுவது போல தவறை இன்னொருவரின் சதிச் செயல் என்று மேலோட்டமாக சொல்லி விடுவதாலும், பிரச்னைகளை தம் அரசியல் விருப்பு வெறுப்புக்கும் காழ்ப்புணர்வுக்கும் ஊடாக அணுகுவதாலு, பிரச்சனையின் தீர்வை ஒரு போதும் கண்டறிய முடியாதாகி விடுகின்றது. எம் இனத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

15 minutes ago, Maharajah said:

Who mentioned the  Sankiliyan Era here and why ?

உங்கள் கருத்துகள் நியாயமானவையாக இருந்தாலும் முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதுவதால் அவற்றை அனுமதிக்க முடியாமல் இருக்கின்றது. முன்னை விட இப்பொழுது தமிழில் எழுதுவது இலகுவானதாக இருப்பதால் நீங்கள் சற்று முயற்சி செய்தால் தமிழில் எழுத முடியும்.

எம்மை சுற்றி நடப்பவற்றின் மீது கேள்விகள் எழுப்படுதல் அவசியம் எனும் போது, தமிழில் எழுதுவதை கற்க எடுக்கும் முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை தரும்.

Thank you. I will try my best.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் இச்செய்தி பற்றிச் சொன்னது.

1600 களில் போத்துக்கீசர் காலத்தில் யாழ்  சங்கிலிய மன்னனின் எச்சரிக்கையையும் மீறி கத்தோலிக்க மதத்தை பின்பற்றிய தமிழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்கின்ற வரலாற்று விடயம் உள்ளது. ஆக சங்கிலிய மன்னனுக்கு எதிராக தான் வழக்குப் போடவேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் போத்துக்கீசரை சாட்சியாக கூப்பிட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை விரும்பக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

Who mentioned the  Sankiliyan Era here and why ?

மஹாராஜா, உங்கள் கேள்வி புரிகிறது!. சங்கிலிய மன்னன் மதம் மாறிய கத்தோலிக்கர்களைக் கொன்றது 1544 இல் என்று டாக்டர் முருகர் குணசிங்கத்தின் நூல் சொல்கிறது. ஏன் அந்த சம்பவம் இங்கே குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று தெளிவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாகப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றப்படுகின்றது. சங்கிலிய மன்னனும் பயங்கரவாதி என எதிர்வரும் மாதங்களில் நிரூபிக்கப்படலாம்.

என்னடா ஒரு சோழியன் குடுமி ஆடுதே என்று பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கொடுத்தால் அமெரிக்கன் என்ன எல்லாரும் அறிக்கையை மாத்தி எழுதுவாங்கள். 

சங்கிலியன் காலத்து எலும்புக்கூடுகள் என்றால்.. மண்ணுக்குள் அதன் படிம ஆழம்.. மற்றும் எலும்புகளின் தோற்றம் என்பன அடிப்படை எண்ணப்பாடுகளை எட்ட உதவும்.

இந்த எலும்புகள் பல சதாப்தங்களுக்கு முந்தியதாகத் தெரியவில்லை.. காரணம்.. இவை ஒப்பீட்டளவில் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுவதோடு.. எலும்புகள் மற்றும் அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட இன்ன பிற பொருட்கள்.. பெரிதும் பழுதடையாத தன்மையைக் காண முடிகிறது.

இதில் எதையோ எல்லோரும் மறைக்க முயல்கிறார்கள் என்பது மட்டும் யதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றப்படுகின்றது. சங்கிலிய மன்னனும் பயங்கரவாதி என எதிர்வரும் மாதங்களில் நிரூபிக்கப்படலாம்.

என்னடா ஒரு சோழியன் குடுமி ஆடுதே என்று பார்த்தேன்.

சங்கிலியன் பயங்கரவாதியா தெரியாது, ஆனால் 600 மீன்பிடித் தொழில் செய்த ஆட்கள் கத்தோலிக்க மதத்தில் இருந்து மீள சைவமாக மாற வேணுமெண்டு கட்டளையிட அவர்கள் மறுக்க, அவர்களைத் தன் படைகளை வைத்துக் கொன்றதாக வரலாறு சொல்கிறது. 

ஆனால், இதை வைத்துக் கொண்டு நாங்கள் இனி சதிக் கதைகள் பின்னுவதற்கு முன்னர், இன்னொரு நாட்டுக்கு இன்னும் கொஞ்சம் மாதிரிகளை அனுப்பிப் பார்க்கலாம்! அப்படி அதிலயும் இதே முடிவே வந்தால்?!

எல்லா நாடுகளும் தமிழரைக் கருவறுத்தல் எனும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன என்ற இறுதி முடிவுக்கு வரலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ரிப்போர்ட் சரியாக ஐநா மனித உரிமைகள் கூட்டம் நடக்கும் வரை தாமதித்து வெளிவருவதன் பின்னணி என்ன?

அவ்வாறு இவர்கள் சங்கிலியானால் கொலையுண்டிருந்தால், அவர்கள் பெரிய குழி கிண்டி புதைக்கும் வசதி அப்போது இருந்திருக்க முடியாது.

எரித்து இருப்பார்கள். ஏதோ மறைக்கப் படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மாதிரி இரண்டு பெட்டிகள் செற் பண்ணி..அதில் ஒன்று ஒரிஇனல்...மற்ரது சங்கிலியன் காலத்தான்..இப்ப விளங்குதோ.... அதுவும்  ஐ நா.கூட்டத் தொடர் நேரம் ரிசல்டு...அணில்..சுமந்து கூட்டு...காசாக் கொட்டும் இனி த.தே .கூ விற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

5 hours ago, nedukkalapoovan said:

காசைக் கொடுத்தால் அமெரிக்கன் என்ன எல்லாரும் அறிக்கையை மாத்தி எழுதுவாங்கள். 

சங்கிலியன் காலத்து எலும்புக்கூடுகள் என்றால்.. மண்ணுக்குள் அதன் படிம ஆழம்.. மற்றும் எலும்புகளின் தோற்றம் என்பன அடிப்படை எண்ணப்பாடுகளை எட்ட உதவும்.

இந்த எலும்புகள் பல சதாப்தங்களுக்கு முந்தியதாகத் தெரியவில்லை.. காரணம்.. இவை ஒப்பீட்டளவில் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுவதோடு.. எலும்புகள் மற்றும் அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட இன்ன பிற பொருட்கள்.. பெரிதும் பழுதடையாத தன்மையைக் காண முடிகிறது.

இதில் எதையோ எல்லோரும் மறைக்க முயல்கிறார்கள் என்பது மட்டும் யதார்த்தம். 

அந்த குழிகளுக்குள்..... பிஸ்கற் பெட்டியை சுத்தி வரும், பொலித்தீன்  பேப்பரும் இருந்தாக முன்பு செய்தியில்  வந்தது.

மண்டை ஓட்டில்... துப்பாக்கி சூட்டுடன், இருந்தது எல்லாம்... 500 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா? 

சங்கிலியன் காலத்தில்...  துப்பாக்கி,  பொலித்தீன் எல்லாம்...  பாவனையில் இருந்ததை... சிங்களமும், அமெரிக்காவும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால், இந்த முடிவு எனக்கு அதிருப்திதான். ஆனாலும், சிறிலங்கா தமிழருக்கு எதிராக இதுவரையும் எந்த அநியாயங்களையும் செய்யவில்லையா? இந்த முடிவோடு சிறிலங்கா அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விட்டதா? இல்லைத்தானே? ஆகவே இதுபற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

அடுத்ததாக, சிறிலங்கா எலும்பு மாதிரிகளை மாற்றியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, இவை பரிசோதிக்கப்பட்ட ஆய்வுகூடம் வேண்டுமென்றே பரிசோதனை முடிவுகளை மாற்றியிருக்கலாம், அல்லது மாற்றி அனுப்பப்பட்ட எலும்பு மாதிரிகளை பரிசோதித்து தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கலாம். இதெல்லாமே ஊகங்கள்தான். சரியாக எவருக்கும் தெரியாது. 

அமெரிக்க அரச நிறுவனமோ அல்லது அமெரிக்க தனியார் பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றோ தமிழருக்கு எதிராக ஒருபோது நடந்துகொள்ளப்போவதில்லை என்பதற்கான உத்தரவாதம் என்ன? 80களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா தமிழருக்கெதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறதென்பது நாமறிந்த உண்மைதானே? 

இலங்கை ராணுவத்தினருக்கான பயிற்சிகள், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், கிரீன் பெரெட் சிறப்பு ஆயுதப் பயிற்சி, பெல் உலங்கு வானூர்திகள், விசேட அதிரடிப்படைப் பயிற்சிகள் என்று தமிழருக்கெதிரானவற்றையே செய்துவந்தது. ஆகவே, இம்முறையும் கூட இது நடந்திருக்கலாம். அமெரிக்கா தமிழருக்கு அநீதிகளைச் செய்யாது என்று நம்புவதற்கு எம்மிடம் எந்தக் காரணங்களும் இல்லை.

அப்படியில்லாமல், இங்கே கிடைக்கப்பெற்ற எலும்புகள் சங்கிலியன் காலத்தில் இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கெதிரான படுகொலைகளாக இருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஏனென்றால், இந்துசமயத்திலிருந்து கத்தோலிக்கத்திற்கு மாறிய சுமார் 800 வரையான தமிழர்களை சங்கிலியன் தன் படைகளுடன் திரத்திவந்து மன்னாரில் கொன்றதாகச் சரித்திரம் இருக்கிறது. கொல்லப்பட்ட வேதசாட்சிகளின் நினைவாகத்தான் மடுத்தேவாலயம் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியாயினும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள். சிங்களம் இக்கொலைகளிலிருந்து தபித்துக்கொண்டால்க்கூட, அது தமிழினத்திற்குச் செய்த இன்னும் லட்சக்கணக்கான கொலைகளுக்கு பதில் சொல்லவே வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.