யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

தவான் அதிரடி சதம் – 358 ஓட்டங்களை குவித்தது இந்தியா!

Recommended Posts

தவான் அதிரடி சதம் – 358 ஓட்டங்களை குவித்தது இந்தியா!

D1Sgsd2VYAAiOm4.jpg

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொஹாலி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய இந்தியா அணி ஷிகர் தவானின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஷிகர் தவான் 143 ஓட்டங்களை ரிஷாப் பந்த் 36 ஓட்டங்களையும், விஜய் சங்கர் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு ஆஸி. அணி ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.

 

http://athavannews.com/தவானின்-அதிரடி-சதம்-358-ஓட்ட/

 

Share this post


Link to post
Share on other sites

தொடரைச் சமன் செய்தது அவுஸ்திரேலிய அணி!

aus-1-720x450.jpg

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் தொடரை வெற்றிகொண்டதன் மூலம் அவுஸ்திரேலிய அணி தொடரை 2:2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 358 ஓட்டங்களை குவித்தது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சன்டிகாரில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய சிகர் தவான் பெற்ற 143 ஓட்டங்களோடும், ரோஹித் சர்மா பெற்ற 95 ஓட்டங்களுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பெட் கமின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

359 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47 தசம் 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 359 ஓட்டங்களை பெற்று வெற்றிப் பெற்றது.

அவுஸ்திரேலியாவின், துடுப்பாட்டத்தில் ஹண்ஸ்கொம் 117 ஓட்டங்களையும் கவாஜா 91 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக வெற்றிக்காக பாடுபட்டு 84 ஓட்டங்களைப் பெற்ற டேனர் தெரிவானார்.

இதற்கமைய இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் அவுஸ்திரேலியா சமன் செய்துள்ளது.

 

http://athavannews.com/தொடரைச்-சமன்-செய்தது-அவு/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு