Jump to content

வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

vasantha.jpg?resize=700%2C400

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் , இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் கைதுசெய்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்த உயர் நீதிமன்றம் இன்று 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2019/115733/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 மணி நேர விசாரணையின் பின் நாளைமறுதினம் மீண்டும் அழைப்பு!

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.யின் இன்று  8 மணிநேரம் விசாரணையை முன்னெடுத்தனர்.

wasantha.jpg

இன்று காலை  9.00 மணிக்கு  கோட்டையில் உள்ள சி.ஐ.டி.  தலைமையகத்துக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சென்ற முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

இதன்போது அவரிடம்  விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் மீள நாளைமறுதினம் 13 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/51689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கொலை செய்யப்பட்டு அதன்பின் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தி வராமல் இருக்கவேண்டும்

14 hours ago, பிழம்பு said:

நாளைமறுதினம் 13 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

Wasantha-with-mahai-and-gotta.jpg?resize

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட கைதுசெய்யப்படுவதனை தடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பினை அண்மித்த பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறையினர் மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தினார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஜனாதிபதி, சொலிசிட்டர் ஜெனரல் டபுல டி லிவெர, வசந்த கரனாகொடவிற்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கப்படவுள்ளமை உட்பட அனைத்து விபரங்களையும் தெளிவுபடுத்தினார் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது. இதன் போது தான் நீதிக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை என ஜனாதிபதி சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பின்னர் மார்ச் ஆறாம் திகதி வசந்த கரனாகொட சார்பில் இலங்கையின் பிரபல வர்த்தகர்களான டிரான் அலஸ் மற்றும் டிலித் ஜெயவீர ஆகியேர் ஜனாதிபதியை சந்தித்தனர் எனவும் இதன் போது அவர்கள் வசந்த கரனாகொடவை கைதுசெய்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என மன்றாடியுள்ளனர் எனவும் இவர்கள் இருவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

வசந்த கரனாகொட கைதுசெய்யப்பட்டால் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மை காரணமாக அவருக்கு பிணைகிடைக்காது என இருவரும் சுட்டிக்காட்டியதனையடுத்து இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இவர்களை சந்தித்த பின்னர் சட்டமா அதிபரை தொடர்புகொண்ட ஜனாதிபதி வசந்தகரனாகொடவை கைதுசெய்யுமாறு வற்புறுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

http://globaltamilnews.net/2019/115857/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.