யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

மன்னார் எலும்புக்கூடுகள்

Recommended Posts

மாசி 26, 2050 சனி (09.03.2019)

மன்னார் எலும்புக்கூடுகள்.

சிவசேனை 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது.

கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம்.

கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன.

உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உடன் சமநிலையில்.

உயிரிழந்ததும் இச்சமநிலை கெடும். உயிரற்ற நிலையில் கரி14 அளவு குறையத் தொடங்கும். படிப்படியாக இற்றுப் போகும்.

இற்றுப் போகும் வேகம் காலத்தோடு தொடர்புடையது என்பதைக் ஆயந்தறித்து கொள்கையாகக் கூறியவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஓராண்டில் இவ்வளவுதான் இற்றுப்போகும் என்ற வரையைறை உண்டு.

உயிரிழந்த காலத்தில் சூழலில் கரி14 அளவு இதற்கு அடித்தளம். அச் சூழல் அளவைத் தெரிந்தால் அந்த அளவில் இருந்து இற்றுப் போன கரி14 அளவைக் கணக்கிடலாம்.

இன்றைய சூழலில் கரி14 அளவு, உயிரிழப்புச் சூழலில் கரி14 அளவு, உயிரற்றதில் கரி14 அளவு, இந்த அளவு மாற்றங்கள் காலக் கணக்கீட்டில் உதவுவன.

கடுவேகத் துகள் ஒளிமானி (Accelerator Mass Spectrometry technique) என்ற கருவியே இந்த அளவீட்டைத் தருகிறது.

உலகில் 46 கருவிகள் உள. இந்தியாவில் மும்பையில் 2018 தொடக்கம் ஒரு கருவி உண்டு. ஐரோப்பாவில் 22, அமெரிக்காவில் 9, ஆத்திரேலியாவில், யப்பானில் 8, ஆத்திரேலியா 3, நியுசிலாந்து 3, சீனா 1, கனடா 1, கொரியா 1.

ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுக்குக் கட்டணம் இலங்கை ரூ. 150,000 ஆகலாம்.

மருத்துவர் ஒருவரிடம் போகிறோம். நோய் ஈதென்கிறார். மற்றொரு மருத்துவரிடம் போனால் வேறொரு நோய் எனலாம். இரண்டாவது கருத்துக் கேட்டல், அனைத்துத் தொழில் சார் துறைகளிலும் வழமை.

மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பாக இரண்டாவது கருத்துக் கேட்டலே பொருத்தமானது. இரண்டாவது ஆய்வுகூடமும் இதையே சொலின், தொல்லியலார், வரலாற்றாய்வாளருக்குப் பணியே அன்றி, ஊகிப்போரின் பணி அன்று.

கற்பனைகள் இன, மத மோதல்களைப் பெருக்கும். சைவ சமயிகளாகிய நாம் இலங்கையில் மதிப்புடனும் மாண்புடனும் வாழ் விழைகிறோம். அனைத்துச் சமயத்தவரின் நெறிகளையும் மதித்து நடப்போம்.

வேற்று மத்ததவர் இதை உணர்ந்து, சைவ சமயத்தை, சைவ சமயத்தவைரை, சைவ வாழ்வியல் நெறிகளை மதித்து வாழ்வாராக.

1 மத மாற்றத்தை ஏற்கோம். 
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம். 
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம். 
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.

Image may contain: text
No photo description available.
No photo description available.
 
 

Share this post


Link to post
Share on other sites

இரண்டாம் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது! இங்கே சங்கிலியன் மதம் மாறிய முன்னாள் சைவர்களைக் கொன்ற சீன்  வந்ததும் சச்சிதானந்தம் ஐயாவுக்கு "ஊகம்" ஆபத்தானது என்று விளங்கி விட்டதாக நம்புகிறோம்! இவர் தானே பௌத்தர்கள் சைவர்களின் பூமியான இலங்கையில் வேற்று மதத்தவருக்கு இடமில்லை என்று முழங்கின சிங்கன்? 

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

எலும்புக் கூடுகள், உண்மை...பேசுமா??

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிநீர்க்குழாய் பொருத்துவற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டப்பட்ட போது 2015 வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக காணப்பட்ட நிலையில் அந்த புதைகுழி தோன்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுவரை அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதனிடையே இந்த எலும்புகளோடு Ak 47 துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற போது அந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரணங்கள் மனித எச்சங்களுடன் காணப்பட்டாலும் உடைகள் எதுவும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

அத்துடன் அந்த புதைகுழியில்அனைத்து உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக குவித்தே புதைகுழி மூடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது. சில எச்சங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வின் போது பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் 29 கூடுகள் சிறுவர்கள் உடையதாகும்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க நம்முள் எழுகின்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை தான். விடையும் காணமுடியாதவை.

1) 500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் அத்திவாரம் வெட்டும் ஆழத்தில் இருக்குமா??

2)திருக்கேதீஸ்வரத்தில் 55 எலும்புகளும் மன்னார் நகரில் 335 எலும்புகளும் மீட்கப்பட்ட நிலையில் வெறும் 6 என்புகள் மட்டும் அனுப்பி ஆய்வு மேற்கொண்டமை சரியா?

3) திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் Ak 47 ரவைகளும் மன்னார் நகர புதைகுழியில் 1996 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பிஸ்கட் பைக்கட்டும் இருந்துள்ளன. எனின் அவை பற்றி கருத்திலெடுக்காமை ஏன்??

4) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்படவில்லை??

6) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் கைவிலங்கு போன்றே உள்ளது. அப்படியாயின் 500 வருடங்களுக்கு முன்னரே விலங்கு போடும் நடைமுறை இருந்ததா??

7) மன்னார் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் ஏற்கனவே சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதமாற்றிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனால் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட எலும்புகள் அந்த எலும்புகளாக ஏன் இருக்க முடியாது??

😎 ஆய்வுகளின் முடிவு சரியானது தான். ஆனால் அனுப்பப்பட்ட எலும்புகள் தொடர்பாக உரிய விவரங்கள் வெளியிடாததும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டமை ஏன்??

9) உலோகம் கடலினுள்ளோ அல்லது பனிக்கட்டியினுள்ளோ உக்காமல் இருக்கும். ஆனால் மண்ணில் அது எவ்வாறு 500 வருடங்கள் உக்காமல் இருந்திருக்கும்??

10) 2017 கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் நகர புதைகுழி என்புகள் ஆய்வுக்கு அனுப்பியவர்கள் 2013 கண்டுபிடிக்கப்ப்பட்ட திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பாது இழுத்தடிப்பது ஏன்??

11) 500 வருடங்கள் பழமையான புதைகுழி எனின் தோண்டப்படும் போது தொல்லியல் சான்றுகள் ஒன்று கூட மீட்கப்படவில்லை ஏன்??

12) மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் 500 வருடங்கள் எவ்வாறு உக்காமல் இருந்திருக்கும்???

13) மண்டை ஓடுகளில் துப்பாக்கி ரவை துளைத்த துளைகளும் உள்ளன. எனில் 500 வருடத்துக்கு முன்னர் துப்பாக்கி வைத்து கொலை செய்தவர்கள் யார்?

14) இன்னும் தோண்டினால் எலும்புகள் வரும் என்ற நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து ஆய்வுசெய்ய ஏன் முடியவில்லை..?

15) அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சரியானது என இலங்கை நீதித்துறை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டது??

16) 500 வருடங்களுக்கு முன்னரே Ak 47 பாவனையில் இருந்ததா?

17) சிறுவர்கள் கொல்லப்பட்டதாக 500 வருட வரலாற்று குறிப்புகள் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா??

இந்த கேள்விகளுக்கு விடை இறந்த எலும்புக்கூடுகள் எழுந்து பேசினால் மட்டுமே கிடைக்கும்.

மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் ஏமாந்திருப்பதையும் சேர்த்தால் இது வரை பல தடவைகள் ஆட்சியாளர்களிடமும் , சர்வதேசத்திடமும் நம்பி ஏமாந்து போனவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மட்டும் தான் உணர முடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைக்கு எதிரான எந்த விடயமாக இருந்தாலும் அரசின் பக்கம் நின்று அரசைக் காப்பாற்றவே முனைகிறது. இவ்வாறு இருக்கும் போது நீதியான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நாம் எவ்வாறு நம்ப முடியும்.. இவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. மாறாக சிங்கள மக்கள் தான் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்...

மன்னார் புதைகுழி 500 வருட பழமையானது என கூறிய ஆய்வு முடிவுகள் நாளை அகழப்படப்போகும் புதிய புதைகுழிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்டது என்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது தான்.

ஏமாற்றமே தொடர்கதையாகி போன ஈழத்தமிழர் வாழ்க்கை மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

நெல்லை நெல்லையான் and Perumaal Das shared a post.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது?’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே?’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்? ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை!’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்? பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார்! பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack
  • AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313
  • மூடப்பட்டதற்கு அங்கு பூட்டப்பட இருந்த கண்காணிப்பு 'கமராக்கள்' சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையிலான 'முறுகல் நிலை என சொல்லப்படுக்கின்றது   During the last few days, students had protested against the installation of CCTV cameras within the university. Talks with the management in this regard were reported to have ended in a stalemate. Vice-Chancellor Prof. Upul B. Dissanayake said the faculty will be closed temporarily until a final decision is taken over the matter. http://www.sundaytimes.lk/article/1095822/management-faculty-of-peradeniya-university-closed-until-further-notice
  • உண்மையை பிரதிபலிக்கும் கருத்துக்கள்! மிக மிக முக்கியமான பிரச்சினை ஒன்றில் இதுவரை தமிழின அழிப்பாளர்களின் கைக்கூலிகள் போல ஒதுங்கியிருப்பதுடன் மட்டுமல்ல, கன்னியாவின் ஆக்கிரமிப்புக்கு முழுத் துணை போபவர்களாகவும் சம்மந்தன்-சுமந்திரன் கோஷ்டி மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் திருகோணமலை கிளை தலைவருமான குகதாசன் தலைமையிலான அணியினர் தமிழக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஞாநி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சார்பில் இளங்கோ, நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் பங்கு பற்றினர். பா.ஜ.கவின் தமிழக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடந்த சந்திப்பில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கவுந்தரராஜன், எம்.பி இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினர் இச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இச் சந்திப்பில் என்ன விடயம் பேசப்பட்டது என்ற விடயம் வெளியிடப்படவில்லை. https://www.tamilwin.com/srilanka/01/220818?ref=home-feed