Jump to content

கனவுகளே கனவுகளே .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கே சனி காலை நேரம்.  வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30  ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று.  அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று

காலையில்  துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்।  தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு  என்னப்பா என்ன விஷயம் என்று  கேட்டேன்.

இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால்  கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப்  போச்சுது , சரியாக் களைச்சுப் போனன் அப்பா என்றார் 

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் , வீட்டில் சர்வதேச விடயங்களை கையாள்வது நான் மட்டுமே.  மன்னார் புதை குழி பற்றி கதை எடுத்தால் கூட  உதெல்லாம் தெரிந்த விடயம் தானேயப்பா , உவங்கள் உதுக்குள்ள என்ன விளையாட்டு காட்டினங்களோ ஆருக்கு தெரியும் "  என்பதோடு முடித்து விட்டு " அந்த அந்த பிளம்பரோட  கதைச்சநீங்களே  , எப்ப வாறானாம்”  என உள்நாட்டலுவல்களுக்கு மாறி விடுவார் அப்பிடிகொத்தவர் இப்ப இலஙகைப் பிரச்சனை பற்றி கனவும் கண்டு அதைப் பற்றி கதைக்கவும் வருகிறார் எண்டால்,  ஏதோ ஒண்டு சரியில்லை எண்டு மட்டும் விளங்குற மாதிரி ।।

துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। " அப்பா கனவு அத்தோட முடியேல்லையப்பா " . " என்ன Chapter  2 உம் இருக்கோ " இது நான்   "” ஓம் ஓம் , உங்களுக்கு எவ்வளவு தடிப்பப்பா , நான் சொல்லச் சொல்ல , இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நீங்கள் இவள் சுமதியைஎல்லோ காருக்குளேயே ஏத்திக் கொண்டு வாரியள்,  ஒண்டாத் தப்புவம் எண்டு. நாங்களே தப்ப வழியைக் காணேல்லை , இதுக்குள்ள இது வேற.     இவள் சுமதி உங்களோட இளிச்சு இளிச்சு கதைக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிப்பில்லை,   அவள் ஆக்களைப் பாவிச்சு தன்ர காரியத்தைக் கொண்டு போகிற  type “”   ( இதுவெல்லாம் கனவிலே நடந்த விடயங்கள் தான் ).

இப்ப எனக்கு கொஞ்சம் விளங்குகிற மாதிரி இருந்தது ,

துணைவியார் தொடர்ந்து கேட்டார்  ( இது கனவிலல்ல ) “ எப்பவெண்டாலும் , என்ன காரணத்திற்கெண்டாலும் சுமதியை காரில ஏத்துவீங்களோ எண்டு "

இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு.  இன்று முழுவதும் போய் , நாளை  ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் )  எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருக கிருபானந்த வாரியார் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே!

அவர் துணைவன் படத்தில்...புத்திமதியொன்று சொல்கிறார்!

மகனே...அவள் உன் வழிக்கு வரா விடடால்.......நீ அவள் வழிக்குப் போ...!

நானும் கனவைப் பற்றித்தான் கதைக்கிறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் பிரச்சினையான விடயம்தான், முன்னால போனால் கடிக்கும் பின்னால போனால் உதைக்கும்...இதுதான் அன்பை காட்டி அடிமைப் படுத்தும் உத்தி....எதுக்கும் கவனம்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு.  இன்று முழுவதும் போய் , நாளை  ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் )  எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது

இது சும்மா சனி மாதிரி தெரியல்லை.மரணசனி மாதிரி தெரியுது.கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலே உள்ளதை கனவென்று சொல்லியும் வெருட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணைவிமார் சில விசய‌ங்களை கனவு கண்டனான் என்று சொல்லித்தான் தங்களுடை காரியங்களை சாதிக்கிறவையள்😀

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனவு எண்டாலும் மனிசிமார் சும்மா சொல்லமாட்டினம். எனக்கெண்டா உங்களில தான் சந்தேகமாய் இருக்கு. சுமதியை எப்பவாவது கார்ல ஏத்தினனீங்களோ ????😀

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 6:37 AM, சாமானியன் said:

துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। "

இந்த இடத்திலை தான் பாலத்தாலை குதிக்கவேணும் போலை ஒரு பீலிங் வரும்......

இல்லாட்டி காடு கரம்பை மேடு பள்ளம் எல்லாத்தையும் ஏறி இறங்கோணும் போலை இருக்கும்...😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.