suvy

கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்

Recommended Posts

 

      🥀...............(8).                    

 

வீதியில் இரண்டொரு வாகனங்களின் இரைச்சலும் ஆட்கள் நடமாட்டமும் தெரிகிறது.கருக்கல் பொழுது, ரவீந்திரனும் எழுந்து கொடியில் உலர போட்டிருந்த ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு வந்து சைக்கிளை தள்ளிக்கொண்டுவர காஞ்சனா படலைக்கு அருகில் நிக்கிறாள். சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு விட்டு அவளருகே வந்தவன் மென்மையாய் அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொள்கிறான்.அவளும் விலகவில்லை விலகத் தோணவில்லை. காஞ்சனா... ம்......நீ இனிமேல் உந்த வியாபாரத்தை விடு.நான் உனக்கு வேறு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.என்று சொல்லி விலகியவனை அவள் இழுத்தணைத்து இதழுடன் இதழ் சேர்த்து ஒரு நீண்ட முத்தம் தருகிறாள். பின்பு ரவீந்திரன் சைக்கிளை தள்ளிகொண்டுவந்து சந்தியைக் கடந்து கழட்டி விட்ட ப்ளக் வயரை மீண்டும் கொழுவி ஸ்ராட் பண்ணிக்கொண்டு தனது அறைக்கு வருகிறான். விசில் அடித்து கொண்டே அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டியைத் திறந்து கஞ்சா பெட்டியைத் தேடினால் அது அங்கு காணோம்.

 

அது ஒரு அழகான கனவு. சிறிய கிளைடர் விமானத்தில் ஆகாயத்தில் பறக்கிறன்.அவனுடன் பூனை கண்களுடன் ஒரு தேவதை அருகில் இருக்கிறாள். அப்போது யாரோ கதவை இடிக்கும் ஓசை. ஆரவ் , டேய் ஆரவ் எழும்புடா.... பறக்கும் விமானத்தை நிறுத்த முடியவில்லை. பாரசூட்டை கொழுவிக் கொண்டு கீழே குதிக்கிறான். அந்த பாராசூட் அழகான ரெட் ஜட்டி போல் குடையாய் விரிகிறது.பொத் என்று தரையில் விழுகிறான் . அட சீ ...கனவு என்று கட்டிலை பிடித்து எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். அவனைத் தள்ளிக்கொண்டு ரவீந்திரன் உள்ளே வருகிறான்.என்னடா இந்த நேரத்தில தூங்கவிடாமல்.....!

என்ன கனவு கண்டுகொண்டு இருந்தாயாக்கும், பகற்கனவு பலிக்காது தெரியுமா.....!

அது கிடக்கட்டும் நீ வந்த விடயத்தை சொல்லு.....!

நேற்று மாலையில் இருந்து நடந்தவைகளை தேவையான இடங்களில் தணிக்கை செய்து சொல்லுகிறான். அடி விழுந்ததையும் அவளை அணைத்ததையும் சொல்லவில்லை. எனக்கு நல்லாத் தெரியுமடா அவள்தான் எடுத்திருக்கிறாள்.....!

எப்படிச் சொல்லுகிறாய்......ஆரவ்....!

அவள் கிணத்தடியில் இருக்கும்போது நான் பெட்டியை மாற்றி விட்டேன். அதுபோல் நான் கிணற்றடியில் இருக்கும் போது அவள் எடுத்து விட்டாள் கள்ளி.....!

இப்ப நான் என்ன செய்யணும் சொல்லு......ஆரவ்.....!

கொஞ்சமும் தாமதிக்க கூடாது. என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது நீ உடனே கிளம்பிப் போய் அந்தப் பெட்டியை கைபற்றிக் கொண்டு வரவேணும். அவளவை அதை இடமாற்ற முதல்......எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலியாய் கிடக்கு. நான் உன் அறையில் படுத்து கொள்கிறேன் என்று சொல்லி ரவீந்திரன் போய் படுக்க, ஆரவ் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே போகிறான்.

 

தன் விட்டு முன் விறாந்தையில் அரைப் பாவாடை கட்டி அங்கம் புழுதிபட அகலக் கால் பரப்பி நடுவே ஈழநாடு பேப்பர் விரித்து அதன் மேல் கஞ்சாவை கொட்டிப் பரவிவிட்டு சிறிய பைக்கட்டுகளில் அளவளவாய் கஞ்சாவை போட்டு அருகில் இருந்த மெழுகுதிரியில் அதை ஒட்டி அடுக்கிக் கொண்டிருக்கிறாள் மரியா.வாய் "வை திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டீ" முப்பதாவது தடவையாய் முணுமுணுக்கிறது. அப்போது கைகளும் தொடைகளும் கொஞ்சம் கொஞ்சம் கடிக்கிறது. அந்த நேரம் அந்த வீட்டருகில் ஆரவ் வருகிறான்.இந்த வீடாத்தான் இருக்க வேண்டும் என்ற குத்துமதிப்பில் மதில் மேலால் எட்டிப் பார்க்கிறான்.அங்கு கொடியில் சட்டைகளுடன் ஒரு சிகப்பு ஜட்டியும் தொங்குகிறது. யெஸ்....இதுதான் அவள் வீடாக இருக்க வேண்டும் என்று மெதுவாய் கதவைத் திறந்து ஹலோ யாரும் இருக்கிறீர்களா என்று குரல் கொடுக்கிறான்.

ஓம் ... கதவு திறந்துதான் இருக்கு வாங்கோ என்று இருந்தபடியே சொல்லுகிறாள் மரியா.......!

சரி .....நாய் இருக்குதா ........!

இல்லை நான்தான் இருக்கிறன் பயப்பிடாமல் வாங்கோ என்று எட்டிப் பார்த்தவள் அவனைக் கண்டதும் கஞ்சா தூள் எல்லாவற்றையும் பேப்பரோடு சுருட்டி வைத்து விட்டு அதன்மேல் ஏறி இருக்கிறாள். அட நீங்களா, இண்டைக்கு என்னத்தை மிதிச்சனீங்கள் என்று கேட்க, ஒன்றுமில்லை உங்களிடம் ஒரு உதவி கேட்டு வந்தனான்..... என்ன சொல்லுங்கோ முடிந்தால் செய்கிறேன் என்கிறாள்......!

உங்களால் முடியும்....என்று அவன் தயங்க ..... தயங்காமல் சொல்லுங்கோ என்கிறாள்.

வந்து எனக்கு நாலைந்து சிகரெட் , கஞ்சா சிகரெட் வேணும் என்று சொல்கிறான்.

உங்களுக்கு யார் சொன்னது இஞ்ச வாங்கலாம் என்று....!

ஒருத்தரும் சொல்லவில்லை. நீங்கள் பெரியகடை , சின்னகடை எல்லாம் நின்று விக்கிறது தெரியும்.பார்த்திருக்கிறன். ஆட்களுக்கு முன்னால் வாங்கத் தயக்கம் அதுதான் தனியா இங்க வந்தனான்.

அட நல்ல ஆள்தான் நீங்க.... அதை அன்றைக்கே கேட்டிருக்கலாமே... சும்மா அதை மிதிச்சன் இதை மிதிச்சன் என்று கொண்டு .......! கொஞ்சம் இதைப் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி கை காலெல்லாம் சொறிந்து கொண்டு உள்ளே போகிறாள். அன்று அவனும் ரவீந்திரனும் போட்டு வைத்த காஞ்சூண்டி இலைகளும் பெட்டியும்தான் அங்கிருக்கு.

 

முற்றத்தில் ஒரு ஜாம் பழ மரம் நிக்குது. அதனுடாக குருவிகள் பறந்து திரிகின்றன. அருகே பாத்ரூமுடன் கிணறு, வாய்க்கால் ஓரம் பழங்களுடன் ஒரு பப்பா மரம். அதில் பழுத்து சிவந்த பழங்களும் பச்சையாய் காய்களும்... தொங்கும் ஒரு பழத்தை குயில் ஒன்று அண்ணாந்து கொத்திக் கொண்டிருக்கு. அப்போது கால்களை கையால் விறாண்டியபடி மரியா வருகிறாள்.ஐந்து சிகரெட்தான் இருக்கு இன்னும் தேவையென்றால் இரண்டுநாள் கழிச்சு வாங்கோ தாறன் என்கிறாள். அவனும் அதற்குரிய பணத்தை குடுத்து விட வாங்கி கஞ்சாவுடன் வைக்கிறாள். என்ன ஒரு மாதிரி இருக்கிறீங்கள் சுகமில்லையா என்று கேட்கிறான்.

என்னவோ தெரியல்ல இப்ப கொஞ்ச நேரமாத்தான் கை காலெல்லாம் கடிக்குது. அலர்ஜி போல என்கிறாள்.

எங்க காட்டுங்கோ பார்ப்பம் என்று கையை காலைப் பார்த்தவன் வீட்டில் தேங்காயெண்ணை இருக்குதா என்று கேட்டு வாங்கி அவளை விறாந்தையில் இருத்திவிட்டு வாங்கிய சிகரட்டையும் கவனமாக பேப்பருடன் வைத்து இலைகளை அப்பால் தள்ளி வைத்து விட்டு எண்ணையை உள்ளங்கைகளில் ஊற்றி மரியாவின் கைகளில் பூசி விட கொஞ்சம் எரிச்சல் குறையுது என்கிறாள். அப்படியே கை கால் தொடை இடை என்று மசாஜ் என்று  நீண்டு கொண்டு போகிறது. கைகளின் உரசலில் தொடங்கி இதழ்களின் ஸ்பரிசத்தில்  உறவாடி  உடல்கள் சங்கமமாகும் வேளையில் அங்கும் இங்குமாய் ஊசலாடிய கால்கள் மொழுகுதிரியை தட்டிவிட அது பேப்பரில் விழுந்து கஞ்சா அலைஸ் காஞ்சூண்டி+ சிகரெட் ,காசுடன் அவனது களிசானில் ஒரு காலும் முழுதுமாய் எரிந்து சாம்பலாகின்றது.நாசியில் மனம் நிறைய காமம் கரைத்து மோகம் துலைத்து எழுந்தனர். அழகியின் அணைப்பை விலக்கி நெருப்பை அணைத்து விட்டு,அவளின் கலங்கிய கண்களைப் பார்த்து நல்லகாலம் எங்கட கற்பும் கரியாகப் பார்த்தது என்கிறான். சும்மா இரு கற்பு கரி என்றுகொண்டு,நான் லட்சரூபாய் சரக்கு சாம்பலாயிட்டுது என்ற கவலையில் இருக்கிறன் என்கிறாள்.அட இதுதானா உன் கவலை.நானும் என்னவோ ஏதோ என்று பயந்திட்டன் .வேறு சிகரெட் இருக்கா என்று கேட்க, அவளின் பச்சை மிளகாய் பார்வையைப் பார்த்து நான் பிறகு வருகிறேன் என்று ஒரு கால் எரிந்த களிசானை அணிந்து கொண்டு ஆரவ் எழுந்து செல்ல, மரியா குத்துக்காலிட்டு சாம்பலான கஞ்சாவையே பார்த்து கொண்டிருக்கிறாள்......!

எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாளோ தெரியாது.நேரம் மதியத்தைக் கடந்து கொண்டிருக்கு.அப்போது அவளுக்கு ஒரு போன் வருகின்றது.சுரத்தில்லாமல் எடுக்கிறாள்.எதிர் முனையில் ஹலோ மரியாவா.... ம் ....சொல்லு சீனு...., மரியா உனக்கு நியூஸ் தெரியுமா, எங்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவரை சற்றுமுன் போலீஸ் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறார்கள்.அவரது வீடுகடை, சின்ன வீடு எல்லாம் சோதனை நடக்கிறது.இப்போதைக்கு நீங்கள் அந்தப்பக்கம் போகவேண்டாம் என்று சொல்லி போனை வைத்து விட்டான்.அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

கஞ்சா எரிஞ்சதுக்கு அழுவதா.....!

கற்பு தப்பியதற்கு சிரிப்பதா .....!

கஞ்சா கடன் குடுக்க வழியில்லை என்று அழுவதா....!

இப்போ கடன் குடுக்க தேவையில்லை என்று சிரிப்பதா.....!

உடல் முழுதும் தடித்து தடித்து கடிக்க மனவேதனையில் மரியா இருக்கிறாள்......!

    🌱 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளரும்....!

 • Like 5
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 3/13/2019 at 1:11 AM, suvy said:

உடனே அதை எடுத்து வந்து தனது சைக்கிளின் பெட்டிக்குள் வைத்து விட்டு அதில் இருந்த காஞ்சூண்டி பெட்டியை கொண்டுவந்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு மீண்டும் வந்து கதிரையில் இருக்கிறான்.காஞ்சனாவும் பாத்ரூமால் வர மழையும் வலுவாக பிடித்துக்

ஆகா காஞ்சூண்டி ரொம்பகாலத்தின் பின் இதை ஊரில் காணக் கிடைக்கவில்லை.

On 3/13/2019 at 1:11 AM, suvy said:

காஞ்சனா எனக்குத் தெரியும் நீ விழித்திருக்கிறாய் என்று. ஏதோ எனக்கு இப்பொழுது நீ வேணும் போல் இருக்கிறது.நான் இப்படி எங்கும் எப்போதும் எவரிடமும் நடந்து கொண்டதில்லை. இன்று ஏனோ தெரியவில்லை. உனக்கும் இஷ்டமென்றால் சொல்லு நான் இங்கிருக்கிறேன்.இல்லையெனில் நான் இப்பொழுதே வெளியே போய் விடுகிறேன் என்கிறான்.கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து எவ்வித சலனமுமில்லை. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு எறிந்து கொண்டு சரி .....நீ  இதை மனசில் வைச்சிருக்காதே நான் வருகிறேன் என்று எழுகிறான். அப்பொழுது அவளின் கை  அவனது காலைப் பற்றுகிறது. அவள் உடலிலும் அதே கிறக்கம். அப்படியே சரிந்து அவளுடன் சரிக்கு சரியாக படுத்து அந்தப் பொன்மேனியை தன் பக்கமாக திருப்பிக் கொள்கிறான். முத்தங்கள் சத்தமுடன் தெறிக்கின்றன. கைகள் இறுக கால்கள் பின்னிக் கொள்கின்றன.

இது மைன்ட் வொய்ஸ் என்றெல்லோ நினைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

எங்க காட்டுங்கோ பார்ப்பம் என்று கையை காலைப் பார்த்தவன் வீட்டில் தேங்காயெண்ணை இருக்குதா என்று கேட்டு வாங்கி அவளை விறாந்தையில் இருத்திவிட்டு வாங்கிய சிகரட்டையும் கவனமாக பேப்பருடன் வைத்து இலைகளை அப்பால் தள்ளி வைத்து விட்டு எண்ணையை உள்ளங்கைகளில் ஊற்றி மரியாவின் கைகளில் பூசி விட கொஞ்சம் எரிச்சல் குறையுது என்கிறாள். அப்படியே கை கால் தொடை இடை என்று மசாஜ் என்று  நீண்டு கொண்டு போகிறது. கைகளின் உரசலில் தொடங்கி இதழ்களின் ஸ்பரிசத்தில்  உறவாடி  உடல்கள் சங்கமமாகும் வேளையில் அங்கும் இங்குமாய் ஊசலாடிய கால்கள் மொழுகுதிரியை தட்டிவிட அது பேப்பரில் விழுந்து கஞ்சா அலைஸ் காஞ்சூண்டி+ சிகரெட் ,காசுடன் அவனது

கதை கஞ்சாவுடன் போகும் என்று பார்த்தா தொழில் வேற மாதிரி போகுதே.

Share this post


Link to post
Share on other sites

 

      🥀...............(9).                    

 

                                       ஆரவ் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்க வெளியே போலீஸ் யூனிபோமோடு அவன் வருகைக்கு காத்து நிக்கிறான் ரவீந்திரன். அவன் வந்த வேகத்தில் காற்றும் மோத முகம் உதடு எல்லாம் வீங்கி களிசானிலும் பாதி எரிந்த நிலையில் கேலிச்சித்திர ஓவியம்போல் வருகிறான். என்னடா இப்பவே வெளிக்கிட்டு நிக்கிறாய் என்ன விடயம்.....!

அவசரமாய் ஒரு ரெய்டுக்கு போகிறன்.பிறகு வந்து சொல்லுறன்.நீ போன அலுவல் என்னாச்சு....இந்தக் கோலத்தில் வருகிறாய் .....!

எல்லாம் சாம்பலாயிட்டுதடா என்று தொடங்கி நடந்ததை சென்ஸார் போடாமல் சொல்லி முடிக்கிறான். இதைத்தான் சொல்லுறது "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் என்று"......!

நான் என்ன செய்தனான்......!

நீதானே காஞ்சூண்டி ஐடியா தந்தது....!

அப்ப நீ இருந்து குளித்துவிட்டு ஒய்வு எடு என்று சொல்லி மோட்டார் சைக்கிளில் வேகமாய் சென்று மறைகிறான். ஆரவ்வும் லைவ்பாய் சவர்காரத்துடன் குளியல் தொட்டிக்குள் இறங்குகிறான்.

ரவீந்திரனும் தனது போலீஸ் படையுடன் சென்று அந்த கஞ்சா சப்ளை செய்பவனை அவனது சின்ன வீட்டில் வைத்து பிடித்து மற்றும் அவனுக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் நாயுடன் போய் சோதனை செய்து எல்லாரையும் ஸ்டேசனுக்கு கொண்டுவந்து சேர்த்து அடைக்க மாலையாகி விட்டது.

 

"என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி ,தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி " ராகமாய் பாடிக்கொண்டு காஞ்சனா மரியாவின் வீட்டுக்கு வருகிறாள்.அங்கு மரியா இருந்த கோலத்தை பார்த்ததும் துணுக்கென்று ஆகி விடுகிறது. நிலம் நோக்கிய இலையில் இருந்து விழத் துடிக்கும் முதல் மழைத்துளி போல் கண்களில் நீர் திரண்டிருக்கு. பதற்றத்துடன் அவளருகில் ஓடி என்னடி மரியா என்ன நடந்தது சொல்லடி.முகம் எல்லாம் வீங்கிக் கிடக்கு என்று கேட்கிறாள்....!அவள் கண்ணாலே எரிந்து கிடக்கும் பெட்டியையும் சாம்பலையும் காட்டுகிறாள்.பின்பு அவளிடம் இது சுத்தமான கஞ்சா இல்லையடி.அவங்கள் எங்களை ஏமாத்திப் போட்டாங்கள்.நான் பையில் போடும்போதே கைகால் எல்லாம் கடித்து தடிக்கத் தொடங்கிட்டுது.......!

இல்லையடி அவங்கள் ஒருநாளும் எங்களை ஏமாத்த மாட்டாங்கள், எனக்குத் தெரியும் இது யாருடைய சதி என்று, என்று சொல்லியவாறு குனிந்து எரியாமல் கிடந்த இலைகளில் ஒன்றை கவனமாய் கையில் எடுத்து, கொண்டாடி உன்ர கையை என்று அவள் கையை பிடித்து தடிக்காத இடமாய் பார்த்து தடவ மரியாவும் விடடி கடிக்குது என்கிறாள்.....! சந்தேகமே இல்லை இந்த இலை காஞ்சூண்டியடி என்கிறாள்.அதற்குப்பின் மரியாவும் காலையில் நடந்தது அத்தனையையும் சென்ஸார் பண்ணாமல் காஞ்சனாவிடம் சொல்கிறாள்.

 

கிணத்தடியில் மரியாவுக்கு சீயக்காய் பொடி போட்டுத் தேய்த்துக் கொண்டே என்னடி உடம்பு முழுதும் இப்படி திட்டுத் திட்டாய் வீங்கிக் கிடக்குதடி.பாவாடையை இறக்கடி என்று சொல்லி தும்பு எடுத்து உடல் முழுதும் தும்பு பறக்கத் தேய்க்கிறாள். ஆனால் மரியாவோ அண்ணாந்து பப்பா மரத்தை பார்த்து சிரிக்கிறாள்.என்னடி உனக்கு வலிக்கலையா.....அது கிடக்கட்டும் அங்கை பாரடி காஞ்சனாவும் மரத்தைப் பார்த்து பழங்கள் பழுத்திட்டுது,அணில் சாப்பிடுது.போகும்போது ஒன்று கொண்டுபோய் கிழவிக்கு குடுப்பம் என்கிறாள். அதில்லையடி எனக்கே இப்படி என்றால் அவன்ர கதியை நினைத்துப்பார். புரிந்ததும் னங் என்று அவள் தலையில் குட்டு வைத்து விட்டு, நேற்று இரவு தன் வீட்டில் நடந்த கிழவியின் தடியடி பற்றி சொல்லி

தொடையில் தடியால் அடித்த இடத்தைக் காட்டுகிறாள்.மரியா குறுக்கிட்டு என்னடி இப்படி அடிக்கும் போது சொல்லுறதுதானே, வாய்க்குள்ள கொழுக்கட்டையா என்று திட்ட, என்னடி நீயும் கிழவி மாதிரியே கேட்கிறாய்என்று சொல்ல இருவரும் கவலைகள் மறந்து சிரிக்கிறார்கள்.காஞ்சனா சொல்கிறாள் இந்தக் கிழவியை நம்புறதா வேண்டாமா, தெரிந்து செய்யுதா தெரியாமல் செய்யுதா ஒன்றும் புரியவில்லையடி.....!

ஏன் பாட்டிமேல் உனக்கு இந்த சந்தேகம் மரியா கேட்க ......!

இல்லையடி நாய் என்று சொல்லி அந்த அடி அடிக்குது ஆனால் வெளிய பாய் எடுக்க வந்தால் பாயில நாய் கிழவியின் கால் மாட்டில படுத்திருந்திருக்கு......!

ஓமடி காஞ்சனா நானும் பார்த்தனான் இப்பவும் ஊசியில் நூல் கோர்த்து கிழிசல் எல்லாம் தைக்குது.வெத்திலையோடு பாக்கு துண்டுகளை கடிச்சு தின்னுது.வானொலி அந்தமாதிரி ரசித்து கேட்குது,இவ்வளவுக்கு நாங்கள் இருப்பமோ தெரியாது என்கிறாள் மரியா ......! பேச்சோடு பேச்சாய் கஞ்சா சப்ளை செய்பவன் போலீசில் பிடிபட்டதையும், இப்போதைக்கு காசு குடுக்கத் தேவையில்லை என்றும் சொல்கிறாள்.அதுக்கு காஞ்சனாவும் கஞ்சாவோ காஞ்சூண்டியோ இரண்டும் தாவரம்தான்.இரண்டும் அதனதன் குணத்தில் உச்சம் தொடக்கூடியவை என்று சொல்ல, எண்டாலும் மிச்சமில்லாமல் ரொம்ப உச்சம் தொட்டுட்டுதடி என்று மரியா சொல்கிறாள்.....!

 🌱 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும் .....!

 

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites
On 3/12/2019 at 6:49 AM, suvy said:

🥀................... (5).

-----கனகுவும் தாமதிக்காமல் ஸ்டேசனுக்கு போன் செய்ய எழுத்தர் பத்மா எடுக்கிறாள்.அவளிடம் விடயத்தை சொல்ல...... அவளும் அங்கிருந்து ஜீப்பை அனுப்புகிறாள்.இருவருமாக திருடனை ஜீப்பில் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருகின்றார்கள். ஜீப்பை செட்டில் விட்டு விட்டு பின் கதவால் வர திருடனின் காலில் ஆட்டுக்கல்லு இடித்து போட்டுது. குனிந்து ஆட்டுக்கல்லை பார்த்தவன் "அட இது இன்னுமா இங்கே கிடக்குது" என்கிறான்.உடனே கனகு அவனிடம்  இதைப்பற்றி உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்க என்ன ஐயா இப்படி கேட்கிறீங்கள், இதை அந்த சீட்டுக்காரியிடம் இருந்து களவெடுத்ததே நான்தானே. பிறகு மார்கண்டுவை பார்த்தவாறே அய்யாதான் இதை கேசுல போட மறந்திட்டார்..... மார்க்கண்டுவும் இருடா நாயே, நகைத்திருட்டுடன் சேர்த்து இதையும் போட்டு விடுறன். பின்பு பத்மாவும் அவனிடம் குற்றங்களை பதிவு செய்து மறக்காமல் ஆட்டுக்கல்லையும் சேர்த்து விட்டு  நகைகளை பொறுப்பெடுத்து கொண்டு அவனை கஞ்சா விக்கிறவன் இருக்கும் அறையில் விட்டு பூட்டிவிட்டு,  செவ்வாய்  கிழமை இவர்களை கோர்ட்டில் சமூகமளிப்பதற்கான அறிக்கைகளைத் தயார் செய்ய போகிறாள்.....!
 

   🌱..............வளரும்......!

  Ãhnliches Foto

சுவியர்,  ஆடு.... திருடிய கள்ளனை, கேள்விப்  பட்டிருக்கின்றேன்.
இட்லி,  தோசைக்கு.... மா ஆட்டுற, 500 கிலோ எடை கொண்ட....  ஆட்டுக்  கல்லை.... 
திருடிய கள்ளனை...  இப்ப தான், கேள்விப் படுகின்றேன்.

இந்தக் கள்ளரை, எல்லாம்... ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால்..
பளு தூக்கும், பிரிவில்... தங்கப் பதக்கமே, வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.

அதுக்குப் பிறகு... அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து.... எல்லாம் எங்களிடம்,
"ட்ரெயினிங்" என்று,  பயிற்சி..... எடுக்க, வந்து விடுவார்கள். 😝

எதுக்கும்.... ஊரிலை, உள்ள ஆட்டுக் கல்லுகளை.... வீட்டுக்கு, அத்திவாரம் போடவோ, 
புதுக் கோயிலுக்கு... சிவலிங்கமாக வைக்காமல் இருக்கவோ... வேண்டாம் என்று,
அங்கை... உள்ள சனத்துக்கு, உடனே... கடிதம் எழுதிப்  போட வேணும். :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

🥀...............(10).

                                     

அடுத்தநாள் காலை மகேசனிடம் இருந்து ரவீந்திரனுக்கு போன் வருகின்றது. இன்று மாலை எனது வீட்டுக்கு வரமுடியுமா ரவீந்திரன்.எனக்கு கொஞ்சம் உடல் நலமில்லை அதுதான். இல்லாவிட்டால் நானே நேரில் வந்து உன்னை பாராட்டியிருப்பேன் என்கிறார்...... கண்டிப்பா வருகிறேன் ஐயா நானும் இன்று உங்களை சந்திக்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன் என்கிறான்.

 

அன்று நல்ல வெய்யில் மதியம் கழித்து மகேசன் வீட்டுக்கு சென்று வாசலில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டுவிட்டு காவலாளி கேட்டை திறந்து விட உள்ளே போகிறான்.வீட்டுடன் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஒரு சாய்மனைக் கதிரையில் படுத்து கொண்டு சிகரெட் பிடித்தபடி சூரியகுளியல் எடுத்துக்கொண்டு இருக்கிறாள் கிளாரிடா.மெல்லிய ஆடையினுடாக காற்று கண்களை மூடிக்கொடு போய் வருகின்றது.ஆளரவம் கேட்டு கழுத்தை திரும்பியவள், அட அட ரவியா கம் கம் என்று கொஞ்சம் எழுந்து அவனை அனைத்து வரவேற்றுவிட்டு சேரில் வந்து இரு என்று காலடியில் இருக்கும் கதிரையை காட்டுகிறாள். ஓம்...சேர் இருக்கிறாரா என்று கேட்டுக்கொண்டே சேரில் அமரப்போனவன் அசௌகரியமாக உணர்ந்து அத எடுத்து வந்து அவளுக்கு பக்கவாட்டில் போட்டுவிட்டு இருக்கிறான். அவர் தோட்டத்துக்குள்தான் நடக்கிறார்.நீ இரு இப்ப வந்திடுவார். என்ன ஒரே நாளில நீ ஹிரோவாயிட்டாய் டி.வீ பேப்பர் எல்லாம் நீ அந்தக் கும்பலைப் பிடித்தது பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கு. அவன் அடக்கமாய் அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டான்.அப்போது மகேசனும் அங்கு வருகிறார். அவனை இறுக்கி அனைத்து குட் யங் மேன் வெரிகுட் சாதிச்சிட்டாய் என்று சொல்லி மற்றோரு கதிரையில் அமர்கிறார். லூசான களுசானும் டீ ஷர்ட்டும் அணிந்திருக்கிறார். ஒரு கஞ்சா விக்கிறவன் பிடிபட்டாலோ அல்லது திருந்தினாலோ நூறு குடும்பங்கள்,ஆயிரம் இளைஞர்கள் சீரழிவில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள் தெரியுமா, நீ அதை கண்ணி வைத்து கச்சிதமாய் அந்த கும்பலைப் பிடித்திருக்கிறாய்.பாராட்டுக்கள் ரவீந்திரன் என்கிறார்.....!

 

உன்னை பாராட்டத்தான் வரச்சொன்னேன்..... காலையில் உடல் நலமில்லை என்றீர்களே, காச்சலா இப்போ எப்படி இருக்கு.......! நோ ...நோ....காலில் ஒரு கட்டு.ரெண்டு நாளா ரொம்ப வேதனைப் படுத்தி விட்டது. பார்க்கிறியா என்று களிசானை மேலே உயர்த்தி காட்டுகிறார்.அந்த இடம் சீழ் ரத்தமெல்லாம் வெளியேறி சிவந்து இருக்கு.இப்ப ஏதோ கிரீம் பூசி இருக்கிறார். டாக்டரை பார்த்திர்களா....!

இல்லை ரவி, அது ஒரு மிராக்கிள் அன்பிலீவபில். அண்டைக்கு கிளாரிடாவும் வீட்டில் இல்லை. காவலாளியும் டாய்லட்டுக்கோ எங்கோ போயிட்டான்.நான் வலி பொறுக்காமல் அவனை கூப்பிடுகிறேன். அப்போ தெருவில் போன யாரோ ஒரு பெண் சத்தம் கேட்டு உள்ளே வருகிறாள். வந்தவள் என்னை பார்த்து விட்டு தன் பையில் இருந்து ஒரு பச்சிலை எடுத்து அரைத்து பூசி விட்டாள், அதோடு தனது புதுத் தாவணியை கிழித்து கட்டும் போட்டு விட்டு நாளைக்கு மாறிவிடும் என்று சொன்னாள். சொன்னபடி அன்றிரவே கட்டு உடைத்திட்டுது.இன்னும் கொஞ்சம் நோ இருக்குது.ரவீந்திரன் நினைக்கிறான், ( அப்ப அவள் போலீசுக்கு போக்கு காட்டிவிட்டு தற்செயலாகத்தான் இங்கே வந்திருக்கிறாள். இது போலீஸ் வீடு என்று அவளுக்கும் தெரியாது போல நான் வீணா இவரை சந்தேகப் பட்டு விட்டன்).

 

அது என்ன பச்சிலை என்று தெரியுமா சேர்.....! எதோ சிவமூலிகையாம்,காசியில் பிரசித்தமாம்......!

அது ஏதாவது உங்களிடம் இருக்கா நான் பார்க்கலாமா....!

இல்லையே ரவி, பொறு என்று சொல்லிவிட்டு மனைவியின் பக்கம் திரும்பி ஏய் கிளாரிடா அந்தப்பெண் சிகரெட் தந்தாளே அது உன்னிடம் இருக்கா.....!

ஓ அதுவா அது சூப்பர் சிகரெட் நேற்று ஒன்று ஸ்மோக் பண்ணிட்டன், மற்றது இப்பதான் ஸ்மோக் பண்ணினனான் என்று கீழே தேடி அந்த கட்டையை எடுத்து கொடுக்கிறாள்......!

 

அதை எடுத்து முகர்ந்து பார்த்தவன் இது கஞ்சா சிகரெட்தான், இவர்களை வேறு பெயர் சொல்லி நல்லா ஏமாத்தி இருக்கிறாள்.கஞ்சாதான் சிவமூலிகை என்று இவர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் ஏனோ அவளை காட்டிக் குடுக்க மனம் வரவில்லை......!

அப்போது வேலையாள் இவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து டீப்போவில் வைக்கிறாள். பிளாரிடா அருகில் இருந்த ஒரு புத்தர் சிலையை எடுத்து ரவியிடம் காட்டி என்ன அழகாய் இருக்கு பார்த்தியா கண்டியில் வாங்கினேன்.முழுதும் யானைத் தந்தத்தில் செய்தது என்கிறாள்.அதை கையில் வாங்கிப் பார்த்தவன்

                                         " புத்தர் காருண்யத்தைப் போதித்தார்

                            தந்தங்களில் புத்தர் சிலைகள் " என்கிறான்.

என்ன என்று கிளாரிடா கேட்க ஒன்றுமில்லை தந்தங்களில் புத்தர் சிலைகள் செய்ய நிறைய யானைகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்கின்றன என்று சொல்லி விட்டு விடைபெறுகின்றான்........!

 🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளரும்......!

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites
On 3/14/2019 at 4:32 PM, ஈழப்பிரியன் said:

கதை கஞ்சாவுடன் போகும் என்று பார்த்தா தொழில் வேற மாதிரி போகுதே.

யோவ்....சும்மா வாயை மூடிக்கொண்டு இருங்கப்பா....இப்பதான் நல்ல கட்டம் வருது......நல்லகட்டம் வருது...😍

 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

"புத்தர் காருண்யத்தைப் போதித்தார்

                            தந்தங்களில் புத்தர் சிலைகள் " என்கிறான்.

என்ன என்று கிளாரிடா கேட்க ஒன்றுமில்லை தந்தங்களில் புத்தர் சிலைகள் செய்ய நிறைய யானைகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்கின்றன என்று சொல்லி விட்டு விடைபெறுகின்றான்........!

 🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளரும்......!

 

🤣🤣🤣 சுவாரசியமாகச் செல்கிறது, சுவி அண்ணா! 👌தொடருங்கள் 😊

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, suvy said:

தொடையில் தடியால் அடித்த இடத்தைக் காட்டுகிறாள்.மரியா குறுக்கிட்டு என்னடி இப்படி அடிக்கும் போது சொல்லுறதுதானே, வாய்க்குள்ள கொழுக்கட்டையா என்று திட்ட, என்னடி நீயும் கிழவி மாதிரியே கேட்கிறாய்என்று சொல்ல இருவரும் கவலைகள் மறந்து சிரிக்கிறார்கள்.காஞ்சனா சொல்கிறாள் இந்தக் கிழவியை நம்புறதா வேண்டாமா, தெரிந்து செய்யுதா தெரியாமல் செய்யுதா ஒன்றும் புரியவில்லையடி.....!

ம் கிழவி தெரிந்து தான் வெழு வெழன்று வெழுத்திருக்கு.

Share this post


Link to post
Share on other sites

🥀.................(11).

                              


                                      
                                           இன்று கோர்ட்டுக்கு  நகைத் திருடனையும் , கஞ்சா விற்பவனையும் கொண்டு போக வேண்டும் . கணக்கு சொல்லியபடி நகைத் திருடனின் அறிக்கையைத் தயாரித்தவள் அதை சரிபார்க்க கனகுவின் அறைக்கு போகிறாள் அங்கு அவன் இல்லை. கனகுவும் மார்கண்டும் ஸ்டேசன் பின்னால் மோட்டார் சைக்கிள் அருகில்  நின்று கதைத்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மார்க்கண்டு கனகுவிடம் எட தம்பி கனகு,  நீ எங்கட கிளார்க் பத்மாவை பற்றி என்ன நினைக்கிறாய்.....!
ஏன் அண்ணை அவவுக்கு என்ன,  நல்ல குணம்,லட்சனமாவும் இருக்கிறா என்கிறான்......!
நீ யாரையும் விரும்பிறியே .....!
இல்லை அண்ணை, நான் ஒரு பிரமோஷன் எடுத்தபின்தான் காதல்,கலியாணம் எல்லாம்.....!
பிரமோஷன், ஸ்டார், சம்பள உயர்வு எல்லாம் இந்த வருடம் உனக்கு கண்டிப்பாய் கிடைக்கும். நீ அவ்வளவு வேலை செய்திருக்கிறாய்.அதுக்காக காலாகாலத்தில் நடக்க வேண்டியதையும் கவனிக்க வேண்டும் கண்டியோ.உனக்கும் வயது ஏறிக்கொண்டு போகுது,என்ன ஒரு முப்பத்து மூன்று இருக்குமா.....!
என்ணண்னை பகிடி பண்ணுறியள். இப்பதான் இருபத்தொன்பது நடக்குது.....!
அப்படியே ...! ஓடுது என்று சொல்லு.நான் முன் வழுக்கையை பார்த்திட்டு சொல்லிப்போட்டன்..... உனக்கு இஷ்டம் என்றால் சொல்லு பொட்டையோட நான் கதைச்சு பார்க்கிறன்.என்ன அவளுக்கு  இரண்டு வயது கூட ஆனால் ஜோடிப்பொருத்தம் அம்சமாய் இருக்கு.யோசிச்சு சொல்லு......!(பத்மா அவரது சக போலீஸ் நண்பரின் மகள்.ஒரு கலவரத்தில் அவர் இறந்து போக,அவர் மகளுக்கு இந்த வேலையை அரசாங்கம் கொடுத்திருக்கு. வந்த சம்பந்தம் எல்லாம் போலீஸ்காரி என்றவுடன் தவறிப் போகுது பத்மாவுக்கு. .கனகுவின் குணம் நடை எல்லாம் மார்கண்டுவுக்கு  பிடித்து போக அவனுக்கு அவளை செய்யலாம் என்று பிளான் போடுறார் ).
 கனகுவும் கலவரத்துடன் தெரியாதமாதிரி கொஞ்சம் திரும்பி சைக்கிள் கண்ணாடியில் முகத்தை பார்க்கிறான். பெரிசா ஒண்டும் கொட்டின மாதிரி இல்லை.ஒருவேளை நான் தினமும் பார்க்கிறபடியால் தெரியேல்லையோ.உள்ளே கொஞ்சம் பயம் பிடிக்குது.....!
கனகுவின் மனசை கலக்கி விட்டாச்சுது என்று கணித்தவர், வீட்டில யாரோடையும் கதைக்க வேண்டும் என்றால் சொல்லு வந்து கதைக்கிறேன் என்கிறார்.....!
இல்லை அண்ணை, அம்மா மட்டும்தான்.அவாவும் என்னை கலியாணம் செய்ய சொல்லித்தான் நச்சரிக்கிறா.....! அப்போது அங்கு ஆட்கள் வர இவர்கள் உள்ளே வருகிறார்கள். வந்தவர்கள் ஆட்டுக்கல்லையும் குழவியையும் ஜீப்பில் ஏற்றுகின்றார்கள்.

                                      பத்மாவிடம் வருகின்றார் மார்க்கண்டு. அங்கிள் இந்த பைலை கனகுவிடம் குடுக்கிறிங்களா.அவர் சரியெண்டால் கோர்ட்டுக்கு கொண்டு போகலாம்.அதை நீயே கொண்டுபோய் குடு.அதுக்கு முன் நான் உனக்கு ஒரு மாப்பிளை பார்த்திருக்கிறன் கட்டுறியே. வழக்கம் போலத்தானே.போலீஸ் எண்டதும் ஓடப்போறான்.....!
இது அப்படியில்லை.அவனுக்கு எல்லாம் தெரியும்.......!
எனக்கு எந்தக்  கழுதையானாலும் சரி ......அம்மாதான் வயசு ஏறுது என்று கவலைபடுகுது......!
இது கழுதையில்லை நம்ம கனகு, உனக்கு விருப்பமா.......!
அவர் என்னமோ லட்சியம் எல்லாம் தலையில வைத்திருக்கிறாராம். இப்ப என்ன இறக்கிட்டாரே......!
இல்லை , இறங்கிட்டார். இந்தா நீயே பைலை கொண்டுபோய் கொடு.எட்ட நிக்காமல் கிட்டவா நின்று குடு. கதவை திறந்து போகும்போதே மறக்காமல் கண்ணடித்து கொண்டு போ என்ன......!
அது எனக்கு வராது அங்கிள்.....!
உன்னட்டை  விக்ஸ் இருக்கே .....!
இருக்குது அங்கிள்.உங்களுக்கு தலை இடிக்குதே. இந்தாங்கோ என்று கொடுக்கிறாள்.....!
எனக்கில்லை உனக்கு, இஞ்ச வா என்று விக்ஸை விரலில் எடுத்து அவளின் இடது கண்ணின் கீழே பூசி விடுகிறார். சரி இப்ப போ. இனி அதுவே  அடிக்கும்.....!  காலடியில் காலடி உயர ஹைஹீல்ஸ் அதனால்.திரட்சியான பின்னழகுகள் அசைய அவற்றை  இல்லாத இடையில் இறுகிய மினிஸ்கர்ட் கீழே குடையாய் விரிய   ஒயிலாக நடக்கையில் பதற்றத்தில் ஓரிரு பேப்பர் கீழே விழ அவள் குனிந்து எடுக்கும்பொழுது மார்க்கண்டு வேறு பக்கம்  திரும்பிக் கொள்கிறார்.......!
                       
 
                                    பத்மா பைலுடன் கதவைத் தட்ட, யெஸ் கம் இன் .....அவள் கதவைத் திறந்து ஒரு கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். அவளின் வரவு அவனுக்கு வெட்கத்தையும் புத்துணர்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. பைல் தயாரா என்று கேட்கிறான்..... அவளும் கண்ணடித்து கொண்டே  எஸ்  தரவா  என்கிறாள். அவனுக்கு கிஸ் தரவா என்று கேட்குது......!
அவனும்  எஸ்  தாரும். என்கிறான்.அவளுக்கும் அப்படியே கிஸ் தாரும் என்று கேட்குது. மேசையை சுற்றி வந்து  அவன் அருகில் நின்று பைலைத் திறக்கிறாள். அது அவள் லைஃவ்வையே திறப்பதுபோல் இருக்கிறது.அவன் பக்கங்களை புரட்டுகிறான். இரு மனங்களின் பக்கங்களும் மெல்லத் திறக்கின்றன. அவள் மேலும் நெருங்கி சுட்டு விரலால் தொட்டுக்காட்டி ஏதோ சொல்கிறாள். சென்ட் வாசனையில் மனசு கிறங்குகின்றது.வலது கை தன்னிச்சையாய் அருகில் நிக்கும் கால்களை தன்னுடன் சேர்த்து அணைக்கின்றது. தெரியும் அழகுகளைக் கண்கள் தழுவ தெரியாத புதிர்களை கைகள் அவிழ்க்கின்றன. சற்று நேரத்தில் கதவைத் திறந்து உதட்டைத் துடைத்தபடி பத்மா தன் ஆசனத்தில் வந்து அமருகின்றாள். இப்போது கனகுவின் வலது கண் மூடி மூடித் திறக்க அவனும் கண்ணடித்து கொண்டிருக்கிறான்.....!
                                 

🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும்......!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஆஹா  மொத்தமா வாசித்து முடிக்கணும் சுவி அண்ண  எழுதுங்கள் 

அபிநந்தன்  வரும் போது நம்ம யாழ் நந்தன் உள்ள வந்து போனமாதிரி பீலிங்😄

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

🥀....................(12).

 

காலையில் நீதிமன்றம் மிகவும் ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருக்கு. வழக்கமான மாமூல் வழக்குகளை பொடி கூடப் போடாமல் சடுதியாய் தீர்ப்புகள் குடுத்து கொண்டிருக்கிறார் நீதிபதி ஈஸ்வரதாசன். ரவீந்திரன் கனகு மார்க்கண்டு மற்றும்பல போலீஸ்காரர்கள் ஒரு ஓரமாய் நிக்கின்றார்கள். அடுத்து ஒரு வழக்கு வருகின்றது. வாதியின் கூண்டில் நிற்பவர் வசதியானவர் போல் இருக்கிறார். எதிர்க் கூண்டில் ஒரு பெண்மணி நிக்கிறாள்.அவளது இரண்டு பெண் பிள்ளைகள் பார்வையாளர்களுடன் சோகமாய் நிக்கின்றனர்.

பிரபலமான அந்த வக்கீல் எழுந்து வந்து தனது தரப்பை எடுத்துரைக்கிறார். அந்த வக்கீலை பார்த்ததும் நீதிபதிக்கு புரிந்து விட்டது. அவர் தில்லு முள்ளு செய்பவர்களுக்காகவே வாதாடுபவர்.ஆனால் என்ன அவரின் வாதத்தையும் சாட்சிகளையும் உடைத்து தீர்ப்பு சொல்வது மிகவும் சிரமம்.மிகத் திறமைசாலி.எல்லாவற்றையும் துல்லியமாய் கோர்த்து கொண்டுவந்து வாதாடுவார்.....!

 

கனம் நீதிபதி அவர்களே என்று ஆரம்பித்து, எனது கட்சிக்காரர் தாமோதரத்தின் எல்லையில் உள்ள பயன்தரும் மரங்களான வேம்பு, புளி, இலுப்பை போன்ற மரங்களின் பயனை எல்லாம் இதோ இங்கு நிக்கும் இந்தப் பெண் கேட்டு கேள்வி இல்லாமல் களவெடுத்து அனுபவிக்கிறாள்.இனிமேல் அவர் அப்படி செய்ய கூடாது என்றும், இதுவரை செய்ததற்கு தண்டனை வழங்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று சொல்லி விட்டு திமிராக சென்று அமர்ந்து கொள்கிறார்.

நீதிபதி அந்தப் பெண்ணைப் பார்த்து, என்னம்மா நீ என்ன சொல்கிறாய்.உன்னுடைய வக்கீல் எங்கே என்று கேட்கிறார்.

எனக்கு வக்கீல் யாரும் இல்லை ஐயா, அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. மரங்கள் அவருடைய வளவுக்குள்தான் நிக்கின்றன.ஆனால் நான் எனது வளவுக்குள் விழும் பொருட்களைத்தான் சேகரித்து விற்று வாழ்க்கை நடத்துகின்றேன்.....!

 

உனது கணவர் என்ன செய்கிறார். பிள்ளைகள் இருக்கா.....!

 

வீட்டில் இருந்த எனது கணவரை இராணுவம் பிடித்து கொண்டு போனது.தேடிப்பார்த்து ஓய்ந்து விட்டேன், இருக்கிறாரா இல்லையா என்றும் தெரியாது. இரண்டு பொம்புளைப் பிள்ளைகள் என்று சொல்ல அந்தப் பிள்ளைகள் இருவரும் எழுந்து நிக்கின்றார்கள். நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவதென்றாலும் எனக்கு சம்மதம்.ஆனால் ஒரு விண்ணப்பம்.......!

 

இங்கு நீ உன்னுடைய நியாயத்தைத்தான் சொல்லலாம்.ஆனால் நீ தீர்ப்பு எழுத முடியாது.என்ன விண்ணப்பம் சொல்லு.....!

 

நான் சிறைக்கு போனால் என்ர பிள்ளைகளுக்கு வேறு நாதியில்லை.அதனால் அவர்களையும் என்னுடன் சேர்த்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்கின்றேன்.

 

(பார்வையாளர் பகுதியில் ஒரே சலசலப்பு.எங்கிருந்தோ ஒரு செருப்பு வந்து தாமோதரன் மேலும்,இன்னொன்று வக்கீல் மேலும் விழுகுது..... மத்தியானம் ஆனதால் கோர்ட்டை கலைத்து விட்டு எழுந்து போகின்றார் ஈஸ்வரதாசன்).

 

 

அந்தக் காண்டீனில் அவரவரும் தத்தமது ஆட்களுடன் தனித்தனி மேசைகளில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய அதிகாரிகளுக்கான கிரீன் தடுப்பில் சில அறைகளும் இருக்கின்றன. ஒரு மூலையில் அந்தப் பெண்ணும் பிள்ளைகளும் இருந்து தேநீரும் பானும் சாப்பிடுகினம். பக்கவாட்டில் ஐந்தாறு மேசை தள்ளி வக்கீலும் தாமோதரனும் இருந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ரவீந்திரன் வருகின்றான்.அவனை தாமோதரன் தனது மேசைக்கு அழைக்கிறார்.அங்கு தனது நண்பரைக் கண்டதும் வக்கீல் எழுந்து செல்கிறார். அந்த கதிரையில் ரவீந்திரன் அமருகின்றான். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தாமோதரன் கேட்க.... ஒன்றும் வேண்டாம் இப்போதுதான் சாப்பிட்டேன்.....! (ஏற்கனவே தாமோதரனை ஒரு பெரிய இக்கட்டில் இருந்து ரவீந்திரன் காப்பாற்றி இருந்தான். அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவருக்கு அவனிடம் இருக்கு).

எனது வழக்கை கவனித்தீர்களா...... ம்.....பார்த்தேன்.....!

என்ன நினைக்கிறீர்கள்........!

அநேகமாய் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாய்தான் வரும் என்று நினைக்கிறன்.....!

நினைக்கிறதென்ன வரும், வர வேணும் அதற்குத்தானே இந்த வக்கீலை கொழும்பில் இருந்து விமானத்தில் வரவழைத்திருக்கிறேன்.......!

நான் ஒன்று சொன்னால் குறை நினைக்க மாட்டிர்களே.......!

என்னையும், என் மரியாதையையும் காப்பாற்றியவராச்சே நீங்கள். உங்களைப் போய் .....சொல்லுங்கள்.....!

அந்தப் பெண் தனது வளவுக்குள் இருந்துதானே பொருட்களைப் பொறுக்குகிறாள், அதில் உங்களுக்கு என்ன பிரசிச்னை........!

பிரச்சினை ஒன்றும் இல்லைத்தான் ஆனால் ஒரு ஏழைப் பரதேசி எப்படி எனது மரங்களின் பழங்களையும் பயன்களையும் எடுக்கலாம். என் கௌரவம் என்னாவது......!

இண்டைக்கு உங்களின் கௌரவத்தை அந்த பெண்தான் காப்பாற்றி இருக்கிறாள் தெரியுமா.....!

என்ன சொல்கிறீர்கள் ........விளக்கமாய் சொல்லுங்கள்......!

 

                               இன்று காலையில் இந்த கோர்ட் வளாகத்தில் நடந்ததை சொல்கிறேன்.அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..... காலையில் அவவும் பிள்ளைகளும் சோகமாக அந்த மரத்தடியில் நிக்கிறார்கள்.நான் போய் என்ன விஷயம் என்று கேட்க பெரியபெண் எல்லாவற்றையும் சொல்கிறாள். நான் அதுக்கு உங்களுக்கு யாராவது வக்கீல் ஒழுங்கு செய்து தரவா என்று கேட்கிறேன்....அந்த அம்மா சொல்கிறா அவர்கள் கொழும்பில் இருந்து பெரிய வக்கீல் எல்லாம் அழைத்து வந்திருக்கினம் என்று.அப்போது அங்கு வக்கீல் வரதன் வருகிறார். உடனே தாமோதரன் குறுக்கிட்டு வக்கீல் வரதனா வில்லங்கம் பிடித்த ஆளாச்சே, அவன் யாரையும் மதிக்க மாட்டான் காசையும் மதிக்க மாட்டான்....... !

(வக்கீல் வரதன் ஒரு வழக்கில் வாதாட வந்தால் பத்திரிக்கை நிருபர்கள் குவிந்து விடுவார்கள்.எதிராளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விடுவார்.வழக்கின் வெற்றி தோல்வி பற்றி அலட்டிக்க மாட்டார். மிச்சத்தை பத்திரிகைகளே காது, மூக்கு வைத்து எழுத விற்பனை எகிறும்.அதனால் பெரும் புள்ளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனம்).

ஓம் அவரேதான், எனக்கு அப்போது நீங்கள்தான் எதிர்தரப்பு என்று தெரியாது.தெரிந்திருந்தால் நான் பேசாமல் போயிருப்பேன்...... பிறகு சொல்லுங்கோ.....!

அவரிடம் வழக்கை சொல்ல அவரும் பிள்ளைகளை அங்கால போய் விளையாடுங்கோ என்று அனுப்பிட்டு சொன்னார்,அம்மா  நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள் அத்துமீறி வீட்டுக்குள் வந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்று.... அது போதும்.எந்தக் கொம்பன் எதிர் வக்கீலாய் இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துடலாம் என்கிறார்...... தாமோதரனுக்கு வேர்க்குது. பிறகு என்ன நடந்தது என்கிறார்.....!

அப்ப அந்த அம்மா சொல்லிச்சுது நானே திகைத்திட்டன்...... அப்படி என்ன சொன்னா....!

தாமோதரம் ஐயா கோபக்காரர்தான் ஆனால் அந்தமாதிரி ஆள் இல்லை. அவர் காவல்தெய்வம்போல பக்கத்தில் இருப்பதனால்தான் நானும் இந்த குமருகளை வைத்து கொண்டு கௌரவமாய் சீவிக்கிறன்.இல்லையெண்டால் தெருவில போறவன் வாறவன் எல்லாம் வீட்டுக்க வரப்பார்ப்பான்.இது இல்லாட்டிக்கு நான் வேற வேலை பார்த்துட்டு போவன். அவரின் மரியாதை கெட்டாலோ சிறைக்கு போனாலோ அவற்ர பொண்டில் பிள்ளைகளும் எங்களைப் போல்தான் சீரழிய வேண்டும்.அவர்தான் கோபக்காரர். அவர் மனைவி ரொம்ப நல்லவர். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. என்கிறா. வரதனும் பேசாமல் போயிட்டார்..... இப்ப சொல்லுங்க....யாருடைய கௌரவத்தை யார் காப்பாத்தினது.....!

 

                              அவரும் சமாளித்து கொண்டு, இல்ல தம்பி நானும் அவ வக்கீல் எல்லாம் வைத்து எதிர்த்து நிப்பா என்றுதான் நினைத்தன் ஆனால் அவ தன்னையும் பிள்ளைகளையும் சிறையில் போடும்படி சொல்லும்போதே நான் உள்ளுக்க உடைஞ்சிட்டன். இப்போ நீங்கள் சொல்லத்தான் தெரியுது அவ என்மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறா என்று.....வேண்டாம், தீர்ப்பு எப்படியோ போகட்டும் தம்பி இனி நான் அந்த அம்மா வழியில குறுக்கிட மாட்டன்.இனி அவர்கள் என் வளவுக்குள்ளும் வந்து பொறுக்கட்டும். என் நல்ல நேரம்தான் உங்களை நான் இப்ப சந்திச்சது.

 

ஐயா அவர்களுக்கு அதுதான் வாழ்வாதாரம்.நீங்கள் சும்மா குடுக்க வேண்டாம். ஏதாவது வாங்கிக் கொண்டு கொடுங்கள்.....!

என்ன தம்பி நீர்....அவர்களால் எனக்கு என்ன தர முடியும்... இதோ இந்த வக்கீலுக்கு நான் குடுக்கிற காசு அவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு சும்மா இருந்து சாப்பிட காணும்.அவர்களிடம் நான் வாங்கிறதாவது.

 

இல்லை ஐயா அப்படி சொல்லாதீர்கள்."சிறு துரும்பும் பலுகுத்த உதவும்" என்று சொல்ல அருகே ஈக்கிலால் பல்லு குத்திக் கொண்டிருந்தவர் எழுந்து அப்பால் செல்கிறார். எனக்கு என்ன என்று சொல்லத் தெரியவில்லை நீங்கள்தான் அவவுக்கு பக்கத்து வீட்டுகாரர்.நீங்களே யோசித்து பாருங்கள். இவர்களின் உரையாடலை கவனித்தபடி ஸ்கிரீன் அறைக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தனக்குள் சிரித்து கொள்கிறார்.....!

கோர்டில் எல்லோரும் பழையபடி அந்தந்த இடங்களில் இருக்கிறார்கள். நீதிபதி ஈஸ்வரதாசன் தீர்ப்பை சொல்லுகிறார்..... அவர்கள் தமது வளவுக்குள் வரும் பயன்களை எடுத்து அனுபவிக்கலாம்.....!

கொழும்பு வக்கீல் கதிரையில் இருக்கிறார்.அவரின் உதவியாளர் மட்டும் எழுந்து குறுக்கிட்டு என் கட்சிக்காரர் மரங்களை வெட்டி விட்டால் என்று சொல்ல ....!

வெட்டி பாரும் ....எல்லாரையும் தூக்கி உள்ளுக்கு போட்டிடுவன். முன்தினமாதிரி உங்கட இஷ்டப்படி மரங்களை வெட்டேலாது தெரியுமோ அதுவும் பயன்தரும் மரங்கள். அதததுக்கு சில நடைமுறைகள் இருக்கு.இப்பவெல்லாம் மாநகரசபை மரம் வெட்ட அனுமதி கொடுப்பார்கள் என்று நான் நினைக்கேல்ல.....!

அப்ப கிளைகளை வெட்ட அனுமதி தேவையில்லைதானே......!

தேவையில்லைதான் தாமோதரத்தை உற்று பார்த்தபடி சொல்கிறார் அது அவசியமா என்பதை அவர் தீர்மானிக்கட்டும்.....!

🌱..................வளரும்.......!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

சென்ட் வாசனையில் மனசு கிறங்குகின்றது.வலது கை தன்னிச்சையாய் அருகில் நிக்கும் கால்களை தன்னுடன் சேர்த்து அணைக்கின்றது. தெரியும் அழகுகளைக் கண்கள் தழுவ தெரியாத புதிர்களை கைகள் அவிழ்க்கின்றன. சற்று நேரத்தில் கதவைத் திறந்து உதட்டைத் துடைத்தபடி பத்மா தன் ஆசனத்தில் வந்து அமருகின்றாள். இப்போது கனகுவின் வலது கண் மூடி மூடித் திறக்க அவனும் கண்ணடித்து கொண்டிருக்கிறான்.....!

ஐயோ ஐயோ பொலிஸ் நிலையத்திலுமா?

Share this post


Link to post
Share on other sites

அட ஒரு வக்கீலாக வரவேண்டியவர் பாதை மாறி பாரிசுக்கு போட்டார்.
கோட்டு கேசு அருமை.சிந்திக்கவே இல்லை.

Share this post


Link to post
Share on other sites

🥀.................(13).

                                       

அடுத்து ரவீந்திரனின் வழக்கு... கஞ்சா விக்கிறவன் கூண்டில் நிக்கிறார். ஆட்டுக்கல்லும் குழவியும் கூண்டுக்கு அருகிலே ஒரு சிறிய மேசையில் இருக்கு. நீதிபதி ஈஸ்வரதாசன், நீர் கஞ்சா விற்றதை ஒப்புக்கொள்கிறீரா..... ஓம் ஐயா....அப்ப இந்த ஆட்டுக்கல்லு எப்ப களவெடுத்தனீர்.....அது ஒரு நாலு வருஷம் இருக்கும் ஐயா. அப்போது கனகு ஓடிவந்து ரவீந்திரனிடம் சேர் ஆட்டுக்கல்லு அடுத்த வழக்குக்குதான் வரவேண்டும்.இது கஞ்சா வழக்கு மட்டும்தான் சேர்......!

கனகு , அது ஸ்டேசனில சும்மா கிடந்து போக வர கால்ல அடிக்குது என்று நான்தான் கடைசி நேரத்தில இந்த வழக்கில சேர்த்து விட்டனான் இப்ப அதுக்கு என்ன.....!

அதுக்கில்லை சேர் அதை எடுத்த உண்மையான திருடனைப் பிடித்து விட்டேன் சேர்.....!

.யார் அது ......!

அந்த நகைத் திருடன்தான் சேர்......!

அப்படியென்றால் உடன அந்த கேஸில் இருந்து ஆட்டுக்கல்லை நீக்கி வீடு கனகு ......!

இனி அது முடியாது சேர் எல்லா ஆவணங்களும் கோர்டில குடுத்திட்டம் சேர்......!

அப்படியா பொறு என்ன நடக்குது என்று பார்ப்பம்......!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத திருப்பமாக காவலரோடு கைவிலங்குடன் நின்ற நகைத்திருடன் முன்னே வந்து ஐயா அந்த ஆட்டுக்கல் நான்தான் களவெடுத்தனான்.இவன் பொய் சொல்லுறான்.என்று சொல்கிறான்.......!

( ரவீந்திரனும் கனகுவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க) நீதிபதி அவனைப் பார்த்து இஞ்சால வாரும், என்ன சொல்லுறதெண்டாலும் கூண்டுக்குள் வந்து நின்று சொல்லும். அவனும் வந்து அந்த கூண்டுக்குள் ஏறுகிறான்.இருவரும் இந்த நாலைந்து நாட்களாய் ஸ்டேசனில் ஒரே அறைக்குள்தான் ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தவர்கள்.அதனால் நட்பாகி இருந்தார்கள். இவன் வந்ததும் கஞ்சாகாரன் அவன் துடையில் நல்லா வலிக்க ஒரு கிள்ளு கிள்ளுகிறான்.திருடனும் அம்மா என்று அலறிக்கொன்டு திரு திருவென முழிக்கிறான்.....!

 

நீதிபதி முதலாவது ஆளைப்பார்த்து உன் வழக்கு என்ன.............!

 கஞ்சா வித்தது,ஆட்டுக்கல்லு திருடினது ஐயா.........!

மற்றவனிடம் உன் வழக்கு என்ன............!

 நகைத் திருட்டும் ஆட்டுக்கல்லுத் திருட்டும் ஐயா..........!

நீதிபதி: அவன் கஞ்சா வித்தது சரி, நீ நகை திருடினது சரி, அதெப்படி ஆட்டுக்கல்லை இரண்டு பேரும் திருடினீர்கள்.....!

கஞ்சாகாரன் படித்தவன் விவரமானவன்.மெதுவாய் இவனுக்கு சொல்கிறான் நான் பதில் சொல்லுறன் நீ தலையை தலையை ஆட்டு என்று சொல்லிப்போட்டு நீதிபதியை பார்த்து....!

 

ஐயா நாலு வருடத்துக்கு முந்தி நாங்கள் ஒன்றாய்தான் தொழில் செய்தோம். (மார்க்கண்டு கனகுவிடம், நாய் களவெடுத்ததை எப்படி கௌரவமாய் தொழில் என்று சொல்லுது பார் ).அப்போது இருவரும் சேர்ந்துதான் இந்த ஆட்டுக்கல்லை எடுத்தோம்.பின்பு தொழில் கொஞ்சம் விரிவடைய எங்களுக்குள் பங்கு பிரிப்பதில் சிக்கல் வர ஆரம்பிச்சது.களவெடுக்கிறது ஒரு தொழிலா கேவலம் என்று நான் கஞ்சா விக்க ஆரம்பித்தேன்......!

மற்றவன் குறுக்கிட்டு கஞ்சா விக்கிறது மட்டும் சுத்தமாக்கும்.நானும் அது கேவலம் என்றுதான் திருட்டுடன் நின்றேன் என்கிறான்......! இருவரும் புடுங்குபட அவர் மேசையில் சுத்தியலால் அடித்து சைலன்ஸ் என்கிறார்..... மொத்தத்தில் இருவரும் திருடிக்கொண்டும்,கஞ்சா வித்து கொண்டும் இருந்திருக்கிறீர்கள்......

இருவரும் ஒரே சமயத்தில் ஓம் ஐயா என்கிறார்கள்......!

ஒவ்வொருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கிறேன் என்று கூற இருவரும் ஒரே குரலில் ஐயா சாதாரணமாய் மூன்று மாதம், ஆறுமாதம் தானே ஐயா தருவீர்கள் ஏன் இப்ப மூன்று வருடம் என்று கேட்க ....ஏதோ மாமியார் வீட்டுக்கு போய் வரமாதிரி அடிக்கடி வந்து போகிறீர்கள்.அதுதான் நான் கொஞ்ச நாளைக்கெண்டாலும் நிம்மதியாய் இருப்பமெண்டுதான்.....ஒடுங்கடா என்று திரத்திப்போட்டு ஆறுமாதம் என்று எழுதுகிறார். (கோர்ட் கலைகிறது).

ரவீந்திரன் கனகுவிடம் இவர்களை சிறையதிகாரிகளிடம் ஒப்படைச்சுட்டு ஆட்டுக்கல்லையும் உரியவரிடம் சேர்த்து விடு என்று சொல்ல கனகு போகிறான்.எல்லோரும் தேனீர் குடிப்பதற்காக கலைந்து செல்கின்றனர்.அப்போது ரவீந்திரனின் பின்னால் இருந்து ஒரு குரல் "வக்கீல் வரதனுக்கு இன்று வவுனியா கோர்டில்தான் வேலை.அவர் நேற்று மாலையே அங்கு போய் விட்டார். திடுக்கிட்டு திரும்பினால்

நீதிபதி ஈஸ்வரதாசன் அங்கு நிக்கிறார்..... ஐயா நான் என்று ரவி சொல்லுமுன் கையமர்த்திய நீதிபதி, ஒருத்தருக்கு நல்லது நடக்குமென்றால் நாலு ரீல் சுத்தலாம் தப்பில்லை என்று சொல்லி கடந்து போகிறார்.....!

  🌱 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும்.....!

(தொடர்ந்து வாசித்து கொண்டும் ஊக்குவித்துக் கொண்டும் வரும் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.இது மிகவும் பெறுமதியான கதை.எனது வீட்டில் ஆரம்பித்து பாரிஸ் ,ஜெர்மன் என்று சென்று இப்பொழுது லண்டனில் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.வாசகர்களின் விருப்பத்துக்காக).

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஒரே முச்சில் வாசசித்து முடித்து விட்டேன்.தொடருங்கள் சுவியர்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

நீதிபதி ஈஸ்வரதாசன் அங்கு நிக்கிறார்..... ஐயா நான் என்று ரவி சொல்லுமுன் கையமர்த்திய நீதிபதி, ஒருத்தருக்கு நல்லது நடக்குமென்றால் நாலு ரீல் சுத்தலாம் தப்பில்லை என்று சொல்லி கடந்து போகிறார்.....!

இந்தக் கூட்டத்துக்குள் நீதிபதியையும் சேர்த்து விட்டீர்களே.

5 hours ago, suvy said:

தொடர்ந்து வாசித்து கொண்டும் ஊக்குவித்துக் கொண்டும் வரும் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.இது மிகவும் பெறுமதியான கதை.எனது வீட்டில் ஆரம்பித்து பாரிஸ் ,ஜெர்மன் என்று சென்று இப்பொழுது லண்டனில் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.வாசகர்களின் விருப்பத்துக்காக).

பிரயாணங்களுக்கு மத்தியிலும் தொய்வில்லாமல் தொடர்ந்து எப்படித் தான் எழுதுகிறீர்களோ?
மிகுந்த பாராட்டுக்கள்.தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சுவியண்ணா ரொம்ப ஓவராய் போற மாதிரி இருக்கு

Share this post


Link to post
Share on other sites

இரண்டாவது பகுதியில கொஞ்சம் தொய்வு போல இருந்தது. பிறகுபிறகு ஓகே அண்ணா. தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

🥀................(14).

                                                  

தாமோதரம் தன் வீட்டு முற்றத்தில் குறுக்கும் நெடுக்கும் நடக்க மனிசி காவேரி கேட்கிறாள் என்னப்பா "குட்டி போட்ட பூனை மாதிரி " அலையிறீங்கள். அது ஒண்டுமில்லையப்பா ஒரு விசர் வேலை பார்த்திட்டன்........!

அது நீங்கள் வழக்கமா பார்க்கிறதுதானே........!

என்ன நடந்தது சொன்னாத்தானே தெரியும்....!

காலையில் கோர்ட்டில் நடந்தது எல்லாவற்றையும் சொல்கிறார்.........!

பாருங்கோ நான்கூட உங்களோட இருந்து ரெண்டு பிள்ளையும் பெத்து போட்டன் ஆனால் உங்களில இவ்வளவு மதிப்பு வச்சதில்லை. அவள் வைத்திருக்கிறாள்......!

வாங்கோ போய் கதைச்சிட்டு வருவம். பாவம் கல்யாணி கவலையோடு இருப்பாள். கிளம்பும் போது இரண்டு பொடியலையும் பார்த்து உங்க சண்டை பிடிக்கிறேல்ல புத்தகத்தை எடுத்து படிக்கவேணும் என்று பிள்ளைகளுக்கு சொல்லி விட்டு, கணவனிடம் படிப்பு ஒரு சதத்துக்கு உதவாது. கல்யாணின்ர பிள்ளைகளுக்கு கடவுள் காசு பணம் குடுக்கேல்லை என்றாலும் நல்ல படிப்பைக் கொடுத்திருக்கிறார் என்கிறாள்......!

ஏன் அதுகள் நல்லா படிக்குமே தாமோதரம் கேட்க ...... பின்ன .....இரண்டும் வலு கெட்டிக்காரியள்.மூண்டாம் பிள்ளைக்குள்ளதான் வருங்கள். பள்ளிக்கூடத்திலயும் பேச்சுப்போட்டி விளையாட்டு போட்டி என்று ஒன்றும் தவற விடுறேல்ல.ஆசிரியர்களிடமும் நல்ல மரியாதை.....!

நடந்து கொண்டு வரும்போது சொல்லிக்கொண்டு வருகிறாள்.

 

வீட்டின் முன் மாடத்தில் சுவரோடு கல்யாணி சாய்ந்திருக்க பொட்டைகள் இரண்டும் தாயோடு கோழிக்குஞ்சுகள் போல் ஒட்டிக்கொண்டு இருக்குதுகள். ஒரு அலுமாரி நிறையவும் மேசைகளிலும் புத்தகங்கள்,புத்தகங்கள் எங்கும் புத்தகங்கள் விரவிக் கிடக்கு. இரண்டு வயலினும் சரஸ்வதி படத்துக்கு கீழே இருக்கு. இவர்கள் படலையை திறந்து கொண்டு வர, இவர்களின் பிள்ளைகள் பொட்டுக்குள்ளால் இங்க வந்து நிக்கிறார்கள்......!

சின்னவள் சொல்கிறாள் அம்மா அவையள் வருகினம். அவளும் அவசரமாக தலையை முடிந்து கொண்டு எழும்பி பிள்ளையள் வாங்கை எடுத்து இதில போடுங்கோ அன்ரி ஆட்கள் இருக்கட்டும். இருக்கிறார் தாமோதரம்,அங்கு கனத்த மௌனம் நிலவுகிறது.காவேரிதான் எழுந்து வந்து கல்யாணியின் தோளைத் தொட்டு பேச்சை ஆரம்பிக்கிறாள். இந்த மனுசன் விசர் வேலை பார்த்து போட்டுது கல்யாணி. இப்ப வந்து சொல்லத்தான் எனக்குத் தெரியும்.அதுக்காக அவரும் இப்ப ரெம்பக் கவலைப் படுகிறார்.நீ ஒண்டையும் மனசில வச்சுக்காதை என்கிறாள். இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கரையுடைய காவேரியின் கழுத்தில் முகம் புதைத்து ஓ வென்று அழுகிறாள்.பிள்ளைகள் முழுசிக்கொண்டு பாக்குதுகள். தாமோதரமும் பிள்ளை அழாதைங்கோ என்னிலேதான் பிழை. முட்டாள்தனமா நடந்துட்டன். நீங்கள் வழக்கம் போல இருங்கோ. என்ர வளவுக்குள்ளும் வந்து எடுத்து கொண்டு போகலாம் என்கிறார். ஓமடி கல்யாணி, நான் முந்தியே உனக்கு சொல்லி இருப்பன் இந்த மனுசன்ர குணமறிந்துதான் சொல்லேல்ல. இப்பதான் கடவுள் நல்ல புத்தியை கொடுத்திருக்கு....!

 

வேண்டாம் அக்கா, எங்களுக்கு இந்த வளவுக்குள் வாறதே போதும். மரம் ஒண்டும் வெட்ட வேண்டாம் என்று சொல்லுங்கோ அக்கா. வெட்டுறதெண்டால் நாங்கள் அதைத் தொடமாட்டம்.மரங்கள் தெய்வங்கள். நான் வேறு ஏதாவது வேலை பார்க்கிறன். தாமோதரம் சுற்றுமுற்றும் பார்க்கிறார் வேப்பம் பூக்கள், புளியம்பழங்கள் எல்லாம் நிலத்திலே கிடக்கின்றன.எறும்புகள் இழுத்துக் கொண்டு போகுது. உள்ளே பார்க்கிறார், புத்தகங்கள் வயலின்கள் எல்லாம் பரந்து கிடக்கின்றன, இஞ்ச பார் தங்கச்சி வேண்டாம் என்று சொல்லாதே, இனிமேல் என்னை உன்ர அண்ணனாய் நினைத்துக்கொள். நான் ஒண்டும் சும்மா தரேல்ல, என்ர பிள்ளைகளுக்கு உன்ர மகள் பாடம் சொல்லி கொடுக்கட்டும்.எங்களின் வளவுக்குள்ளும் நீ வந்து பழங்களைப் பொறுக்கிக் கொள், அதுகளும் வீணாய்த்தானே போகுது. என்ன சொல்லுறாய்...... !

வித்யாதானம் காசு வேண்டாம் அண்ணை.நீங்கள் தரா விட்டாலும் என்ர மகள் உங்கட பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுப்பாள்........!

மூத்தவள் ஒரு ட்ரேயில் எல்லோருக்கும் தேசிக்காய் கரைத்து கொண்டுவர எடுத்து குடித்தவர் நல்லா இருக்கு பிள்ளை.மனிசியை பார்த்து நீயும் இந்த பிள்ளையிட்ட கேட்டு பழகு. ஓமோம் இப்ப சொல்லுவியள்தானே என்று முகத்தை நொடிக்கிறாள் காவேரி......!

சரி நான் போட்டு வாறன் என்று சொல்லிப்போட்டு தாமோதரம் போகும்போது நினைக்கிறார், இன்ஸ்பெக்ட்டர் ரவி சொன்னது போல கல்யாணி வீட்டில் சரஸ்வதி கடாட்ஷம் பூரணமாய் இருக்கு.அதில் இருந்து நான் கொஞ்சம் எடுத்தாலும் அது குறையாது பூரணமாகவே இருக்கும், பணமா குறைகிறதுக்கு.....! கல்யாணியின் அருகில் வந்த காவேரி நீ இவரில் இந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பாய் என்று நான் நினைக்கேல்லையடி கல்யாணி.சிறைக்கு போனாலும் பரவாயில்லை வந்த வக்கீலையே வேண்டாம் என்று சொன்னாயாமே, நீ நல்லவள் ரொம்ப நல்லவளடி உனக்கு காசோ பணமோ என்ன உதவி தேவையென்றாலும் என்னட்ட தயங்காமல் கேள், உந்த மனுஷனுக்கு தெரியாமல் நான் தாறன்.நீ வட்டி ஒன்றும் தரவேண்டாம்...... போகிறாள்.....!

இவள் என்ன சொல்கிறாள். எந்த வக்கீலை நான் எப்ப வேண்டாம் என்றனான், என்னவோ காமாட்ச்சி அருளால் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுது என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறாள் கல்யாணி .....!

 

அடுத்த சில நாளில் ஈ -மெயிலில் கனகுவிற்கு பிரமோஷன் வருகுது.போலீஸ் நிலையத்தில் எல்லோரும் அவனை வாழ்த்துகின்றனர். பத்மாவும் தனிமையில் அவனை அணைத்து முத்தமிட்டு வாழ்த்துகிறாள். இப்பொழுது அவர்களது காதல் அங்கு பிரசித்தமாகி ஒரு நல்ல நாளில் ஒரு சிறிய மண்டபத்தில் திருமணம் நாடாத்துவதென முடிவாயிற்று. ரவியும் கனகுவிடம் நீங்கள் உங்கள் காலியாண வேலைகளை பாருங்கோ என்று சொல்லி விட்டு மார்கண்டுவை அழைத்து மெதுவாக அண்ணை இன்றிரவு அந்த கடற்கரைக்கு ஒரு படகு நிறைய கஞ்சா வாறதா தகவல் கிடைத்திருக்கு.நீங்கள் காவலர் வேலுவை கூட்டிக் கொண்டு போங்கோ. அவர் புறப்பட அவன் ஒரு டார்ச் லைட்டை குடுத்து படகில் இருந்து சிக்னல் வந்ததும் நீங்கள் எப்படி பதில் சிக்னல் தரனும் என்று காட்டி குடுக்கிறான்.அவரும் அவனிடம் ஜம்பமாக டார்ச் வேண்டாம் தம்பி, எந்த காலத்தில இருக்கிறியள் நீங்கள், நான் என்ர போனாலேயே சிக்னல் குடுத்து ஆட்களை மடக்குறன் பார் என்று சொல்லி விட்டு போகிறார்.....!

🌱........................... வளரும்.....!

 • Like 4

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ரதி said:

சுவியண்ணா ரொம்ப ஓவராய் போற மாதிரி இருக்கு

எத்தனை பேரை தொடரை எப்போ அடுத்தது வரும்னு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? நீங்க வேறை.

Share this post


Link to post
Share on other sites

🥀....................(15).

                                                       


                                                               அன்று இரவு  கடற்கரையில் சில காவலர்களை தூரத்தில் மறைந்திருக்க சொல்லி விட்டு அவரும் வேலுவுமாக கடலுக்கு கிட்டவா போய் படகு மறைவில் இருக்கிறார்கள்.மார்க்கண்டுவும் இன்று நல்ல மூடில் இருந்ததால் போனில் தெரிந்தெடுத்து பாடல்களை போட்டு இருவரும் ரசித்து கொண்டிருக்கிறார்கள். 
அண்ணை கடத்தல் காரங்கள் துவக்கு வைத்திருப்பாங்களோ... ஓமடா வேலு, அதுக்கு நீ பயப்படுறியே, இஞ்ச பார் என்னட்டையும் இருக்கு. அவனும் சுட்டால் நானும் சுடுவன்..... நீங்கள் சுடுவீங்கள் அண்ணை உங்களிட்டை துவக்கு இருக்கு. ஆனால்  என்னட்டை துவக்கு இல்லையே. இஞ்ச பிறகும் நீ பயப்படுறாய் போல..... சீச் சீ......!   "தரைமேல் பிறக்க வைத்தான் " முடிந்து "அதோ அந்த பறவைபோல" தொடங்க தூரத்தே படகு ஒன்று வந்து நின்று வெளிச்சத்தில் சிக்னல் போடுது.மார்க்கண்டும் அவசரமாக போனை எடுக்க பாட்டு தானாய் நிக்குது, லைட் வரவில்லை. என்னடா கோதாரி.... இது சார்ஜ் போயிட்டுது போல....கையால் தட்டி தட்டி பார்க்கிறார் ஒண்டும் சரிவரவில்லை......!

                                                   நாலு வட்டம் அடித்து விட்டு படகு வேகமாக திரும்பி செல்கிறது. எண்ணெண்னை இப்படி பண்ணிபோட்டீங்கள்.வேலு கேட்கிறான். நான் என்னடா செய்ய, சமயத்தில இது காலை வாரி விட்டுட்டுது,  அப்பவும் ரவீந்திரன் டார்ச்லைட் தந்தவன்.சே....நான்தான் வேண்டாம் என்றிட்டு வந்திட்டன். எக்கணம் திட்டப் போறான்.டேய் வேலு ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையடா. சரிண்ணே நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்.. அப்போது வேலுவின் போன் அடிக்கிறது.வேலுவும் எடுத்து, சரியடி  செல்லம், இஞ்ச கஞ்சா வந்த படகை மார்க்கண்டு அண்ணை பிடிக்காமல் போக விட்டுட்டார். நான் வரேக்க உனக்கும் பிள்ளைகளுக்கும் மட்டன் கொத்து ரொட்டி வாங்கி வாறன். இரவுக்கு நீ இடியப்பம் ஒண்டும் செய்ய வேண்டாம்......!
டேய் வேலு அப்போது உன்ர போனை தந்திருக்கலாம் தானேடா.....!
வேலு யோசித்து, அது பல்ப் சுட்டுடுட்டுது அண்ண......சரி ...சரி வாடா ஸ்டேசனுக்கு போவம்......!
அண்ணை இவங்களை அனுப்பிட்டு நாங்கள் டவுனுக்கு போய் நாங்களும் சாப்பிட்டுட்டு கொத்துரொட்டி கட்டிக்கொண்டு போகலாம் என்கிறான்.
உனக்கு நல்ல மனசுடா.......ஓமண்ணை ஆனால் நான் டூட்டிக்கு வரும் பொது பர்ஸ் கொண்டு வாறதில்லை.....!
எமகாதகண்டா நீ என்னிடமே உன்ர வேலையை காட்டுறாய் என்று மார்க்கண்டு சொல்ல , இதை வைத்தே ஒரு வருடம் ஒட்டிடலாம் என்று வேலு கணக்கு பண்ணுறான்.....! 

                                          ஒரு சிறிய மண்டபத்தில் கனகு பத்மா திருமணம் எளிமையாக நடைபெறுகின்றது.அப்படி இருந்தும் அங்கு மண்டபம் கொள்ளாத சனம். சுவையான விருந்து.ஆனால்  சாப்பாடு பத்தாமல் போய் விட்டது.ரிஷப்சன் எல்லாம் முடிந்து எல்லோரும் புறப்படும் நேரம் ரவீந்திரனும் ஆரவ்வும் வந்து மணமக்களிடம் விடை பெற்றுக்கொண்டு வருகின்றார்கள்.
                         ஒரு இலக்கில்லாமல் ஜீப்பில் வரும்போது ஆரவ் அவனிடம் என்ன திடீரென்று  கனகுவும் பத்மாவும் திருமணம் செய்து விட்டார்கள்.முன்பே காதலித்து கொண்டிருந்த மாதிரியும் தெரியவில்லையே என்கிறான். அதுக்கு ரவியும் நம்ம மார்க்கண்டுதான் இந்தத் திருமணத்தை பேசி செய்து வைத்திருக்கிறார்.பத்மாவின் அப்பாவும் அவரும் க்ளோஸ் பிரண்ட் தெரியுமா என்கிறான்....ம்...எமக்கு யார் வந்து பேசி செய்து வைக்க போகினம் என்று பெரு மூச்சு விடுகிறான்.......!
ஏன்  ரவி நீ யாரையாவது விரும்பிறியா ......!  
அப்படி என்று இல்லை, கொஞ்சநாளா காஞ்சனாதான் மனசை டிஸ்ட்டர்ப் பண்ணுறாள்......அவள் நிக்கும் இடங்கள் எல்லாம் ரவுண்ட் அடித்து பார்த்தேன்.கண்ணிலேயே காணக் கிடைக்கேல்ல....... நீ யாரையாவது விரும்பிறியாஎன்று ஆரவ்வைப்  பார்க்கிறான்........!
எனக்கும் பெரிசா அப்படி ஒன்றும் இல்லை.....ஆனால் அன்று மரியாவுடன்  நெருக்கமானதில் இருந்து, ஒரு அப்பாவிப் பெண்ணின் மனசைக் கெடுத்து விட்டோமோ என்று அப்பப்ப தோன்றுது.......! என்று சொல்லிக்கொண்டு வரும்போது  ஜீப் ஸ்ரான்லி வீதியால் வருகின்றது.எல்லா இடங்களிலும்  சுவர்களில் ஒரு புதுமையான விளம்பரம் தென்படுகின்றது. "ஏன்ஜல்ஸ் சேவை மையம்"  ஒரு வட்டத்துக்குள் விரல்களில் வெற்றிக்குறி காட்டியபடி ஒயிலாக நெளிந்து ஒருவர் டிக்கியில் ஒருவர் இடித்தபடி சிரித்துக் கொண்டு மவுண்ட் லிவினியா தென்னை போல் போஸ் குடுக்கிறார்கள் காஞ்சனாவும்  மரியாவும்..... இருவரும் அதைப் பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். அதில் இருக்கும் விலாசத்தை போனில் உள்வாங்கி கூகுளில் பார்க்கிறான் ஆரவ். அதில்  கேட்டரிங், இன்டீரியர் எக்ஸ்டீரியர் டெக்கரேஷன்ஸ், மணப்பெண் அலங்காரம், புகைப்படம் வீடியோ எடுத்தல்,  என்று எல்லாவற்றுக்கும் எங்களுடன் தொடர்பு கொள்ளவும் என்று இருக்கு. விலாசம் தெரிவித்த இடத்துக்கு இருவரும் போகிறார்கள். ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு அறை எடுத்து நவீனமயமாக அலங்கரித்து உள்ளே பர்னிச்சர்ஸ் போட்டு இருவரும் போனில் பிஸியாய் பிஸினஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். வாசலில் காஞ்சனாவின் தந்தை வாட்ச்மேனாக ஸ்டூலில் இருக்கிறார். போலிஸைக் கண்டதும் எழுந்து மரியாதையாக ஒதுங்கி நிக்கிறார்.

                                    கதவை தட்டி விட்டு "எஸ் கமிங்" என்ற குரல் வந்ததும் தள்ளிக்கொண்டு உள்ளே போகின்றார்கள் ரவீந்திரனும் ஆரவ்வும். இவர்களைக் ஒன்றாய் கண்டதும் சந்தோசமாய் இருவரும் எழுந்து நின்று வரவேற்கிறார்கள்.ஓரத்தே ஓரளவு வெட்கமும் ஒட்டிக் கொண்டிருக்கு......!
உங்களை இப்படிப் பார்க்க சந்தோசமாய் இருக்கு. நீங்கள் விளம்பரம் குடுத்தபடி இவ்வளவு வேலைகளும் உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறான்.....! இல்லை எல்லாம் ஆன்லைனில் ஆட்களைப் பிடித்துத்தான் செய்கிறோம். என்று மரியா சொல்ல, இப்ப குடாநாட்டிற்குள்தான் செய்கிறோம்.நாங்கள் எதிர்பார்த்ததைவிட பிஸினஸ் நன்றாகப் போகுது. விரைவில் நாடு பூராவும் விஸ்தரித்து விடுவோம்.என்கிறாள்.அப்போது அங்கு ஒரு காவலர் வருகிறார். இவர்களைக் கண்டதும் மரியாதையாக வணக்கம் சொல்லி விட்டு காஞ்சனாவிடம் ஒரு காசோலையை குடுத்து விட்டு செல்கிறார். இது இன்று ஒரு போலீஸ்காரரின் திருமணம், அதற்கு மண்டப அலங்காரம், அய்யர், விருந்து எல்லாமே நாங்கள்தான் ஏற்பாடு செய்தோம்.அந்த காசோலைதான் இது என்கிறாள்......! ஓக்கே பெஸ்ட் ஒவ் லக் என்று ரவி திரும்ப ஆரவ் கதைப்பம்டா மச்சான் என்று மெதுவாய் சொல்கிறான். இப்ப வேண்டாம்டா......!
மரியா குறுக்கிட்டு சார் இப்ப நாங்கள் அந்த கஞ்சா விக்கிற வேலை எல்லாம் செய்யிறேல்லை.ப்ராமிஸ் என்கிறாள். ஆரவ்வை பார்த்து நீங்களும் போலீசா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறாள்....!
ஓம் என்ற ஆரவ், நாங்களும் சில நாளாய் ஒரு விடயம் கதைக்க உங்களை தேடினோம் காணவில்லை அதுதான் இப்ப சொல்லலாமா என்று யோசிக்கிறோம்.....!
ஏதுவாய் இருந்தாலும் சொல்லுங்கள் என்று காஞ்சனா சொல்கிறாள்......!
நான் நேராகவே விடயத்துக்கு வருகிறேன், நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களை நாங்கள் திருமணம் செய்யலாம் என்று விரும்புகின்றோம் என்ன சொல்கின்றிர்கள் என்கிறான்......!
நாங்களும் இதைப்பற்றி நிறைய கதைத்துவிட்டோம். நீங்கள் போலீஸ், நாங்கள் கஞ்சா விற்பவர்கள்.உங்களுடைய தகுதிக்கு இது சரி வராது என்றே நினைத்தோம்.இருந்தாலும் ஒரு நப்பாசை கஞ்சாத் தொழிலை விட்டுட்டு ஓரளவாவது உங்களுக்கு ஏற்றாற் போல் எங்கள் தகுதியை உயர்த்தவேண்டும் என்றுதான் இந்தத் தொழிலையே ஆரம்பித்தோம்.என்று சொன்னாள் காஞ்சனா....! 
                           
                                        
                                             காஞ்சனா கதைத்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த விருந்தினர் அறை வாசலில் நின்று கண்ணசைவால் ஆரவ்வை உள்ளே மரியா அழைக்க அவனும் அங்கு நழுவிப்  போகிறான்.உள்ளே வந்தவனை  சேர்ட் பட்டனுடன் கொத்தாக பிடித்து  இழுத்து முத்தமிட்டபடியே பின்புறமாக நகர்ந்து போய் சோபாவில் மல்லாக்க விழ ஆரவ்வும் பேலன்ஸ் தவறி இரு கைகளாலும் அவள் இடையை இறுக்கி அணைத்தபடி அவள்மேல் சரிகிறான்.........!
                            
                            இயல்பாய் காஞ்சனாவின் அருகே வந்த ரவீந்திரன் மென்மையாய் அவள் தோளையும் இடையையும் தன்னுடன் சேர்த்தணைத்து இதழுடன் இதழ் சேர்த்து பின் விலகுகின்றான்........! சிறிது நேரத்தின்பின் நண்பர்கள் இருவரும் புறப்படத் தயாராகின்றார்கள். அப்போது ஆரவ் அவர்களிடம் எங்களுடைய திருமணத்துக்கும் நீங்கள்தான் சகல ஒழுங்குகளும் செய்ய வேண்டும். இன்று நடந்த திருமணத்தை விட பத்து மடங்கு கூட்டம் நாடு முழுதும் இருந்து வந்து சேரும்.அதற்கேற்றாற் போல் பெரிய மண்டபம் பிடியுங்கள். சாப்பாடு இன்று போல் பத்தாமல் போகக் கூடாது.....!
எல்லாவற்றையும் நாங்களே செய்தால் நீங்கள் என்ன செய்வீங்கள் என்று காஞ்சனா கேட்க, அவன் ஆரியகுளத்தில் காஞ்சூண்டி சேகரித்து கொண்டு வருவான் என்று ரவீந்திரன் சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள்.
                 🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளரும்.....!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

இயல்பாய் காஞ்சனாவின் அருகே வந்த ரவீந்திரன் மென்மையாய் அவள் தோளையும் இடையையும் தன்னுடன் சேர்த்தணைத்து இதழுடன் இதழ் சேர்த்து பின் விலகுகின்றான்........! சிறிது நேரத்தின்பின் நண்பர்கள் இருவரும் புறப்படத் தயாராகின்றார்கள்.

வெளிநாட்டிலேயே நம்மவருக்கு இன்னும் கூச்சம்.இதென்னடா உள்ளூரிலே இழுத்து பிடித்து இதழுடன் இதழ்.

பொலிசுக்கும் கஞ்சா கோஸ்டிக்கும் எப்பவுமே சரிவராதென்று நினைத்தேன்.
கொண்டு போய் சேர்த்த விதம் அருமை.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, suvy said:

 

இஞ்ச கஞ்சா வந்த படகை மார்க்கண்டு அண்ணை பிடிக்காமல் போக விட்டுட்டார். நான் வரேக்க உனக்கும் பிள்ளைகளுக்கும் மட்டன் கொத்து ரொட்டி வாங்கி வாறன். இரவுக்கு நீ இடியப்பம் ஒண்டும் செய்ய வேண்டாம்......!
டேய் வேலு அப்போது உன்ர போனை தந்திருக்கலாம் தானேடா.....!
வேலு யோசித்து, அது பல்ப் சுட்டுடுட்டுது அண்ண......சரி ...சரி வாடா ஸ்டேசனுக்கு போவம்......!
அண்ணை இவங்களை அனுப்பிட்டு நாங்கள் டவுனுக்கு போய் நாங்களும் சாப்பிட்டுட்டு கொத்துரொட்டி கட்டிக்கொண்டு போகலாம் என்கிறான்.
உனக்கு நல்ல மனசுடா.......ஓமண்ணை ஆனால் நான் டூட்டிக்கு வரும் பொது பர்ஸ் கொண்டு வாறதில்லை.....!

எமகாதகண்டா நீ என்னிடமே உன்ர வேலையை காட்டுறாய் என்று மார்க்கண்டு சொல்ல , இதை வைத்தே ஒரு வருடம் ஒட்டிடலாம் என்று வேலு கணக்கு பண்ணுறான்.....! 

எப்படியோ... டவுனுக்குத்தான், கொத்து ரொட்டி சாப்பிடப் போகிறார்கள்.
அப்படியே... அந்த போனின், "பல்ப்பை" ஸ்ரான்லி வீதியில் உள்ள  "நியூரோன் எலக்ரிக்கல்" கடையில் மாத்தியிருக்கலாம் தானே...:grin:

வேலு...  டூட்டிக்கு வரும் போது  பர்ஸ் கொண்டு வாறதில்லை, என்று சொன்னாலும்...
சட்டை  கை  மடிப்புக்குள்ளாய்.... 500 ரூபாய் தாளாக வைத்திருப்பான் என்று, மார்கண்டுக்கு தெரியாமல் போனது நல்லதாய் போச்சு.:grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.