• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்

Recommended Posts

                                              

                                                           

 

 

                                                               கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, !

 

               போதை தரும் வாதை                                                                                                                    சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......!

   🥀..............(1)                                                                                                                          

 

அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும்தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது.

.

 

வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.

நீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும்.

 

வக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு.

 

நீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது .

 

வக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான்.

 

நீதிபதி: பொதுவானது என்றால் .......!

 

வக்கீல் 1:அரசுக்கு உரித்தானது.

 

நீதிபதி: அரசுக்கு சொந்தமான சொத்தை ஆட்டையை போடலாமா செல்லையா. அது தப்பில்லையா. அப்படியே சிவஞானத்தை பார்த்து உம்மை நான் மெச்சுகின்றேன்.ஒரு குடிமகனானவன் அநீதியை கண்ட விடத்து அதைத் தைரியமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.என்று சொல்ல ....

எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருந்த வக்கீல் 1 அவசரமாய் குறுக்கிட்டு அதற்கில்லை எஜமான், செல்லையா முழு வாய்க்காலையும் தானே அபகரிப்பது அநியாயம்.நடுவில் எல்லையிட்டு பாதியை தனக்கு தரவேண்டுமென்று எனது கட்சிகாரர் கேட்கிறார்.

வக்கீல் 2 குறுக்கிட்டு அதெப்படி தரமுடியும்.எனது கட்சிகாரர் இருநூறு லொறி செம்மண் போட்டு நிரப்பியுள்ளார் வாழை நடுவதற்காக.

 

நீதிபதி குறுக்கிட்டு காலை வெட்டுவன், வாழை நடப்போறாராம் வாழை,இரு வக்கில்களையும் பார்த்து கேஸ் என்றவுடன் எல்லாத்தையும் எடுக்கிறதா,இந்தகேஸ் நிக்காதென்று உங்களுக்கே தெரியும் அவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டாமா. கட்சிக்காரர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து ஒரு அரச அதிகாரியின் முன்னால் அந்த வாய்க்காலை பழையபடி செப்பனிட வேண்டும்.மேலும் இந்த வழக்கிற்கான செலவுகளை இருவரும் பங்கிட்டு நீதிமன்றத்துக்கு செலுத்தவேண்டும். (அவர்கள் புறப்பட்டுப் போக, குமாஸ்தாவை பார்க்கிறார்)

 

 

வழக்கு எண் 762. கஞ்சா விற்ற வழக்கு.

 

நீதிபதி : யாரப்பா போலீஸ்... வந்து வழக்கை சொல்லவும்.

 

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னால் வந்து ஒரு பையை மேசையின்மேல் விரித்து வைக்கிறார்.அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருக்கின்றன.அதை நீதிபதி ஈஸ்வரதாசன் பார்க்கிறார். பின்னால் இரண்டு காவலர்கள் ஒரு இளம் பெண்ணை அழைத்து வருகின்றனர். அவள் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்கிறாள்.

 

ரவீந்திரன் இன்னொரு கூண்டில் ஏறி நின்று வணக்கம் ஐயா,இந்தப் பெண் வீதியில் நின்று கஞ்சா விற்று கொண்டிருக்கும் போது கைது செய்தேன். அந்தப் பையும் அதிலுள்ள கஞ்சா பொட்டலங்களும் இவளுடையதுதான்.

 

நீதிபதி: உன் பெயர் என்னம்மா...

பெண் : காஞ்சனா ஐயா.

நீதிபதி: நீ என்னம்மா சொல்கிறாய்.உனக்காக வாதாட வக்கீல் வந்திருக்கிறாரா....!

காஞ்சனா: இல்லை ஐயா. நான் விக்கவில்லை.

நீதிபதி: அப்படியென்றால் இந்த பையும் கஞ்சாவும் உன்னுடையதில்லை என்கிறாயா....!

காஞ்சனா: ஆமாம். நான் அப்போதுதான் அதை கீழே கிடந்து எடுத்தேன். அப்போது அங்குவந்த காவலர் ஐயா என்னை பிடித்து கொண்டுவந்து விட்டார்.

நீதிபதி: நீங்கள் இவரை பிடிக்கும்போது பக்கத்தில் சாட்சிகள் யாராவது....!

ரவீந்திரன்:இல்லை ஐயா.

நீதிபதி: உங்களைக் கண்டதும் ஓடவோ அல்லது பொருளை மறைக்கவோ முயற்சித்தாரா...!

ரவீந்திரன்: யோசித்து.... இல்லை ஐயா.

நீதிபதி: அதிகமாய் பணம் ஏதாவது வைத்திருந்தாரா....!

ரவீந்திரன்: இல்லை ஐயா.

நீதிபதி: நீங்கள் இந்த வேலைக்கு புதிதாய் சேர்ந்திருக்கிறீர்களா....!

ரவீந்திரன்: ஆமாம் ஐயா.

நீதிபதி: போலிஸைப் பார்த்து நீங்களாவது சொல்லி இருக்கக் கூடாதா, ஒரு வழக்கை எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று. பின் குமாஸ்தாவை பார்த்து கேட்கிறார் இந்தப் பெண்மீது பழைய வழக்குகள் ஏதாவது இருக்கா....!

குமாஸ்தா: இல்லை ஐயா....!

நீதிபதி:காஞ்சனாவிடம் இந்தா பாரம்மா, கீழே ஏதாவது பொருள் இருந்தால் போலீசுக்கு அறிவிக்க வேண்டும். அதை அவர்கள் வந்து எடுத்து பிரித்து கொள்வார்கள். நீயே எடுத்துக் கொண்டு போகக் கூடாது.ஏதாவது குண்டு கிண்டு கிடந்து தொலைக்கப் போகுது. சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீ போகலாம். இன்ஸ்பெக்ட்டரும் காவலரும் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே போகிறார்கள். நீதிபதியும் உள்ளே போக எழுந்தவர் மேசையில் கிடந்த பையைப் பார்த்துவிட்டு இந்த கருமாந்திரத்தையும் எடுத்து கொண்டு போங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார். காஞ்சனாவும் ஓடிப்போய் அந்த பையை எடுத்துக்கொண்டு வேறு வாசல் வழியாக வெளியேறுகிறாள்.

🌱........வளரும்......!

 

 • Like 11
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சுவி அண்ணா, அசத்தலான ஆரம்பம். நாங்கள் சிரிக்க ரெடி! தொடருங்கள். 😀

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, suvy said:

வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.

புலிகளுக்கு முன்னர் நீதிமன்றங்களில் கூடுதலான வழக்குகள் பங்குக்காணி பங்குக்கிணறு அதுவும் கூடுதலாக சகோதரங்கள் மிகவும் நெருங்கிய சொந்தம் என்று தான் இருக்கும்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கஞ்சா.....காஞ்சனா.....கண்ணி.......!

கதை ஒரு மார்கமாய்த்தான் போகும் போலை கிடக்கு....👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 சுவி அண்ணா !

சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! என்று எழுதியிருக்கிறீர்கள் ஆரம்பமே  சிரிப்போட  சிந்திக்கக் கூடியதாய் இருக்கு, தொடருங்கள்.......

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

🥀.............(2)

                                               வெளியே வந்த ரவீந்திரனுக்கு கோபம் கோபமாய் வருகின்றது.காவலர்களுக்கு அது எதோ அன்றாட நிகழ்ச்சி மாதிரி ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு வருகின்றார்கள். ஏன் கனகு நான் கவலையுடன் வருகிறன், நீங்கள் ஏதோ சம்பந்தமே இல்லாததுபோல் சிரிச்சுக் கொண்டு வாரியள். விடுங்க சேர் நாலுல  ஒண்டு இப்படி புட்டுக்கிட்டு போறது வழக்கம் தானே. இல்லை மார்க்கண்டு இதை சும்மா விடக்கூடாது. எனக்கு மனசு சரியில்லை. நீங்கள் அந்த கஞ்சா பையை ஸ்டேசனுக்கு  கொண்டுபோய் சீல் பண்ணி லாக்கரில் வையுங்கோ. 
எங்கே அந்த பை நீங்கள் எடுக்கவில்லையா நானும் எடுக்கேல்ல.மூவரும் ஓடிப்போய் பார்க்க அங்கே அது இல்லை.

கஞ்சா பையுடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே ஓடிவந்த காஞ்சனா சைலன்ட் மோடில் இருந்த தனது நோக்கியாயை எடுத்து நோக்க சற்றுமுன்பாக மரியா அவளுக்கு போன் பண்ணியிருந்தது தெரிந்தது.உடனே போனை மரியாவுக்கு போட்டு என்னடி, நான் உள்ளுக்க இருக்கிறன் நீ போன் பண்ணியிருக்கிறாய்.

மரியா: என்ன நீ உள்ளுக்க இருக்கிறியா, இப்பதான் யாவாரம் தொடங்கி இருக்கு.ஜாமினில எடுக்கவும் கையில காசு பத்தாதேடி.

காஞ்சனா: மண்ணாங்கட்டி, கேஸ் புட்டுக்கிட்டுது. அந்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கோபத்தோட வெளியே போறார். நீ கவனம் மாட்டுப் பட்டிடாத. சரி சரி விடயத்தை சொல்லு. இப்ப நீ எங்க நிக்கிறாய்.

மரியா: நான் இங்க தவறணைக்கு பக்கத்தில நிக்கிறன். இங்க யாவாரம் நல்லா போகுது.சரக்கு காலி.அதுதான் உன்னிடம் இருக்கா,அல்லது அதையும் போலீசில புடுங்கிட்டிடங்களா.

காஞ்சனா: என்னிடமாவது புடுங்கிறதாவது.ஜட்ச் ஐயாவே கொண்டுபோகச்சொல்லி தந்திட்டார். அப்படியே அலேக்கா தூக்கி கொண்டாந்திட்டன்.

மரியா: என்ர செல்லம்.கெதியா ஓடியா,சீக்கிரமாய் வித்திட்டு, பண்ணை சந்தையில மீனும் வாங்கிக் கொண்டு போவம். 

                                பண்ணை சந்தையில் மீன் வியாபாரம் மும்மரமாய் நடந்து கொண்டிருக்கு. சாரி சாரியாக வகை வகையான  மீன்கள், சுறாக்கள்,றால்,நண்டு,திருக்கை என்று வந்து இறங்கிக்கொண்டிருக்கு.எல்லாம் தரம்பிரித்து தனித்தனியாக ஏலம் கூறப்படுகின்றது.பெரும் வியாபாரிகளுடன் சிறு வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றார்கள். இன்னொரு பக்கத்தில் மீன் வெட்டுபவர்கள் சில்லறையாய் வாங்குபவர்களை அழைத்து வெட்டிக் குடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அப்பொழுது அங்கு வருகின்றார்கள் காஞ்சனாவும் மரியாவும்.ஒருமுறை சந்தையை சுற்றி பார்த்துக் கொண்டு வந்து விட்டு பின் ஒரு பெரிய கலவாய் மீனும்,பொரிக்கவும் சொதிக்கும் றாலும்,  மட்டுவில்  முரலும் வாங்கிக்கொள்கின்றனர்.அங்கு ஒரு கையளவு சுறாவை பார்த்த காஞ்சனா அதை விலைபேசி எடுக்க முற்பட உடனே மரியா ஏன்டி இப்ப இவ்வளவு கறி வாங்கியாச்சுது உதை வேற என்னத்துக்கு எடுக்கிறாய்.இல்லடி அப்பாக்கு சுறா எண்டால் ரொம்பப் பிடிக்கும் அதுதான். கொன்னுடுவன்,வையடி அதை.அப்பாவாம் அப்பா.நான் போய் மீனை வெட்ட கொடுக்கிறன் நீ வா என்று சொல்லிவிட்டு மரியா அப்பால் செல்ல காஞ்சனாவும் அப்பாக்கு சுறாவை வாங்கிக்கொண்டு பின்னால் போகிறாள்.

                                       போலீஸ் ஸ்டேசன்..... ! மார்க்கண்டையும், கனகராசாவையும் தனது அறைக்கு வரச்சொல்லி அழைத்து விட்டு ஜன்னலோரம் நின்று வெளியே பார்த்துக்கொண்டு நிக்கிறார் இன்ஸ்பெக்டர்  ரவீந்திரன். யாரோ சாப்பிட்டு விட்டு வெளியே தூக்கிப்போட்ட எச்சிலையிலிருந்த மிச்சத்தை ஒரு நாயும், ஒரு பூனையும் சத்தம் காட்டாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு போலீஸ் ஸ்டேசனுக்குள் இதுவும் சாத்தியம்தான், பூட்ஸ் காலால் மிதி வாங்கியிருக்கும் பட்சத்தில். 

கதவை இலேசாகத் தட்டிவிட்டு திறந்துகொண்டு மார்கண்டுவும் கனகுவும் உள்ளே வந்து இன்ஸ்பெக்ட்டரை பார்க்க, ரவீந்திரனும் பார்த்தியா கனகு ஒரு சின்ன பெட்டை எங்களை முட்டாளாக்கிப் போட்டு கஞ்சாப் பைக்கட்டுகளையும் அடிச்சுக்கொண்டு போயிட்டாள். சே....நினைக்க நினைக்க பெருத்த அவமானமாய் இருக்கு.

கனகு:ஓம் சேர் நாங்களும் சாப்பிடும்போது அதைப்பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தோம்.

ரவி: உங்களுக்கு அவளைப்பற்றி முன்பின் ஏதாவது தெரியுமா.
கனகுவும் அவளை  முன் பின்னாக கனவு கானும் சமயத்தில் ரவிந்திரன் குரலில் கடுமையுடன் உன்னைத்தான் கனகு என்று வினவ கனகுவும் திடுக்கிட்டு....... 

கனகு : இப்பதான்  அண்ணன்  மார்க்கண்டுதான் சொல்லிச்சு அந்தப் பெண்ணும் இன்னொரு பெடிச்சியும் கூட்டாளியாய் திரிவதை  தான் பாரத்திருக்கிறதெண்டு. 

மார்க்கண்டு கனகுவை முறைத்து விட்டு, அது ஒன்றுமில்லை சேர்,அப்பப்ப அங்க இங்க என்று பார்த்ததுதான்.
ஆனால் அவர்கள் கஞ்சா எல்லாம் விற்பார்கள் என்று நான் நினைத்ததில்லை.

சரி போகட்டும்.இனிமேல் அவர்களை நாங்கள் தீவிரமாய் கண்காணிக்க வேண்டும். இவர்கள் யார்,எங்கு யாருடன் தங்கி இருக்கிறார்கள்.எங்கிருந்து கஞ்சா வாங்குகின்றார்கள்.யார்யாரோடு தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருந்து யாராவது இவர்களை இயக்குகிறார்களா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

கனகு: யெஸ் சேர், நாங்களும் ஒரு குரூப்பாக சேர்ந்து இதைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைக் கைது செய்கிறோம்.

மார்க்கண்டு:இதற்காக ஒரு தனி பைல் திறந்து கிடைக்கும் ஆவணங்களை அதில் சேகரிக்கலாம்.

ரவி:நல்ல யோசனை மார்க்கண்டு.அதுதான் சரி. இதை சும்மா விடக்கூடாது. எவ்வளவு கொழுப்பு இருந்தால் என்னை ஏமாற்றியதும் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்தே கஞ்சா பொட்டலங்களையும்  எடுத்துக் கொண்டு ஓடியிருப்பாள். இந்நேரத்தில் ரவீந்திரனின் மூளையில் மின்னலாக ஒரு எண்ணம் பளிச்சிடுகின்றது. எங்கள் மூவரையும் அந்த பெட்டைகளுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் பின்தொடர்ந்தால் எங்களை சுழிச்சுப் போடுவாளவை. அதனால் புதிதாகவும் ஓர் ஆளை இந்த ஒப்பிறேசனில்  சேர்க்க வேண்டும்.ஆனால் அது மார்கண்டுக்கும்  கனகுக்கும் தெரியாமல் இருந்தால்கூட நல்லதுதான் என்று  யோசித்து இந்த வேலைக்கு ஆரவ்தான் சரியான ஆள் என்று தீர்மானித்து  இவர்களை அனுப்பிவிட்டு நேராக குவாட்டர்சுக்கு போய் அவனைப் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டான்.

கனகு:நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு  "கஞ்சா விற்கும் காஞ்சனா" என்று தலைப்பு போடலாமா சேர்,

                                           ரவி: யெஸ் நல்ல தலைப்பு அப்படியே வைக்கலாம்,....."ஒப்பிறேசன் கே . வி . கே.....!" என்ன சரியா இருவரும் ஆமோதிக்கின்ரனர்,

பெண்கள் இருவரும் அங்கு வந்த மினிவானில் ஏறி யாழ் - மத்திய பேரூந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பலாலிக்கு புறப்படும் பஸ்ஸில் ஏறி அமருகின்றார்கள். மரியாவும் அங்கு புட்போர்ட்டுக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்து  கணக்கு சரிபண்ணிக் கொண்டிருந்த நடத்துனரிடம், அண்ணை இந்த பஸ் எப்ப வெளிக்கிடும். இப்ப கிளம்பிற நேரம்தான்.......ட்ரைவர் அண்ணையை காணேல்ல,சும்மா குழப்பாத பிள்ளை.நான் கணக்கு பண்ணிக் கொண்டிருக்கிறான்..... யாரை அண்ணை......!தலையை நிமிர்த்தி அவளை மேலும் கீழும் பார்த்தவர், ம்.....பகிடி...அந்தா அந்த சிவப்பு சுடிதாரோட கடலை போட்டபடி  புகைவிட்டுக்கொண்டு நிக்கிறார் பார் அவர்தான் சாரதி. அவர் புகைவிட்டு முடிய வண்டியும் புகைவிட்டுக் கொண்டு கிளம்பிடும். மரியாவும் சென்று ஜன்னலோரமாக காஞ்சனா இருந்த  இருக்கைக்கு பின் இருக்கையில் வசதியாக காலை நீட்டி அமர்ந்து கொண்டாள். வண்டிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.

தூரத்தில் ஒரு பஸ்ஸின் மறைவில் இருந்து ஆரவ்வுக்கு இரண்டு பெண்களையும் ரவீந்திரன் அடையாளம் காட்ட  ஆரவ்வும் சனங்களுடன் சேர்ந்து அந்த பஸ்ஸில் ஏறிக் கொள்கிறான்,


    🌱............ வளரும்.....!

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

🥀..............(3)

                               

காவலர்கள் கனகுவும் மார்கண்டுவும் வெளியே வரவும் அங்கே இரண்டு ஜிப் வண்டிகளுக்கு நடுவில் சைரன் பொருத்தபட்ட கார் ஒன்று வந்து நிக்கவும் சரியாக இருந்தது,  உடனே கனகு ஒடிசென்று பின் கதவை திறந்துவிட எனைய காவலர்கள் சல்யூட் அடிக்க அதில் இருந்து உயர் அதிகாரி மகேசன் இறங்கி அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொன்டு உள்ளே வருகிறார். மகேசன் அறையில் சென்று அமரவும்   மார்கண்டு ஒரு குளிர்பாணத்தை எடுத்து வந்து அவர் முன் மேசையில் வைக்கிறார்,மற்றைய காவலர்கலளும் அவர் சொல்வதை கேட்க ஆவலாக அங்கே குழுமி இருக்கின்றனர்,அவரும் யார் யாருக்கு என்னென்னெ சம்பள உயர்வுகள் பதவி உயர்வுகள் என்பதை சொல்லிவிட்டு இன்ச்பெக்டர் ரவிந்திரனுக்கு சம்பள உயர்வுடன் அவரின் சேவையை ஊக்குவிக்குமுகமாக சட்டையில் ஒரு நட்சத்திரமும் கிடைக்கும்  என்கிறார், எல்லோரும் கலைந்து செல்ல மார்கண்டுவும் கனகுவும் அங்கே நிக்கிறார்கள், மகேசன் அவர்களைப் பார்த்து என்ன ஏதும் சொல்ல வேண்டுமா என்று கேட்கிறார்,
மார்கண்டு : வேறொன்றுமில்லை ஐயா கனகாலமாக எனக்கு பதவி உயர்வு எதுவும் வரவில்லை முன்பும் உங்களிடம்,,,,,, அதுதான் என இழுக்கிறார் ( மார்கண்டு மகேசனைவிட சீனியர்),

மகேசன் : பாருங்கள் மார்கண்டு இவற்றை நான் தீர்மானிப்பதில்லை,மேலிடம்தான் செய்கிறது, அவர்களும் கடந்த காலங்களில் ஒவ்வொருவருடைய சேவையின் புள்ளி விபரங்களை வைத்துதான் முடிவுகளை எடுக்கிறார்கள், அன்று அந்த முடிவுகள் எடுத்த நாட்களில் நானும் அங்கிருந்தேன்,கடந்த வருடங்களில் நீங்கள் எந்த ஒரு வழக்குகளும் சரியாக கையாளவில்லை,மேலும் இருமுறை சஸ்பன்ட் செய்யபட்டு இருக்கிறீர்கள், வேலைக்கும் ஒழுங்காக வருவதில்லை, இவையெல்லாம்தான் உங்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ளது, நான் பொய்  சொல்லவில்லை, நான் அன்று உங்களுக்காக கதைத்துத்தான் இந்த சம்பள உயர்வையே பெற்று வந்திருக்கிறேன்,(இது பொய்), என்றவர் கனகுவை பார்த்து  உனக்கு  நல்ல எதிர்காலம் உண்டு,  தேவையில்லாத வேலைகள் பார்த்து வீனாய் கெடுத்து கொள்ளாதே, நீங்கள் என்ன செய்தாலும் அது மேலிடத்துக்கு மணக்கும் புரிந்தால் சரி,  

கனகு : நன்றி ஐயா,,,அப்படியே நடக்கிறேன்,,,( இனி அப்பப்ப லஞ்சம் வாங்குவதையும் நிறுத்திடனும் என மனதுக்குள் நினைக்கிறான், 
மார்கண்டு : ஐயா ரவீந்திரன் பணியில் அமர்ந்து ஏழெட்டு  மாதங்கள்தானே இருக்கும் அவருக்கு மட்டும் எப்படி இந்த உயர்வுகள் கிடைக்கின்றன,  

எவ்வளவு காலம் பதவியில் இருக்கிறார் என்பதல்ல, என்னென்ன செய்துள்ளார் என்பதைத்தான் பார்க்க வேண்டும், தனது மடிக் கணனியை திருப்பிக் காட்டியபடி சொல்கிறார்,  இந்த ஸ்டெசனில் மட்டும் சுமார் ஐயாயிரம் முடிக்கப் படாத வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றில் நூறு புகார்கள் வரை அவர் தனது முயற்சியால் பூரணமாக முடித்து மேலிடத்துக்கும் அனுப்பி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார், இது போதாதா, 

மார்கண்டு மவுனமாக இருக்க மகேசன் எழுந்து செல்கிறார்,,,, , !

                   ஆரியகுளம் தாண்டி கந்தர்மடம் சந்திக்கு அருகாக காஞ்சனாவும் மரியாவும் இறங்கி கொள்கிறார்கள், அங்கிருந்து அரசடி வீதியில்உள்ள காஞ்சனாவின்  வீட்டிக்குள் செல்கின்றனர், அந்த வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி மரியாவின் வீடு இருக்கு, பின் வளவால் போய் வரலாம், 
மரியா நீ இந்த கறிகளை கழுவி சமை, நான் இதை  அம்மாவிடம் குடுத்து விட்டு வருகிறேன்,
இஞ்ச கொண்டா அதையும் கழுவித் தாறன், பையை குடுத்திட்டு காஞ்சனா தேனிர் போட உள்ளே போகிறாள், 
முற்றத்தில் படர்ந்து நீளமான கிளைகளுடன் நிக்கும் தேமா மரத்தின் கீழ் அரிவாளையும் சட்டியுடன் தண்ணீரையும் கொண்டுவந்த மரியா ,அவற்றை கீழே வைத்துவிட்டு பாவாடையை முழங்கால் வரை வழித்து விட்டுக்கொண்டு குந்தியிருந்து மீனை கழுவுகிறாள். சொல்லி வைத்த மாதிரி அவர்களின் பூனையும், நாயும் அங்கு வர மரக்கிளையில் காகமும் வந்தமர்கின்றது.

பஸ்ஸில் இருந்து அவர்களின் பின்னால் இறங்கிய ஆரவ் சிறிது இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்கின்றான். ஒவ்வொரு வீடாக மதிலால் எட்டி எட்டி பார்த்து வந்து கொண்டிருந்த ஆரவ் , இந்த சந்தியால்தானே திரும்பினவர்கள்.அதுக்கிடையில் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்து ஒரு தகர வேலியின் கீழால் பார்க்கையில் முற்றத்தில் ஒரு பெண் கறி சட்டியோடும் ரெட்  ஜட்டியோடும் கலவாய் மீன் கழுவிக்கொண்டிருக்கிறாள். ஆளரவம் கேட்டு ஜிம்மியும் ஆக்ரோஷத்துடன் குரைத்துக்கொண்டு  வேலியடிக்கு பாய்ந்து வருகின்றது.

வீரா நில் என்று கத்திக் கொண்டே மீன் சட்டியை மூடி விட்டு யாரது என்று குரல் கொடுத்து மரியா  வெளியில் வர ஆரவ்வும் அது நான், (என்ன சொல்வது என்று யோசித்து ) வந்து ஏதோ நரகலை  உழக்கி போட்டன் கால் கழுவ வேண்டும் என்கிறான். அவளும் பின்னால் கிணத்தடியை காட்டி விட்டு மீன் சட்டியுடன் உள்ளே போகிறாள். நாயும் பூனையும் மீனின் கழிவுகளைத் தின்ன சண்டை போட  காகமும் எட்டி எட்டி கொத்தி கொத்திக் கொண்டு பறக்கிறது.

                                       கிணற்றடிக்கு போன ஆரவ் வீட்டை நன்றாக நோட்டமிடுகிறான்.அங்கு ஒரு பெரிய கறிவேப்பிலை மரமும் அதன் வேரில் முளைத்த கண்டுகளும் ஆங்காங்கே நிக்கின்றன. அவற்றையொத்த வேறு சில செடிகளும் செழித்து வளர்ந்து நிக்கின்றன.ஆச்சி  கொஞ்சம் பார்த்துகொள்ளன நான் வீட்டை போய் தூள் எடுத்து கொண்டு வாறன் என்றபடி வேகமாய் நடந்து பின்னால் போகிறாள். கிழவியும் ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டே ஓம் என்று சொல்ல,ஆரவ்வும் விரைந்து அங்குள்ள செடிகள் எல்லாவற்றிலுமிருந்து சில நெட்டு இலைகளை பிடுங்கி பாக்கட்டில் செருகி கொண்டு மரியா வந்ததும் நன்றி சொல்லி விட்டு செல்கிறான்.

🌱................. வளரும்....!

 

 • Like 5
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

இப்பிடி நகைச்சுவையாக எழுத உங்களால்த்தான் முடியும்

Share this post


Link to post
Share on other sites
On 3/10/2019 at 1:42 AM, suvy said:

காஞ்சனா: மண்ணாங்கட்டி, கேஸ் புட்டுக்கிட்டுது. அந்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கோபத்தோட வெளியே போறார். நீ கவனம் மாட்டுப் பட்டிடாத. சரி சரி விடயத்தை சொல்லு. இப்ப நீ எங்க நிக்கிறாய்.

நீண்ட நாட்களின் பின் புட்டுக்கிட்டுது என்ற சொல்லை பார்த்திருக்கேன்.

Share this post


Link to post
Share on other sites
On 3/10/2019 at 1:42 AM, suvy said:

பெண்கள் இருவரும் அங்கு வந்த மினிவானில் ஏறி யாழ் - மத்திய பேரூந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பலாலிக்கு புறப்படும் பஸ்ஸில் ஏறி அமருகின்றார்கள். மரியாவும் அங்கு புட்போர்ட்டுக்கு அருகில் இருந்த

கீரிமலையில் வியாளி என்று ஒரு பெண் இருந்தா யாருக்காவது ஞாபகம் இருக்கா?சாராயம் விற்பதிலிருந்து அடிதடி சண்டை என்று பெயர் பெற்றவர்.

மனிசி பஸ்சில் ஏறுவதென்றால் ஓடஓடத் தான் ஏறும் இறங்கும்.அந்த மனுசி ஏறிய பஸ்சில் பெட்டைகள் இருந்தா உடனே இறங்குவது நல்லது.முழுக்க முழுக்க தூசணம் தான்.

அனேகமான நேரங்களில் புட்போர்டில் தான் பயணம் செய்வார்.ரிக்கட் எடுத்திருப்பாவோ தெரியல்லை.

5 hours ago, suvy said:

ஏதோரகலை  உழக்கி போட்டன்

 எப்போதோ பாவித்த சொற்கள் நீண்ட காலத்தின் பின்.

Share this post


Link to post
Share on other sites

சுவி ,

ரவீந்திரன் ,கனகு, மார்க்கண்டு ,மகேசன் எல்லாம் தமிழ் பொலிசாவே இருக்கு.

கதையானாலும் ஒரு சிங்கள பொலிஸ் தானும் இல்லையே என்று மனதுக்குள் சந்தோசமாக இருக்கு.
ஆனால் இனி பதவி உயர்வுக்காக மார்க்கண்டு என்ன செய்யப் போகிறார் என்னு சந்தேகமாக இருக்கு.ஐயா தமிழ் பொலிசை நாறடிச்சிடாதீங்க.ரொம்ப ஏமாற்றமாக போயிடும்.

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, ஈழப்பிரியன் said:

கீரிமலையில் வியாளி என்று ஒரு பெண் இருந்தா யாருக்காவது ஞாபகம் இருக்கா?சாராயம் விற்பதிலிருந்து அடிதடி சண்டை என்று பெயர் பெற்றவர்.

மனிசி பஸ்சில் ஏறுவதென்றால் ஓடஓடத் தான் ஏறும் இறங்கும்.அந்த மனுசி ஏறிய பஸ்சில் பெட்டைகள் இருந்தா உடனே இறங்குவது நல்லது.முழுக்க முழுக்க தூசணம் தான்.

அனேகமான நேரங்களில் புட்போர்டில் தான் பயணம் செய்வார்.ரிக்கட் எடுத்திருப்பாவோ தெரியல்லை.

 எப்போதோ பாவித்த சொற்கள் நீண்ட காலத்தின் பின்.

ம்.....அப்போது பிரபலமானவர்கள் .....கீரிமலையில்  அவவும், காரைநகரில் இந்துமதியும் , யாழில் ரோசக்காவும் என்று பலர் பவிதமாய் சேவை சாதித்து வந்திருக்கின்றனர்........!   😁

Share this post


Link to post
Share on other sites

🥀............(4)

                                        

சற்றுநேரத்தில் வீட்டுக்குள் வந்த காஞ்சனா கை கழுவ கிணற்றடிக்கு போகிறாள். ஆங்காங்கே செடிகளில் இருந்து பிடுங்கிய இலைகள் சிதறிக் கிடக்கு.மரியாவை கூப்பிட்டு கேட்க அவளும் ஒருத்தன் வந்ததையும் கால் கழுவ கிணற்றடிக்கு போனதையும் சொல்கிறாள்.சரியென்று அவளை அனுப்பிவிட்டு யோசிக்க எதுவோ சரியில்லாமல் தோணுது.உடனே ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அங்கிருந்த கஞ்சா செடிகள் அத்தனையையும் பிடுங்கி சமைத்து கொண்டிருந்த மரியாவிடம் இதை ஒழிச்சு வை என்று சொல்லி குடுத்து விட்டு செடி பிடுங்கிய நிலத்தை சரி செய்ய அப்பால் போகிறாள்.அவளும் அவற்றை கீழே கிடந்த விறகுக் குவியலுக்குள் விறகோடு விறகாய் வைத்து விடுகிறாள்.

 சமைத்து விட்டு வெளியே வந்த மரியா காஞ்சனாவிடம்,உன்ர கொப்பரும் கொம்மாவும் எப்படி இருக்கினம் என்று ஏளனமாக வினாவுகிறாள். அவளும், அவர்களுக்கென்ன ஜாலியாய் இருக்கினம் என்று வேண்டுமென்றே பொடி  வைத்து சொல்கிறாள்.இருப்பினம் இருப்பினம்  என்று மரியா கறுவிக் கொள்ள காஞ்சனா சொண்டுக்குள் சிரிக்கிறாள்.இங்கேதான் இந்த வீட்டில்  காஞ்சனாவும் அப்பாவும் பேத்தியாரும் இருந்தவர்கள்.அப்படியே அங்கால இருக்கும் வீட்டில் மரியாவும் தாயாரும் வாழ்ந்து வந்தார்கள்.மரியாவின்  தாயார் மாலினி  தலைமைத் தாதியாக ஒரு கிளினிக்கில் வேலை செய்கிறார். இவள் காஞ்சனாவின் தகப்பன் ஒரு வேலை என்று இல்லாமல் எல்லா தப்பு தண்டாவான வேலைகளும் செய்வார்.அவர்தான் கஞ்சா விற்பது, வீட்டில் பயிரிடுவது என்று எல்லாம்.அவருடைய மனைவி முன்பே தவறிவிட்ட பின்தான் அவர் வாழ்வு திசை மாறியது.  மரியாவின் தந்தை ஒரு ஆங்கிலோ இந்தியன்.அழகாய் இருப்பான்.அதே நிறமும் குணமும் மரியாவிடமும் உண்டு. மரியா பேசும் தமிழ் கூட கொழும்புத் தமிழ்தான்.  அப்போது கொழும்பில் வாழ்ந்தார்கள்.ஒருநாள் அவன் கூட வேலை செய்த யாரையோ கூட்டிக்கொண்டு நாட்டை விட்டு போய் விட்டான்.திரும்பி வரவில்லை.மாலினியும் கனநாள் இருந்து பார்த்து விட்டு இங்கு வந்து ஒரு கிளினிக்கில் தாதியாக வேலை செய்கிறாள்.  அப்பப்ப கறிக்கு போட கறிவேப்பிலை எடுக்க காஞ்சனா வீட்டுக்கு வருவாள். வேலைக்கு செல்லும்போது மரியாவை இவர்களிடம் விட்டு விட்டு  செல்வாள்.அப்படியே செல்வராசுவுடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. வேலையால்  அலுத்து களைத்து வருபவளுக்கு செல்வராசுவும் வலிநிவாரணி என்று கஞ்சாவை அறிமுகப்படுத்தி விட்டான். அது அவள் வாயோடு மட்டுமல்ல  அக்கம் பக்கம் எல்லாம் இருக்கிற வாய்களிலும்  புகையதொடங்கி அவர்களை தனிவீடு எடுத்து தங்க வைத்து விட்டது.கனகாலம் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் ஒட்டுறவு இல்லாமல் இருந்து இப்பதான் கொஞ்சம் புழங்குகின்றார்கள்.

போன் சிணுங்குகிறது.ரவீந்திரனும் அட ஆரவ் என்று சொல்லிக்கொண்டு எடுக்கிறான்.எதிர் முனையில் மச்சான் எங்கிருக்கிறாய்.... நான் ஒரு கேஸ் விடயமாய் ஆரியகுளத்தடியில் நிக்கிறன். அங்கேயே நில் இதோ வருகிறேன் என்ற ஆரவ் சற்று நேரத்தில் பேருந்தில் வந்து இறங்குகின்றான்.
என்ன ஆரவ் சிரிப்போட வாராய்.போன அலுவல் என்னாச்சு. எல்லாம் பழம் மச்சான் என்று போனதில் இருந்து நடந்தவற்றை சொல்லி விட்டு பாக்கட்டில் இருந்து சேகரித்த இலைகளை எடுத்து கொடுக்கிறான்.அவற்றை வாங்கி மோட்டார் சைக்கிள் சீற்றில் வைத்து கறிவேப்பிலையையும் கஞ்சா இலைகளையும் தரம் பிரித்து வைக்கிறான்.எடேய் இவளவை எமகாதகிகளடா. கஞ்சா வாங்கியும் விக்கினம்,வீட்டிலையும் வளர்க்கினம்.இவையை சும்மா விடக்கூடாது என்று ரவீந்திரன் சொல்கிறான்.
 
உனக்கு இன்னொரு நல்ல செய்தி. எதிர்பாராமல் ஒருத்தனை பிடித்து சோதனை செய்ததில அவனிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பைக்கட் கிடைத்தது.ஸ்டேசனுக்கு கொண்டு போய் கவனிச்சதில நிறைய உண்மைகளை சொல்லிப்போட்டான்..... என்னவாம் ஆரவ் கேட்க ....இன்னும் ஒரு வாரத்தில் ஒரு படகு நிறைய சாமான்கள் வருகுதாம்.இங்கும் ஒரு பிரமுகரின் உறவினர்தான் எல்லோருக்கும் சப்ளை செய்கிறாராம். அவருக்கு நம்ம இலாகாவுக்குள்ளேயே ஆட்கள் இருக்கிறார்களாம். மேலும் ஒன்றிரண்டு பெண்கள் அடிக்கடி வந்து வாங்கிக் கொண்டு போறவையாம். அவன் சொன்ன அமைப்புகளை வைத்து கணனியில் ஸ்கெட்ச் போட்டு பார்த்ததில், நீயே பார் என்று போனை செட் பண்ணி காட்டுகிறான், அது காஞ்சனாவுடன் நன்றாக ஒத்து போகின்றது. அப்போது ஆரவ்வின் காலில் ஏதோ சுனைக்க செருப்பை கழட்டி பார்க்கிறான். அதைப்பார்த்த ரவீந்திரன் டேய்  அது காஞ்சூண்டி இலையடா பட்ட இடமெல்லாம் தடித்து போய் எரியும், இங்கால வந்து நில் என்கிறான்.

                       ரவீந்திரனும் ஆரவ்வும் காவல் நிலையத்துக்கு வந்து மோட்டார் சைக்கிளை பின்னால் விட்டுவிட்டு பின் கதவால் உள்ளே வருகின்றார்கள்.வழியில் கிடந்த ஒரு ஆட்டுக்கல்லு காலில் தடக்குப்பட இது வேற எப்போதும் காலில அடிக்குது, முதலில் இதுக்கு ஒரு வழி பண்ணனும் என்று சலித்து கொண்டே ரவீந்திரன் உள்ளே வருகிறான். அங்கு கைதிகளின் அறையில் அந்த கஞ்சா குற்றவாளி மூக்கில் இருந்து குருதி ஒழுக  குந்தி இருக்கிறான்.
இவனா அவன் என்று ஆரவ் கேட்க , ஓம் என்று சொல்லிக்கொண்டே தனது அறைக்கு வந்து அலுமாரியைத் திறந்து பொலித்தின் பையால் நேர்த்தியாக மூடப்பட்ட இரு பெட்டிகளை எடுத்து மேசையில் போடுகிறான். அதில் ஒன்று உடைத்திருக்க அதனுள் இருந்த கஞ்சா இலைகளை கையில் எடுத்து பார்த்த ஆரவ் மச்சான் இது அப்போது என் காலில் சுனைத்து கடித்த காஞ்சூண்டி இலைபோல் இருக்குடா. ரவீந்திரனும் பார்த்துவிட்டு ஓமடா அதுபோல்தான் இருக்கு.

                                மச்சான் இவளவையை மாட்ட ஒரு ஐடியா..... என்னடா,  இனி திங்கள், திங்கள் போயா செவ்வாய்  கிழமைதான் இவனை கோட்டுக்கு கொண்டு போக முடியும் இல்லையா.....!
 ஓம் அதுக்கென்ன .......!
 இந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களுக்குள் அந்தச் சனியன்கள் ரெண்டும் அவனிடம் கஞ்சா வாங்க வருவினம். சரியா.....!
 ஓம் சில சமயம் வரலாம்.......!
 இப்ப நாங்கள் இந்த பெட்டிக்குள் இருக்கும் கஞ்சாவை எடுத்துப்போட்டு இதற்குள் காஞ்சூண்டி இலையை வைத்து எப்படியாவது பெட்டியை மாற்றி எடுத்து கொண்டு வர வேண்டும். என்ன சொல்லுறாய்.......!
 ரவீந்திரனுக்கும் அது நல்ல யோசனையாய் படுகுது. அண்டைக்கு என்னை ஏமாத்துனனியா இருடி மவளே வாறன்.உனக்கு இருக்குடி, மனதுக்குள் கறுவிக்கொண்டு  உடனே அதை செயல்படுத்த ஆரியகுளத்தடிக்கு ஓடுகிறார்கள்.அவர்களை காய்ஞ்ச காஞ்சூண்டி இலைகள் காற்றில் அசைந்து வரவேற்கின்றன.......!
                  

     🌱.............. வளரும் .....!

 • Like 9

Share this post


Link to post
Share on other sites

அட்டகாசம் சுவியண்ணா...தொடருங்கள் 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு நகைச் சுவை கதை சுவி. இதற்கு எடுத்த கரு... மிக அருமை. 
எந்தக்  கோணத்தில், கதையை... நகர்த்தினாலும், சிரிப்புக்கு பஞ்சம் இராது என்பது திண்ணம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

🥀................... (5).

                                              


அன்று அதி காலையிலேயே எழுந்த காஞ்சனா தன்னை அலங்கரித்து கொண்டு கண்ணாடியில் இருந்து ஒப்பனை செய்கிறாள். பச்சை பஞ்சாபியும் சிகப்பில் சால்லும் போட்டுக்கொண்டு உதட்டுக்கு லைட்டாக லிப்ஸ்டிக் பூசி இரண்டு  காதிலும்  இரண்டு குருவி ஊஞ்சலாடும் அளவு பெரிய வளையம் போட்டு,ஹார்ட் டாலரோடு மெல்லிய செயின் கழுத்தில், மிகக் கவனமாக அந்த சால் செழுமையான மார்பை மறைத்தும்  மறைக்காமல் இருக்குமாறு ஒதுக்கி விட்டு கொண்டாள். அதனால் செயினில் தொங்கிய டாலர் சுதந்திரமாக மார்புகளின் இடைகளுக்குள் அங்கும் இங்குமாய் ஊசலாடிக் கொண்டிருக்குது. சிறிது நேரம் தன்னை மறந்து தன்னை ரசித்தவள் மரியாவின் குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

                   இன்று நீ ரெம்ப அழகாய் இருக்கிறாயடி காஞ்சனா என்று சிலாகித்த மரியா சாமான் கொஞ்சம் தான் இருக்கு நீ போய் வாங்கிக் கொண்டு கெதியா வாரியா, நான் இதை கொண்டு போய் விக்கிறன் என்கிறாள்....சரி என்டதும் மரியா படலையால் வெளியேறுகிறாள். காஞ்சனாவும் போவதற்கு தயாராய் ஹைஹீல்ஸ் எடுத்தவள், வேண்டாம் சிலநேரம் ஓடவேண்டி வந்தால் ஹீல்ஸ் இடைஞ்சல் என நினைத்து வேறு ஒரு குதிகாலையும் சேர்த்து கொலுவும் வார் உள்ள ஒரு  சாண்டில்சை அணிந்து தோளில் கொலுவும் பையையும் எடுத்துக் கொண்டு புறப்படும் போது எனை ஆச்சி இந்த படலையை வந்து கொலுவனை மத்தியானம் கடையில் சாப்பாடு எடுத்து கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போகிறாள். காய்ந்த ஆடைகளை கைகளால் அழுத்தி நீவி நீவி மடித்து வைத்து கொண்டிருந்த கிழவியும், முன்னதாக தடி எழுந்து நிக்க அதை பிடித்துக் கொண்டு  எழுந்து வருகிறாள்.....!

                              வைமன் வீதியடியில் பொதுமக்களின் உதவியுடன் மார்க்கண்டு ஒரு திருடனைப் பிடித்து வைத்துக்கொண்டு கனகுவுக்கு போன் செய்கிறார். கனகு நீ  எங்க நிக்கிறாய்.....!
அண்ணை நான் படத்துக்கு போய்க் கொண்டுக்கிறன்.....!
அது கிடக்கட்டும் கெதியா இஞ்ச  வைமன் ரோட்டுக்கு வா, நான் ஒரு நகைக் கள்ளனைப் பிடித்திருக்கிறன்....!
ஏன் அண்ணை ஸ்டேசனுக்கு  அறிவித்தால் ஜீப் அனுப்புவினம் அல்லது ரவீந்திரனுக்கு சொல்லுங்கோவன்....!
ஓம் ...உது ஒண்டும் எனக்கு தெரியாது பார்..... சும்மா விசர்க்கதை கதைக்காமல் கெதியா வா .......!
சற்று நேரத்தில் கனகு மோட்டர் சைக்கிளில் வந்திறங்குகிறான்.....!

               அவனை கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு போன மார்க்கண்டு அவனிடம், வடிவாய் கேள் கனகு. இந்தக் கேஸைப் பொறுத்தவரையில் நீதான் பிடித்திருக்கிறாய்.....!
ஏன் அண்ணை நீங்கள்தானே பிடித்தனீங்கள்......!
ஓமடா ... ஆனால் எனக்கு ஏற்கனவே நிறைய ரெட் மார்க் இருக்கு.இனி நான் எதை பிடித்தும் எதுவும் ஆகப்போறதில்லை.ஒய்வு காலமும் நெருங்கிட்டுது.நல்ல காலம் சம்பள உயர்வு கிடைச்சிட்டுது. உனக்கு அப்படியில்லை.நல்ல எதிர்காலம் இருக்கு என்று அண்டைக்கு மகேசன் சொன்னதை கேட்டனிதானே, இதை நீயே டீல் பண்ணு. கொஞ்ச நாளாய் பார்க்கிறன் ரவீந்திரனும் எங்களை ஓரங் கட்டுற மாதிரித் தெரியுது. 
சரி அண்ணை.மிகவும் நண்றியன்னை......!


                 கனகுவும் தாமதிக்காமல் ஸ்டேசனுக்கு போன் செய்ய எழுத்தர் பத்மா எடுக்கிறாள்.அவளிடம் விடயத்தை சொல்ல...... அவளும் அங்கிருந்து ஜீப்பை அனுப்புகிறாள்.இருவருமாக திருடனை ஜீப்பில் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருகின்றார்கள். ஜீப்பை செட்டில் விட்டு விட்டு பின் கதவால் வர திருடனின் காலில் ஆட்டுக்கல்லு இடித்து போட்டுது. குனிந்து ஆட்டுக்கல்லை பார்த்தவன் "அட இது இன்னுமா இங்கே கிடக்குது" என்கிறான்.உடனே கனகு அவனிடம்  இதைப்பற்றி உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்க என்ன ஐயா இப்படி கேட்கிறீங்கள், இதை அந்த சீட்டுக்காரியிடம் இருந்து களவெடுத்ததே நான்தானே. பிறகு மார்கண்டுவை பார்த்தவாறே அய்யாதான் இதை கேசுல போட மறந்திட்டார்..... மார்க்கண்டுவும் இருடா நாயே, நகைத்திருட்டுடன் சேர்த்து இதையும் போட்டு விடுறன். பின்பு பத்மாவும் அவனிடம் குற்றங்களை பதிவு செய்து மறக்காமல் ஆட்டுக்கல்லையும் சேர்த்து விட்டு  நகைகளை பொறுப்பெடுத்து கொண்டு அவனை கஞ்சா விக்கிறவன் இருக்கும் அறையில் விட்டு பூட்டிவிட்டு,  செவ்வாய்  கிழமை இவர்களை கோர்ட்டில் சமூகமளிப்பதற்கான அறிக்கைகளைத் தயார் செய்ய போகிறாள்.....!
 

   🌱..............வளரும்......!

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

இந்தியா சுதந்திரமடைவற்குச் சற்று முன்னான காலப்பகுதியில் வெளியான 'துப்பறியும் சாம்பு' எனும் நாவலைத் தழுவிய வை.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத் தொடரொன்றைப் பார்த்திருக்கிறேன். அது போல் நாடகங்கள் தற்போது ஏன் வெளிவருதில்லை என்றும் யோசித்திருக்கிறேன்.

உங்கள் தொடரை வாசிக்கையில் அந்த நாடகம் பார்த்த உணர்வு மீண்டும் கிடைக்கிறது. தொடருங்கள், நாமும் இணைந்திருக்கிறோம். 😊

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுவியர் தொடர் சூப்பர் தொட‌ருங்கள் .....வாசிக்க வாசிக்க சிரிப்புதான் வருகின்றது

Share this post


Link to post
Share on other sites

 

        🥀......................(6).                    


                                                
                     மிக ரகசியமாக இரண்டு பெட்டி கஞ்சாவை வாங்கிக்கொண்டு வீதியோரமாக எல்லாப் பக்கமும் கவனித்தபடி காஞ்சனா வந்து கொண்டிருக்கிறாள்.யாரோ தன்னைத் தொடர்வதுபோல் உள்ளுணர்வு சொல்ல எதிர்பாராமல் சரேலென திரும்பிப் பார்க்கிறாள். தூரத்தே ஒருத்தன் அபிநந்தன் மீசையுடன் வேறெங்கோ பராக்கு பார்த்ததுபோல் நிக்கிறான். என்றாலும் அவனது மிடுக்கான தோரணையும் தலைமுடி வெட்டும் அவன் ஒரு போலீஸ் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரமாகவில்லை.சிறிது நேரம் எங்காவது ஒளிக்க வேண்டும் என நினைத்து வரும்பொழுது அருகே திறந்திருந்த கேட்டுக்குள் சரேலென புகுந்து வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிக்கிறாள்,

 வீட்டிற்குள் இருந்து அம்மா ,கடவுளே என்று யாரோ முனகும் சத்தமும் எட மூர்த்தி எங்கடா போய்த்தொலைஞ்சா என்று யாரையோ அழைக்கும் குரலும் கேட்க, சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு ஹால் கதவைத் திறந்து உள்ளே பார்க்கிறாள்.அங்கே ஒரு பெரியவர் செற்றியில் படுத்தபடி கையால் தொடையை அழுத்திப் பிடித்தபடி அனுங்கிக் கொண்டு இருக்கிறார்.இவளும் பார்க்க அவரும் இவளைப் பார்த்து விட்டார்.
யாரம்மா நீ , இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இது யாருடைய வீடு தெரியுமா என்று கேட்கிறார்.
காஞ்சனாவும் தெரியாது ஐயா, வீதியால் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.இந்த வீட்டில் இருந்து யாரோ குளறுற சத்தம் கேட்டுது, அதுதான் என்னவென்று பார்க்க வந்தேன்......!
நான் குளறின சத்தம் அங்க வரையும் கேட்டுதா.....!
ஓம் ஐயா ......!
வெளியே காவல்காரன் யாரும் இல்லையா....!
இல்லை ஐயா....உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுங்கள், இல்லையென்றால் நான் போகிறேன்.
அதொன்றுமில்லையம்மா தொடையில் ஒரு கட்டு வலி உயிர் போகுது....!
நான் கொஞ்சம் பார்க்கலாமா என்றவள் அவர் பதிலுக்கு காத்திராமல் சாறத்தை சற்று விலக்கி பார்க்கிறாள்.கட்டு முகம் வைத்திருக்கு, இன்றோ நாளையோ உடைந்து விடும் நிலை.குசினி எங்கே என்று அவள் கேட்க அவர் கையால் காட்டுகிறார். உள்ளேபோனவள் சிறிது கஞ்சாவை எடுத்து தண்ணி விட்டு நல்லா மசித்துவிட்டு கொண்டுவந்து தொடையில் இருந்த கட்டின் மேல் அப்பிவிட்டு கட்டுக்கு கட்டு போடுவதற்காக தனது சாலை கிழிக்க முற்பட அவர் தடுத்து அங்கே பழைய துணி இருக்கும் அதனாலே கட்டிவிடு என்கிறார்.உடனே காஞ்சனாவும் இல்லை ஐயா அதை வாசகர்கள் ஏற்க மாட்டார்கள்.காலம் காலமாய் இந்த சிற்றுவேசன் இப்படித்தான் இருக்கு.நானும் அந்த மரபை மீறக்கூடாது என்று சொல்லி சாலை சரேலெனக் கிழித்து சர்ர்ர்ர் என்று கட்டி விட சுர்ர்ர் என்று வலி சிரசில அடிக்குது.....!.

                   கை கழுவி விட்டு வந்து இப்போ எப்படி ஐயா இருக்கு என்று கேட்க சும்மா சுர் என்று இருக்கு,வலியும் குறையிறமாதிரி தெரியுது. என்ன வச்சு கட்டினனி ஏதோ பச்சிலை போல இருந்தது......!
இது ஒரு மூலிகை ஐயா கேரளாவில் இருந்து வருகுது.இன்று இரவுக்குள் கட்டு உடைச்சு தண்ணி வெளியேறிடும் ........!
ஓமோம் நானும் கேள்விப்பட்டனான். எங்கட பழைய ப்ரைம் மினிஸ்ட்டர்ஸ் எல்லாம் அங்கை போய் வைத்தியம் செய்திருக்கினம். இந்த மூலிகைக்கு என்ன பெயர்.....!
 தேவையில்லாமல் உளறி கொட்டக் கூடாது என நினைத்து, இது சிவமூலிகை ஐயா.காசியில் ரெம்ப பிரசித்தம்....பேச்சை மாற்ற விரும்பி  இன்னும் வலிக்குது போல இருக்கு என்கிறாள்.....!
ம்....கொஞ்சம்.....!
உடனே பையில் இருந்து ரெண்டு கஞ்சா வைத்த சிகரட்டை  எடுத்து குடுக்கிறாள். இதைப் பிடியுங்கள் ஐயா வலி தெரியாது......!
நோ ....நோ நான் புகைப்பதில்லை.ஆனால் மது குடிப்பன். அதை டீப்போவில் வை, என் வைஃப்  கிளாரிடா புகைப்பாள்.....!
எங்கே அவர்.....!
வெளியே போயிட்டாள் இப்ப வந்திடுவாள். நானும் அவளும் படிக்கும்போது காதலித்து மணந்து கொண்டோம். சரி...சரி உனக்கு நான் கட்டாயம்  பணம் தர வேண்டும் எவ்வளவு என்று சொல்லு.....!
என்ன ஒரு இரண்டாயிரத்து ஐநூறு தாருங்கள் ஐயா.....!
பர்ஸில் பணத்தை எடுத்துக் கொண்டே இந்த மூலிகை அவ்வளவு காசா என்று கேட்கிறார்......!
மூலிகை ஐநூறுதான் ஐயா, பஞ்சாபிதான் இரண்டாயிரம் என்று சொல்லிக்கொண்டே வெளியே போகிறாள்....! 
                      

                            கனநேரமாய் காத்து நின்ற அந்த உளவாளி ரவீந்திரனுக்கு போன்போட்டு காஞ்சனா கஞ்சா வாங்கிக் கொண்டு வந்ததையும் பின் அவள் பெரிய அதிகாரி மகேசன் வீட்டுக்குள் நுழைந்ததையும் சொல்கிறான். ரவீந்திரனும் அவனிடம் இனி நீ அங்கு நிக்க வேண்டாம் வந்து விடு என்று சொல்லி விட்டு, மகேசனுக்கும் கஞ்சா வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறான்.....! 

🌱..............வளரும்....!

 • Like 4

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

இது சிவமூலிகை ஐயா.காசியில் ரெம்ப பிரசித்தம்....பேச்சை மாற்ற விரும்பி  இன்னும் வலிக்குது போல இருக்கு என்கிறாள்.....!

கஞ்சா காசிவரை போட்டுதா?

Share this post


Link to post
Share on other sites

சு வியரின்  கஞ்சா  காஞ்சனா  ...நீர்  வீழ்ச்சி  மாதிரி   ...வேகமாய் இருக்கிறது . தொடருங்கோ 😀

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 3/11/2019 at 8:29 AM, suvy said:

🥀..............(3)

                   ஆரியகுளம் தாண்டி கந்தர்மடம் சந்திக்கு அருகாக காஞ்சனாவும் மரியாவும் இறங்கி கொள்கிறார்கள், அங்கிருந்து அரசடி வீதியில்உள்ள காஞ்சனாவின்  வீட்டிக்குள் செல்கின்றனர், அந்த வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி மரியாவின் வீடு இருக்கு, பின் வளவால் போய் வரலாம், 
மரியா நீ இந்த கறிகளை கழுவி சமை, நான் இதை  அம்மாவிடம் குடுத்து விட்டு வருகிறேன்,
இஞ்ச கொண்டா அதையும் கழுவித் தாறன், பையை குடுத்திட்டு காஞ்சனா தேனிர் போட உள்ளே போகிறாள், 
-----------

பஸ்ஸில் இருந்து அவர்களின் பின்னால் இறங்கிய ஆரவ் சிறிது இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்கின்றான். ஒவ்வொரு வீடாக மதிலால் எட்டி எட்டி பார்த்து வந்து கொண்டிருந்த ஆரவ் , இந்த சந்தியால்தானே திரும்பினவர்கள்.அதுக்கிடையில் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்து ஒரு தகர வேலியின் கீழால் பார்க்கையில் முற்றத்தில் ஒரு பெண் கறி சட்டியோடும் ரெட்  ஜட்டியோடும் கலவாய் மீன் கழுவிக்கொண்டிருக்கிறாள். ஆளரவம் கேட்டு ஜிம்மியும் ஆக்ரோஷத்துடன் குரைத்துக்கொண்டு  வேலியடிக்கு பாய்ந்து வருகின்றது.

சுவியரின் கதையில், நம்ம ஏரியாவும் வந்தது மிக மகிழ்ச்சி. :102_point_up_2:
ஆரவ்... தகர வேலிக்கு  கீழால் பார்க்கும் போது... 
தெரிந்தவற்றை வர்ணித்த விதம் அழகோ... அழகு. :grin:
மரியா... ஜட்டி போட்டிருந்த படியால், ஆரவ்....  மயக்கம் வராமல் தப்பினார். 😝

கஞ்சா வேட்டைக்கு போய்... காஞ்சோண்டி  இலைகளை புடுங்கிக் கொண்டு வந்தால், 
பதவி உயர்வு எப்படி கிடைக்கும்?   🤣

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

            🥀................(7).                


               பேருந்தில் சென்று மரியாவிடம் ஒரு பெட்டி கஞ்சாவைக் குடுத்து விட்டு கடையில் சாப்பாடு கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து மற்றப்பெட்டி கஞ்சாவை அறைக்குள் இருக்கும் வேலை செய்யாத ப்ரிட்ஜ் க்குள் (அது தெருவில் கிடந்து எடுத்தது) வைத்து விட்டு  ஆச்சியுடன் சேர்ந்து சாப்பிடுகிறாள். பின்பு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு தகப்பன் வீட்டுக்கு போகும் பொழுது மழை தூறிக்கொண்டிருக்கு.அங்கிருந்து வர இரவாகி விட்டது. வழியில் பேய் மழை பிடித்து கொண்டது.ஓடி வரும்பொழுது ஒருத்தன் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வருவதை காண்கிறாள்.கிட்டவா வந்து பார்த்தால் அது ரவீந்திரன்.

என்ன சார் சைக்கிள் பழுதடைந்து விட்டதா.....!
ஓம் ....ஓடிக்கொண்டு வந்தாற்போல எஞ்ஜினில் தண்ணி விழுந்து நின்று விட்டது.....!
தண்ணி என்றால் எப்பவுமே தகராறுதான் சேர்..... இந்த நேரத்தில் எப்படி போவிங்கள்.....!
அதைத்தான் நானும் யோசித்து கொண்டு வாறன்......!
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், பக்கத்தில்தான் என்ர வீடு இருக்கு அங்கு சைக்கிளை விட்டுட்டு நாளைக்கு வந்து எடுக்கலாம் சேர்.....! அவன் தயக்கத்தைப் பார்த்து விட்டு நாங்கள் ஒண்டும் உங்கட சைக்கிளை களவெடுக்க மாட்டம் சேர்.......!
ஓமோம் களவெடுக்க மாட்டீங்கள் கஞ்சா மட்டும்தான் விற்பீங்களாக்கும்......!
அதை விடுங்க சேர்..... விரும்பினா வாங்கோ, அப்புறம் உங்க இஷ்டம் என்று விட்டு படலையை திறந்து பிடிக்க அவன் சைக்கிளுடன் உள்ளே வந்து தாழ்வாரத்தில் ஸ்ராண்ட் போட்டு நிறுத்துகிறான். உள்ளிருந்து ஒரு மடக்கு கதிரையை எடுத்து வந்து திண்ணையில் போட்டு அவனை இருக்க சொல்லிவிட்டு அவள் துவாய்,சட்டையுடன் கிணற்றடிக்கு போகிறாள். அப்போதுதான் பெட்டிக்குள் கஞ்சா இருப்பது நினைவுக்கு வர நெஞ்சு படக் படக் என்று அடிக்குது. சற்று தள்ளி திண்ணையில் பாயில் கிழவியும்  நாயும் பூனையும் படுத்திருக்கிறார்கள்.

              இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல் கிழவியை பார்க்க அது குறட்டை விட்டு நித்திரையாய் கிடக்கு.மெதுவாய் எழுந்து உள்ளே போனவன் சுற்று முற்றும் பார்த்து, சிரமமில்லாமல் ப்ரிட்ஜை திறந்து பார்க்க அந்த கஞ்சா பெட்டி ஒன்று புதுசாய் அங்கே இருக்கு.உடனே அதை எடுத்து வந்து தனது சைக்கிளின் பெட்டிக்குள் வைத்து விட்டு அதில் இருந்த காஞ்சூண்டி பெட்டியை கொண்டுவந்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு மீண்டும் வந்து கதிரையில் இருக்கிறான்.காஞ்சனாவும் பாத்ரூமால் வர மழையும் வலுவாக பிடித்துக் கொண்டது. இந்த மழைக்குள்ள இனி எங்க போகப்போறியள் அப்பாவின் சாரம் சேட் இருக்கு மாத்திக்கொண்டு வெள்ளனவாய் எழுந்து போங்கோ என்கிறாள்.அவன் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஒரு துவாயும் ஆடைகளையும் எடுத்துவந்து  அவனிடம் குடுக்க அவனும் கிணத்தடி பாத்ரூமுக்கு  போகிறான். 

              உடனே வேகமாய் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் மரியாவிடம் குடுத்து இந்தாடி எல்லாத்தையும் வடிவா  பொட்டலம் கட்டி வை நாளைக்கு சந்திப்பம் என்று சொல்லிவிட்டு ஓடிவந்து விறகெடுத்து  அடுப்பு மூட்டி  தேத்தண்ணி வைக்கிறாள். விறகுடன் காலையில் பிடுங்கிய கஞ்சா செடியும் சேர்ந்து எரிகிறது.  பின்பு அவன் படுப்பதற்கு கட்டிலில் பெட்சீட் தலைகாணி எல்லாம் மாற்றி விட்டு வர அவனும் வருகிறான். அவனுக்கு சாப்பிட பிஸ்கட்டும் தேநீரும் கொடுக்கிறாள்.வெளியே மழை பெய்வதால் புகை வீட்டுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கு. ரவீந்திரனுக்கும் துக்கம் கண்களைச் செருக போய் கட்டிலில் படுத்து கொள்கிறான். அவளும் நீலநிற நைட் லாம்பை பொருத்தி விட்டு அடுப்படிக்கு அருகில் படுத்து கொள்கிறாள்...........!


                                  
                 எலியை பிடிக்க விட்டத்தில் பாய்ந்த பூனை தவறி அவன்மேல் விழுந்து எழுந்து தரையில் படுத்திருக்கும் காஞ்சனா மேலாலும் பய்ந்து ஓடுகிறது. திடுக்குற்று விழித்தவன் எழுந்து வெளியே சென்றுவிட்டு வந்து படுக்கிறான். துக்கம் கெட்டு போச்சு.நித்திரை வரவில்லை. தலையில் ஒருவித கிறுகிறுப்பும் உடம்பில் உசாருமாய் கிடக்கு. திரும்பி பார்க்க நீலவர்ண வெளிச்சத்தில் வானில் இருந்து வந்திறங்கிய தேவதைபோல் காஞ்சனா படுத்திருக்கிறாள். ஒருகால் மடித்து மறுகால் நீட்டி இடையாடை நெகிழ இளம் நெஞ்சம் விம்மி விம்மி தனிய ஒருகையை தலைக்கு வைத்து மறு கையை மார்போடணைத்து உறங்குகிறாள். உறக்கத்திலும் இதழ்களில் குறுநகை தவழ்கின்றது.பார்த்ததும் எதுவுமில்லை, பார்க்க பார்க்க மோகம் எனும் மொட்டு காமமாய் மலர்கின்றது. தான் தனது பதவி கௌரவம் எல்லாம் கவிழ்ந்து போக கால்கள் அவள் அருகில் சென்று மண்டியிடுகின்றது. அவள் சற்றே  அசைய மண்டியிட்ட கால்களில் சரிந்து இழைந்து தஞ்சமடைகிறது பின்னழகு.

                       காஞ்சனா எனக்குத் தெரியும் நீ விழித்திருக்கிறாய் என்று. ஏதோ எனக்கு இப்பொழுது நீ வேணும் போல் இருக்கிறது.நான் இப்படி எங்கும் எப்போதும் எவரிடமும் நடந்து கொண்டதில்லை. இன்று ஏனோ தெரியவில்லை. உனக்கும் இஷ்டமென்றால் சொல்லு நான் இங்கிருக்கிறேன்.இல்லையெனில் நான் இப்பொழுதே வெளியே போய் விடுகிறேன் என்கிறான்.கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து எவ்வித சலனமுமில்லை. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு எறிந்து கொண்டு சரி .....நீ  இதை மனசில் வைச்சிருக்காதே நான் வருகிறேன் என்று எழுகிறான். அப்பொழுது அவளின் கை  அவனது காலைப் பற்றுகிறது. அவள் உடலிலும் அதே கிறக்கம். அப்படியே சரிந்து அவளுடன் சரிக்கு சரியாக படுத்து அந்தப் பொன்மேனியை தன் பக்கமாக திருப்பிக் கொள்கிறான். முத்தங்கள் சத்தமுடன் தெறிக்கின்றன. கைகள் இறுக கால்கள் பின்னிக் கொள்கின்றன.

             டொக் டொக் என்ற சத்தத்துடன் கதவு தட்டிக்கொண்டு கிழவி தடுமாறிக் கொண்டு வருகுது. எடி புள்ள வெளிய ஒரே குளிராய் கிடக்கென நான் உள்ள வந்து படுக்கப் போறன்,என்ர பாயையும் தலைகாணியையும் ஒருக்கா எடுத்துத் தானை என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்த கிழவி காலில இவையள் தடக்குப்பட நாயென்று நினைத்து இதென்ன இந்த சனியன் பிடிச்ச நாய்  உள்ள வந்து படுத்துக் கிடக்கு என்று கையில் இருந்த தடியால் விசுக் விசுக் என்று சாம்பல் அடி. திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இருவரும் மூச்சு காட்டவில்லை. கண் மண் தெரியவில்லை. அவன் மெதுவாக கிழவியின் கால்களுக்கிடையால் ஊர்ந்து போய் கட்டிலில் ஏறிக் கொண்டான். அவளிலும் ரெண்டு அடி  விழுந்துட்டுது. பிறகும் கிழவி தடியை ஓங்க அவள் மறித்து எனை அது நானெனை, சும்மா போட்டு அடிக்கிறாய் என்கிறாள். எடி இவ்வளவு அடி அடிக்கவும் ஒரு சத்தஞ் சளார் இல்லை, வாயில என்ன கொழுக்கட்டையே வைத்திருந்தனி..... ஓமனை சும்மா அலட்டாத தள்ளனை  என்று எழுந்து போய் திண்ணையில் இருந்த பாயை எடுக்க அதில் படுத்திருந்த நாய் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு அப்பால் போகிறது.

                 நேரம் மூன்று மூன்றரை இருக்கும். அவனைப் பார்க்கிறாள் அவனும் பார்க்கிறான் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது. ஒரு தேனீர் போடவா என்று அவனைக் கேட்கிறாள். ம்....என்கிறான்.அவள் வந்து அடுப்பை மூட்டும்போது விறகுடன் கஞ்சா செடிகளும் கலந்திருப்பதை காண்கிறாள்.அந்த எருமைதான் இதில போட்டிருக்கு என்று மரியாவை திட்டிக்கொண்டு அவற்றை விலக்கி பத்த வைக்கிறாள். அவனிலும் பிழையில்லை, இந்த புகைதான் அந்தளவு கிறக்கத்தை இருவருக்கும் ஏற்படுத்தி இருக்கு. எனக்கும் கூட ஒரு மாதிரித்தான் இருந்தது. பாவம் எனக்கு விழுந்த இரண்டடியே இவ்வளவு வலித்தால், கும்பத்தில் இருந்து குதிகால்வரை வாங்கியவருக்கு எப்படி வலிக்கும். தேனீரை அவனிடத்தில் தந்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்து ப்ரிட்ஜில் சாய்ந்து கொள்கிறாள்.

                    
    என்ன ப்ரிட்ஜ் எல்லாம் வைத்திருக்கிறாய் நல்ல வருமானம் போலிருக்கு என்கிறான்.....!
அது பழுதானது,தெருவில் கிடந்தது. எடுத்து துடைத்து வைத்திருக்கிறேன்.சாமான் சட்டுகள், காய்கறிகள் வைப்பதற்கு.......!
ம்.... கஞ்சாவும் வைக்கலாம் என்று சொல்லு....அவன்.....!
சே ....சே .....அப்படி ஒன்றும் இல்லை....அவள்.....!
நான் நம்பமாட்டன், எனக்கு தெரியும்  நீ பொய் சொல்கிறாய்...அவன்.....!
நான் ஏன் பொய் சொல்லணும், வேணுமெண்டால் திறந்து காட்டுறேன்,இருந்தால் தேடி எடுத்துக்கொள் என்று சொல்லி அரக்கி இருக்கிறாள்.......!
சரி.....சரி.....கோவிக்காத, நான் அப்பவே தேடிப் பார்த்திட்டன்.....!
எடுத்தியா ஏதாவது.......!
ம்கூம் ......இருந்தது எடுக்க முடியல்ல .....அவன்.....!
எடுத்திருப்பாய் அதற்குள் அடி விழுந்திட்டுதாக்கும். என்று சொல்லி சிரித்துக்கொண்டே பேணிகளை எடுத்துக்கொண்டு போகிறாள்.......!
                             

   🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும்.....!

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கீழடி பொருட்களை ஆய்வு செய்ய மேலும் 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம்..! கீழடி பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கீழடி பொருட்கள் குறித்த ஆய்வுகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் நாளை (19-02-2020) கீழடியில் 6வது அகழாய்வு பணியையும் தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அன்சியண்ட் டிஎன்ஏ (Ancient DNA) ஆராய்ச்சி குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ள நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம், பூனே டெகான் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தயார் நிலையில் இருப்பதாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மானஸா என்ற ஆராய்ச்சியாளர் கீழடியில் கிடைக்கப்பெற்ற அன்சியண்ட் DNA தொல்லியல் பொருளை பூனேவில் உள்ள டெக்கான் ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதனுடைய முடிவுகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ரூசா அமைப்பின் சார்பில் ரூ. 34 கோடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் ரூ. 2 அல்லது 3 கோடி கீழடி அகழ்வாராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். இந்த வருடம் மார்ச் மாதம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கும் எனவும், அதற்காக 20,000 சதுர அடி கொண்ட பிரத்தியேக கட்டிடம் ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட தயாராக உள்ளதாகவும் துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார். https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/18/2/2020/three-more-foreign-universities-showed-interest-test?fbclid=IwAR2FzFJprHzbS6Mr98I1cWZKFYQKeT18-RGOUKBShm0MGZ7hELupB9NZZM8
  • எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்  இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார்  கூறுகையில், "வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார். https://tamil.asianetnews.com/india/seat-reserved-for-lord-siva--q5w1bz
  • ஆனால், அன்று எம்மவர்கள் படுகொலைகளை நிறுத்த ஒரு பெருந்தெருவை மறித்த பொழுது, சட்டம் வேகமாக பலமாக பாய்ந்தது.
  • இலங்கையில் மீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி படத்தின் காப்புரிமை Getty Images ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த புதிய கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்தர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் 9 கட்சிகள் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.   படத்தின் காப்புரிமை Sajith/ Twitter ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். யானை அல்லது அன்னம் சின்னத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தாம் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் செயற்பட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது. எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இதயம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். எனினும், அந்த சின்னத்திற்கு மற்றுமொரு கட்சி உரிமை கோரியுள்ளது. தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே இதயம் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-51542383