Jump to content

அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி


Recommended Posts

ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளாகாமல் புகுந்துகொள்வதற்கு ஏதுவாக அல்-ஹைடா அமைப்பினருக்கு ஐரோப்பாவில் செயற்படும் விடுதலைப் புலிகள் இயக்கக் குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் கடவுச் சீட்டுகளைக் களவாடிக் கொடுத்து வருவதாகவும் அமெரிக்க சி.ஐ.ஏ.புலனாய்வு ஸ்தாபனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அதிர்ச்சியூட்டும் தகவலை சீ.ஐ.ஏ.புலனாய்வு அமைப்பின் முன்னாள் பிரபல தலைவர்களில் ஒருவராகிய மைக்ஹூவர் சீ.பி.எஸ்.தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர்முகப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப அல்ஹைடா அமைப்பினர் ரஷ்ய, மாபியா குழுவினர், செச்னியா புரட்சிக்குழுவினர் மற்றும் ஈராக்கின் தூக்கிலிடப்பட்ட முன்னாள் தலைவர் சதாம் ஹூசைனுக்கு ஆதரவாகத் தற்போது தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் ஈராக் பயங்கரவாதக் குழுவினர் ஆகிய குழுவினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அத்துடன், தற்போது பிரபாகரனின் புலிகள் அமைப்புடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் மைக் ஷூவர் கூறியுள்ளார்.

எனவே, இவ்வாறு ஐக்கிய அமெரிக்கா மீது அதி பயங்கரத் தாக்குதலைத் தொடுத்த அல்-ஹைடா குழுவினருடன் தொடர்பு கொண்டுள்ள புலிகள் இயக்கமும் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ள பயங்கரவாத அமைப்பாக மாறிவிட்டதாகவும் இதனால் இந்த புலிகள் இயக்க பயங்கரவாத குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேற்படி முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பில் அல்-ஹைடா பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் பிரிவின் தலைவராக இருந்தார். இவ்வாறு அல்-ஹைடா செயற்பாடுகள் பற்றிய விசேட புலனாய்வு அனுபவமும் அறிவுமுடைய மைக் ஹூவர் அண்மையில் சி.பி.எஸ்.தொலைக்காட்சி சேவையின் ஜே. ஜே.வி.கிறீன் எனப்படும் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு அளித்த விசேட பேட்டியில் மேற்படி அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.சார்பில் தெரிவிக்கப்பட்ட ஊடக விமர்சனங்களில் ஐக்கிய அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிடப்பட்டு அதன் நடவடிக்கைகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதாகவும் இவ்வாறு அமெரிக்காவில் அந்த அமைப்பினதும் அதற்கு ஆதரவான அமைப்புகள் குழுவினரதும் செயற்பாடுகள் சட்டரீதியில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கடந்த பத்து வருட காலப் பகுதியில் அமெரிக்க அரசு புலிகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப: வெளிநாட்டு பத்திரிகைத் தகவல்கள் 15.4.2007-

http://www.thinakkural.com/news/2007/4/19/...s_page25568.htm

Link to comment
Share on other sites

சீ.பி.எஸ். தொலைக்காட்சியில் அமெரிக்க புலனாய்வு அதிகாரி விடுதலைப் புலிகளைப் பற்றிக் கூறியது உண்மையா ?

சர்வதேச செய்திகளில் இதைக் காண முடியவில்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இந்தப் பொய்ச் செய்தியைக் கூறுவதற்காக எவ்வளவு பணம் சிறீலங்கா அரசினால் கொடுக்கப்பட்டது என்பதை யாராவது புலனாய்வுசெய்து சொல்லுங்கோ. இஞ்சஉள்ள தமிழத் தேசியத்துக்கு விரோதமான துரோகக் கும்பல் இப்பவிடியான ஆட்களைப் பிடித்து விசமத்தனமான செய்திகளைச் சொல்லுகின்றனர்.

துரதிஸ்டவசமாக புலத்தில இருக்கிற வட்டத்து உறுப்பினர்கள் தங்களுக்ள்ள வட்டம்போட்டுக்கொண்டு பெரிய விடுதலைப்போராளிகளாக கலர் அப் பண்ணிக்கொண்டு திரியினம். முதலில உவங்கள ஓட ஓடக் கலைக்கவேணும் அப்பதான் சரியான தலைமை மக்கள் மத்தியில வந்து தேசியத்துக்காக உருப்படியா வேலைசெய்யக்கூடிய நிலை உருவாகும். இப்ப உள்ளவங்களுக்கு ஆக்களப் பாத்துச் சிரிக்கக்கூடத் தெரியாது. ஆராவது றெயினிங் குடுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.